ஜனனம்


அன்புடையீர்!

“தமிழுக்கு அமுதென்று பேர்…..”  புதுவைக் கவிஞர் பாரதிதாசன். (எனைத் திருத்தியமைக்கு நண்பர் JK-வுக்கு நன்றி!)

இவ்வமுதத் தமிழிலே, பங்குச்சந்தை பற்றிய டெக்னிக்கல் அனலிஸஸ் (தொழில் நுட்பப் பகுப்பாய்வு), ஃபண்டமன்ட்டல் அனலிஸஸ் (அடிப்படைப் பகுப்பாய்வு) போன்றவற்றைப் பற்றி என் அறிவுக்கெட்டிய வரை, என்னால் இயன்ற தமிழிலே எழுத முயற்சிக்கின்றேன்.

“என்னடா! அமுதத் தமிழிலே எழுதுகிறேன் என்று சொன்ன ஆசாமி, இந்த அறிமுகப்படலத்திலேயே ஆங்கிலத்தில் எழுதிட்டாரே!” என்று ஒரு சிலருக்கு வருத்தம் ஏற்படலாம். ஆனால் என் செய்வது? இது ஒரு தொழில்நுட்ப வார்த்தைகள் கொண்ட பகுதியாதலால், சில பல அன்னிய மொழி வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுத வேண்டிய சூழ்நிலை. ஆகையால், பொருத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே எழுதப்படும் பதிவுகள் தங்களுக்கு, உபயோகமானதாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பு. இவைகளை ஒரு ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் மட்டுமே பாருங்கள். ஏதேனும் ட்ரேட் செய்யாதீர்கள். அப்படி ஒருவேளை ட்ரேட் செய்ய நேரிட்டால், தகுந்த ஸ்டாப் லாஸ், பொசிஷன் சைஸ் போன்றவற்றைப் பின்பற்றி ரிஸ்கைக் குறைத்துக் கொளளுங்கள்.

எச்சரிககை: பங்குச்சந்தையில் முதலீடு மற்றும் தினசரி வர்த்தகம் செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

இந்த வலைத்தளத்திலே இடம்பெறும் எனது கிறுக்கல்களைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை வரவேற்கின்றேன்.

இவண்,

பாபு கோதண்டராமன்

கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாலேயே விகடன் பிரசுரமும், நாகப்பன், புகழேந்தி, சோம.வள்ளியப்பன் போன்ற நூலாசிரியர்களும் தமிழிலே பங்குச்சந்தை முதலீடுகள் பற்றி புத்தகங்கள் பிரசுரித்துள்ளனர். அதன் தாக்கமும், திரு. ஸ்ரீராம், டைரக்டர், ரிலையபிள் ஸ்டாக்ஸ், சென்னை அவர்களின் ஊக்கமும்தான் இந்தச் சிறிய ஆக்கத்தின் தூண்டுகோல்கள். ஓ! திரு. அருள்ராஜன் அவர்களும் ஒரு காரணம். அவரின் எளிமையான உரைநடை மிகவும் பிடிக்கும்.

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

2 Responses to ஜனனம்

 1. Saravanan says:

  Hi Mr.Babu,
  Thanks and Wishes for your new initiative..
  Sorry for post in English… I wish to post in Tamil but after a hour long fight with my system to install the file with your Language link finally i am unable to find out the support file i386 to initiate my Tamil typing.
  About me.. I am Saravanan from Trichy and in market for 10 years as a trader & sub broker.
  Almost a year i am following your post in Traderji,inditrader and latter Midas Technicals.
  On your 21/07/2011 post with a reply to Gulshan i come to know this initiative.. There i am not get the blog link, i don’t know why you didn’t add this blog link bellow your signature ? Is forum rule not allow to add blog link? Finally through a google search i get the blog detail and read out completely.
  Feel little bit upset after your repeated request to post comments, friends in mute readers…
  Hope and wish in long run this will short out with more and more people come n share their view as with more lively blog to be.

  List of things i would expect from this blog :-
  1. End of the day Nifty view if time permit for you or Weekend post of nifty with how it was moved during the period and what are all the possible move we expect on coming week.
  2.Weekly one stock with its breakout or breakdown levels.
  3.Analysis the previous post with the result we got whether it achieved or failed.
  4.Explain about an indicator and how to utilise with various time frame
  5.How to build a portfolio
  6.Open interest watch for F&O Trader

  I know with your daily routine and your post in multiple forum its tough to expect everything from your end. Once you initiate and more people start read out, fellow trader take response to post like your thread in Traderji with multiple expert view.
  At my end i forward this blog like to who ever i know in the market to help everybody to be a knowledgeable trader.

  Great going

  Regards,
  Saravanan.S

  • இவ்வளவு விரிவாக தங்களின் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி. தாங்கள் கூறியுள்ளது போல ஒவ்வொன்றாக செயல் படுத்த நானும் எண்ணியுள்ளேன். ஆரம்பமல்லவா? சிறிது காலம் தேவைப்படுகிறது, என்னையும் என்னுடைய schedule-ஐயும் இதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டு செயல்பட.
   சுருக்கமான பதிலுடன்,
   பாபு கோதண்டராமன்.
   ஓ! டிரேடர்ஜியில் நாம் நம்முடைய வலைப்பின்னல் மற்றும் வலைத்தளங்களின் பெயரை வெளியிட முடியாதுதான்!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: