Trader’s Carnival 2012 Bangalore


Please find the link here http://traderscarnival.com/

20120905 ITC, BATA, 20 MICRON and VIKAS WSP


ஹலோ,

ஒரு குறிப்பிட்ட ஸ்டாக் மட்டும் முதல் ஆளாகக் கண்ணுக்குத் தெரிகிறது. ஏனென்றால், அவர்தான் அட்டெண்டன்ஸ் லிஸ்ட்டில் முதல் ஆள். வேறு யாருமில்லை. நம்ம 20 MICRONS LTD-தான். 2011 மார்ச்சில் 40 என்ற அளவிலிருந்து இப்போது 120-ஐத் தாண்டியிருக்கிறது. கீழே இருக்கும் வார வரைபடத்தைப் பாருங்கள். யாராவது வாங்கி,, இலாபம் பார்த்தீர்களா? 🙂

படம் 1: 20 MICRONS LTD எங்கோ போகிறதே!

 

அடுத்ததாக, VIKAS WSP என்கிற BSE ஸ்டாக். இது, டெக்னிக்கலாக ஒரு எடுத்துக்காட்டுக்காக இங்கே பார்க்கலாம். ஏப்ரல் ’12-ன்  ஹை, ஆகஸ்ட் ’12-ல் ரெஸிஸ்டன்சாக மாறுவதைப் பாருங்கள். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் ஹையின் போது இருந்த வால்யூமை விட, ஆகஸ்டில் அதிக வால்யூம் காணப்படுகிறது. அதாவது, இந்த ஆகஸ்ட் ஹைக்குப் பிறகு நிறைய விற்கப்பட்டிருக்கிறது. அதாவது பிராஃபிட் புக்கிங்.

படம் 2: VIKAS WSP-யின் முந்தைய ஹை, ரெஸிஸ்டன்சாக இப்போது மாறுகிறது.

அடுத்தது, ITC. இதுவும் HUL-உம் தற்போது அனைவராலும் ஸ்ட்ராங்கான ஸ்டாக்குகள் என்று சொல்லப்பட்டு வருவன. ITC-யில் சமீபத்திய இரண்டு “ஹை”களும் ஒரே லெவலில் இருக்கும்போது, MACD & RSI இண்டிகேட்டர்கள் நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் காட்டுகின்றன. இது, ஸ்டாக் கீழே இறங்கலாமென்று சொல்கின்றனவோ? மேலும், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தின் போது உருவாகிய முதல் ஹையின் வெள்ளை கேண்டில்களைப் பார்த்தால், அவற்றின் வால்யூம், ட்வின் டவர் கோபுரங்கள் போல மிக அதிகமாக உள்ளன. ஆகஸ்ட் கடைசியில் உருவாகிய அதே ஹை லெவலிலோ, வால்யூம் அவ்வளவு அதிகமாகக் காணப்படவில்லை.

படம் 3: ITC-யின் நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் மற்றும் வால்யூம் மாற்றம்

அடுத்தது, அனைவருக்கும் உகந்த BATA. இதிலும், விலையானது ஒரு ரேஞ்சிலேயே உள்ள நிலையில், MACD, RSI & STOC இண்டிகேட்டர்கள் நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் காட்டுகின்றன. வால்யூமும் குறைந்து கொண்டே வருகிறது.

படம் 4: 20120905 BATA-வில் என்ன “நடக்கிறது”?

 

20120831 HINDALCO எப்டி இருந்த நான், எப்டியோ இப்டி ஆகி, இன்னமும் என்ன ஆவேனோ?


HINDALCO பற்றி சென்ற வருடம் ஜூன் அலசிக்காய வைத்ததும் மற்றும்  சென்ற வருடம் ஆகஸ்ட் 26-ஆந் தேதியன்று எழுதியதும்.

சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போது அதைப் பற்றி மீண்டும் பார்க்கலாம். படத்திலேயே பாகங்களைக் குறித்துள்ளேன் (வழக்கம் போல).
சீர்ஸ்!

பாபு கோதண்டராமன்

படம்: 20120831 HINDALCO மாத வரைபடம். ஹையா! ஒரு HnS தெரிகிறதே!