இவங்கெல்லாம் ஸ்டாப்லாஸ் வைக்கல. நீங்க?


கோட்டு, சூட்டு போட்ட புரஃபஷனல்களே இப்படின்னா…….

பக்கம் 1

பக்கம் 2

பக்கம் 3

பக்கம் 4

பக்கம் 5

பக்கம் 6

பக்கம் 7

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

2 Responses to இவங்கெல்லாம் ஸ்டாப்லாஸ் வைக்கல. நீங்க?

  1. டெக்னிகல் அனலிசிஸ் கோர்ஸ் சொல்லித் தருகின்றனர். இதை படிப்பதன் மூலம்
    டே டிரடிங் எளிதாக செய்ய முடியுமா? ஏராளமான புத்தகங்கள் பிடிஎப் நூல்கள் கிடைக்கின்றன. இவற்றை படித்து தெரிந்து கொள்வதற்கும் 2 நாள் கோர்ஸ் படிப்பதற்கும் என்ன வித்தியாசம்.

    டே டிரேடிங்கில்…எங்கே வாங்குவது எங்கே விற்பது என்பதை சர்ட் மூலம் அறிந்து வாங்கலாம் என்கிறார்கள். அதன் படி tcs தொடர்ந்து மூன்று நாட்கள் லாபம் பார்த்தேன். நான்காம் நாள் அதேபோல் 5 மடங்கு பணத்தை இழந்தேன். அதாவது கடந்த புதன் கிழமை. என் தவறு எங்கே எனத் தெரியவில்லை.

    இத்தனைக்கும் அதன் மூவ்மெண்டை இரண்டு வாரமாக கவனித்தேன். என் கேள்வி டெக்னிகல் கோர்ஸ் இரண்டு நாள் படிப்பதன் மூலம் என் தவறுகளை திருத்திக் கொள்ள முடியுமா?அது பயன் தருமா என்பதுதான். சற்று விளக்குங்கள்.

    • ரகுநாதன்,

      வெற்றி என்பது நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொண்டு, அத்தவறுகளையே படிக்கட்டுகளாய் மாற்றி சிகரம் தொடுவதுதானே!

      நீங்களே “3 நாட்கள் இலாபம் பார்த்து, நான்காம் நாள் பெருநஷ்டமென்று” எழுதியுள்ளீர்கள். “எங்கே தவறு” என்ற வினாவையும் உள்ளுக்குள்ளே எழுப்பியுள்ளீர்கள். இம்முயற்சியே உங்களை மேலும், மேலும் படிக்கத் தூண்டி (தோல்விகளைக் குறைத்து – ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து) ஒரு வெற்றியாளராக மாற்றும் என்பதில் சந்தேகம் வேண்டாம். டிரேடிங் உலகில் நஷ்டங்கள் சகஜம். ஆனால், அவற்றைக் குறைத்து வெற்றிகளின் விகிதத்தை அதிகரிக்கத் தெரிந்தவர்களே நிலைபெற்றிருக்கிறார்கள்.

      காசி யாத்திரை செல்ல வேண்டுமென்றால் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்று வருவது போலல்ல. அதற்கு இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று, நாமே நமது பயணத் திட்டங்களை சொந்தமாக அமைத்து அதன்படி சென்று வருவது; அல்லது ஒரு டூர் ஆபரேட்டர் மூலமாகச் சென்று வருவது. இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ளன. நமக்கு எது சௌகர்யமோ, அதைத்தான் தேர்ந்தெடுப்போம். அதைப் போலத்தான், டெக்னிக்கல் அனாலிசஸ் படிப்பதும். ஒரு 2 நாள் கிளாஸுக்குப் பிறகு, ஏதேதெல்லாம் கவனிக்க வேண்டும் என்று விஷயங்கள் தெரிந்த பிறகு, அவற்றைப் பற்றி மேலும் புத்தகங்கள் மூலமாகப் படித்தறிந்து, நாம் நிபுணத்துவம் பெறலாம்.

      என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதும், (அதை விட) நாம் என்னக் கற்றுக்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியமானது. டெக்னிக்கல் அனாலிசஸ் கற்றுக்கொள்வது என்பது ஒரு இடைவிடாத பயணம் போன்றது. (நமது வாழ்விலும்தான் வெற்றிகள் என்பது நாம் சென்றடையும் இலக்கல்ல; அது ஒரு இடைவிடாத பயணம். ஒரு வெற்றியை அடைந்த பிறகு நாம் அத்தோடு நின்று விடுவதில்லை. மேலும் புது முயற்சிகளில் இறங்கி, புது முன்னேற்றம் காண விரும்புகிறோமல்லவா!)

      “வெற்றி நம் கையில்” என்பதன் அர்த்தமே, “உலகில் எல்லாம், எல்லாருக்கும் இருக்கின்றன; ஆனால், அவற்றில் நாம் எதைத் தேர்வு செய்து (நாம் திறமைக்கேற்றவாறு) முன்னேறுவதென்பது, நாம் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது”.

      வெற்றி பெற வாழ்த்துக்கள்!
      -பாபு கோதண்டராமன்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: