20110812 தங்கமே தங்கம்!


தங்கம் 2011 ஆகஸ்ட் 12 – ஒரு மணி நேர வரைபடத்தில் ஒரு ஹெட்&ஷோல்டர்ஸ் அமைப்பு தெரிகிறதாவென்று பாருங்கள்!

ஏதேனும் புரியவில்லையெனில் ஒரு வரி பதில் போடவும் (தமிழிலோ அல்லது இங்கிலீஷ்லேயோ) நோ ப்ராப்ளம்!

படம் 1: தெரிகிறதா?

 

படம் 2: புரிகிறதா?

மேலே உள்ள இரண்டு படங்களுமே ஒன்றுதான். 20110812 அன்றைய தங்கத்தின் 1 மணி நேர வரைபடம் (Hourly Chart). இதிலே ஒரு ஹெட்&ஷோல்டர்ஸ் அமைப்பு தெரிகிறதாவென்று பாருங்கள்!
இரண்டாவது படத்தில் லெஃப்ட் ஷோல்டர், ஹெட் & ரைட் ஷோல்டர்களின் அமைப்பினை ஆரஞ்ச் வண்ணத்தில் வளைவுக்கோடுகளாகக் காட்டியுள்ளேன்.

UTL1 & UTL2 என்று நீல நிறத்தில் இரண்டு கோடுகள் உள்ளன. இவை இரண்டும் வெவ்வேறு டிகிரிகளில் உள்ள அப்ட்ரெண்ட் லைன்கள். லெஃப்ட் ஷோல்டர், UTL1-ஐ உடைத்துக் கொண்டு கீழே இறங்கிய பிறகு, ஹெட் பேட்டர்ன் உருவாகும்போது UTL1 ரெஸிஸ்டன்ஸாக மாறுவதைக் கவனியுங்கள்.பிறகு, ஹெட், UTL2 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கீழே இறங்கி சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள நெக்லைனை உருவாக்குகிறது.
ரைட் ஷோல்டர், ஹெட்-டை விட லோயர் ஹை-யில் அமந்து, நெக்லைனை உடைத்துக் கீழே இறங்குகிறது. மறுபடியும் மேலே வந்து, முன்னர் சப்போர்ட்டாக இருந்த நெக்லைனின் ரெஸிஸ்டன்ஸை முட்டி மோதி நிற்கிறது. இவ்வாறு உடைபட்ட இடத்தை மீண்டும் வந்து தொட்டுப் பார்ப்பது ரீடெஸ்ட் எனப்படும்.
இந்த ரீடெஸ்ட் நடக்கும்போதோ, அல்லது நெக்லைன் முன்னர் உடைந்த சமயத்திலோ “ஷார்ட்” போவது, இந்த ஹெட்&ஷோல்டர் அமைப்பினை வைத்து டிரேட் செய்பவர்களின் வழக்கமாகும்.
ஷார்ட் டிரேட் என்ட்ரி லெவல்: 1735 – 1740 லெவல்
ஸ்டாப்லாஸ் : 1768 (ரைட் ஷோல்டரின் ஹை)
டார்கெட் = 1742 (நெக்லைன் உடைபட்ட இடம்) – 82 =1661. அதாவது 1661 வரை கீழே செல்ல ஒரு வாய்ப்புள்ள அமைப்பிது.
அது சரி! டார்கெட்டில் குறிக்கப்பட்டுள்ள 82 எப்படி வருகிறது என்று கேட்கிறீர்களா? இன்னுமொரு சின்ன கணக்கு!
ஹெட்-டின் ஹை: 1813. அதற்கு நேர்க்கீழே உள்ள நெக்லைனின் மதிப்பு 1732. இதன் வித்தியாசம்தான் (1813-1732) 81 புள்ளிகள். இதைத்தான், நெக்லைன் உடைபட்ட இடத்திலிருந்து குறைத்து, டார்கெட்டைக் கணக்கிட்டுள்ளோம்.
இதிலேயே, நாம் ஒரு ரிஸ்க்:ரிவார்ட் ரேஷியோவையும் கணக்கிடலாம்.
ரிஸ்க்: ஸ்டாப்லாஸுக்கும், என்ட்ரி-க்கும் உள்ள வித்தியாசம் (1768 – 1735)=33 புள்ளிகள்
ரிவார்ட்= 82 புள்ளிகள்.
ரிஸ்க்:ரிவார்ட்=33:82 —> 1: 2.50
அதாவது ஒரு ரூபாய் ரிஸ்க்குக்கு, 2ரூபாய் 50 பைசா இலாபம் (வந்தால்) ஈட்டித் தரக்கூடிய ஒரு நல்ல அமைப்பிது.
குறிப்பு: எனது குறிப்புகளின் படி டிரேடில் ஈடுபடுவது இலாபத்தை அளிக்காமலுமிருக்கலாம். இது படித்துத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட உரை. நீங்களே சுய முடிவெடுத்து டிரேடில் ஈடுபடுங்கள்!

-பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to 20110812 தங்கமே தங்கம்!

  1. C.V.Srinivasan says:

    don’t write your opinion in charts write separately because we can’t see charts clearly and the words also not clearly visible.

  2. நன்றி ஸ்ரீநிவாசன். நான் இப்போது சார்ட்டையும் உரையையும் தங்களின் கருத்துக்கேற்ப தனித்னியாக எழுதியுள்ளேன்.
    -பாபு கோதண்டராமன்

  3. இந்த ஸ்டாப் லாஸ் பற்றி விரிவாக கூறுங்கள் சார். கடந்த வாரம் tcs -இல் ஸ்டாப் லாஸ் போடாததால் 2000 நட்டம் ஆனது. ஆன்லைன் ட்ரடிங் செய்யும் போது லிமிட் ஆர்டர் என்றால் என்ன. ஸ்டாப் லாஸ் ஆர்டர் என்றால் என்ன. உதாரணமாக 100 ரூபாய்க்கு ஒரு ஸ்க்ரிப் வாங்குகிறோம். அதன் டார்கெட் 105 வைக்கிறோம். செல் ஆர்டர் போடுகிறோம். இங்கு ஸ்டாப் லாஸ் 97 ரூபாய் என்று வைப்போம். ஆர்டர் போடும் போது ஸ்டாப் லாஸ் என்பதை current மார்க்கெட் price க்கு மேலே போட வேண்டும் என்று சொல்கிறது. ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் படத்துடன் விளக்கமாக கூற முடியுமா சார்?

    மேலும் short trade செய்வது என்பது டே டிரடிங்கில் தானே முடியும். நீங்கள் சொல்வது தொடர்ந்து இந்த விலைக்கு கீழே short போகலாம் என்கிறீர்கள்.அப்படியானால் தின வர்த்தகத்தின்போது அந்த பங்கு மேலே செல்லவும் வாய்ப்பு உள்ளதே. அதாவது short போனாலும் அடுத்த நாள் குறிப்பிட விலைக்கு pull back ஆகலாமே. லாங் என்றால் நாளை அல்லது அடுத்த வாரம் விற்கலாம். short போனால் என்ன செய்வது?

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: