பங்கு: TITAN 20110722 – ஒரு பார்வை! (1)


அன்புடையீர்!

எனது விளக்கங்கள் அனைத்தும் படங்களிலேயே உள்ளன. ஒரு கரடியின் பங்காக உள்ளது.

படம் 1: 20110722 TITAN Daily - டபுள் டாப் + டைவர்ஜன்சஸ்

படம் 2: TITAN வார வரைபடம்

TITAN பற்றிய ஆகஸ்ட் 26-ஆம் தேதியிட்ட பார்வையை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

 

 

நிஃப்டி 20110722 வார வரைபடம்: ஒரு அலசல்


விளக்கங்கள் படங்களிலேயே உள்ளன.

படம் 1: நிஃப்டி வார வரைபடம் - கேண்டில்ஸ்டிக் அனாலிசஸ்

படம் 2: நிஃப்டி 20110722 வார வரைபடம் - ஃபிபநோச்சி பின்னிழுப்பு

-பாபு கோதண்டராமன்

கல்லு வச்சிப் பழுக்க வச்சது!


ஆமாங்க! மாம்பழ சீசன் வந்தாலே இந்த வாக்கியத்த சொல்லாதவங்களே இல்லன்னு சொல்லலாம். கால்சியம் கார்பைடு-ங்கற கெமிக்கல் கல்லு, காய்களை சீக்கிரமா பழுக்க வச்சிடுது, இல்ல இல்ல! நல்லா பழுத்த மாதிரி வெளியில மேக்கப் போட்டு விட்டுடுது. அந்த மாதிரிப் பழுக்க வச்ச பழங்கள்ள நம்ம உடம்புக்குக் கெடுதியான சமாச்சாரங்கள்தான் ஜாஸ்தின்னு சொல்றாங்க! அதாவது வெளியில பாக்கறதுக்கு நல்லா பழுத்த மாதிரி இருக்கும்; உள்ளாற நல்லாவே இருக்காது! இந்த மாதிரிப் பழத்தை வீட்டுக்கு வாங்கிட்டுப் போனாலும், வீட்டம்மா, “ஏங்க! கொஞ்சமா பாத்து வாங்கிட்டு வந்திருந்தா, இவ்வளவும் வேஸ்ட் ஆகாதுங்களே!”-ன்னு ஒரு ஸ்டாப்-லாஸ்ஸின் தத்துவத்தை நமக்குச் சொல்லித் தருவாங்க! (மாங்காய்க்கு மட்டுமில்லாமா, மஞ்சள் கலர்ல இருக்குற எல்லாப் பழத்துக்குமே இந்தக் கல்ல யூஸ் பண்ணி பழுக்க வச்சிடறாங்களாமே!)

“அதெல்லாம் சரிங்க பாபு! கல்லு வச்சி பழுக்க வச்ச பழத்துக்கும், டெக்னிக்கல் அனாலிசஸுக்கும் என்னங்க சம்மந்தம்?” அப்படின்னு கேக்குறீங்களா? விஷயம் இருக்குதுங்க! “வெளியில நல்லா இருக்கு; உள்ள ஒன்னுமே இல்ல!” அதுதாங்க மேட்டர்!

கீழே ரெண்டு படங்களக் கொடுத்திருக்கேன். முதல் படத்திலே, அருமையான “டபுள் டாப்” அமைப்பு வந்து அதுவும் நல்ல வால்யூமோட, ரெஸிஸ்டன்ஸ ஒடச்சிட்டு மேலே போகுது. 780 ரேஞ்சை ஒடச்சதுக்கப்புறம், ஒரு 140 பாயிண்ட் பிராஃபிட்ல, ஒரு 910-930 ரேஞ்சுக்குப் போகற மாதிரி இருக்குற சார்ட் பேட்டர்ன்.

படம்1: கல்லு வச்சி பழுத்தது TECHMAHINDRA 22/09/2010 பிரேக்-அவுட்டின் போது, சூப்பராக உள்ளது.
போகுது; ஆனா போகல… (கீழே தேவர் மகன் நடிகர் திலகம் ஸ்டைலில் படிக்கவும்)

“இந்த மாதிரி ஒரு நல்ல பிரேக்-அவுட்டுக்கப்புறம் டார்கெட்-ஐ ஈசியாத் தொட்டுட்டு நமக்கெல்லாம் இலாபம் பாக்க ஒரு நல்ல சான்ஸக் கொடுத்திருக்கனும். ஆனா, அப்படிப் பண்ணலையே! மேல போன மாதிரி போயிட்டு, அப்படியே மறுபடியும் கீழ திரும்பிடுச்சே! அப்புறமா, அது எங்கயும் போகாம அப்படியே ஒரு சைட்வேஸ் மார்க்கெட்டுலதான போயிட்டிருக்கு!இதத்தான் சொல்றன், கல்லு வச்சிப் பழுக்க வச்ச மாதிரி, வெளியில நல்லா இருக்கு; ஆனா, உள்ள நோ மேட்டருன்னு! கீழ இருக்குற ரெண்டாவது படத்தப் பாருங்க! நல்லா தெரியும்! அம்புட்டுத்தான்”

படம்2: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்! பிரேக்-அவுட்டுக்கப்புறம் இருக்குற பரிதாப நிலை!

என்னங்க! ஏதேனும் சொல்றதுன்னா, கமெண்ட் பகுதியில ஒரு ரண்டு வரி எழுதுங்க! இங்கிலீஷ்ல கூட எழுதலாம்! ஓகே-தானே?

-பாபு கோதண்டராமன்

3 இன் 1 – [3] 20110715 அட்டவணையின் மறுபார்வை


இது ஏதோ கிரேக்க மொழி என்று நினைப்பவர்களுக்கு சிறிது உதவி செய்வதற்காக, இங்கே முந்தைய மூன்று பதிவுகளின் இணைப்புகள் உள்ளன. இவைகளைப் படித்துப் பார்த்து விட்டு இந்தப் பதிவை படித்தீர்களேயானால், கொஞ்சம் நன்றாகப் புரியும். (கோபம் வேண்டாம், ok?)

  1. குச்சி வரைபடம் அறிமுகம் (OHLC Bar Charts)
  2. 3இன்1 வரைபடப் புதிருக்கான விடை 
  3.  20110715 3இன்1 அட்டவணை

இந்த அட்டவணையிலிருக்கும் பங்குகளில்தான், என்னென்ன நடந்திருக்கு என்று சார்ட்டுகளைப் பார்க்கலாம்.

3இன்1 என்று மட்டுமல்லாமல், TITAN வேறொரு பேட்டர்னிலும் மிக சுவாரஸ்யமான நிலையில் உள்ளது. அதனாலதான் அதைக் கடைசியில கொடுத்திருக்கேன். சஸ்பென்ஸ்! 🙂

-பாபு கோதண்டராமன்

 

படம் 1: 3 இன் 1 15/07 எ.கா.-இன் 22/07 நிலை

படம் 2: 3 இன் 1 HCC

 

படம் 3: 3இன்1 HDIL

படம் 4: 3இன்1 KRBL

 

படம் 5: 3இன்1 M&M

 

படம் 6: 3இன்1 SATYAMCOMP

 

படம் 7: 3 இன் 1 TITAN

இன்னுமொரு நண்பரின் வருகை!


நமது வலைப்பூவிற்கு மேலும் அழகு சேர்க்க இன்னுமொரு நண்பர் விருப்பம் தெரிவித்துள்ளார். முதலிலேயே சொல்லிவிடுகிறேன், இவர் நீங்களெல்லாம் “யாரிவர்?” என்று கேட்குமளவுக்கு ஒரு தெரியாத முகமாகவே இருக்க விரும்புகிறார். பப்ளிசிட்டி-யை விரும்பாதவர். எனவே, அவரின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அவரின் பெயரை நான் வெளியிடவில்லை.

யாரது, யாரது, சொல்லவா?

இவர் ஒரு பதினைந்து வருடங்களாக மார்க்கெட்டுடன் தொடர்புடையவராக இருக்கிறார். இவரின் குடும்பத்தில், இவரது அப்பா பங்குச்சந்தை முதலீட்டாளராக இருந்து அறிமுகப்படுத்தியதில் இவரது சகோதர, சகோதரிகளனைவருமே (இவர் உட்பட) பங்குத் தரகு நிறுவனங்களில் பணி புரிந்து வருகிறார்கள்; முதலீடும் தொடர்ந்து நடக்கின்றது.

இவரது தனித்தன்மையே, கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் விலை மற்றும் வால்யூம் விபரங்களை கணித்து, அதன் போக்கை அறுதியுட்டுக் கூறுபவர். அதாவது, ஒரு புரோக்கர்-டெர்மினலில் வரும் விலை விபரங்களே (‘டிக்’குகள்) இவருக்குப் போதுமானது. என்னையும், மற்ற பலரையும் போல சார்ட்டுக்கள் எல்லாம் பார்ப்பதில்லை. இவரின் ஒரு சில கணிப்புகள் தவறும்; மற்ற சில வெற்றியில் முடியும். மார்க்கெட்டின் போக்குகளைப் பற்றிப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. இவருடைய பங்களிப்பாக ஒரு சில பங்குகளை, நீண்டகால முதலீட்டுக்கான அடிப்படையில் பரிந்துரைக்க வருகிறார். அவருக்காக “நாவலரின் வாக்கு” என்ற ஒரு புதிய தொகுப்பினை உருவாக்கி அதிலே அவருடைய பரிந்துரைகளை பிரசுரிக்க இருக்கிறேன்.

நாவலர் சொல்வது:

நம்முடைய நாவலர் கூறுவதெல்லாம், “என்னோட பரிந்துரைகளில் முதலீடு செய்ய நிறைய பொறுமை வேணும். நீண்ட கால முதலீடுன்னு நான் சொன்னாலும், டார்கெட் சீக்கிரமாக அடைந்து விட்டால், வெளியே வந்துடணும்; அதே போல, நான் சொல்ற “ஸ்டாப்-லாஸும்” கண்டிப்பாக பின்பற்றப் படணும். சில சமயங்களில், ரிஸ்க், அதாவது, ஸ்டாப்-லாஸ் அதிகமா இருக்கும். அப்போதெல்லாம் நம்முடைய வாசகர்கள் அவரவர்களுடைய ரிஸ்க்-புரோஃபைலுக்குத் தகுந்தவாறு, பொசிஷன் எடுக்குறதா, இல்ல வேணாமன்னு முடிவெடுத்துக்கனும். அப்படியே, டிரேட் எடுத்தாங்கன்னா, பொசிஷன்-சைஸை ரிஸ்குக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கனும். ஐடியா நம்மோடது; முடிவு அவங்களோடது. ஏன்னா, பணம் அவங்களோடதுதானே! அப்புறம் என்னோட பரிந்துரைகளில் இருக்கும் விலைகள் எல்லாம் ஒரு நாளின் முடிவின்போது என்ற கணக்கிலே எடுத்துக் கொள்ள வேண்டும்.”.

என்னங்க, ஒரு அனுபவஸ்தர் சொல்றது சரிதானே? ஏன்னா, நிறைய பரிந்துரைப்பாளர்கள் “இங்க டிரேட் என்ட்ரி; இது ஸ்டாப்-லாஸ்; இது டார்கெட்” அப்படின்னுதான் சொல்வாங்க; ஆனா, எவ்வளவு ரிஸ்குக்குத் தகுந்தமாதிரி, பொசிஷன் சைஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்றவங்க கம்மிதானே!

இப்போதைய பரிந்துரைகள்:
கம்பெனி தேதி தற்போதைய விலை என்ன செய்யணும் நஷ்டத் தடுப்பு  (ஸ்டாப் லாஸ்) இலக்கு (டார்கெட்)
TIMKEN 21.07.11 239.75 வாங்க (Buy) 198-க்குக் கீழே 350-லிருந்து 375 வரை
RAYMOND 21.07.11 394.40 வாங்க (Buy) 340-க்குக் கீழே 550-லிருந்து 600 வரை

சுட்டால் பொன் சிவக்கும்… அதே சமயம் கற்றுக் கொள்வோம் மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்-ஓவர் சிஸ்டத்தை [2]


சுட்டால் பொன் சிவக்கும் அத்தியாயம் 1-லிருக்கும் கோல்டு மாத வரைபடத்தில் மூ.ஆ.கி.ஓவர் அவ்வளவு சரியாகத் தெரியவில்லையென பலரும் கருத்து தெரிவித்துள்ளீர்கள். சரியாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளீர்களென இதிலிருந்தே தெரிகிறது.

இப்போது, கீழே இருக்கும் அதே தங்கத்தின் வார வரைபடத்தைப் பாருங்களேன்? இது எப்படி இருக்கு, என்ன சொல்லுது? ஒரு வரி எழுதுங்களேன்!

-பாபு கோதண்டராமன்

படம் 2: மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்ஓவர் சிஸ்டம் புதிர். கோல்டு MCX வார வரைபடம்.

தமிழில் எழுதுவதெப்படி (கம்ப்யூட்டர் கீ-போர்ட் வைத்து) [2]


ஆஹா! இதைப் பற்றித் தொடர்கதை மாதிரி எழுதுவேனென்று நினைத்துப் பார்க்கவேயில்லை. இதன் முதல் பதிவில் எழுதியிருப்பதைப் போல மைக்ரோசாஃப்ட்டின் http://specials.msn.co.in/ilit/Tamil.aspx என்கின்ற லிங்க்கில் கிடைக்கும் மென்பொருளையும், அதிலிருக்கும் “எப்படிஉபயோகிக்க வேண்டும்” என்ற முறைகளையும் பார்த்துத் தமிழில் டைப் அடிக்க முயற்சி செய்தீர்களா?

டைப் அடிப்பது கடினமாக இருப்பவர்களுக்கு, இந்த மென்பொருளிலேயே ஒரு “விர்ச்சுவல் கீ-போர்டு” இருக்கிறது. அதிலே, என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொத்தான் உள்ளது. சிறுவர்களுக்கான வாய்ப்பாட்டில் இருப்பது போல, “அ” முதல் “ஃ” வரை உயிரெழுத்துக்களும், அப்புறம் “க” முதல் “ன” வரை உயிர்மெய்யெழுத்துக்களும் மற்றும் வடமொழி எழுத்துக்களுக்கான பொத்தான்கள் இருக்கின்றன. இப்போது, “க” மேல் மௌசை வைத்தால் கூடுதலாக

  • க்,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ முதலான மற்ற குறில், நெடில்களும் திரையில் தோன்றும்.

தேவையானதை அழுத்தி வார்த்தைகளை எழுதிக் கொள்ளலாம். இதேபோல மற்ற உயிர்மெய் எழுத்துக்களின் மேலே மௌஸை செலுத்தி அதன் வரிசையில் உள்ள மற்ற உயிர்மெய்யெழுத்துக்களின் குறில், நெடில்களைப் பெறலாம்.

படத்தைப் பாருங்களேன்! அம்புக்குறியிட்டுள்ளது போல, டாஸ்க் பாரில் (டாஸ்மாக் பார் இல்லை :-)_) தெரியும் EN, TA போன்ற விருப்பங்களைத் தேர்வு செய்து நமக்கு வேண்டிய மொழியினைத் தேர்ந்தெடுத்க் கொள்ளலாம்! பக்கத்திலேயே “விர்ச்சுவல் கீ-போர்டு”க்கான ஐக்கானும் உள்ளது. அதைக் “கிளிக்” செய்தால்தான் படத்திலிருக்கும் கீ-போர்டு சிறிய சைஸில் திரையில் வரும். இது பெரிதாக்கப்பட்ட படம்.

படம்: தமிழ் விர்ச்சுவ்ல் கீ போர்டு

என்னங்க! தமிழில் ஒரு கலக்கு கலக்கலாமா?

-பாபு கோதண்டராமன்