மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் கட்டணப் பயிற்சி வகுப்பு – 30 ஜூலை, 2011


குறிப்பு: இங்கே இருக்கும் செய்திகள் யாவும் எனக்கு வந்த அழைப்பின் தமிழாக்கம்தான். ஏதேனும் பிழைகளிருந்தால் மன்னிக்கவும். இனி விஷயத்திற்குச் செல்வோம்.

முதலீட்டாளர்களே!

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-இன் MSE இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேபிடல் மார்க்கெட்ஸ் (MSE ICM), ஆரம்ப நிலை முதலீட்டாளர்களுக்கான பண மேலான்மை, ஃபண்டமன்ட்டல் அனாலிசஸ் மற்றும் டெக்னிக்கல் அனாலிசஸ் ஆகியவை பற்றிய “பங்குச்சந்தை பற்றித் தெரிந்த முதலீட்டாளராகுங்கள்!” என்ற ஒரு கட்டணப் பயிற்சிக் கருத்தரங்கத்தை நடத்த இருக்கிறது.

நாள்: 30 ஜூலை, 2011

இடம்: மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம், எண்-30, செகண்ட் லைன் பீச், சென்னை-600 001. (பீச் இரயில் நிலையம் & பர்மா பஜார் அருகில், தலைமைத் தபால் நிலையம் பின்புறம்)

நடத்துபவர்: பாபு கோதண்டராமன் (ஓ! அடியேன்தான் J)

கட்டணம்: ரூ. 750/- (மேலும் ரூ.80/- சேவை வரிகள் தனி) ஒருவருக்கு. மதிய உணவும், தேநீரும் உள்ளடக்கம்.

பங்கு பெற விரும்புபவர்கள், ரூ. 830/-க்கான செக்/ பே ஆர்டர்/ டிமாண்ட் டிராஃப்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை, Madras Stock Exchange Limited” என்ற பெயருக்கு, சென்னைக் கிளையில் மாற்றம் செய்யத் தக்கவாறு எடுத்து, இணைத்துள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கொடுத்துள்ள விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்.

Madras Stock Exchange Limited

No. 30, Second Line Beach,

Chennai – 600 001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25 ஜூலை, 2011

மேலும் விபரங்ககளுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்: திரு. P. சம்பத் குமார், தொ.பே எண்கள்: 044-25218100, 25228951/52/53; மின்னஞ்சல்: investoredu@mseindia.in

REGISTRATION FORM

ONE-DAY PROGRAMME ON

“BECOME AN EDUCATED INVESTOR THROUGH MONEY

MANAGEMENT, FUNDAMENTAL & TECHNICAL ANALYSIS: A

BEGINNER LEVEL WORKSHOP”

1. Name
2. Address
3. Telephone Nos.
4. Mobile No.
5. Email ID
6. Payment Details

DATE:                                                                                           SIGNATURE

பண மேலான்மை, ஃபண்டமன்ட்டல் அனாலிசஸ் மற்றும் டெக்னிக்கல் அனாலிசஸ் ஆகியவை பற்றிய “பங்குச்சந்தை பற்றித் தெரிந்த முதலீட்டாளர் ஆகுங்கள்!”

இளநிலை முதலீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்பு

அத்தியாயங்கள்

1. ஃபண்டமன்ட்டல் அனாலிசஸ் அடிப்படை

 • கம்பெனிகளின் நிதிநிலை அறிக்கைகளில் அடிப்படையில் கவனிக்க வேண்டியவை என்னென்னவென்று “பிஸினஸ் ஆரம்பிக்கலாம் வாங்க” என்ற ஒரு பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.

2. டெக்னிக்கல் அனாலிசஸ் அடிப்படை

 • ஒரு வரைபடம் (சார்ட்) எதைக் காட்டுகிறது?
 • விலையும், வால்யூமும் எதைக் காட்டுகின்றன?
 • மார்க்கெட்டின் வகைகள்: ட்ரெண்டிங் மார்க்கெட் & சைட்-வேஸ் மார்க்கெட்
 • ட்ரெண்டுகள்; ட்ரெண்ட் லைன்கள்; அவற்றின் மீறல்கள்
 • சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ் – ஆதரவு & தடை நிலைகள்
 • சார்ட் பேட்டர்ன்கள்; தொடரும் மற்றும் திரும்பும் வரைபட அமைப்புகள் (ஹெட் & ஷோல்டர், தலைகீழ் ஹெட் & ஷோல்டர், முக்கோண & கோடி அமைப்புகள்)
 • டெக்னிக்கல் அனாலிசஸ் ஒரு கலை; கல்லில் செதுக்கப் பட்ட சூத்திரங்கள் அல்ல. பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க, கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுவோம்

3. பண மேலாண்மையும், மன நிலையும்

 • ரிஸ்க் கேபிடல் என்றால் என்ன?
 • ஸ்டாப் லாஸ்-சும், பொசிஷன் சைஸ்-சும் எப்படி முக்கியமானவை?
 • இவை மூன்றையும் வைத்து, நம்முடைய வணிகத்தின் அளவுகளை எப்படிக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது?
 • எப்படி ஒரு கட்டுப்பாடுடன் கூடிய ஒரு முதலீட்டாளராக மாறுவ்து?

பயிற்சிக் கையேடுகள்:

1. மேலே குறிப்பிட்டுள்ள சாராம்ஸத்தின் படி, ஒரு 20 பக்க தமிழ் அல்லது ஆங்கிலக் கையேடு

2. அடுத்து ஒரு, 4-பக்க “பிஸினஸ் ஆரம்பிக்கலாம் வாங்க” இணைப்பு, ஃபண்டமன்ட்டல் அனலிசஸ் பயிற்சிக்காக.

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

6 Responses to மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் கட்டணப் பயிற்சி வகுப்பு – 30 ஜூலை, 2011

 1. இது பலருக்கும் உதவும் என்று நம்புகிரென்….

  • கமலக்கண்ணன் ராஜாமணி,
   இந்தப் பயிற்சி வகுப்பானது இளநிலை முதலீட்டாளர்களுக்கு (Beginners) பங்குகளை எவ்வாறு தேர்ந்தெடுத்து, சுய நம்பிக்கையுடன் முதலீடு செய்து வெற்றியடைவது என்ற அடித்தளத்தை வலுவாக அமைக்க வழிகாட்டியாக இருக்குமென்று நாங்களும் (திரு. B. ஸ்ரீராம், இயக்குனர், ரிலையபிள் ஸ்டாக்ஸ், சென்னை; திரு. V. நாகப்பன், இயக்குனர், மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் நான்) நம்புகிறோம்.
   நன்றியுடன்,
   பாபு கோதண்டராமன்

 2. I am a investor not a trader… is this program useful for me?

  • Beginners எனப்படும் அனைவருக்கும் (டிரேடர்களோ, இன்வெஸ்டர்களோ), பங்குச்சந்தை முதலீட்டின் படிப்பறிவைப் பற்றிய முதல் படிக்கட்டுகளாளாய் அமைந்து, நல்ல வழிகாட்டியாக இந்த சிலபஸ் (சமச்சீரோ, மெட்ரிக்கோ இல்லை; இது யுனிவர்சல் :-)) இருக்கும்
   -பாபு கோதண்டராமன்

 3. Pingback: MSE-யில் நடந்த கட்டணப் பயிற்சி வகுப்பு « காளையும் கரடியும்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: