20110804 JAGRAN – ஒரு டபுள் பாட்டம் + டைவர்ஜன்ஸ்


டைவர்ஜன்ஸ் (Divergence) என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். NSE-யிலிருந்து நமக்கு ஓபன், ஹை, லோ, க்ளோஸ், வால்யூம் என ஒவ்வொரு நாளும் (அவ்வளவு ஏன்? இண்ட்ரா டே என்றால், ஒவ்வொரு வினாடியும்) நமக்கு டேட்டா எனப்படும் விலை விபரங்கள் கிடைக்கின்றன. இந்த விலை விபரங்களில் இருந்து பல்வேறு வகையான புள்ளியியல் கணக்கீடுகள் (statistical calculations) மூலம் வெவ்வேறு வகையான இண்டிகேட்டர்களும் (Indicators), ஆசிலேட்டர்களும் (Oscillators) (இ & ஆ என்று செல்லப் பெயரிட்டு அழைப்போம்) கணக்கிடப்படுகின்றன.

இன்று நான் விலை வரைபடத்துடன், RSI (Relative Strength Index), Stochastic Oscillators (STOC) & MACD (Moving Average Convergence Divergence) போன்ற இ&ஆ-க்களையும் சேர்த்துள்ளேன். இவை எப்படி, எந்த ஃபார்முலா வைத்து கணக்கிடப்படுகின்றன என்பதெல்லாம் பிறகு சொல்கிறேன்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விலை எப்படிச் செல்கிறதோ, அதே போக்கில்தான் இந்த இ&ஆ செல்லவேண்டும். அதை விட்டு இ&ஆ வேறு திசையில் சென்றால், விலையும் கூடிய சீக்கிரத்தில் இந்த இ&ஆ-க்கள் செல்லும் திசையில் பயணிக்கத் தொடங்குமென்பது நிபுணர்களின் கருத்து.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JAGRAN வரைபடத்தைப் பார்க்கவும். சமீபத்திய விலை விபரங்களை “லோ 1” & “லோ 2” என்று குறியிட்டுள்ளேன். இவ்விரண்டு இடங்களிலும் 109,110 லெவலில் ஒரு டபுள் பாட்டம் அமைப்புடன் இருக்கிறது. மேலும், இன்றைய விலைக்குச்சி (Bar), நேற்றைய விலைக்குச்சியை முழுவதுமாக விழுங்கி, ஒரு காளையின் குச்சியாக(அதாவது, முடிவு விலையானது ஆரம்ப விலையை விட அதிகமாக) இருக்கிறது.

20110804 JAGRAN டபுள் பாட்டம் + டைவர்ஜன்ஸ்

அடுத்துச் சொல்லப் போவதுதான் டைவர்ஜன்ஸ் சங்கதி! விலையோ சமநிலை லோ-வில் இருக்கிறது. ஆனால், “லோ 1”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் ரொம்ப கீழாகவும், (“லோ 1”-இற்கு சமநிலையில் உள்ள) “லோ 2”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் முந்தையதற்கும் அதிகமான உயரத்தில் இருப்பதைக் காணலாம். அவற்றின் இரண்டு “லோ”க்களையும் இணைக்கும் ட்ரெண்ட்லைன்கள் எப்படி மேல்நோக்கிய ஏறுமுகத்தில் உள்ளன என்று பாருங்கள்! (விலை சமநிலை லோ-வில் உள்ளபோது, இ&ஆ-க்களின் லோ-க்கள் ஏறுமுகத்தில் உள்ளன)

எனவே, JAGRAN-இன் விலை உயரும் என்று எதிர்பார்க்கலாம். நான் டார்கெட், ஸ்டாப்லாஸ் முதலானவை ஏதும் இப்போது சொல்லவில்லை. இந்த வகை டைவர்ஜன்ஸ் பற்றி ஓர் அறிமுகம் செய்வதற்குத்தான் இந்தப் பதிவு.

இந்த ஸ்டாக்கை கவனத்தில் வைத்து, இனிவரும் நாட்களில் எவ்வாறு நகர்கிறதென்று பாருங்களேன்!

-பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

6 Responses to 20110804 JAGRAN – ஒரு டபுள் பாட்டம் + டைவர்ஜன்ஸ்

 1. Saravanan says:

  Thanks for your reply and this Jagran post. This kind of thing i was mention in my last post. Here i send mail to my broker’s regional head with your blog link to spread to their clients. Most of the trading community attract by intraday and tips.. That will never grown their knowledge, unfortunately its realise in latter part after they lost their capital.
  This jagran post, i treat as a homework for us to watch with real time market and will raise the query regarding decision making. Regarding the indicator i think its not RSI 14. Please specify the period you have used in RSI,MACD,STS. So that we can also put in out chart and watch it.
  Today’s panic this double bottom low broke and day ended well. So still we consider this set up?

  In your post with traderji,inditrader add this blog bookmark inside the chart. I hope its not against their forum rule and here you made for educative purpose and nothing with money minded. So they will not oppose this.

  Regards,
  Saravanan

  • திரு. சரவணன் அவர்களே!
   தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் பல. மேலும், தங்களின் தரகு நிறுவனத்தின் மண்டல மேலாளருக்கு எனது வலைப்பூவின் மடலை அனுப்பியதற்கும் நன்றிகள் பல.

   JAGRAN-ஐ ஹோம்வொர்க் போலத்தான் நான் கொடுத்துள்ளேன். திரு. அருள்ராஜன் அவர்கள் கூறுவது போல, “நம்மால் எதை மாற்ற முடியுமோ, அதற்காக நம் நேரத்தையும், சக்தியையும் செலவழிப்போம்” என்பது என்னுடைய பாலிஸி. என்னால் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) பல்வேறு வரைபடங்களையும், அவற்றின் டெக்னிக்கல் அலசல்களையும் எழுத முடியும். அதேபோல, அவற்றிற்கான “இது எப்படி இருக்கு?” என்ற கேள்வியுடன், நமது வாசகர்களின் கருத்துக்களை அறிய ஒரு கேள்வியையும் வைக்க முடியும். அதைத்தான் நான் செய்கிறேன். பதில் எழுதுவது வாசகர்களின் கையில்தான்.

   எழுதுவதென்பது எல்லோராலும் முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதே போல, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, பெரும்பாலான முதலீட்டாளர்கள் (நான் உள்பட) நஷ்டத்தை அடைந்து விட்டுத்தான் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம்.

   மேலும், என்னால் டிப்ஸ் கொடுக்க முடியாது. அப்படியே டிரேட் என்ட்ரி, டார்கெட் & ஸ்டாப் லாஸ் என்று கொடுத்தாலும், வரைபடத்துடன்தான் கொடுக்கமுடியும் (என்னால் முடிந்தது அவ்வளவுதான்). அவரவர் பார்வையிலே அந்த வரைபடங்களை பார்த்துக்கொள்ளலாம். (கற்றுக் கொள்ளவோ / டிப்ஸ் மாதிரியோ)

   பிறகு, இந்த வலைப்பூவின் முகவரியை, டிரேடர்ஜி முதலான அரங்கங்களில் நான் போடும் சார்ட்டுகளில் எழுதி விளம்பரப் படுத்த முயல்வது அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது. அதனால், நான் அவ்வாறு போடுவதற்கில்லை.

   இண்டிகேட்டர்களின் அளவுகோல்கள்!
   படம்: இ & ஆ-க்களின் அளவுகோல்கள்

   -பாபு கோதண்டராமன்

 2. Saravanan says:

  Thanks for your detailed post.
  I was asked about Jagran Double bottom still valid or not, because of that low broke on yesterday’s panic. ? please answer

  Regards,
  Saravanan

  • Thanks for asking, Mr.Saravanan!
   அதனால்தான் நான் எதுவும் ஸ்டாப்லாஸ், டார்கெட், என்ட்ரி பிரைஸ் முதலானவை கொடுக்கவில்லை. நீங்கள் என் கைகளை முறுக்கி (?) 🙂 பிடிவாதத்துடன் கேட்பதால், எந்த லெவலில் ஸ்டாப்லாஸ் வைப்பீர்கள் என்று ஒரு சிறிய பயிற்சி.
   4 ஆகஸ்ட் லோ= 108.00
   கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்,
   24 பிப்ரவரி லோ= 106.20
   10 பிப்ரவரி லோ= 105.40

   இந்த 3 லெவல்களில் எந்த லெவலுக்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்திருப்பீர்கள்? இதைத்தான் அவரவர் ரிஸ்க் லெவலுக்குத் தகுந்த மாதிரி டிரேட் லெவல்களை அமைத்துக் கொள்ளவேண்டுமென்பது. பேட்டர்ன் என்னவோ ஒன்றுதான்; ஆனால் எடுக்கும் ரிஸ்க்குக்குத் தகுந்தவாறு டிரேட் அணுகுமுறை மாறுபடும்.

   மேலும், 108 -க்குக் கீழே முடிவு விலை அமையாததால், இன்னமும் “லாங்”தான்! 🙂

   – பாபு கோதண்டராமன்

 3. Saravanan says:

  Thanks u so much..

  Saravanan

  • ஓ மை காட்! ஸ்டாப் லாஸ் அடித்தாகி விட்டது. இந்த பேரிஷ் மார்க்கெட்டில் டைவர்ஜன்ஸ் வேலை செய்யாதா? அடுத்த பதிவில் ஒரு சில ஸ்டாக்குகளைப் பார்ப்போம்!
   -பாபு கோதண்டராமன்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: