வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 4


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

அத்தியாயம் 1அத்தியாயம் 2அத்தியாயம் 3

விதிகள் தொடர்கின்றன.

விதி 9: உங்களின் இலாபத்தை முன்னரேயே தீர்மானிக்காதீர்கள்

அதாவது, உங்களுடைய “லாங்” டிரேட் இலாபத்தில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நீங்கள் கணித்தபடியே மார்க்கெட் செல்கிறதென்றால், அது உங்களின் கணிப்பை விடவும் மேலே செல்லலாம். ஏனெனில், நீங்கள் கணித்தபோதிருந்ததை விட மேலும் வலுவான நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கலாம். எனவே “டிடெய்லிங்க் ஸ்டாப் லாஸ்” போட்டு, டிரெண்டின் வலிமையை முழுவதுமாக அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

விதி 10: ஒரு பங்கு மேலிருந்து ரொம்பக் கீழே விழுந்துள்ளதா? ஸ்டாப்! அதை வாங்காதீர்கள்! அதே போல உச்சத்திலிருக்கும் பங்கை விற்காதீர்கள்!

ஓ! இது ரொம்பக் கஷ்டமான மேட்டரா இருக்குதுங்களா?

ஒரு காளையின் பிடியிலிருக்கும் பங்கு, கீழே விழுந்துடிச்சின்னா, அந்த மாதிரி விழுந்தது புல் (Bull) மார்க்கெட்டில் ஏற்படும் வழக்கமான பின்னிழுப்பா அல்லது காளையாக இருந்தது கரடியாக மாறிவிட்டதா (ட்ரெண்ட் ரிவர்ஸ் கியர் போட்டு விட்டதா?) என்பதை முதலில் கணிக்க வேண்டும்.

முதலீட்டாளர்களும், தினசரி வர்த்தகர்களும், “ஆல்-டைம் ஹை” எனப்படும் உச்சத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் முந்தைய உச்சங்கள் உடைபட்டு மேலும் புதிய உச்சங்கள் உருவாகும்போது சந்தை “ஸ்டாப் Buy ஆர்டர்களை” (ஷேர் மார்க்கெட் ஆர்டர்கள் பதிவு ஞாபகம் வருகிறதா?) டெஸ்ட் செய்து வலிமையைக் காட்டுகிறது.

விதி 11: ஒரு pullback பின்னிழுப்புக்குப் பின் ஏற்படும் புதிய உச்சத்தில் வாங்குபவராக மாறுங்கள்

ஓ! மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், யார் யார் கம்மியான விலையில் “லாங்” பொசிஷன் எடுத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும்.

சந்தையானது, ஒரு ரேஞ்சிலிருந்து உடைத்துக் கொண்டு மேல் பக்கமாகச் செல்வது, வலிமையைக் காட்டுகிறது. அப்போது வலிமையாக மேலே செல்லலாம்; அல்லது மேலே செல்வது போல “கண்ணாமூச்சி” காட்டிவிட்டு மறுபடியும் ரேஞ்சுக்குள்ளேயும் வந்து விடலாம்.

வலிமையுடன் மேலே செல்லும்போது, என்ன நடக்கிறதென்று பார்ப்போம். அப்போது இரண்டு விதமான டிரேடர் க்ரூப்புகள் “லாங்” செல்வார்கள்.

ஒன்று, முன்னர் ஷார்ட்டில் இருக்கும் தினசரி வர்த்தகர்களும், பொசிஷன் டிரேடர்களும், கையிலிருக்கும் “ஷார்ட்”தைக் கவர் செய்து, “லாங்” பொசிஷன் எடுப்பார்கள்.

அடுத்ததாக, கம்மியான விலையில் “லாங்” எடுத்திருக்கும் முதலீட்டாளர்களும், மேலும் புதிய “லாங்” பொசிஷன் எடுத்து தங்களது கையிருப்பை அதிகரித்துக் கொள்வார்கள்.

டிரிபிள் டாப் (Triple top breakout) பிரேக் அவுட் எனப்படும் சமநிலையில் உள்ள மூன்று உச்சங்களை உடைத்து மேலே செல்வது டபுள் டாப் பிரேக் அவுட்டை (Double top) ரொம்பவும் வலிமையானதாக இருக்கும்.

பிரேக்கவுட்டிற்குப் பிறகு நடக்கும் பின்னிழுப்பு குறைவான வால்யூமிலும், அதன் பிறகு விலையேர்ரம் அதிக வால்யூமிலும் நடைபெற்றால், காளைகள் வலிமையடைகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மேலே சென்று “கண்ணாமூச்சி” ஆடிவிட்டு, அதே வேகத்தில் கீழே வந்து விட்டால், அது “False breakout” (ஃபால்ஸ் பிரேக் அவுட்) ஆக அமையும்.

விதி 12: கத்திரிக்காய் முற்றினால், கடைவீதிக்குத்தான் வந்தாக வேண்டும்

அதாவது, காலம் கனிந்து, சாதகமாக இருந்தால், மார்க்கெட் திரும்பித்தான் ஆக வேண்டும். மார்க்கெட்டை ஆராய்ச்சி செய்யும்போது, விலை மற்றும் வால்யூம் வைத்துத்தான் பெரும்பாலானவர்கள் ஆராய்கிறார்கள். அதைப்போல, இன்னமும் சொல்லப் போனால், அவற்றை விட, டைம் சைக்கிள் அனாலிசஸ் (time cycle analysis) எனப்படும் காலத்தை அளவுகோலாக வைத்து செய்யப்படும் ஆராய்ச்சியும் மிக முக்கியமானதாகும்.

உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட ரேஞ்சிலேயே விலையானது மேலுக்கும், கீழுக்குமாக யோ-யோ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தால், அதிலே நிறைய தடவை காலச் சுழற்சி முறையிலே விலை ஒரு பக்கத்திலிருந்து, இன்னொரு பக்கத்திற்கு செல்வதைப் பார்க்கலாம்.

விதி 13: என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியலைன்னா, “ஒண்ண்ண்ணும் செய்யாம,  சும்மா கம்ம்ம்ம்முனு இருங்க”

“ஒண்ணும் செய்யாம சும்மா இருக்குறதே ஒரு பெரிய வேலைதான்”னு வடிவேலு ஒரு படத்தில ஜோக்கடிப்பாரே! நாம வாங்கிய ஏதேனும் ஒரு பொருள் பிடிக்கலைன்னா, அதை திருப்பிக் கொடுத்துட்டு ரீஃபண்டோ அல்லது எக்ஸ்சேஞ்சோ செய்து கொள்ளலாம். பங்குச்சந்தையிலே சில சமயங்களில் என்ன நடக்கிறதேன்றே புரியாது. அந்த மாதிரி நேரங்களில், நாம் கொஞ்சமும் கூச்சப்படாமல் “கேலரியில்” உட்கார்ந்து நடக்கும் ஆட்டத்தை வேடிக்கைப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; நாமும் விளையாடி அடி, உதைபட்டு வரக்கூடாது.

விதி 14: டிப்ஸ் பணம் பண்ணாது!

நல்ல டிப்ஸ் கொஞ்சம் பேருக்குத்தான் கிடைக்கும். மோசமான டிப்ஸோ எல்லோருக்கும் கிடைக்கும். அதனால, நாமே மார்க்கெட்டின் விலையேற்றங்களை அலசி, ஆராய்ந்து முடிவெடுப்பதுதான் பணம் ஈட்டுவதற்கான நல்வழியாக அமையும். நாமே நமது வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிப்பவராகவும் அமைகிறோம்.

இவ்வாறு மார்க்கெட்டின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வதனால் எந்தவொரு டிப்ஸின் உதவியுமில்லாமல், நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும், எந்த மார்க்கெட்டிலும் வணிகம் செய்யலாம். மார்க்கெட்டுகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இயங்குபவைதான். இதை விட்டுவிட்டு, நாம் டிப்ஸின் மூலம் மட்டுமே வணிகம் செய்பவராக இருந்தால், டிப்ஸ் எந்த மார்க்கெட்டுக்குக் கிடைக்கிறதோ, அந்த மார்க்கெட்டில் மட்டுமே நம்மால் வணிகத்தில் ஈடுபட முடியும். மேலும், நாம் ஒருவரைச் சார்ந்து டிப்ஸ் வாங்கும் போது, அவர் வேறொருவரிடமிருந்து வாங்கி நமக்குக் கொடுப்பவராகக் கூட இருக்கலாம். இது இப்படியே ஒரு தொடர்கதை போல செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

கடந்த மூன்று அத்தியாயங்களில் முடிவெடுத்தல் (Decision making) பற்றிய சில விதிமுறைகளைப் பார்த்தோம். அடுத்த வாரங்களில், செயல்படுத்துதல் (Execution) பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பாபு கோதண்டராமனின் இன்னொரு இடைச்செருகல்: (நாராயணா! இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலையே!) 🙂

இந்தக் கட்டுரையை எழுதியவர் நண்பர் ஜெ‌கே-தான். அவரின் எண்ணங்களை என்னால் முடிந்த வரையில் புரிந்து கொண்டு, தமிழில் மாற்றம் செய்துள்ளேன். அதனால்தான், தயங்காமல் நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டி எழுதவும்! அப்போதுதான் மேலும் பல விளக்கங்களை அவரிடமிருந்து நான் பெற்று உங்களுக்களிக்க முடியும்! நன்றி!

(தொடரும்)

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 4

  1. Pingback: வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 5 « காளையும் கரடியும்

  2. Pingback: வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 6 « காளையும் கரடியும்

  3. Pingback: வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 7 « காளையும் கரடியும்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: