காளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்! பாகம் 2


சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைக்கிறார்கள்

இடம்: ஹோட்டல் ஸற்குரு, பாண்டிச்சேரி! நாள்: நவம்பர் 30, 2013

திரு. B. ஸ்ரீராம்

திரு. B. ஸ்ரீராம்

2.

திரு. B.கிருஷ்ணகுமார்

திரு. B.கிருஷ்ணகுமார்

3.

திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

திரு. B.ஸ்ரீராம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்கள். பழக்கூடையும் ரெடியாக இருக்கிறது! :) மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இவை வழங்கப்பட்டன.

திரு. B.ஸ்ரீராம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்கள். பழக்கூடையும் ரெடியாக இருக்கிறது! :) மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இவை வழங்கப்பட்டன.

பங்கேற்பாளர்கள்

DSCN1393 DSCN1394 DSCN1395 DSCN1396 DSCN1397 DSCN1398 DSCN1399  DSCN1411 DSCN1412

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் IAP 2013 12 07


ஹலோ!

மாதமிருமுறை மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நடத்தும் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு முகாம்களின் ஒரு பகுதியான, வரும் சனிக்கிழமை 07/12/2013 அன்று மாலை, “சார்ட் பேட்டர்ன்களை எவ்வாறு பயன்படுத்துவது?” எனற தலைப்பினிலே நான் பேச இருக்கின்றேன்! இல்லையில்லை…. படம் காட்ட இருக்கின்றேன்!

நேரம்: மாலை 4:00 – 6:00

இடம்: எக்ஸ்சேஞ்ச் வளாகம், 30-செகண்ட் லைன் பீச், சென்னை – 600001 (சென்னை பீச் இரயில் நிலையம் எதிர்புறம் & GPO-விற்குப் பின்னால்)

அனுமதி இலவசம்! (முன்பதிவு செய்துகொள்ளுங்கள்)

Contact Details: 25228951/52/53

Email: mse.investoredu@gmail.com

 

தேநீர்: மாலை 3:30

 

 

 

 

MSE INSTITUTE OF CAPITAL MARKETS

of

MADRAS STOCK EXCHANGE LIMITED

 

Cordially invite you for the

 

INVESTORS AWARENESS & EDUCATION PROGRAMME

on

 

How to use Chart Patterns effectively?”

 

By

 

Mr. Babu Kothandaraman,

Investment Consultant

 

 

Date: Saturday, 7th December, 2013

Time:  04.00 p.m. to 06.00 p.m.

 

Venue: Exchange Building, IV Floor,

30, Second Line Beach,

Chennai-600 001.

 

Request confirmation of Participation

on or before 6th December, 2013

 

Contact Details: 25228951/52/53

Email: mse.investoredu@gmail.com

 

No Registration Fee                                                  Tea:  3.30 p.m.

 

Profile of Mr. Babu Kothandaraman

 

He holds Diploma in Hotel Management and Catering Technology from the Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition.

 

He is a system trader, an avid follower of technical analysis.  He writes about Technical Analysis in Tamil, on his blog “Kaalaiyum Karadiyum”.  He also writes articles in magazines.  He is also a visiting faculty at BSE.   He has conducted a couple of training sessions on technical analysis.

காளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்!


ஹலோ நண்பர்களே!

DSC_0329

கடந்த இரு நாட்களும் எனக்கொரு புதிய அனுபவமாக இருந்தது! ஆமாம்! இந்த செமினாரின் சிறப்புவிருந்தினார்களான திரு ஸ்ரீராம் மற்றும் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் காலை 4 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளனர்; மதுரைலிருந்து க்ரிஷ் வெங்கடேஷ் அவர்கள் இரவுப்பயணமாக காலை 6 மணியளவில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.

விழாவினைச் சிறப்பிக்க வந்திருக்கும் மும்மூர்த்திகள்! (இடமிருந்து வலம்) திரு. B. ஸ்ரீராம், திரு. கிருஷ்ணகுமார், திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

விழாவினைச் சிறப்பிக்க வந்திருக்கும் மும்மூர்த்திகள்! (இடமிருந்து வலம்) திரு. B. ஸ்ரீராம், திரு. கிருஷ்ணகுமார், திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இவர்கள் மூவருக்கும்!

சில பங்கேற்பாளர்கள் சேலம், சென்னையிலிருந்து வெள்ளி இரவே வந்து சேர்ந்தனர்; ஈரோடு, திருச்செங்கோடு, திருத்தணி முதலிய இடங்களிலிருந்தும் இரவுப்பயணமாக காலையில் வந்து சேர்ந்தனர். மேலும் பல சென்னை பங்கேற்பாளர்கள் சென்னையிலிருந்து, குறிஞ்சிப்பாடி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்களிலிருந்தும் விடியலில் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.

வழிகாட்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழி!

வழிகாட்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழி!

வரவேற்பு அறிவிப்புப் பலகை!

வரவேற்பு அறிவிப்புப் பலகை!

குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சி தொடங்கியது!

அடியேன்தானுங்க!

அடியேன்தானுங்க!

அன்புடன், பாபு கோதண்டராமன்

(தொடரும்)

செஸ், கிரிக்கெட் மற்றும் காளையும் கரடியும் 2013


ஹலோ!

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் செஸ் சாம்பியன்ஷிப் 3 மற்றும் 4-ஆம் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்துள்ளன. டி‌வி வர்ணனையாளர்கள் கம்ப்யூட்டர்களை வைத்து சொல்லும் ஒரு சில மூவ்களையே ஒரு சில சமயங்களில் இவர்கள் (ஆனந்தும், கார்ல்சனும்) ஆடினாலும், பல சமயங்களில் புது வித வேரியேஷன்களை ஆடி நம்மைப் பரவசப் படுத்துகிறார்கள். மூன்றாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்பு நிறக்காய்களுடன் விளையாடியபோது, “இப்போது ரெபெட்டிவ் மூவ் (மூன்று முறை ஒரே மாதிரியான நகர்த்துதல்கள்) ஆடி டிரா செய்யும் நிலைதான் இருக்கிறது” என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீண்ட யோசனைக்குப் பிறகு கார்ல்சனின் ராணியை h1 கட்டத்திற்கு நகர்த்தி ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார். நான்காவது ஆட்டத்திலே ஒன்டே கிரிக்கெட் போன்றதொரு ஆட்டத்தினை ஆடினார்கள். அத்தனை சுவாரஸ்யம்!

யார் சொன்னது செஸ் ஒரு விறுவிறுப்பில்லாத ஆட்டமென்று? விஷி ஆனந்த் வெற்றியடைய நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்!

Vishy with mom

அடுத்ததாக நமது மண்ணின் மைந்தர் இன்னொருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் நமது சச்சின்! அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள்! அவரும் ஒரு சரித்திர நாயகன்தான்! ஆனந்த் மற்றும் சச்சின் ஆகியோரின் கால கட்டதில்தான் நாமும் இருக்கின்றோம் என்பதில் பெருமைப்படுகின்றேன்!

SRT200 2 SRT200 1

அடுத்ததாக நமது பாண்டிச்சேரி “காளையும் கரடியும் 2013″ நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற ஞாயிறு வெளிவந்த நாணயம் விகடனிலும் மறுபடியும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கின்றேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் பணம் செலுத்தி பதிவும் செய்து கொண்டுள்ளனர்.

இதுவரையிலும் பணம் கட்டாதவர்கள், தயவு செய்து நவம்பர் 21-ஆந்தேதிக்குள் பணம் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் “Plan your trade; trade your plan” என்பதற்கேற்ப சிறப்பாக இந்தக் கருத்தரங்கத்தினை நடத்தித் தரமுடியுமென்று நம்புகிறேன்.

மேலும் அனைவரும் ஒரு ஃபோட்டோவுடன் கூடிய அரசாங்க அடையாள அட்டையினை (Photo ID) எடுத்து வரவும். இது ஹோட்டல் செக்யூரிட்டி முறைக்காக!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

காளையும் கரடியும் 2013 – சில புகைப்படங்கள்


ஹலோ!

உங்களின் பேராதரவிற்கு நன்றிகள்! உங்களில் சிலர் வெகு தூரத்திலிருந்து வருபவர்கள் முதல் நாளிரவே (வெள்ளிக்கிழமையே) தங்குவதற்கு அறை வேண்டுமென்று கேட்டுள்ளீர்கள். ஒருவருக்கு ரூ.800/- (டபுள் ஆக்குபன்சி முறையில்) அங்கேயே தங்கிக்கொள்ளலாம்.

ஹோட்டல் சற்குருவின் வெப் லிங்க் இது.

கருத்தரங்கம் அனைத்து விபரங்களுக்கும் இங்கே கிளிக்கிடவும்!

மேலும் சில நிழற்படங்கள்!

DSCN1305

DSCN1297

DSCN1299

DSCN1301

DSCN1304

DSCN1309

டிஸ்கௌண்ட்டிற்கு முந்துங்கள்! அக்டோபர் 25-க்குள் முன்பதிவு செய்யுங்கள்!


ஹலோ!

பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கும் ரெஸிடென்ஷியல் “காளையும் கரடியும் 2013″ கருத்தரங்கத்திற்கான சிறப்புத் தள்ளுபடி – early bird offer ரூ. 500/- பெற நாளைக்குள் (அக்டோபர் 25-ஆந்தேதிக்குள்) பதிவு செய்து கொள்ளுங்கள்! இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. நாளைக்கப்புறம் இந்த ஆஃபர் கிடையாது.

2 பேர் கொண்ட குழுக்களுக்கான சிறப்புத்தள்ளுபடி தொடர்கிறது.

இதுவரையிலும் பதிவு செய்துகொண்டவர்களுக்கும், என்னைத் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கும், இமெயில் வழியாக விளக்கம் கேட்டவர்களுக்கும் எனது நன்றிகள். உங்களனைவரின் ஆதரவிற்கும் நன்றி!

மேலும், நான்கு வெவ்வேறு விதமான நிபுணர்களின் கருத்துக்களுடன் மற்ற டிரேடர்களும் பங்கேற்று, கருத்தரங்கம் நடைபெறும் ஹோட்டல் ஸற்குருவிலேயே சனிக்கிழமை (நவ. 30) இரவு தங்குவதற்கு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்தப் புதுமைக் கருத்தரங்கத்தின் ஏற்பாடுகளை, அர்த்தத்தினை உங்களில் நிறைய பேரும் வரவேற்றுள்ளீர்கள். இதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

பல்வேறு ஸ்ட்ராடஜிக்களின் விதிமுறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்! டிரேடிங் செய்வதற்கான ரிஸ்க் மேனேஜ்மெண்ட் கொள்கைகளைப் புரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் யாரென்று உணர்ந்து, உங்களுக்கேற்ற ஸ்ட்ராடஜி எதுவென்று புரிந்து டிரேட் செய்யுங்கள்!

கட்டுப்பாடான டிரேடராக உருவாகுங்கள்; உருமாறுங்கள்! வெற்றிகள் தானாகத் தேடி வரட்டும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

காளையும்கரடியும் 2013 பாண்டிச்சேரி – விபரங்களின் தொகுப்பு


ஹலோ!

வரும் நவம்பர் 30 & டிசம்பர் 1 தேதிகளில் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கும் “காளையும் கரடியும் 2013″ என்ற கருத்தரங்கத்தைப் பற்றிய நான்கு பதிவுகளையும் ஒன்றாக இங்கே தொகுத்துள்ளேன். எனவே, யாரும் இங்கே, அங்கே என்று அலைய வேண்டாமே!

1. காளையும் கரடியும் 2013  என்றால் என்ன? (மாத்தி யோசி…. பாலாகுமாரா….. இங்கே கிளிக்கிடவும்)

2. காளையும் கரடியும் 2013 – பாண்டிச்சேரியில் (இங்கே கிளிக்கிடவும்)

3. காளையும் கரடியும் 2013 – பேச்சாளர்கள் (இங்கே கிளிக்கிடவும்)

4. காளையும் கரடியும் 2013 -பணம் செலுத்தும் முறை (இங்கே கிளிக்கிடவும்)

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

கட்டுப்பாடான டிரேடர் கம்யூனிட்டியாக உருவாகலாமே! :)

காளையும் கரடியும் 2013 – பேச்சாளர்கள்


ஹலோ!

தலைப்பிலே இருக்கும் “பேச்சாளர்கள்” என்ற வார்த்தையினைப் பார்த்தவுடன், ஏதோ மைக் கிடைத்தவுடன்,

“ஆக, இது வரையிலும் இங்கே

சிறப்பாக,

பொறுப்பாக,

திறம்பட,

செம்மையாக தொண்டாற்றிக் கொண்டிருக்கும்

எனதருமை நண்பர்,

உடன் பிறவாச் சகோதரர்,

ஆருயிர் அண்ணன்,

அன்புக்குக் கட்டுப்பட்டவர்,

நற்பண்புகளுக்கு இலக்கணமாய்த் திகழ்கின்றவர்,

நமக்கெல்லாம் இலக்கியமாய்………. …….. ….. ” என்றெல்லாம் பேசப்போகிறார்கள் என்றெல்லாம் பயந்து விடாதீர்கள்!

இந்த ரெஸிடென்ஷியல் கருத்தரங்கத்திலே (காளையும்கரடியும் 2013 பற்றி மேலும் அறிய இங்கே கிளிக்கிடவும்) பேசவிருக்கிறவர்களனைவரும் முதலீட்டாளர்கள்/டிரேடர்கள். ஒரு சிலரோ போர்ட்ஃபோலியோ மேனேஜர்களாகவும் திகழ்கின்றனர். இங்கே இவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

திரு. B. ஸ்ரீராம், FCA

B. ஸ்ரீராம்

B. ஸ்ரீராம்

CA தேர்வில் அகில இந்திய அளவில் 3-ஆவது ரேங்க். திருச்செங்கோட்டுத் திலகம். 28 வருட பங்குச்சந்தை முதலீட்டு/வணிக அனுபவம். சிஸ்டம் டிரேடர். எந்தவொரு டிரேடிங் சிஸ்டம் பற்றித் தெரிய வந்தாலும், அதனை அலசி ஆராய்ந்து, முதலீடு செய்து உணர்ந்து, அதனைப் பற்றித் தெளிவடைந்தால்தான் தூக்கமே வரும். ஒரு நிமிட சார்ட்டிலிருந்து வார, மாத வரைபடம் வரையிலும் பல்வேறு டைம் ஃபிரேம்களிலும் டே டிரேடிங் / ஸ்விங் டிரேடிங் / நீண்ட கால முதலீடு என்று பல்வேறு போர்ட்ஃபோலியோக்களை நிர்வகித்து வருபவர். எந்தவொரு கம்பெனி பற்றிய கேள்வியானாலும், அவற்றின் ஆதி முதல் அந்தம் வரையிலும் (நிறுவனர், முந்தைய பெயர், தற்போதைய பெயர் (பெயர் மாற்றப்பட்டிருந்தால்), லிஸ்டிங் விலை, தற்போதைய ரேஞ்ச் போன்றவற்றையெல்லாம்) டக், டக்கென்று சொல்லி என்னை ஆச்சரிப்பட வைப்பவர்.  Reliable Stocks-இன் MD.

“கட்டுப்பாடான டிரேடராக (Disciplined trader) இருந்தால், நிச்சயமாகப் பங்குச்சந்தையில் வெற்றியடையலாம்” என்பதே இவரது தாரக மந்திரம்.

சன் டி‌வி மற்றும் நாணயம் விகடன் மூலம் தமிழ் பேசும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

திரு. B. கிருஷ்ணகுமார்

B. கிருஷ்ணகுமார்

B. கிருஷ்ணகுமார்

KK என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுமிவர் http://www.FundsIndia.com நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். http://www.MappingMarkets.com என்ற வலைபின்னைலையும் நிர்வகித்து வருகிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலைகளில் webinar மூலம் அகில இந்திய அளவில் பல்வேறு டிரேடர்களுடன் தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

அவர் அணியும் டி-ஷர்ட்டிலிருக்கும் லைன்களைப் போலவே சார்ட்டுகளிலும் பல்வேறு கோடுகளை (ட்ரெண்ட்லைன்கள் மற்றும் APF-Andrew’s PitchFork எனப்படும் ஆண்ட்ரூவின் பிட்ச்ஃபோர்க்)  வரைந்து ரெஸிஸ்டன்ஸ், சப்போர்ட் மற்றும் ரிவர்ஸல் லெவல்களை கண்டுபிடிக்கும்போது, “அட! இதுதான் விஷயமா?” என்று வியப்பிலாழ்த்துவார். இதற்குக் காரணம் இவரின் கடந்த 15 வருட கால அனுபவமே!

ஹிந்து-வின் பிசினஸ் லைன்-இன் முதன்மை ஆராய்ச்சி நிபுணராக இருந்தவர்: ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இன்வெஸ்ட்மெண்ட் வேர்ல்டு பகுதியில் எழுதி வந்தவர். DNA Money மற்றும் Dow Jones Newswires (Wall Street Journal-இன் ஓர் அங்கம்)-களிலும் எழுதி வந்துள்ளார்.

நீங்கள் EOD சார்ட்டுக்கள் பார்ப்பவராக இருந்தால், KK-வின் முறைகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். “சிம்பிள் லைன்கள் வரைந்தாலே, ஸ்ட்ராங்கான டிரேடுகள் செய்யலாமே!” என்பதிலே உறுதியாயிருப்பவர்.

இந்தத் தமிழாக்கத்தின் ஒரிஜினல் – http://www.traderscarnival.com-இலிருந்து. DJ, many thanks to you!

திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

க்ரிஷ் வெங்கடேஷ்

க்ரிஷ் வெங்கடேஷ்

எலியட் வேவ் தியரியின் நுணுக்கங்களைத் திறம்படக் கையாளக்கூடியவர். இவர் போடும் சார்ட்டுகளிலிருக்கும் கிராஃபிக்ஸ்கள் ஆயிரம் கதைகள் சொல்லும்.  ஒரு காமர்ஸ் கிராஜூவேட், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-இல் PG டிப்ளோமா வாங்கினால் அவரது சார்ட்டுக்கள் எப்படியிருக்குமென்றும் சொல்லவும் வேண்டுமா? தற்போது போர்ட்ஃபோலியோ மேனேஜராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.கடந்த பத்தாண்டுகளாக சந்தையிலிருப்பவர். ஐ‌சி‌ஐ‌சி‌ஐ செக்யூரிடீஸ், எம்கே குளோபல் நிறுவனங்களில் பணிபுரிந்து, கடந்த ஆறாண்டுகளாக மார்வாடி ஷேர்ஸ் & ஃபைனான்ஸ் லிமிடெட், மதுரை கிளையின் மேனேஜராக இருக்கின்றார்.

இவரின் http://niftyforall.blogspot.in/ வலைப்பூ மூலம் இவரின் பங்குச்சந்தை அலசல்கலைப் பற்றி நீங்களே மேலும் தெரிந்து கொள்ளலாம்.

EW with EW (Earning Ways with Elliott Waves) என்பதே இவரது தற்போதைய தாரக மந்திரம்.

பாபு கோதண்டராமன் (நானேதானுங்க….!)

பாபு கோதண்டராமன்

பாபு கோதண்டராமன்

அட! இது நான்தானுங்க! “தமிழிலே நீங்கள் ஏன் எழுதக்கூடாது?” என்று என்னை எழுதத் தூண்டியவர் திரு. B. ஸ்ரீராம் அவர்கள்தான். அதுதான் என்னை உங்களுடன் இன்று இணைத்து வைத்துள்ளது. நேரடி வகுப்புகளும், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகின்றேன். “உனக்கெப்படி இவ்வளவு தைரியம் வந்தது?” என்று கேட்கிறீர்களா? இதோ என் கதை!

லாங் டெர்ம் இன்வெஸ்டர்/ டே டிரேடர் என எடுத்த பல அவதாரங்களில் பர்ஸைத் தொலைத்து, பேங்க் மேனேஜரின் கோபத்திற்கும், எனது குடும்பத்தாரின் கோபத்திற்கும் பலமுறை ஆளாகியவன் நான். ஷிவா G & விஷ் அவர்களின் 3X5 மற்றும் ஸ்பெகுலேட்டரின் 34EMA ஸ்ட்ராடஜியும்தான் தற்போது எனது கடைபிடிப்புகள் (கண்டுபிடிப்புகள் அல்ல)

ரூம் போட்டு கன்னா,பின்னான்னு யோசிக்காம, சிக்னல்கள் வந்தால் மட்டுமே டிரேட் செய்யணும்னு கத்துக்கிட்டிருக்கேன்! நீங்க ரெடியா?

காளையும்கரடியும் 2013 – பதிவுக்கட்டணம் செலுத்தும் முறை


பதிவுக் கட்டணம்: ரூ.10,000/- (ஒரு நபருக்கு. ஓரிரவு தங்கும் அறை உட்பட – *டபுள் ஆக்குபன்சி முறையில் – அதாவது ஒரு அறையில் இரண்டு பேர்)

சிறப்புத் தள்ளுபடிகள்

இரண்டு பேர் கொண்ட குழுக்களுக்கும்

மற்றும்

அக்டோபர் 25-ஆந்தேதிக்குள் ரிஜிஸ்டர் செய்தால், early bird offer-உம் உண்டு!

சிறப்புத் தள்ளுபடிகள்:

2 பேர் குழுவிற்கு: (ஒரு நபருக்கு ரூ. 500/-*** தள்ளுபடி) (***இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பதிவு செய்ய வேண்டும்)

Early bird offer: அக்டோபர் 25-ஆந்தேதிக்குள் பதிவு செய்தால், ஒரு நபருக்கு மேலும் ரூ 500/- தள்ளுபடி

ஆக, இரண்டு பேர் கொண்ட ஒரு குழுவாக, அக்டோபர் 25-க்குள் பதிவு செய்துகொண்டால், ரூ. 18,000/- மட்டும் (ரூ.20,000/- கிடையாது) (ஒருவருக்கு ரூ.9,000/ மட்டுமே)

(2 நாட்கள் கருத்தரங்கம் மற்றும் சனிக்கிழமை இரவு தங்கும் அறை*** உட்பட)

முன்பதிவு அவசியம்!

பாபு கோதண்டராமன் – 978989 6067 / 044-4205 5040

பணம் செலுத்துவதற்கான நெட் பேங்கிங் குறிப்புகள்.

1. தயவு செய்து, பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யும்போது, “Remarks” என்ற இடத்தில் உங்களது பெயரையும், உங்களது செல்ஃபோன் நம்பரின் கடைசி நான்கு இலக்கங்களையும் குறியீடாக தயவு செய்து எழுதுங்கள். அப்போதுதான் இந்தக் கட்டணம் உங்களுடையது என்று எனக்குத் தெரிய வரும்.

2. நீங்கள் முழுக் கட்டணமும் செலுத்தியதை எனக்கு இமெயில் (அ) sms மூலம் தெரியப் படுத்துங்கள். பிறகு, நான் உங்களுக்கு அதை என்னால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக உறுதிப் படுத்தி விடுகின்றேன்.

எனது வங்கிக்கணக்கு விபரங்கள் (பெயரில் இனிஷியல் கிடையாது. வெறும் Babu மட்டும்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்). நன்றி!Money to be transferred to

Name: Babu
Account number: 603301085677
Amount:
எனக்கு ஃபோன் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
Type of account: SB
Branch: ICICI BANK, Besant Nagar, Chennai
IFSC Code: ICIC0006033

1. During netbanking transfer, in the “Remarks” field, please write your name and the last four digits of your cell phone number as an identification. Then only I’ll know that that fees is from you.

2. After the receipt of payment from you, I’ll send you the confirmation mail at the earliest as I may be away from the computer at the time of your mail/payment reaching me. Thanks for understanding!

காளையும்கரடியும் 2013 – பாண்டிச்சேரி: விபரங்கள்! (இங்கே கிளிக்கிடுக)

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

காளையும் கரடியும் 2013 – பாண்டிச்சேரியில்


தமிழ் நாட்டில் முதல் முறையாக

2 நாள்* ரெஸிடென்ஷியல் கருத்தரங்கம்

நவம்பர் 30 & டிசம்பர் 1 (சனி & ஞாயிறு) – பாண்டிச்சேரி

ரியல் லைஃப் டிரேடர்கள் (ரீல் லைஃப் டிரேடர்கள் அல்ல) பங்கேற்றுத் தங்களின் கருத்துக்களை, அலசல்களை, ஸ்ட்ராடஜிக்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு புதுமைக் கருத்தரங்கம்

அறிதல்; கற்றல்; புரிதல்; உணர்தல்; தெளிதல்

இதிலே நீங்கள் எந்த நிலையில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தாலும், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கம் உங்களுக்கானதுதான்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் கற்றுக் கொடுக்கப் போவதில்லை; டெக்னிக்கல் ஸ்ட்ராடஜிக்கள் கற்றுக் கொடுக்கப் போகின்றோம்.

“டிப்ஸ்கள்” வாங்குங்கள் என்று சொல்ல மாட்டோம்; டிரேட் விதிமுறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள் என்கின்றோம்!

பயிற்சியாளர்கள்:

B. ஸ்ரீராம், சிஸ்டம் டிரேடர், 28 வருடத்திய அனுபவம், சன் டிவி & நாணயம் விகடன் ஆகியவற்றில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

B. கிருஷ்ணகுமார், ஃபண்ட்ஸ்இந்தியா(FundsIndia)

பாபு கோதண்டராமன், டெக்னிக்கல் அனலிஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

க்ரிஷ் வெங்கடேஷ்,டெக்னிக்கல் அனலிஸ்ட், niftyforall.blogspot.com

தலைப்புகள்:

·         நீண்ட கால முதலீட்டுக்கான வழிகாட்டி  டே டிரேடிங்கில் சிறந்து விளங்க ரிஸ்க் மேனேஜ்மெண்ட் விதிமுறைகள் (6/10 அன்று மாற்றம் செய்யப்பட்டது)

·         எளிமையான கோடுகள் காட்டிடும் வலிமையான டிரேடுகள்

·         பிசினஸ் சென்ஸ் (பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமல்ல!)

·         செல்வம் சேர்க்கத் தேவை ரிஸ்க் மானேஜ்மென்ட்

·        எலியட் வேவ் முறையில் செல்வம் வளர்க்க (Earning Ways With Elliott Wave)

·         இன்டெக்ஸ் ஃப்யூச்சர்களுக்கான EMA க்ராஸ்ஓவர் சிஸ்டம்

·         டிரெண்டில் பயணிக்கும் ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி

·         ட்ரெண்டுக்கு எதிராக “காண்ட்ரா டிரேட் (contra trade)” எடுப்பதெப்படி?

·         முதலீட்டை வளர்க்கும் ஆப்ஷன் ஸ்ட்ராடஜி

கொஞ்சம் மசாலா:

இதெல்லாம் இருக்கட்டுங்க! நீங்க குங்க்ஃபூ பாண்டா சினிமா பார்த்திருக்கீங்களா? அதுல வரும் ஒரு டயலாக். Po (போ) பாண்டாவின் அப்பா மிஸ்டர்.பிங்க்; அவர் நூடுல்ஸ் சூப் கடை வைத்திருப்பவர். அவர் செய்யும் ஸ்பெஷல் சூப்பின் சீக்ரட் மசாலாவானது, பரம்பரை ரகசியம் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். கடைசியில் “போ” விடம் ரகசியத்தைச் சொல்ல நேரிடும்போது சொல்லும் வசனம்தான் இது.

“The secret ingredient in my secret ingredient soup…. is…… NOTHING!…….. To make something special, you just have to believe that it’s special”

-   Mr. Ping (to Po) in Kung Fu Panda

 “என்னுடைய சீக்ரட் மசாலா சூப்பில் இருக்கும் சீக்ரட் மசாலா… என்ன தெரியுமா?….. எதுவுமேயில்லை! நீ ஏதாவது ஸ்பெஷலாகச் செய்ய வேண்டுமென்றால், அதுதான் ஸ்பெஷல் என்ற நம்பிக்கை மட்டும்தான் வேண்டும்!”

-   மிஸ்டர் பிங்க் (குங்க் ஃபூ பாண்டா சினிமா)

அதாவது, நமக்குத் தேவை நமது திறமையின் மீதான நம்பிக்கை. இந்த வசனத்திற்கு வலுவூட்டுவது போல, உங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இந்தக் கருத்தரங்கம் விளங்குமென்பதில் சந்தேகமில்லை.

இதே படத்தின் முடிவினிலே வில்லன் Tai Ling-உம், “போ” பாண்டாவும் சண்டையிட்டுக் கொள்ளும்போது, வில்லன் நிறையவே ஏளனத்துடன், “நீ என்ன? ஒரு சாதாரண, பெரிய, குண்டுப் பூசணிக்காய் பாண்டாவாக இருக்கிறாயே? நீ என்னை என்ன செய்து விட முடியும்? you’re a big, fat panda” என்று சொல்லும்.

அதற்கு நாம் ஹீரோ “Po” பாண்டா, I’m not a big, fat panda; I’m THE big, fat panda” என்று சொல்லி பதிலடி கொடுப்பார்; வெற்றியும் பெறுவார்.

நீங்களும் இந்தக் கருத்தரங்க முடிவில் நல்லதொரு தைரியத்துடன் கூடிய நம்பிக்கையைப் பெறுவீர்கள்; இலக்கை நோக்கிச் சென்று வெற்றியடையத் துடிக்கும் ஒரு கட்டுப்பாடான டிரேடராக/ முதலீட்டாளராக மாறுவீர்கள்.

“பங்குச்சந்தையில் செல்வம் சேர்ப்பதென்பது சூதாட்டமல்ல; கடுமையான உழைப்பும், கட்டுப்பாடான வணிக விதிமுறைகளும்தான்” எனபதைப் புரிய வைக்கும் ஒரு கருத்தரங்கமாக இது அமையும்.

முன்பதிவு அவசியம்!

பாபு கோதண்டராமன் – 978989 6067 / 044-4205 5040

மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணமும், சிறப்புத் தள்ளுபடிகளும்!

பதிவுக் கட்டணம்: (ரூ.11,000/- இல்லை; குறைக்கப்பட்டுள்ளது)

(ரூ. 10,000/- மட்டும்தான்! ஒரு நபருக்கு. ஓரிரவு தங்கும் அறை உட்பட – *டபுள் ஆக்குபன்சி முறையில் – அதாவது ஒரு அறையில் இரண்டு பேர்)

 (2 நாட்கள் [சனி,ஞாயிறு] கருத்தரங்கம் மற்றும் சனிக்கிழமை இரவு தங்கும் அறை*** உட்பட)

இடம்: ஹோட்டல் சற்குரு, பாண்டிச்சேரி.

வசதிகள்: Centrally air-conditioned இரு படுக்கைகள் கொண்ட அறை, (மற்ற குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளபடியால்)

சிறப்புத் தள்ளுபடிகள்

இரண்டு பேர் கொண்ட குழுக்களுக்கும்

மற்றும்

அக்டோபர் 25-ஆந்தேதிக்குள் ரிஜிஸ்டர் செய்தால், early bird offer-உம் உண்டு!

2 பேர் குழுவிற்கு: (ஒரு நபருக்கு ரூ. 500/-*** தள்ளுபடி) [முன்னர் ரூ.550/-] (***இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பதிவு செய்ய வேண்டும்)

Early bird offer: அக்டோபர் 25-ஆந்தேதிக்குள் பதிவு செய்தால், ஒரு நபருக்கு மேலும் ரூ 500/- தள்ளுபடி [முன்னர் ரூ.550/-]

ஆக, இரண்டு பேர் கொண்ட ஒரு குழுவாக, அக்டோபர் 25-க்குள் பதிவு செய்துகொண்டால், ரூ. 18,000/- (ரூபாய் பதினெட்டாயிரம் மட்டும்). [முன்னர் ரூ.19,800/-]

பயிற்சிக் கட்டணம் செலுத்தும் முறை (இங்கே கிளிக்கிடுக!)

** டிரேடர்கள் மற்றும் நீண்ட நாளைய முதலீட்டாளர்களுக்கான ஸ்ட்ராடஜிகள்

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

டாடி……! …… எனக்கொரு டவுட்டு!

பாண்டிச்சேரி…. தமிழ்நாடுங்களா? இல்லதானே….! பின்னே ஏன் “தமிழ்நாட்டுலேயே முதல் முறையா”ன்னு எழுதியிருக்கீங்க….? :)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 732 other followers