சுட்டால் பொன் சிவக்கும்… அதே சமயம் கற்றுக் கொள்வோம் மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்-ஓவர் சிஸ்டத்தை [1]


அன்புடையீர்!

நான் ஏற்கனவே சொன்னது போல, எனக்கு எப்பப்ப, என்னென்ன தோணுதோ, அப்பப்ப அதையதை எழுதுகிறேன். பாருங்களேன்! இன்று நான் திரு B. ஸ்ரீராம் (இயக்குனர், ரிலையபிள் ஸ்டாக்ஸ், சென்னை) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவரது ஆஃபிஸ்-இல் இருக்கும் நண்பர் ஆனந்த் இந்த கோல்டு (தங்கம்) வரைபடத்தைக் காண்பித்தார். அப்போதுதான் மனதில் உதித்தது “நாம் திரு. ஸ்ரீராம் அவர்கள் உபயோகிக்கும் மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்-ஓவர் டிரேடிங் சிஸ்டத்தைப் பற்றி கற்றுத் தரலாமேயென்று”

நிற்க! திரு. ஸ்ரீராம் அவர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இவர் ஒரு சிஸ்டம் டிரேடர். அதாவது, ஒரு சில சிக்னல்கள் கிடைத்தால் “என்ட்ரி”; ஒரு சில சிக்னல்கள் கிடைத்தால் “எக்சிட்”. சொல்வது எளிது; செய்வது கடினம் என்பார்களே! அது இது போன்ற சிஸ்டம் டிரேடுகளுக்குப் பொருந்தும். ஆனால், இவரது ஆஃபிஸ்-இல் பல்வேறு சிஸ்டம்களில் இது போன்று டிரேடுகள் நடை பெற்றுக் கொண்டேயிருக்கும். மழையோ, வெயிலோ, புயலோ, வறட்சியோ, காலையோ, மாலையோ டிரேடிங் சிஸ்டங்களின் சிக்னல்கள் படியே டிரேடுகள் நடக்க வேண்டுமென்று உறுதியாயிருப்பவர்.

அதுவும் இந்த மூ. ஆ. கி. ஓவர் சிஸ்டத்தை வைத்து நிஃப்டி பாங்க் நிஃப்டி, 20-25 முன்னணிப் பங்குகள், கோல்டு, சில்வர், காப்பர், நிக்கல், மென்த்தாயில் என பல்வேறு கௌண்ட்டர்களில் டிரேடுகள் செய்யும் டே-டிரேடர். மேலும் இவர் நாணயம் விகடன் வாசகர்களுக்கும், சன் டிவி நேயர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர்.

நான் டெக்னிக்கல் அனாலிசசில் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றதில் இவருக்குப் பெரும் பங்குண்டு. நன்றி ஸ்ரீராம் அவர்களே!

குறிப்பு: இந்த மூ.ஆ.கி.ஓவர் சிஸ்டம் மிகப் பழமையானதும், பிரபலமானதும்தான்: அனைவரும் அறிந்த ஒன்றுதான். “எந்த ஒரு சிஸ்டத்தையும் ஒரு டிசிப்ளினோடு கடைபிடித்து வந்தால் வெற்றி காணலாம். அதேபோல்தான் இதிலும் வெற்றியடைய டிசிப்ளின்தான் மிக அவசியம்” என்கிறார் திரு. ஸ்ரீராம்.

முதல் பாடத்தையே சிறிய “டெஃபனிஷனுடன் கூடிய என்னுடைய  கேள்வி (உங்களுடைய பதில்)” என்ற வகையில் அமைத்துள்ளேன். புரிந்தால், பதில் எழுதவும். புரியவில்லையென்றால், என்ன புரியவில்லையென்று கேள்வி கேட்கவும். இதில் உங்களுடைய பங்கேற்புதான், என்னிடமிருந்து இந்த டிரேடிங் சிஸ்டம் பற்றிய அனைத்து சூட்சுமங்களையும் வெளிக்கொண்டு வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தமிழில் டைப் செய்வது கஷ்டமாக இருந்தால் இங்க்லீஷ்-லேயே எழுதுங்க! எழுதுவதற்கு கூச்சப் படாதீர்கள். என்னைப் பாருங்கள். எப்படியிருந்த நான், இப்படி ஆயிட்டேன்! 🙂 )

தங்கத்தின் மாத வரை படம் 2004 முதல் இன்று வரை:

மூ.ஆ.கி.ஓவர் டிரேடிங் சிஸ்டம் புதிர் 1: தங்கம் 2004 முதல் 2011 ஜூலை 19 வரை

(இந்த எடுத்துக்காட்டில் உள்ள 50EMA & 100EMA போன்றவற்றை ஒரு கோடாகப் பாருங்கள். அவை என்னவென்று தமிழில் பிறகு எழுதுகிறேன். ஆங்கிலத்தில் படிக்க அவசரப் படுபவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். உண்மையைச் சொல்லப் போனால் இந்த லிங்க்-இல் இருக்கும் வெப்சைட்தான் நான் டெக்னிக்கல் அனாலிசஸ் கற்றுக் கொள்ள ஆரம்பித்த இடம். கிளிக் செய்துதான் பாருங்களேன் அது என்ன தளமென்று! :-))

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

5 Responses to சுட்டால் பொன் சிவக்கும்… அதே சமயம் கற்றுக் கொள்வோம் மூவிங்க் ஆவரேஜ் கிராஸ்-ஓவர் சிஸ்டத்தை [1]

  1. I am new for this one. please explain…

  2. Thank you babu. After going thro in detail I will revert back.Thanks again for your services.

  3. C.V. Srinivasan says:

    In my view there is no cross over but during 2005 Oct-Nov 50 EMA slightly separate from 100EMA to go up and till today it is maintaining with huge gap.

    • C.V.ஸ்ரீநிவாசன், தங்கள் கருத்துக்கு நன்றி. கிராஸ்ஓவர் அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. அன்று பிடித்த ட்ரெண்ட் இன்று வரை தொடர்கிறது என சரியாக எழுதியுள்ளீர்கள்.

  4. swamy says:

    i don’t know about 50EMA & 100EMA;anyway according to me there’s no cross over

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: