படி, படி, …… படிப்படியாகப் படித்துக் கொண்டேயிரு(ங்கள்)!


நம்மில் பலரும் “யூத்”கள்தான் இன்னமும். ஆங்கிலத்தில் சொல்வார்களே, “getting younger at heart day by day” என்று, அது போல. அதிலும் நமது குழந்தைகளுக்கு “படி, படி” என்று அறிவுரை கூறும்போதெல்லாம் நாம் இன்னமும் வயது குறைந்து ஒரு வெறித்தனமே வந்துவிடும். ஏன்னா, ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிறதுன்னா “திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா” சாப்பிடற மாதிரி! அதுல வேற, “நீ நல்லா படிச்சாதான், ரேங்க் எடுத்து, counselling-லேயே சீட் கிடைக்கும். வருஷா வருஷம் கட்-ஆப் வேற ஏறிக்கிட்டேயிருக்கு. ஹிந்து [The Hindu]பேப்பர் படி; நல்லா லாங்குவேஜ் டெவலப் ஆகும்” அப்படி, இப்படின்னு. எல்லாமே நல்ல அட்வைஸ்கள்தான். சந்தேகமேயில்லை. ஆனால், அந்த அட்வைஸ்படி நாம் படிக்கிறோமா?

“என்ன சார், இந்த வயசுல போயிட்டு படிக்கச் சொல்லிக்கிட்டுன்னு கேக்குறீங்களா?” ஒரு நிமிஷம் இருங்க. அப்படி என்ன வயசாயிடிச்சி உங்களுக்கு! மேலே, முதல் வரியிலேயே சொல்லிட்டேணுங்க, நம்ம எல்லாம் யாருன்னு! அதே மாதிரி, நம்ம எல்லாருக்கும் இருக்குற இன்னொரு ஒற்றுமையும் என்னன்னா, நாம எல்லாருமே “பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்”. நம்முடைய பணத்தை முதலீடு செய்து விட்டு, நஷ்டத்தைக் குறைத்து, இலாபத்தை எதிர் நோக்கிச் செயல்படும் செயல் வீரர்கள். அப்படியிருக்கிற  நாமும், நாம் முதலீடு செய்யும் கம்பெனிகளின் நிதிநிலை அறிக்கைகள், செயல்பாடுகள், விரிவாக்கம், எதிர்காலத் திட்டங்கள் முதலியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்கிறோமா? அவை பற்றி நன்கு படித்தாராய்ந்துத்தான் நமது முதலீடுகளைச் செய்கிறோமா? உங்களின் பதிலை உங்களின் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன்!

இப்போது எனது சுயபுராணத்திற்கு வருகிறேன். பிஸினஸ் ஸ்டேண்டர்ட் (Business Standard), எக்கானமிக் டைம்ஸ் (ET, Economic Times) மற்றும் பிஸினஸ் லைன் (Business Line) போன்ற தினசரிகள் தங்களுக்கே உரிய குணாதிசயங்களுடன் வருகின்றன.

இவற்றில் பிஸினஸ் லைனில் ஞாயிறன்று வரும் “Investment World- இன்வெஸ்ட்மெண்ட் வேர்ல்டு” பகுதி நான் விரும்பிப் படிப்பது. (“பாபு, சுயபுராணம் போதும், நிறுத்து” என்கிறீர்களா?)

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். பிஸினஸ் லைன் பேப்பருக்கு ஒரு ஆஃபர் இருப்பதாக இப்போது அறிகிறேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் இன்வ்வளவு பீடிகையும்! அந்த ஆஃபர் என்னவென்றால், ஒரு வருடத்திற்கு 361 நாளைய பேப்பர்களுக்கு (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாகத்தான் 361 நாட்கள்) மொத்த சந்தாத் தொகையானது ரூ. 600/- மட்டுமே! (ஒரு வருடத்திற்கான அடக்க விலை ரூ. 1496/- ஆகிறது). இது பற்றி மேலும் விபரங்களுக்கு, திரு. ஆர். ஜானகிராமன், தி ஹிந்து பேப்பர் அவர்களை 98414 87610 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அவரது இமெயில்: janakiraman.r@thehindu.co.in

எனக்குத் தெரிய வந்ததை உங்களுக்கும் தெரியப் படுத்தி விட்டேன். இனிமேல் இது ரகசியமில்லை. 🙂 முடிவு உங்கள் கையில்! விடு ஜூட்!

“யான் பெற்ற இன்பம்; பெறுக இவ்வையகம்” என்ற நோக்கில் எழுதப் பட்டுள்ள கட்டுரை.

கேள்வி ஞானம்: ஆமாம் சார்! நீங்க பாட்டுக்கு பிஸினஸ் லைன் ஆஃப்ர் பத்தி எழுதிட்டீங்க! சப்போஸ் இதைக் குழந்தைகள் எல்லாம் பாத்துட்டு, ஸ்டாக் மார்க்கெட்டுல இருக்குற அவங்க பேரண்ட்ஸை பாத்து, “மம்மீ, டாடீ! இனிமேல் நீங்க ஆஃபர்ல போட்டிருக்கிற பிஸினஸ் லைன் வாங்கிப் படிங்க; உங்க மார்க்கெட் நாலெட்ஜ் (knowledge) நல்லா இம்ப்ரூவ் ஆகும்,” என்றெல்லாம் படிக்கச் சொல்லித் தொந்தரவு பண்ணிடுவாங்களே சார்!

– பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to படி, படி, …… படிப்படியாகப் படித்துக் கொண்டேயிரு(ங்கள்)!

 1. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா” சாப்பிடற மாதிரி!

  நா வேணும்னா அனுப்பித் தரட்டுமா சார்.

  திருநெல்வேலியிலிருந்து ராஜா

  • ரொம்ப நன்றி ஆர்‌சிராஜா சார்! நீங்க என்ன கேட்டதே, நான் அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குது! சென்னை, அம்பத்தூர்லேயே ஒரு ஐயங்கார் பேக்கரியிலயே nicely packed இருட்டுக்கடை அல்வா கிடைக்குதுங்க!
   பி.கு: நீங்கள் யாருக்கும் அல்வா கொடுக்காமலிருந்தால் சரி! 🙂 Cheers

 2. Pingback: பிஸினஸ் லைன் சந்தா ஆஃபரும், “ஹிந்து” பேப்பருக்காக ஒரு வேலை வாய்ப்பும் « காளையும் கரடியும்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: