எதுவும் செய்யாமலிருப்பது; செய்தாலும், தப்பாகச் செய்வது


ஆங்கிலத்தில்: JK

தமிழாக்கம்: அடியேன்தான்

 •  எதுவும் செய்யாமலிருப்பது என்னவென்றால் ஒரு புதிய டிரேடில் என்ட்ரி ஆகாமலிருப்பது அல்லது கையில் இருக்கும் பொசிஷனிலிருந்து வெளியே வராமலிருப்பது
 • தவறான செயலைச் செய்வதென்பது அவசரக் குடுக்கை போல “டக்”கென்று உடனடியாகவோ அல்லது ஆற, அமர நிதானித்து யோசித்து அந்த ஒரு விலையின் நகர்வெல்லாம் முடிந்தபின் என்ட்ரியோ அல்லது வெளியே வருவதையோ செய்வதாகும்.

இந்த இரண்டு காரணங்களுமே ஒரு முதலீட்டாளரின் (அ) தினசரி வர்த்தகரின் பெரும்பாலான தோல்விகளுக்குக் (தோல்வியில் முடிவடையும் ட்ரேட்களுக்கு) காரணமாக அமைகின்றன. அதுதான் எப்படின்னு கீழே இருக்குற பட்டியல பார்த்துத் தெரிஞ்சிக்கலாம் வாங்க.

செயலற்றிருப்பது (அ) எதையும் செய்யாமலிருப்பது

 தவறான செயலைச் செய்வது (அ) ரொம்ப சரியாத் தப்பைச் செய்வது

 1. ஒரு டிரேடர் பயத்தில உறைஞ்சிட்டார்னா, எதையுமே செய்ய மாட்டார். “இளங்கன்று பயமறியாது” என்பதற்கேற்ப புதிய டிரேடர்களுக்கு இந்தப் பயம் வராது. யாரு பயப்படுவாங்கன்னா, தொடர்ச்சியா ஒரு ஆறேழு ட்ரேட்கள் நஷ்டத்துல போற டிரேடர்கள்தான் இதுக்குப் பலிகடா ஆவாங்க. அந்த சமயத்துலதான் அவங்களோட சுயநம்பிக்கையும் “டா டா” சொல்லிட்டு அவங்களை விட்டுப் போயிட்டிருக்கும்.
 2. தவறான ஒரு முடிவை ஒத்துக் கொள்ளாமலிருப்பது. சப்போஸ், ஒரு நஷ்டமான பொசிஷன் வைத்திருக்கும் ஒரு டிரேடர், என்னென்னவெல்லாம் சொல்லி மனதைத் தேற்றிக்கொள்ள முடியுமோ, அதையெல்லாம் சொல்லி அந்த நஷ்டமான டிரேடிலிருந்து வெளியே வராமலிருப்பதாகும். உண்மை நிலவரம் என்னவாக இருந்தாலும், அவர் அதையெல்லாம் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, அந்த நஷ்டம் சீக்கிரத்திலேயே ஒரு இலாபமான டிரேடாக மாறுமென்ற நம்பிக்கையோடு (வேண்டுதலுடன்) காத்திருப்பார்.
 3. மார்க்கெட் எப்படியிருக்கிறதென்று எந்தவொரு ஆராய்ச்சியும் (ஹோம்வொர்க்) செய்யாமலிருப்பவரும், சரியான சமயத்தில் செய்ய வேண்டியவற்றை செய்யாமலிருப்பார். பொதுவாக, இவர் தன்னுடைய போர்ட்போலியோவிலிருக்கும் ஸ்டாக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள போதிய நேரம் ஒதுக்காமலிருப்பவர்.
 4. ஒரு நீண்ட நாளைய பக்கவாட்டு மார்க்கெட்டின் போது ஏற்படும் பிரேக்-அவுட்டையும், நமது டிரேடர் பார்க்கத் தவறி விடுவார். அதை போல ஒரு திசையியின் நகர்வுக்குப் பிறகு ஏற்படும் திருப்பத்தைக் கூட, ஒரு டிரெண்டில் நிகழும் ஒரு சாதாரண மைனர் புல்பேக்தான் (retracement) என்று நினைத்தும் தவற விட்டு விடுவார்.
 5. ஆப்ஷன் போன்ற கௌண்ட்டர்களில், வாங்கியவர்கள் தங்களது பொசிஷனை முடிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் இல்லாததால், மார்க்கெட் அவர்களது நிலைப்பாட்டிற்கு எதிராகச் சென்றாலும், அவர்கள், “விற்பவர்களெல்லாம் பயத்திலிருக்கிறார்கள்” என்றவொரு அசட்டு தைரியத்தோடிருப்பார்கள். அப்போதும், “நோ ஆக்ஷன்”தான்!
 1. அவசரக்குடுக்கை என்ட்ரி:ஒரு தெளிவான சிக்னல் கிடைக்கிறதுக்கு முன்னாடியே ஒரு டிரேடில் என்ட்ரி செய்யறது.it இது எப்படீன்னா, ஒரு வலிமையான ட்ரெண்ட் உள்ள மார்க்கெட்டில், ஒரு டாப் அல்லது பாட்டம் முதலியற்றைத் தேடும்போது நடக்கிறது. அதனால, மார்க்கெட்டை “இப்படித்தான் இருக்கும்” என்று தீர்மானிப்பதோ அல்லது “நான்தான் மார்க்கெட்டை விட ஆதி புத்திசாலி” என்று நினைக்கும்போதோ, வேதனையுடன் கூடிய ஒரு விலை அதிகமான அனுபம்தான் மிஞ்சும்.
 2. தாமதமான என்ட்ரி (அ) மார்க்கெட்டைத் துரத்துவது: “விடிய விடிய இராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பாவா?” என்று கேட்பது போல, ஒரு (அப் அல்லது டௌன்) ட்ரெண்ட் ஆரம்பிச்சி நல்லா ஓடிட்ட பிறகு என்ட்ரி செய்வது. ஏன்னா, ஒரு வலிமை வாய்ந்த, பெரிய விலை நகர்வுக்குப் பிறகு என்ட்ரி செய்வதென்பது ரொம்ப சுலபம். அதை சமயம், அந்த வலிமையான நகர்வு, ஒரு பின்னோக்கி இழுப்புக்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்படலாம். அதனால்தான், ஒரு நிதானமான டிரேடர், ஒரு வலிமையான நகர்வுக்குப் பிறகு ஏற்படும் பின்னிழுப்புக்காகக் காத்திருந்து என்ட்ரி செய்வார்.
 3. அவசரக் குடுக்கை எக்சிட்:மறுபடியும், புதியவரோ (அ) அனுபவம் வாய்ந்தவரோ, தொடர்ச்சியான நஷ்டங்களுக்குப் பிறகு, அப்போது கிடைக்கும் சிறிதளவு இலாபத்தைக் கூட “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று திடீன் ஞானம் பெற்றவராக, அந்த டிரேடிலிருந்து வெளியே வந்து விடுவார். இங்கேயும் சுயநம்பிக்கை “ஏ/சி பஸ்”ஸிலேறி மகாபலிபுரம் பிக்னிக் போய்விட்டிருக்கும்.
 4. தாமதமான எக்சிட்: இது இலாபகரமான டிரேடிலிருந்து இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருந்து, அதனால் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டுத் தாமதமாக வெளியேறுவது (அ) நஷ்டத்தில் இருக்கும் டிரேடிலிருந்து மேலும் நஷ்டம் வருமாறு தாமதமாக வெளியேறுவதாகும். பேராசையும், நம்பிக்கையும்தான் இது போன்ற செயல்களுக்குக் காரணம். எப்போது ஒரு டிரேட் தான் கணித்ததற்கு மாறாகச் செல்கிறதோ, அதைச் சரியாகக் கவனித்து, அதற்குத் தக்கவாறு செயல்படும் மனத்திடமுடைய டிரேடரே, வெற்றியாளராக மாறுகிறார்.
Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: