வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 3


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

அத்தியாயம் 1 – இங்கே “கிளிக்”கிடவும்.

அத்தியாயம் 2 – இக்கட “கிளிக்”கிட (அட! “இக்கட, அக்கட”ன்னு கொஞ்சம் தெலுங்கு வேறயா?)

விதிகள் தொடர்கின்றன.

விதி 5: மார்க்கெட்டில் பழைய மாவுதான் அறைக்கப் படுகிறது.

ஆமாங்க! இது ரொம்ப ஈஸி! எந்த சினிமாவும் பாருங்க! ஒரே காதல் கததான், மறுபடியும், மறுபடியும் புதுப்புது “லவ்ஸ்டோரி”யா வருது! அந்த அரசாங்கம் “அது” கொடுத்துதுன்னா, இந்த அரசாங்கம் “இது” கொடுக்குது. அதை மாதிரிதாங்க மார்க்கெட்டுலேயும். “சரித்திரம் மறுபடியும் நிகழ்கிறது” (History Repeats itself) என்று சொல்வதற்கேற்ப முன்னாடி என்ன நடந்துச்சோ, அதேதான் மறுபடியும் நடக்கும்; என்ன கொஞ்சம் கொஞ்சம் “மேக்கப்” மாறும்.

விதி 6: அன்றாடம் கிறிஸ்துமஸ் வராதுங்க!

குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட் கிடைக்கறதால, டெய்லி கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரான்னு எதிர்பார்ப்பாங்க! நாமும் அந்த மாதிரி, மார்க்கெட்டுல டெய்லி வருமானம் வரும்னு எதிர்பார்க்கலாமுங்களா?

“ஸ்கேல்ப்பர்ஸ் (Scalpers) எனப்படும் தினசரி லாபத்திற்காகக்  கொறிப்பவர்களும், தினசரி வர்த்தகர்களும், நீண்டகால முதலீட்டாளர்களுமான மூவகை வணிகர்களிலே, மூன்றாவது வகையான நீண்டகால முதலீட்டாளர்கள்தான், சந்தையில் ஏற்படும் தொய்வுகளைச் சமாளிப்பதற்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் டிரேடுகளில் ஈடுபடுவதில்லை, “ஒடுமீன் ஓட, உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு” என்பதற்கேற்ப, இலாபகரமான சமய, சந்தர்ப்பங்களில் மட்டுமே டிரேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

அனுபவஸ்த டிரேடர்கள் மட்டுமே “இன்றைய சம்பாத்தியம், நாளையே போய் விடலாம்” என்ற எண்ணத்தில் டிரேட் செய்கிறார்கள்.

விதி 7: மார்க்கெட் எப்போதுமே சரி; நம்முடைய எண்ணங்கள்தான் தவறாகின்றன.

மார்க்கெட்தான் ஃபைனல் அத்தாரிட்டி. அதை மிஞ்சி வேறேதுமில்லை. டெக்னிக்கலோ, ஃபன்டமண்ட்டலோ; நாம் காளையோ, கரடியோ, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் எண்ணம் கொள்ளாமல், மார்க்கெட் தான் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறதோ, அதைத்தான் செய்யும்.

ஒரே சமயத்தில் பொதுஜனம் அனைவரும் எதேனும் ஒரு குறிப்பிட்ட ஸ்ட்ராட்டஜி வைத்து டிரேட் செய்தால், அது அவ்வளவு வெற்றியை அளிப்பதில்லை. மார்க்கெட் ஆசான்களெல்லாம் மக்களுக்காகத்தான் ஆராய்ச்சி செய்கிறார்களே தவிர, மார்க்கெட் என்ன சொல்கிறது என்று கவனிக்கத் தவறி விடுகிறார்கள். மீடியாக்களும் ஒரு சில “குரு”க்களை உருவாக்குவதில் தவறி விடுகின்றன.

நீங்கள் பணத்தை விட்டுக்கொண்டிருக்கிறீர்களென்றால், எல்லாப் பொசிஷன்களையும் மூடிவிட்டு, வெளியில் வந்து ஒரு சுய சோதனை செய்து பார்க்க வேண்டும். நீங்கள் வெற்றியாளராக இருந்தால், மார்க்கெட் ஆசான்கள் சொல்லும் நட்டத்தை உண்டாக்கும் முடிவுகளில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற சமயங்களில், நீங்களே சுயமாகச் சிந்தித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

விதி 8: மார்க்கெட் சரியான திசையில் சென்றால், இலாபத்தை எடுத்து விட அவசரம் வேண்டாம்.

டிரேட் எடுக்கலாமா, வாங்கலாமா, விற்கலாமா என்றெல்லாம் முடிவெடுத்துக் கொண்டே இருக்கின்றோம். சரியான முடிவானால் இலாபமும், தவறான முடிவானால் நட்டமும் அடைகின்றோம். இவ்வாறு அடிக்கடி நிறைய தடவை முடிவெடுத்து ஈடுபடுவதும் அவ்வளவு இலாபகரமாக இருப்பதில்லை.

சரியான எண்ட்ரிக்கு முடிவெடுக்கும் வாய்ப்பு கம்மி; அத விட சரியான எக்சிட் செய்யும் வாய்ப்பு இன்னும் கம்மித்தான். அதைவிட சரியான எண்ட்ரியாக அமைந்து, சரியான எக்ஸிட்டும் அமையும் வெற்றிகரமான வாய்ப்பு அமைவது இவை எல்லாவற்றையும் விடக் குறைவுதான். இந்த மாதிரி சான்ஸ்ஸெல்லாம் குறைந்து கொண்டேபோவதால், எடுக்கும் ஒரு சில டிரேடுகளும், வெற்றியைத் தருவதாக அமைத்துக் கொள்ளவேண்டும்.

முக்கியமாக, மார்க்கெட் என்ன சொல்கிறதோ, அதைச்செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். புல்லிஷ் மார்க்கெட்டில் வாங்கவும், பேரிஷ் மார்க்கெட்டில் விற்கவும் செய்ய வேண்டும். மாற்றிச்செய்ய முற்படுவது, மார்க்கெட்டுக்கே பாடம் கற்றுத்தருவது போலாகும் – அது கடவுளும், இயற்கைப் பேரழிவுகளும் மட்டுமே செய்ய முடியும்: நம்மால் முடியாதது.

அடுத்தது, உச்சத்தில் விற்பதும், நீச்சத்தில் வாங்குவதும் எப்போதுமே நடவாத காரியம். ஒரு ஸ்விங்க் எனப்படும் ஒரு குறிப்பிட்ட திசை நகர்வைப் பிடித்து, அதன் அதிகபட்ச இலாபத்தை அடையப் பார்க்க வேண்டும்.

-தொடரும்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: