20110803 INFOSYSTCH-இல் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் அமைப்பு


கீழேயுள்ள வார வரைபடத்திலேயே கொஞ்சம் விபரங்களை எழுதியுள்ளேன். புரிகிறதாவென்று பாருங்கள். படத்தில் எழுத இயலாதவைகளை அதற்குக் கீழே எழுதியுள்ளேன்.

படம்: இன்ஃபோசிஸ் வார வரைபடம் - ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் அமைப்பு

படத்தின் தொடர்ச்சி:

இவ்வாறு நடக்கும் ரீ-டெஸ்ட் யார், யாருக்கிடையே நடக்கும் போராட்டம் என்று நாம் பார்க்க வேண்டும்.

லாஜிக் பார்க்கலாம்!

நெக்லைன் சப்போர்ட்டில், காளைகள் விலை கீழே இறங்காமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், வலது ஷோல்டர் உருவாகும்போது, கரடிகளின் ஆதிக்கம் அதிகமாகி, தலையின் ஹை-யை விடக் கம்மிய்யான விலையில் டிரெண்டைத் திருப்பி விட்டார்கள். பிறகு, மறுபடியும் நெக்லைன் சப்போர்ட்டை அதிக வால்யூமுடன் உடைத்துக் கீழே இறக்கினார்கள். அவ்வாறு விலை இறங்கிய பிறகு, காளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, மறுபடியும் மேலே செல்லமுடியுமா என்று முயற்சி செய்யும்போது, முன்னர் சப்போர்ட்டாக இருந்த நெக்லைன் இப்போது ரெஸிஸ்டன்சாக (நடை சாத்தும் தடை நிலையாக) செயல்படுகிறது. கரடிகள் அனைவரும் இந்த ரீடெஸ்டின் போது ஒன்று சேர்ந்து “ஷார்ட்” டிரேட் மறுபடியும் எடுப்பார்கள். இதுதான் ரீடெஸ்ட் நடப்பதன் சாராம்சம்.

காளைகளைத் தவிக்க விட்டு, கரடிகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸல் அமைப்புதான் இந்த ஹெட் & ஷோல்டர்ஸ் ஆகும்.

ஸ்டாப் லாஸ் (எந்தவொரு டிரேடுக்கும் இது ரொம்ப முக்கியம்), டார்கெட், டார்கெட் சோன் (இலக்கு மண்டலம்) முதலானவைகளைப் படத்திலேயே கொடுத்து விட்டேன். இந்த அமைப்பின் டிரேட் முறைகளை செயல்படுத்தும் முன், இதை நன்கு புரிந்து கொள்வதற்காக பேப்பர் டிரேட் செய்து பாருங்கள். மேலும், இது வார வரைபடமாதலால், இந்த அமைப்பு உருவாக ஒரு 11 மாதங்கள் ஆகியுள்ளன. டார்கெட்டை அடைய இன்னும் ஒரு நான்கைந்து மாதங்கள் ஆகலாம். எனவே, இது நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறதென்று ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கலாம்!

குறிப்பு: “ஷார்ட்” டிரேட் என்ட்ரி – நெக்லைன் உடைபடும்போது, ரீடெஸ்ட் நடக்கும்போது, அல்லது இந்த இரு சமயங்களிலும். (ரீடெஸ்ட் சில, பல சமயங்களில் நடக்காமல் கூட இருக்கும்)

மறுபடியும் இன்னொரு குறிப்பு: ரொம்ப நாள் கழிச்சு எழுத ஆரம்பிச்சிருக்கேனா, அதனால ஒரு கோர்வையா எழுத வர மாட்டேங்குது. எதுனா புரியலைனா, கூச்சப் படாம தமிழ்லேயோ, இல்லன்னா இங்கிலீஷ்லேயோ ஒரு வரி எழுதுங்க! பதில் அனுப்பறேன்.

ஹெட் & ஷோல்டர்ஸ் பற்றி மேலும் (ஆங்கிலத்தில்) தெரிந்துகொள்ள

1. இங்கே “கிளிக்” ஸ்டாக்சார்ட்ஸ்

2. இங்கே “கிளிக்” இன்வெஸ்டோபீடியா

3. இங்கே “கிளிக்” யாஹூ பைனான்ஸ்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

8 Responses to 20110803 INFOSYSTCH-இல் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் அமைப்பு

  1. Saravanan says:

    Nice post for H&S Pattern..
    If possible please add some post for short term traders, that will help for blog readers to follow with realtime price move and blog also be in more interactive.
    Based on your time limit you can do..

    Regards,
    Saravanan

    • Thanks for your feedback Mr.Saravanan. Definitely, I’ll post the short term views also for stocks and indices.

      Actually, I’m sorry that I wasn’t able to reply to your earlier query on Nifty view as I was experiencing some technical difficulties with my internet connections.

      Regards,
      Babu Kothandaraman

  2. C.V.Srinivasan says:

    2900 – 2950 is may be RL now, but at 2700 – 2650 level value buying is coming,because at this level it trades at 20 PE.For Infy 20 pe is value buying level.

  3. Pingback: 20110812 INFY (எ) இன்ஃபோசிஸ் ஹெட்&ஷோல்டர்ஸின் மறுபார்வை « காளையும் கரடியும்

  4. swamy says:

    Dear Sir,

    In this article you told us that to do “PAPER TRADE”,
    But i don’t know how to do it,Pls explain me little bit deeply,

    Sorry,

    With Regards
    Swamy

    • http://www.investopedia.com/terms/p/papertrade.asp என்கின்ற இந்த லிங்க் உங்களுக்கு பேப்பர் டிரேட் பற்றி ஒரு சிறிய விளக்கத்தை அளிக்குமென்று நம்புகிறேன்.

      நம்முடைய முதலீட்டைப் போட்டு ஷேர்களை வாங்கி, விற்காமல், ஒரு நோட்டிலே இந்த விலைக்கு வாங்குகிறேன், இந்த விலைக்கு விற்கிறேன், இந்த இந்த காரணங்களுக்காக வாங்கி, இந்த இந்த காரணங்களுக்காக விற்கிறேன், இதில் லாபம்/நஷ்டம் இவ்வளவு என்றெல்லாம் குறித்துக்கொண்டு வருவதே பேப்பர் டிரேடிங் என்பதாகும்.

      இது புது முதலீட்டாளர்களுக்கும், அல்லது அனுபவம் வாய்ந்தவர்கள் புதிய ஸ்ட்ராடஜியை ட்ரை செய்யும்போதும் பயன்படுத்தப்படுவது.

      நன்றி!
      பாபு கோதண்டராமன்

  5. swamy says:

    and also refer the period 2008 Jan to sep ; it looks like also HEAD AND SHOULDER;
    am i right ?

    • பரவாயில்லையே! இந்தப் பேட்டர்னை அருமையாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டீர்களே! 🙂

Leave a reply to kaalaiyumkaradiyum Cancel reply