20120905 ITC, BATA, 20 MICRON and VIKAS WSP


ஹலோ,

ஒரு குறிப்பிட்ட ஸ்டாக் மட்டும் முதல் ஆளாகக் கண்ணுக்குத் தெரிகிறது. ஏனென்றால், அவர்தான் அட்டெண்டன்ஸ் லிஸ்ட்டில் முதல் ஆள். வேறு யாருமில்லை. நம்ம 20 MICRONS LTD-தான். 2011 மார்ச்சில் 40 என்ற அளவிலிருந்து இப்போது 120-ஐத் தாண்டியிருக்கிறது. கீழே இருக்கும் வார வரைபடத்தைப் பாருங்கள். யாராவது வாங்கி,, இலாபம் பார்த்தீர்களா?🙂

படம் 1: 20 MICRONS LTD எங்கோ போகிறதே!

 

அடுத்ததாக, VIKAS WSP என்கிற BSE ஸ்டாக். இது, டெக்னிக்கலாக ஒரு எடுத்துக்காட்டுக்காக இங்கே பார்க்கலாம். ஏப்ரல் ’12-ன்  ஹை, ஆகஸ்ட் ’12-ல் ரெஸிஸ்டன்சாக மாறுவதைப் பாருங்கள். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் ஹையின் போது இருந்த வால்யூமை விட, ஆகஸ்டில் அதிக வால்யூம் காணப்படுகிறது. அதாவது, இந்த ஆகஸ்ட் ஹைக்குப் பிறகு நிறைய விற்கப்பட்டிருக்கிறது. அதாவது பிராஃபிட் புக்கிங்.

படம் 2: VIKAS WSP-யின் முந்தைய ஹை, ரெஸிஸ்டன்சாக இப்போது மாறுகிறது.

அடுத்தது, ITC. இதுவும் HUL-உம் தற்போது அனைவராலும் ஸ்ட்ராங்கான ஸ்டாக்குகள் என்று சொல்லப்பட்டு வருவன. ITC-யில் சமீபத்திய இரண்டு “ஹை”களும் ஒரே லெவலில் இருக்கும்போது, MACD & RSI இண்டிகேட்டர்கள் நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் காட்டுகின்றன. இது, ஸ்டாக் கீழே இறங்கலாமென்று சொல்கின்றனவோ? மேலும், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தின் போது உருவாகிய முதல் ஹையின் வெள்ளை கேண்டில்களைப் பார்த்தால், அவற்றின் வால்யூம், ட்வின் டவர் கோபுரங்கள் போல மிக அதிகமாக உள்ளன. ஆகஸ்ட் கடைசியில் உருவாகிய அதே ஹை லெவலிலோ, வால்யூம் அவ்வளவு அதிகமாகக் காணப்படவில்லை.

படம் 3: ITC-யின் நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் மற்றும் வால்யூம் மாற்றம்

அடுத்தது, அனைவருக்கும் உகந்த BATA. இதிலும், விலையானது ஒரு ரேஞ்சிலேயே உள்ள நிலையில், MACD, RSI & STOC இண்டிகேட்டர்கள் நெகட்டிவ் டைவர்ஜன்ஸ் காட்டுகின்றன. வால்யூமும் குறைந்து கொண்டே வருகிறது.

படம் 4: 20120905 BATA-வில் என்ன “நடக்கிறது”?

 

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

3 Responses to 20120905 ITC, BATA, 20 MICRON and VIKAS WSP

  1. gunamanohar says:

    thankyou sir

  2. C.V.Srinivasan says:

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு மறுபடியும் எழுதி இருக்கிறீர்கள் அதற்கு முதலில் நன்றி,இங்கு நன்றாக விலை உயர்ந்த பங்குகளை பற்றிக் கூறி எச்சரிக்கை செய்துள்ளீர்கள் அதேபோல் தற்சமயம் நல்ல லாபம் தரக்கூடிய பங்குகள் ஏதாவது இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ஸ்ரீனிவாசன்..

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: