வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 9


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

முடிவெடுத்தல் (Decision making)

அத்தியாயம் 1 – அத்தியாயம் 2 – அத்தியாயம் 3 – அத்தியாயம் 4

செயல்படுத்துதல் (Execution)

அத்தியாயம் 5

மேனேஜ்மெண்ட் (Management)

அத்தியாயம் 6அத்தியாயம் 7 அத்தியாயம் 8

அத்தியாயம் 9 தொடர்கிறது.

நம்முடைய டிரேட் இலாபத்திலிருக்கும்போது என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

(ஆஹா… ஞாபகம் வந்திடிச்சே எனக்கு! அதான் இந்தப் பக்கமா வந்து ஒருநடை எழுதிட்டுப் போகலாமுன்னு வந்திருக்கேன். ரொம்ப சாரிங்க! கொஞ்சம் (நெறையவே) வேலையிருக்கிறதுனால முன்பு போல எழுத முடியவில்லை)

விதி 7: நீங்க கிரிக்கெட் மட்டையைச் சுழற்றும் போதெல்லாம் காற்றைத்தான் அடிக்கிறீர்களா? கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க!

நீங்க எடுக்குற டிரேட் எல்லாமே தொடர்ச்சியா உங்களைக் கவிழ்த்துக் கொண்டேயிருந்தால், உங்களோட டிரேடிங்கை உடனே நிறுத்தி வையுங்கள். ஏன்னா, இந்தத் தோல்விகளெல்லாம் எதைச் சொல்லுதுன்னா, “எலே! என்னலே! நானு இங்குட்டு இந்தப் பக்கமா போயிட்டிருக்கேன்! நீ என்னமோ அந்தப் பக்கமா பராக்கு பாத்துக்கிட்டே வேறெங்கேயோ போரயே!” அப்படின்னு ஒரு எச்சரிக்கையை சொல்லுது. அதனால, கொஞ்சம் டிரேடிங் எல்லாம் நிறுத்திட்டு, “நாம் ஏன் மார்க்கெட் செல்லும் திசையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான திசையில் நமது டிரேட்களை எடுக்கிறோம்? அதை எப்படி சரி செய்வது?” என்ற ஆராய்ச்சியில் இறங்கி, நமது தவறுகளைக் களைந்தெறிய முயற்சிக்க வேண்டும்.

இதே நீங்க அடிக்கிறதெல்லாம் சிக்சர், பௌண்டரி-ன்னு போயிட்டேயிருந்துதுன்னா, நிறுத்தாதீங்க! அதே தொடர் தோல்விகள் வந்தால், மார்க்கெட் ஏதோ சொல்ல விரும்புதுன்னு புரிஞ்சிகிட்டு, அது என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கணும்.

அடுத்த வாரம் Pyramiding அதாவது, பிரமிடிங்க் என்கிற “இலாபத்தில் பொசிஷன் இருக்கும்போது, மேலும் பொசிஷன் சைஸை அதிகரிப்பது” என்பது பற்றி பார்க்கலாம்!

படம்: பிரமிட்

(தொடரும்


வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 8


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

முடிவெடுத்தல் (Decision making)

அத்தியாயம் 1 – அத்தியாயம் 2 – அத்தியாயம் 3 – அத்தியாயம் 4

செயல்படுத்துதல் (Execution)

அத்தியாயம் 5

மேனேஜ்மெண்ட் (Management)

அத்தியாயம் 6அத்தியாயம் 7

அத்தியாயம் 8 தொடர்கிறது.

சென்ற அத்தியாயத்தில் இலாபம் வரும்போது என்ன செயல் வேண்டுமென்று பார்க்க ஆரம்பித்தோம். மேலும் தொடர்வோம்.

விதி 5: கண்ணில் தெரியும் இலாபத்தை நஷ்டமாக மாற்றாதீர்கள்!

ரொம்ப சிம்பிள்! நீங்க எடுக்குற டிரேட், நீங்க நெனைச்ச மாதிரியே இலாபத்தின் பக்கமாக நகர ஆரம்பிக்கும்போது என்ன செய்வீங்க?

நானாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட லெவல் போனத்துக்கப்புறம், பாதி பொசிஷனை இலாபத்தில் கொடுத்து விடுவேன். அப்புறம் ஒரு டிரைலிங்க் ஸ்டாப் லாஸ் “Trailing Stop Loss”(TSL) போட்டுடுவேன். இந்த TSL எப்படி போடுவேன்னா, ஒரு முக்கியமான சப்போர்ட் லெவலுக்குக் கொஞ்சம் மேலே போட்டு, அப்படியே அந்த TSL அடிச்சாலும், எனக்கு எந்த நஷ்டமும் வராத ஒரு லெவல்ல போட்டுக்குவேன். புரியுதுங்களா?

சப்போஸ், ஒரு 100 abc ஸ்டாக்குகளை ரூ.112 லெவலில் வாங்குகிறேன் (டார்கெட் 119.50; ஸ்டாப் லாஸ் 109.50) என்று வைத்துக் கொள்வோம். இதிலே, ரிஸ்க் 2.50; ரிவார்ட் 7.50 அதாவது 1:3

இதிலே நாம் ஒரு ஸ்டாக்குக்கு ரூ 2.50 என்ற அளவிலே, 100 ஸ்டாக்குகளுக்கு ரூ 250/- ரிஸ்க் எடுத்துள்ளோம் என்று கவனித்துக் கொள்ளுங்கள்.

டிரேடும் 114, 115 என்று இலாபத்தில் இருக்கிறது. இப்போது, பாதி பொசிஷனை (அதாவது 50 ஸ்டாக்குகளை) 115 என்ற அளவிலே கொடுத்து விடுவேன். அதாவது 50 x ரூ 3 = ரூ 150 என்ற அளவிலே என்னுடைய ரிஸ்கைக் குறைத்துக் கொள்வேன். (ஆரம்பத்திலிருந்த ரிஸ்க் எவ்வளவுன்னு ஞாபகமிருக்கிறதா?)

250 – 150 = ரூ 100/-தான் என்னுடைய தற்போதைய ரிஸ்க்.

ரிஸ்க்கைக் குறைத்தாகி விட்டது. அதனால், இலாபத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டும். அதாவது, மீதி இருக்கிற 50 ஸ்டாக்குகளுக்கு 112. 50 அல்லது 113 என்று எங்கே ஒரு முக்கியமான சப்போர்ட் இருக்கிறதோ, அதற்குக் கொஞ்சம் மேலாக ஒரு TSL போட்டுக்கொள்வேன்.

இந்த TSL அடிபட்டால், நஷ்டம் ஏதுமில்லை; அடிபடாமலிருந்தால், இலாபம் மேலும் பெருகும்.

விதி 6: இலாபத்தின் ஒரு பகுதியை, வெளியில் எடுத்து விடுங்கள்.

அதாவது, உங்களுடைய டிரேடிங் அக்கவுண்ட்டிலிருக்கும் இலாபத்தில், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட பகுதியை (25%, 40%, 50% என்று எந்த நம்பர் உங்கள் நியூமராலஜி லக்கி நம்பரோ, அந்த அளவில் :-)) வெளியில் எடுத்து விடுங்கள்.

(தொடரும்)

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 7


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

முடிவெடுத்தல் (Decision making)

அத்தியாயம் 1 – அத்தியாயம் 2 – அத்தியாயம் 3 – அத்தியாயம் 4

செயல்படுத்துதல் (Execution)

அத்தியாயம் 5

மேனேஜ்மெண்ட் (Management)

அத்தியாயம் 6

அத்தியாயம் 7 தொடர்கிறது.

விதி 3: எண்ட்ரியா? ரொம்ப ஈஸி! எக்ஸிட்டா? அப்டீன்னா என்னா?

//ஒரு டிரேடுல இருந்து வெளியில வர்றதுதான் ரொம்ப கஷ்டமானது//

ஒரு ட்ரேடை மேனேஜ் செய்வதற்கு ஒரே ஒரு வழிதானிருக்கிறது. அது இலாபத்திலிருந்தால், மேலும் பெருகட்டும்; நஷ்டத்திலிருந்தால், ஏதாவது ஒரு எக்சிட் எடுத்து, வெளியில் வந்து நஷ்டத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும்.

வெற்றியாளர்கள் எல்லாம் பல்வேறு வகை டெக்னிக்குகள் உபயோகித்து என்ட்ரி எடுப்பார்கள். ஆனால், நஷ்டம் என்று ஒன்று கண்ணில் பார்த்து விட்டால், நஷ்டத்தைக் குறைக்க உடனடியாக வெளியில் வந்துவிட்டு “துண்டைக் காணோம்; துணியைக் காணோம்” என்று ஓட்டமெடுத்து விடுவார்கள்.

வெற்றியடைய மறுப்பவர்களோ, பல்வேறு வகை டெக்னிக்குகள் உபயோகித்து என்ட்ரி எடுத்தாலும், இலாபகரமான சமயங்களில் இதே பல்வேறு வகை டெக்னிக்குகளை உபயோகித்துத் தங்களின் இலாபத்தின் அளவினைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

விதி 4: நாம் நினைத்தபடியே மார்க்கெட்டானது சரியான திசையில் சென்று, நமது டிரேட் இலாபத்திலிருந்தால் …… ரிலாக்ஸ், ப்ளீஸ்!

நாம எடுக்குற ஒண்ணு, ரெண்டு டிரேட்கள், எக்குத்தப்பா சரியா இருந்து, பிளஸ்ஸுல இருந்துதுன்னா, வர்ற இலாபத்தை மேலும் அதிகரிக்கச் செய்யணும். அந்த டிரேட்ல இருந்து வெளியில வந்துடக் கூடாது. அதாவது, “அது அப்படியிருக்கும், இது இப்படியிருக்கும்” அப்டீன்னு எல்லாம் நாமளா நெனச்சிண்டு எக்சிட் ஆயிடக்கூடாது.

மார்க்கெட் என்ன சொல்றதுன்னு, நன்னா கவனிக்கணும். புரியறதா? அதாவது, மார்க்கெட்தான் நம்ம வெளியில வர்றதுக்கான காரணத்தச் சொல்லணும்; நம்மளோட மனசு சொல்லப்படாது.

அப்படி ஒண்ணு ரெண்டு பொசிஷன்கள் இலாபத்தில இருந்து, கொஞ்சம் ஏதேனும் கைச்செலவுக்கு பைசா தேவைப்பட்டால், நீங்கள் வேற எப்படியாவதுதான் அந்தச் செலவுகளைப் பாத்துக்கணும் (ஆஹா! என்கிட்ட கேட்டுடாதீங்க! :-))

வெற்றியா? மேலும், மேலும் வளரவிடணும்னு ஒரு வெறி வந்துடனும்; நஷ்டமா? அதன் வாலை ஒட்ட நறுக்கிடனும். ஏன் நஷ்டத்தை நறுக்கிடனும்? ஏனெனில், நம்மோட முதலீட்டைக் காப்பாத்திக்கனும். நோ முதலீடு, நோ டிரேடிங்! சிம்பிள்!

ஒரு டிரேடர் வெற்றியடையறது, அவர் தனது இலாபத்தை எப்படி மேலும் வளர்த்து, நஷ்டத்தைக் குறைத்துக் கொள்கிறார் என்னும் டிரேட் மேனேஜ்மெண்ட் திறமையில்தானிருக்கிறது.

பாபு கோதண்டராமனின் இடைச்செருகல் 

(இதற்கு ஒரு அருமையான ஒரு புத்தகம் ஒன்று சொல்கிறேன். படித்துப் பாருங்கள்! 1952-54 நிகழ்வுகளின் பதிவு அது. நிக்கோலஸ் டார்வாஸ் என்ற ஒரு டான்ஸர், தான் எப்படி “டார்வாஸ் பாக்ஸ் தியரி” மூலம் ஸ்டாக் மார்க்கெட்டில் இரண்டு மில்லியன் டாலர் (அதுவும் அந்த காலகட்டத்து டாலர்) சம்பாதித்தார் என்று தனது டிரேட் விபரங்களைக் கொடுத்துள்ளார். மேலும் விபரமாகச் சொல்லி, சஸ்பென்ஸை உடைக்க மாட்டேன். படித்தால்தான் புரியும் அதன் சுவாரஸ்யம்! ஜமாயுங்கள்!

புத்தகத்தின் பெயர்: How I made $2,000,000 in the stock market

நூலாசிரியர்: Nicolas Darvas

(தொடரும்)