20111008 நிஃப்டி அலசல்


அப்பாடா! ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் உட்கார்ந்து எழுத முடிகிறது. ரொம்ப சந்தோஷம்.

தமிழ்நாடு இன்வெஸ்டார் அசோசியேஷனில் கடந்த ஞாயிறன்று (2-10-2011) “கூட்டு வட்டியின் மகிமை” என்ற தலைப்பிலே பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது. நண்பர் ஸ்ரீநிவாசன் இதற்கான ஏற்பாடுகளை, திரு. A K நாராயண், பிரசிடெண்ட் TIA அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கித் தந்தார். ரொம்ப அருமையான நிகழ்ச்சியாக அமைந்தது. இவர்களிருவருக்கும் மற்றும் ஏனைய TIA உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

சென்ற இரு சனிக்கிழமைகளில், TIA உறுப்பினர் திரு. நாராயணசாமி அவர்களிடம் GYM clock என்ற ஒரு பயிற்சியும் எடுத்தேன்.

இன்னமும் பிற பல்வேறு பணிகளினால் கடந்த செப்டம்பர் மாதம் பூராவும் எழுத முடியவில்லை. இப்போது உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கீழே உள்ள நிஃப்டி-யின் வார வரைபடத்தை அலசலாம்.

படம்: நிஃப்டி 20111008 வார வரைபடம்

படத்தின் பாகங்கள்: RSI, STOC எனப்படும் Stochaistics மற்றும் MACD எனப்படும் இ&ஆ; ஃபிபநோச்சி ரீ-ட்ரேஸ்மெண்ட் (38.2% லெவல் அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.  மற்றும் சில, பல ட்ரெண்ட்லைன்கள்.

விளக்கம்: அக்டோபர் ’08 ‘லோ’விலிருந்து, நவம்பர் ’10 ‘ஹை’ வரைக்குமான எழுச்சியின் 38.2%  ஃபிபநோச்சி பின்னிழுப்பு லெவல்களில், தற்போது சப்போர்ட் எடுத்து நிஃப்டி உலவிக்கொண்டிருக்கிறது.

நவம்பர் ’10-லிருந்து ஒரு கரடியின் ஆதிக்கம் நிறைந்த சந்தையாக இருந்து, ஒரு டௌண்ட்ரெண்ட் லைன் உருவாகியுள்ளது (நீலக்கலர்). இந்த ட்ரெண்ட்லைனை விட இன்னமும் மிகச் சரிவாக (ரெட் கலரில்) ஒரு டௌண்ட்ரெண்ட் லைன் வரைந்துள்ளேன். இது ஜூலை மற்றும் செப்டம்பர் ‘ஹை’க்களை இணைத்து வரையப்பட்டது. ஜூலை ‘ஹை’யை விட செப்டம்பர் ‘ஹை’ குறைவாக இருப்பதால், இந்த ரெட் கலர் ட்ரெண்ட்லைன் மிகவும் சரிந்துள்ளதை நோட் செய்யவும். அடுத்தது 38.2% லைனுக்கும் சற்றுக் கீழே, மறுபடியும் ரெட் கலரிலேயே ஒரு படுக்கைக் கோடு வரைந்துள்ளேன். இதுதான் சமீபத்திய சப்போர்ட் லெவல். இந்த இரண்டு கோடுகளும் இணைந்து ஒரு இறங்குமுக முக்கோணம் போல உருவாகியிருப்பதைப் பாருங்கள். இதைத்தான் “Bearish Descending Triangle” என்று இங்கிலீஷ்லே பீட்டர் 🙂 விடுகிறார்கள். அதாவது “கரடியின் இறங்குமுக முக்கோண அமைப்பு” என்று சொல்கிறார்கள். இது ஒரு தொடரும் அமைப்பாகும். அதாவது, இந்த அமைப்பு உருவாகுவதற்கு முன் என்ன ட்ரெண்ட் இருந்ததோ, அதே ட்ரெண்ட் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதற்கான தொடரும் அமைப்பாகும் (Continuation பேட்டர்ன்)

கேள்வி: அப்டீன்னா, இந்த பேட்டர்ன் உருவாகுவதற்கு முன் என்ன ட்ரெண்ட் இருந்தது? (படத்தைப் பார்த்தே விடை சொல்லுங்கள்)

விடை: கரடியின் டௌண்ட்ரெண்ட்.

கேள்வி: அப்டீன்னா, இந்த பேட்டர்ன் மறுபடியும் கரடியின் டௌண்ட்ரெண்ட்-டில் பயணிக்க வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்? (அல்லது இப்போதிருக்கும் நிலையில் என்ன நடந்தால், கரடியின் டௌண்ட்ரெண்ட் தொடரும் நிலை ஏற்படும்?)

விடை: சப்போர்ட் உடைபட்டால், சந்தையானது கரடியின் போக்கில் செல்லும்.

குட்! RSI -யும் மற்றும் MACD ஹிஸ்டோக்ராமும் இந்த கரடியின் ஆதிக்கத்தை உறுதி செய்கின்றன.

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

4 Responses to 20111008 நிஃப்டி அலசல்

 1. C.V.Srinivasan says:

  chart படி பார்த்தால் வாராந்திர முடிவில் Triple Bottom ஏற்பட்டு இருக்கிற்து,இந்த வார முடிவில் hammer உருவாகி உள்ளது இதையெல்லாம் வைத்து பார்த்தால் சந்தை மேலே செல்ல வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது.

 2. Saravanan says:

  Nice Analysis report of Nifty. If possible pls do a weekend post of nifty with hourly or lower time frame chart of current trend. So that readers get follow up with the on going trend.

  • தாங்க்ஸ் சரவணன். நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி வார முடிவில் நிஃப்டி-யின் ஒரு மணி நேர & 15 நிமிட சார்ட்டுக்களை கொடுக்க முயற்சிக்கிறேன். தங்களின் பதிவிற்கு நன்றி.
   பாபு கோதண்டராமன்

 3. Pingback: 08-10-2011 நிஃப்டி அலசல் (மறுபடியுங்க) « காளையும் கரடியும்

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: