08-10-2011 நிஃப்டி அலசல் (மறுபடியுங்க)


முன்னர் அலசியது வார வரைபடத்தை வைத்து. அதற்கு நண்பர் ஸ்ரீனிவாசன் கீழ்க்கண்ட ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 
C.V.Srinivasan
Submitted on 2011/10/09 at 9:32 AM
chart படி பார்த்தால் வாராந்திர முடிவில் Triple Bottom ஏற்பட்டு இருக்கிற்து,இந்த வார முடிவில் hammer உருவாகி உள்ளது இதையெல்லாம் வைத்து பார்த்தால் சந்தை மேலே செல்ல வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது.
 

இதத்தான், இதத்தான் உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கிறேன். இந்த மாதிரி பதில் பதிவுகளையும், கேள்விகளையும் தொடர்ந்து எழுதுங்க. நானும் அதற்கு பதிலெழுத முயற்சிக்கிறேன். (நான் ஒத்துக்கறேன், எழுதறது ரொம்ப கஷ்டமுன்னு!) 🙂

வாரந்திர சார்ட் படி பார்த்தால் ஒரு டபுள் பாட்டம்-தான் எனக்குத் தெரியுது. ஹேமர் (சுத்தி போன்ற) அமைப்பும் தெரியுது. அதுவும் Mr. ஸ்ரீநிவாசன் சொல்லியிருப்பது போல, சப்போர்ட் லெவலுக்கு அருகாமையில் உருவாகியுள்ள ஹேமர் ஒரு புல்லிஷ் அமைப்பாகத்தான் தெரிகிறது.

அதையே கொஞ்சம் டெய்லி சார்ட் போட்டு பாத்தோமுன்னா என்ன தெரியுதுன்னு பார்க்கலாம்.

08-10-2011 நிஃப்டி தினசரி வரைபடம். 200 SMA, 200 EMA மற்றும் பல ட்ரெண்ட்லைன்கள் நடித்தது.

இந்த டெய்லி சார்ட்டில் மூவிங்க் ஆவரேஜ்களான 200SMA & 200EMA-க்கள் கீழ் நோக்கிச் சரிவாதப் பாருங்கள். நிஃப்டியானது சென்ற தீபாவளியிலிருந்து (நவம்பர் ’10) கரடியின் பிடியிலிருப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதையேதான் இந்த 200MA-க்களும் சொல்கின்றன (கொஞ்சம் லேட்டாக – அதனால்தான் இதை ஒரு “lagging indicator” என்று சொல்கிறார்கள். அதாவது, முன்னர் நடந்ததை, இப்போது சொல்வது போல).

அடுத்தது, படத்தில் குறியிடப்பட்டுள்ள  1-(பிப்ரவரி லோ) & 2-(ஜூன் லோ) ஆகிய புள்ளிகளை இணைத்து அப்போதைய சப்போர்ட் லெவலான 5175-5195 அளவில் ஒரு கோடு போட்டு, அதை ஒரு ரோடு மாதிரி இழுத்தால் என்ன நடக்கிறதென்று பாருங்கள். கடந்த ஆகஸ்டில் அமைந்த இந்த சப்போர்ட் (S) லெவல் உடைபட்ட பிறகு, 3, 4 & 5 என்ற இடங்களில் ஒரு ரெஸிஸ்டன்சாக (R) மாறுவதைக் கவனியுங்கள். இதைத்தான் முன்னர் சப்போர்ட்டாக இருந்தது பின்னர் ரெஸிஸ்டன்சாக மாறும் என்று டெக்னிக்கல் அனாலிசசில் முக்கியமாகக் கூறுகிறார்கள்.

(S உடைபட்டால் அது R-ஆக மாறும்; அதேபோல R உடைபட்டால், அது S-ஆக மாறும்) என்னங்க! இதைப் படிக்கும்போது “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர பகைவர்களும் இல்லை”ங்கற டயலாக் ஞாபகம் வரணுமே! 🙂

“அது சரி! பழைய சப்போர்ட் இப்போது ரெஸிஸ்டன்சாக மாறிடிச்சி. அப்டீன்னா, இப்ப சப்போர்ட் எங்க இருக்குது?”ன்னு கேட்கிறீங்களா? நல்லா பாருங்க! சமீபத்திய “லோ” லெவல்களான (இங்க -“லோ”க்கள்களான- அப்டீன்னு எழுதினா லோக்கல்னு படிக்க வேண்டியிருக்கிறதுனால லோ லெவல்கள்-னு மாத்திட்டேன் :-)) 6, 7 & 8 அளவுகளை இணைத்து போடப்பட்டிருக்கும் லைன்தான் இப்போதைய சப்போர்ட்.

ஒரு வட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேனே, அதுதான் இப்போதைய S & R அடங்கிய ஒரு ரேஞ்ச். அதிலேயே மேலிருந்து கீழ் நோக்கி வரும் ஒரு சரிவான டௌன்ட்ரெண்ட் லைன்தான் ஒரு “bearish descending triangle” “கரடியின் இறங்கு முக முக்கோண அமைப்பை” உருவாக்குவது போல அமைந்திருக்கிறதென்று எழுதியிருக்கிறேன்.

ஓவரால் ட்ரெண்ட்: கரடி

கண்ணில் தெரியும் பேட்டர்ன்: கரடியின் இறங்குமுக முக்கோணம்

வார வரைபடத்தில் (நேற்றைய அலசலில்) கேண்டில் அமைப்பு: காளையின் சுத்தியல்; அதுவும் சப்போர்ட் லெவலில்

வார வரைபடத்தில் (நேற்றைய அலசலில்) இ & ஆ (RSI & MACD histogram): கரடியின் பிடியில்

முடிவு: ஐயா! ஆளை விட்டுடுங்க! 🙂

அட! சும்மா ஒரு ஜோக்குதாங்க!

இந்த மாதிரி நீங்களே பல்வேறு காரணங்களையும் அலசி ஆராய்ந்து, இப்படி போகுமா அல்லது அப்படி நகருமான்னு உன்னிப்பாகக் கவனித்து, கற்றுக்கொள்ள ஆரம்பித்து, உங்களின் டிரேட் என்ட்ரி மற்றும் எக்சிட்-களுக்கான முடிவுகளை நீங்களே தைரியமாக தீர்மானிப்பவர்களாக மாறுவீர்களேயானால் வெற்றி நிச்சயம்.

எனது கருத்துக்கள் உங்களின் வெற்றிப் பயணத்திற்குப் படிக்கட்டுகளாய் அமைந்தால், எனக்கு ரொம்பவும் சந்தோஷம்!

Cheers!

பாபு கோதண்டராமன்

ஹேமர்-னா என்ன? ஒரு சிறு விளக்கம்!

ஹேமர்-னா என்ன?

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

One Response to 08-10-2011 நிஃப்டி அலசல் (மறுபடியுங்க)

  1. C.V.Srinivasan says:

    If you closely watch you may idendify IHNS pattern is forming in the babu mentioned current range area.

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: