கல்லு வச்சிப் பழுக்க வச்சது!


ஆமாங்க! மாம்பழ சீசன் வந்தாலே இந்த வாக்கியத்த சொல்லாதவங்களே இல்லன்னு சொல்லலாம். கால்சியம் கார்பைடு-ங்கற கெமிக்கல் கல்லு, காய்களை சீக்கிரமா பழுக்க வச்சிடுது, இல்ல இல்ல! நல்லா பழுத்த மாதிரி வெளியில மேக்கப் போட்டு விட்டுடுது. அந்த மாதிரிப் பழுக்க வச்ச பழங்கள்ள நம்ம உடம்புக்குக் கெடுதியான சமாச்சாரங்கள்தான் ஜாஸ்தின்னு சொல்றாங்க! அதாவது வெளியில பாக்கறதுக்கு நல்லா பழுத்த மாதிரி இருக்கும்; உள்ளாற நல்லாவே இருக்காது! இந்த மாதிரிப் பழத்தை வீட்டுக்கு வாங்கிட்டுப் போனாலும், வீட்டம்மா, “ஏங்க! கொஞ்சமா பாத்து வாங்கிட்டு வந்திருந்தா, இவ்வளவும் வேஸ்ட் ஆகாதுங்களே!”-ன்னு ஒரு ஸ்டாப்-லாஸ்ஸின் தத்துவத்தை நமக்குச் சொல்லித் தருவாங்க! (மாங்காய்க்கு மட்டுமில்லாமா, மஞ்சள் கலர்ல இருக்குற எல்லாப் பழத்துக்குமே இந்தக் கல்ல யூஸ் பண்ணி பழுக்க வச்சிடறாங்களாமே!)

“அதெல்லாம் சரிங்க பாபு! கல்லு வச்சி பழுக்க வச்ச பழத்துக்கும், டெக்னிக்கல் அனாலிசஸுக்கும் என்னங்க சம்மந்தம்?” அப்படின்னு கேக்குறீங்களா? விஷயம் இருக்குதுங்க! “வெளியில நல்லா இருக்கு; உள்ள ஒன்னுமே இல்ல!” அதுதாங்க மேட்டர்!

கீழே ரெண்டு படங்களக் கொடுத்திருக்கேன். முதல் படத்திலே, அருமையான “டபுள் டாப்” அமைப்பு வந்து அதுவும் நல்ல வால்யூமோட, ரெஸிஸ்டன்ஸ ஒடச்சிட்டு மேலே போகுது. 780 ரேஞ்சை ஒடச்சதுக்கப்புறம், ஒரு 140 பாயிண்ட் பிராஃபிட்ல, ஒரு 910-930 ரேஞ்சுக்குப் போகற மாதிரி இருக்குற சார்ட் பேட்டர்ன்.

படம்1: கல்லு வச்சி பழுத்தது TECHMAHINDRA 22/09/2010 பிரேக்-அவுட்டின் போது, சூப்பராக உள்ளது.
போகுது; ஆனா போகல… (கீழே தேவர் மகன் நடிகர் திலகம் ஸ்டைலில் படிக்கவும்)

“இந்த மாதிரி ஒரு நல்ல பிரேக்-அவுட்டுக்கப்புறம் டார்கெட்-ஐ ஈசியாத் தொட்டுட்டு நமக்கெல்லாம் இலாபம் பாக்க ஒரு நல்ல சான்ஸக் கொடுத்திருக்கனும். ஆனா, அப்படிப் பண்ணலையே! மேல போன மாதிரி போயிட்டு, அப்படியே மறுபடியும் கீழ திரும்பிடுச்சே! அப்புறமா, அது எங்கயும் போகாம அப்படியே ஒரு சைட்வேஸ் மார்க்கெட்டுலதான போயிட்டிருக்கு!இதத்தான் சொல்றன், கல்லு வச்சிப் பழுக்க வச்ச மாதிரி, வெளியில நல்லா இருக்கு; ஆனா, உள்ள நோ மேட்டருன்னு! கீழ இருக்குற ரெண்டாவது படத்தப் பாருங்க! நல்லா தெரியும்! அம்புட்டுத்தான்”

படம்2: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்! பிரேக்-அவுட்டுக்கப்புறம் இருக்குற பரிதாப நிலை!

என்னங்க! ஏதேனும் சொல்றதுன்னா, கமெண்ட் பகுதியில ஒரு ரண்டு வரி எழுதுங்க! இங்கிலீஷ்ல கூட எழுதலாம்! ஓகே-தானே?

-பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

7 Responses to கல்லு வச்சிப் பழுக்க வச்சது!

 1. S.Shennakesavan says:

  It is very good example for technical failure .it also touches four times but it is not any upward movement .now we understand that it is range bound. am i correct –
  by s.shennakesavan
  shenna2003in@yahoo.co.in

 2. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

 3. S.Shennakesavan
  Thanks for your nice obsrvations. You’re right about the range bound aspect.

 4. வேகமாக வரும் பணம் வேகமாக சென்றுவிடும் என்கிறார்கள். மேலும் இது போல சம்பாதிப்பது நிலைக்காது என்றும், மனசாட்சிக்கு விரோதமானது என்றும் கூறுகிறார்களே.
  நானும் டே டிரடிங் செய்தேன். வழக்கம் போல் நட்டம். வெளியேறி 5 வருடம் ஆகிறது. யாரோ ஒருவரின் loss நமக்கு profit . பணத்தை இழந்தவன் என்ன கஷ்டப்படுவான்? அந்த பாவம் சும்மா விடுமா என்று டே டிரடிங் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள் கூறினார்கள்.

  அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பேராசை பேரு நஷ்டம் என்று நினைத்து வெளியேறினேன். அனால் அதில் இருக்கும் டெக்னிக் பற்றி இபோதுதான் தெரிந்து கொண்டேன்.

  என்னுடைய கேள்வி.

  டே டிரடிங் என்பது ஒரு சூதாட்டம் என்பது சரியா?
  டே டிரடிங் செய்வது morale க்கு ethics க்கு எதிரானதா?
  trading for living சாத்தியமா? (note: my age is 30)
  அப்படி யாரேனும் வெற்றிகரமாக இந்த தொழிலில் இருக்கிறார்களா?
  அதிர்ஷ்டம் இருந்தால்தான் இதில் வெற்றி பெற முடியுமா?
  தினமும் எதனை சதவீதம் profit target வைத்து செயல்பட்டால் இதில் வெற்றி பெறலாம்?
  உங்களுடைய வெற்றி சதவீதம் எவ்வளவு?

  உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்

  • திரு. ரகுநாதன் அவர்களே!
   டே-டிரேடிங் செய்து, (அதுவும் தலை,கால் புரியாமல் செய்து) நஷ்டப்பட்டவன்தான் நானும். என் வண்டியும் அந்தக் கரடு முரடான பாதையிலே சென்று அச்சு முறிந்து கவிழ்ந்து விழுந்த வண்டிதான். ஏதோ ஒரு படத்தில், விவேக் சொல்வாரே, “அது அறியாத வயசு, அது தெரியாத வயசு” என்று, அதுபோல டெக்னிக்கல் அனாலிசஸ், ஃபன்டமண்ட்டல் அனாலிசஸ் என்றெல்லாம் என்னவென்றே தெரியாமல் விளையாடிய வயசு.
   பொறுமையுடனும், நிதானத்துடனும், சரியான மனநிலையுடனும், நாம் யார், நம்முடைய கெபாசிட்டி என்னவென்று உணர்ந்து டே-டிரேடிங் செய்தால் நிச்சயம் வெற்றியடையலாம். டே-டிரேடிங்கை என்றால் என்னவென்று புரிந்து, தான் யாரென்று உணர்ந்து, அதன்படி செயல்பட்டு வெற்றியடைகிறவர்களைப் பார்த்திருக்கிறேன்.
   ஒரு நாளைக்கு என்பதை விட, ஒரு காலாண்டுக்கு அல்லது ஒரு மாதத்துக்கு இவ்வளவு (அடையக் கூடிய இலக்காக வைத்து) என்று உணர்ந்து செய்தால், வெற்றி நிச்சயம். அதை விட முக்கியம், ஒரு நாளைக்கு இவ்வளவு இலாபம் வேண்டும் என்பதைவிட, ஒரு நாளைக்கு இவ்வளவுக்கு மேல் நஷ்டமடையக் கூடாது என்பதைப் புரிந்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
   போகிறப் போக்கைப் பார்த்தால், என்னுடைய MSE பயிற்சி வகுப்பின் சிலபஸ் பூராவும் இங்கேயே கவர் பண்ணிவிடுவேன் போலிருக்கிறதே! 🙂
   குறிப்பு: நான் டே-டிரேடிங் செய்வதில்லை. (எனது பொறுமையைப் பற்றி எனக்குத் தெரியும் 🙂 ).
   எனது வெற்றி சதவீதம் எவ்வளவு என்பதை விட, பொறுமையுடன் சந்தையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

   மற்ற கேள்விகளுக்கு உதாரணமாக ஒரு கதை சொல்கிறேன். A, B, C என்று மூவர் இருக்கிறார்களென்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரிடமும் ஒரு லட்ச ரூபாய் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். A தன்னிடமிருக்கும் பணத்தை ஒரு வங்கியில் 10.25% என்ற இப்போதைய நிலையில் டெபாசிட் செய்கிறார்; B-யோ அதை வைத்து ஒரு சமோசா,chaat,பானி பூரி கடையொன்றை ஆரம்பிக்கிறார். C-யோ மேலும் ஒரு ஒன்பது லட்சங்கள் கடன் வாங்கி ஒரு ரெஸ்டாரண்ட்/உணவகம் ஆரம்பிக்கிறார். இப்போது சொல்லுங்கள்! இந்த மூவரில் யார் செய்வது/செய்தது சரி?

   இந்த மூவரும் தத்தம் திறமைகளையறிந்து அவர்களே முடிவெடுத்துள்ளனர். தத்தம் பார்வையில் அவர்கள் மூவருமே சரியெனப் படுகின்றனர். அதே போலத்தான் தங்களின் “சூதாட்டமா, morale & ethics” பற்றிய கேள்விகளுக்கான பதிலும். இவையெல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது; பார்வைகளைப் பொறுத்தது.

   -பாபு கோதண்டராமன்

 5. S.Shennakesavan says:

  “A” IS FIXED DEPOSIT
  “B” IS INVESTOR
  “C” IS TRADER

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: