தமிழில் எழுதுவதெப்படி (கம்ப்யூட்டர் கீ-போர்ட் வைத்து) [2]


ஆஹா! இதைப் பற்றித் தொடர்கதை மாதிரி எழுதுவேனென்று நினைத்துப் பார்க்கவேயில்லை. இதன் முதல் பதிவில் எழுதியிருப்பதைப் போல மைக்ரோசாஃப்ட்டின் http://specials.msn.co.in/ilit/Tamil.aspx என்கின்ற லிங்க்கில் கிடைக்கும் மென்பொருளையும், அதிலிருக்கும் “எப்படிஉபயோகிக்க வேண்டும்” என்ற முறைகளையும் பார்த்துத் தமிழில் டைப் அடிக்க முயற்சி செய்தீர்களா?

டைப் அடிப்பது கடினமாக இருப்பவர்களுக்கு, இந்த மென்பொருளிலேயே ஒரு “விர்ச்சுவல் கீ-போர்டு” இருக்கிறது. அதிலே, என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொத்தான் உள்ளது. சிறுவர்களுக்கான வாய்ப்பாட்டில் இருப்பது போல, “அ” முதல் “ஃ” வரை உயிரெழுத்துக்களும், அப்புறம் “க” முதல் “ன” வரை உயிர்மெய்யெழுத்துக்களும் மற்றும் வடமொழி எழுத்துக்களுக்கான பொத்தான்கள் இருக்கின்றன. இப்போது, “க” மேல் மௌசை வைத்தால் கூடுதலாக

  • க்,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ முதலான மற்ற குறில், நெடில்களும் திரையில் தோன்றும்.

தேவையானதை அழுத்தி வார்த்தைகளை எழுதிக் கொள்ளலாம். இதேபோல மற்ற உயிர்மெய் எழுத்துக்களின் மேலே மௌஸை செலுத்தி அதன் வரிசையில் உள்ள மற்ற உயிர்மெய்யெழுத்துக்களின் குறில், நெடில்களைப் பெறலாம்.

படத்தைப் பாருங்களேன்! அம்புக்குறியிட்டுள்ளது போல, டாஸ்க் பாரில் (டாஸ்மாக் பார் இல்லை :-)_) தெரியும் EN, TA போன்ற விருப்பங்களைத் தேர்வு செய்து நமக்கு வேண்டிய மொழியினைத் தேர்ந்தெடுத்க் கொள்ளலாம்! பக்கத்திலேயே “விர்ச்சுவல் கீ-போர்டு”க்கான ஐக்கானும் உள்ளது. அதைக் “கிளிக்” செய்தால்தான் படத்திலிருக்கும் கீ-போர்டு சிறிய சைஸில் திரையில் வரும். இது பெரிதாக்கப்பட்ட படம்.

படம்: தமிழ் விர்ச்சுவ்ல் கீ போர்டு

என்னங்க! தமிழில் ஒரு கலக்கு கலக்கலாமா?

-பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

4 Responses to தமிழில் எழுதுவதெப்படி (கம்ப்யூட்டர் கீ-போர்ட் வைத்து) [2]

  1. நன்றி பாபு அவர்களே…. அட இப்ப நானும் தமிழில்….🙂

    • சபாஷ் கமலக்கண்ணன் சார்! சூப்பர் அப்பு🙂 !

      மைக்ரோசாஃப்ட் அங்க இருந்துக்கிட்டு, நம்ம மொழியில சுலபமா எழுத வழி செஞ்சிருக்குப் பாருங்க! MS-க்குப் பாராட்டுக்கள்!

      -பாபு கோதண்டராமன்
      காளையும்கரடியும்.வோர்ட்பிரெஸ்.காம்

  2. C.V. Srinivasan says:

    sir it is not installing to my system,both web and desktop version refuse to install.

    • “எப்படி” என வீடியோக்கள் இருக்கின்றன. ஒருமுறை பார்க்கவும். FAQ சென்று பார்க்கவும். XP அல்லது Vista, windows7 உபயோகிப்பாளர்களுக்கு என இருக்கும் (கண்ட்ரோல் பேனல் சென்று அட்ஜஸ்ட் செய்வது) போன்ற செய்முறை விளக்கங்களைப் பார்க்கவும்.

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: