வரைபடங்கள்- அறிமுகம் 1- குச்சி வரைபடங்கள் (Bar Charts)


வணக்கம்!

வரைபடங்கள் பல வகைப்படும்.  1. கோடு (Line charts), 2. ஓப்பன், ஹை, லோ, க்ளோஸ் குச்சி (OHLC Bar Charts), 3. மெழுகுவர்த்தி (Candlestick charts), 4.பாயிண்ட் & ஃபிகர் சார்ட்(point and figure chart), 5. காகி (Kagi charts) மற்றும் இன்னமும் சில வகைகள் உள்ளன.

இங்கே, இரண்டாம் வகையான ஓப்பன், ஹை, லோ, க்ளோஸ் குச்சி வரைபடத்தின் படம் வரைந்து பாகங்களைக் குறித்துள்ளேன். ஃபுல் மார்க் கிடைக்குங்களா? 🙂

பெயருக்கேற்றவாறு, இந்த மாதிரி வரைபடங்கள், ஆரம்ப விலை, ஹை, லோ மற்றும் முடிவு விலையைக் கொண்டு வரையப் படுகின்றன. விபரங்களைப் படத்திலேயே எழுதியுள்ளேன். மறக்காமல் எவ்வளவு மதிப்பெண்கள் கொடுததுள்ளீர்கள் என்று எழுதுங்கள்!

படம் 1: படம் வரைந்து பாகங்களைக் குறி - OHLC பார் சார்ட்டுகள் - குச்சி வரைபடங்கள்


இதிலே, என்ன பார்க்க வேண்டுமென்றால்,

1. ஹை-யுக்கும் லோ-வுக்குமுள்ள இடைவெளி; இதுதான் ரேஞ்ச் (Range) என்பார்கள். இது (WRB – Wide Range Bar) ரேஞ்ச் அதிகமுள்ள விலைக்குச்சியா, அல்லது (NRB-Narrow Range Bar) ரேஞ்ச் குறைவாக உள்ள விலைக்குச்சியா என ஆராய உதவும். ஒவ்வொரு பங்கிற்கும், இண்டெக்ஸுக்கும் ரேஞ்ச் மாறுபடும் என்பதை கனத்தில் கொள்ளவும்.

2. Inside Bar: (இன்சைட் பார்)

தற்போதைய ஹை < முந்தைய பாரின் ஹை &

தற்போதைய லோ >முந்தைய பாரின் லோ

என்னங்க புரியுதா? ஒரு கணித முறையிலேயே இந்த விதிமுறையை எழுதியுள்ளேன். இன்சைட் பார் என்றால், உள்ளடங்கிய குச்சி என்று சொல்லலாம். ஹை, முந்தைய ஹையை விடக் குறைவாகவும், லோ-வானது முந்தைய லோ-வை விட அதிகமாகவும் இருக்குமாறு அமைவது. அதாவது, தற்போதைய பாரின் ரேஞ்சானது, முந்தைய பாரின் ரேஞ்சுக்குள்ளேயே அடங்கியுள்ளது என்று பொருள்.

படம் 2: இன்சைட் & அவுட்சைட் பார்களின் அமைப்பு

3. Outside Bar: (அவுட்சைட் பார்) அது சரி! இன்சைட் பார் பற்றிப் பார்த்தோமே! அதன் நேர் எதிர் விதிமுறைகள்தான் இந்த அவுட்சைட் பாருக்குப் பொருந்தும். மேலே உள்ள படத்திலேயே அதைப் பற்றிக் காட்டியுள்ளேன்.

தற்போதைய ஹை > முந்தைய பாரின் ஹை &

தற்போதைய லோ <முந்தைய பாரின் லோ

என்று கணித முறையிலேயே இந்த விதிமுறையை எழுதலாம். அவுட்சைட் பார் என்றால்,ஹை-யும் லோ-வும் முந்தைய பாரை விட வெளியில் நீடடிய குச்சி என்று சொல்லலாம். ஹை, முந்தைய ஹையை விடஅதிகமாகவும், லோ-வானது முந்தைய லோ-வை விடக் குறைவாகவும்  இருக்குமாறு அமைவது. அதாவது, தற்போதைய பாரின் ரேஞ்சானது, முந்தைய பாரின் ரேஞ்சுக்குள்ளேயே அடங்காமல், வெளியே நீட்டிக் கொண்டிருப்பது என்று பொருள்.

படத்தைப் பாருங்கள்! மார்க் போடுங்கள்! 🙂

– பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

9 Responses to வரைபடங்கள்- அறிமுகம் 1- குச்சி வரைபடங்கள் (Bar Charts)

 1. sriganeshh says:

  பாபு,

  தங்களின் புது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். ப்ளாக் தீம் வெகு அருமை.

  sriganeshh

  • ஸ்ரீகணேஷ்,
   தங்களின் வருகைக்கும், மேலான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
   பாபு கோதண்டராமன்

 2. பாபு,
  மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.99 மார்க்குக்கு மேலே கொடுக்கலாம்.ஆனால் 100 க்கு மேலே தரமுடியுமா?
  அன்புடன்
  சீனிவாசன்

 3. sriganesh says:

  பாபு,

  பங்குசந்தை ஆங்கில டெக்னிகல் வார்த்தைகளுக்கு ஏற்ற தமிழ் வார்த்தை அறிய இந்த லிங்க் உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  https://panguvaniham.wordpress.com/

  மேலும் அதிக தமிழ் அன்பர்களை சென்றடைய தமிழ்மணம், திரட்டி போன்ற தமிழ் பதிவு திரட்டிகளில் பதிவு செய்யலாம்.

  அன்புடன்
  sriganeshh

 4. Murugan says:

  super sir..

 5. kala says:

  sir any class contact in salem pl. inform

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: