டைவர்ஜென்ஸ்: ஒரு மறுபார்வை! Divergence Revis(it)ed


டைவர்ஜென்ஸ் என்பதற்கு சரியான விளக்கம் இப்போதுதான் என்னால் கொடுக்கமுடிகிறது.

1. category 1: விலை ஒரு பக்கம் செல்லும்போது, இண்டிக்கேட்டர்களும் ஆசிலேட்டர்களும் (இ & ஆ-க்கள்) மறு பக்கம் செல்வது.

2. category 2: விலை எங்கேயும் செல்லாது (அதாவது ஒரே flat-ஆக இருக்கும்). ஆனால், இ & ஆ-க்கள் ஏதேனும் ஒரு திசையில் செல்லத் துவங்கும்.

இந்த இரண்டு category-களில் எது மிக நல்லது என்பதெல்லாம் நாம் நம்முடைய அனுபவத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

டெக்னிக்கல் அனாலிசிஸில் “எப்போது வாங்குவது? எப்போது விற்பது?”

ரொம்ப சிம்பிள்!

1. சப்போர்ட் அருகில் வாங்க வேண்டும்; ரெஸிஸ்டென்ஸ் அருகில் விற்க வேண்டும்.

2. அதேபோல, சப்போர்ட் உடைபட்டால் விற்க வேண்டும்; ரெஸிஸ்டென்ஸ் உடைபட்டால் வாங்க வேண்டும்.

3. இவற்றையெல்லாம் விட அதிமுக்கியம் என்னவென்றால், அப்ட்ரெண்டில் இருக்கும் பங்கை முதலில் வாங்கி, பின்னர் இலாபத்தில் விற்க வேண்டும். டௌன்ட்ரெண்டில் இருக்கும் பங்கை முதலில் விற்று பின்னர் விலை இறங்கும்போது வாங்கி இலாபம் பார்க்கவேண்டும்.

ஒரு சில கேள்விகள்

1. இப்போது அப்ட்ரெண்டில் இருக்கும் ஏதேனும் ஒரு சில பங்குகள் ஞாபகம் வருகிறதா? அதாவது, ஏதேனும் ITC, HINDUNILVR போன்று லைஃப்டைம் ஹை-க்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பங்குகளைப் பாருங்கள். இவைகளில் ஷார்ட் போகலாமா?  “வாங்கி விற்கவேண்டும்” என்ற நியதிப்படி எப்போதெல்லாம் correction நடந்து மேலே திரும்புகிறதோ அப்போது வாங்க வேண்டும். “ஷார்ட்” பொசிஷனே எடுக்கக்கூடாது.

2. அதேபோல HINDALCO போன்று லைஃப்டைம் லோ-க்களை பார்க்கும் பங்குளில் “லாங்” போகலாமா? கூடாது! விற்றுத்தான் வாங்க வேண்டும். “லாங்” பொசிஷன் எடுக்கவே கூடாது.

இந்த HINDALCO-I டெய்லி சார்ட் பாருங்கள்.

படம் 1: HINDALCO-I டெய்லி சார்ட்

படம் 1: HINDALCO-I டெய்லி சார்ட்

12/03/13 வரை மட்டுமே டெய்லி வியூ கொடுத்துள்ளேன்.

2/1/13-இல் உச்ச விலை 138.25.

அதிலிருந்து இறங்கி 4/3/13-இல் 94.65 வரை கீழே வந்துள்ளது.

அங்கிருந்து 7,8,11 மற்றும் 12 தேதிகளில் 102.50 என்ற உச்ச லெவலில் இருந்திருக்கிறது. இந்த ஏரியாவை ஒரு வட்டமிட்டு, shade அடித்து ஹைலைட் செய்திருக்கிறேன்.

இந்த இடத்தை நாம் இப்போது Hourly சார்ட்டில் பார்க்கலாம்.

மறுபடியும் ஒரு கேள்வி! (ஹலோ! கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். என்னைத் திருப்பி கேள்வி கேட்கக்கூடாது!… சும்மாதாங்க!)

ஏன் Hourly chart பார்க்கவேண்டும்?

ஏனென்றால், டெய்லி-யில் டௌன்ட்ரெண்ட்-ஆக இருப்பதால் இதை விற்றுத்தான் வாங்கவேண்டும். (அதாவது, ஃபர்ஸ்ட் ஷார்ட்; அப்புறம் கவர் யுவர் ஷார்ட்ஸ்).

ஆதலால், டெய்லி-யை விட அடுத்த சிறிய டைம்ஃபிரேம்-ஆன Hourly சார்ட்டினைப் பார்த்து, அதிலே எங்கே “ஷார்ட்” என்ட்ரி எடுப்பதென்று தீர்மானிக்க வேண்டும். அதனால்தான் Hourly சார்ட் பார்க்கிறோம்.

கீழேயிருக்கும் படத்தைச் சும்மா ஒரு லுக் விடுங்கள்.

படம் 2: HINDALCO-I Hourly என்ன தெரிகிறது?

படம் 2: HINDALCO-I Hourly என்ன தெரிகிறது?

அந்த ஹைலைட் செய்திருக்குமிடத்தில் விலையானது 102.50 என்ற லெவல்களிலே நான்கு தடவைகள் முட்டி மோதியிருக்கிறது. அதற்கு நேர்கீழே இ & ஆ-க்கள் ஒவ்வொரு லெவலிலும் கீழே செல்ல ஆரம்பிக்கின்றன. இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க நாம் அந்த நான்கு  முறை உச்ச விலைகளுக்கு நேராகவும் செங்குத்துக் கோடுகள் (vertical lines) வரைந்து பார்க்கலாம்.

படம் 3: நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா? புரிகிறதா?

படம் 3: நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா? புரிகிறதா?

இப்போது தெளிவாகிறதா? இந்த நெகட்டிவ் டைவர்ஜென்சுக்குப் பிறகு விலையானது 13/3/13 அன்று gap down-இல் ஆரம்பித்து, 99-ஐ உடைத்தெறிந்து விட்டுக் கீழே சென்றபிறகு, 86.80 வரை இறங்கி வந்துள்ளது.

ரீடெஸ்ட் – கவனம்: நான் அடிக்கடி சொல்லியிருக்கின்றேன் “பங்குச்சந்தையில் ஒரு தடவை சான்ஸ் மிஸ் செய்தாலும், மீண்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான நிதானமும் அவசியம்” என்று.

அப்படி 13/3 அன்று 99-ஐ உடைத்துக் கீழே இறங்கினாலும், 15/3 அன்று அந்த லெவல் ரெஸிஸ்டென்ஸ்-ஆக மாறி ரீடெஸ்ட் நடந்துள்ளது. இப்போது சொல்லுங்கள். இறங்குமுகத்திலிருக்கும் ஹிண்டால்கோ-வை அப்போது, அந்த ரெஸிஸ்டென்ஸ் அருகில் வந்தபோது நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும்?

கஷ்டமான கேள்வியா? நான்தான் ஆரம்பத்திலேயே “எப்போது வாங்குவது? எப்போது விற்பது?” என்ற தலைப்பில் க்ளூ கொடுத்து விட்டேனே! அதுமட்டுமில்லாமல் மேலே இருக்கும் பத்தியிலும் இரண்டு பதங்களை Bold செய்துள்ளேனே! ஈஸிதானே? J

இந்த டிரேட்-இன் எச்சரிக்கைகள்

1) ஸ்டாப்லாஸ் எங்கே வைப்பது, டார்கெட் எவ்வளவு என்றெல்லாம் உறுதியாகக் கூற முடியாத ஒரு அனாலிசிஸ் இது.

2) அதைவிட முக்கியமானது என்னவென்றால், எந்த இடத்தில் ஷார்ட் பொசிஷன் எடுப்பது? சப்போஸ் 3 என்ற இடத்தில் எடுத்திருந்தால், மறுபடியும் 4 என்ற இடத்தில் விலை வரும்போது நமக்குக் குழப்பமாகவும், “நம்முடைய டிரேட் என்ன லாஸ் ஆகிவிட்டதோ?“ என்ற பய உணர்வும் நம்மைக் குழப்பிவிட்டிருக்கும்தானே?

3) 4 என்ற இடத்தில் எடுத்திருக்கலாமென்றால், நான்காவது முறையும் வருமென்று நிச்சயமாக நமக்கெப்படித் தெரியும்?

நான் இங்கே எழுதுவதெல்லாம் ஒரு இன்ஃபர்மேஷன்தான்: ஒரு சில ஐடியாக்கள்தான். கற்றுக்கொண்டு முடிவெடுப்பது உங்கள் கையில்தான். ஆக அனுபவம் அவசியம்.

அந்த அனுபவம் கிடைக்கும் வரையிலும், “பாருங்க, பாருங்க! பாத்துக்கிட்டேயிருங்க!” அதற்கப்புறம் “அனுபவி ராஜா! அனுபவி”தான்! J

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: இந்த வாரம் பூராவும் டைவர்ஜென்ஸ்-ஐ வைத்தே ஒட்டிவிட்டேன் போலிருக்கிறதே! அடுத்த வாரம் வேறேதாவது எழுத முயற்சிக்கிறேன்! 🙂

20130328 நிஃப்டியின் 200SMA சப்போர்ட்


ஹலோ!

நான் 23/03 அன்றைய இந்தச் சார்ட்டக் கொஞ்சம் டெக்னிக்கலாப் பாருங்க – பாகம் 2  பதிவிலே என்ன எழுதியிருந்தேன்? நிஃப்டி HnS பேட்டர்னில் இருப்பதால், 5250 வரை கீழே செல்ல வாய்ப்பிருக்கிறதென்று எழுதியிருந்தேன்.

ஆனால் வரைபடத்தைப் பார்த்தால்

படம்: நிஃப்டியின் 200SMA

படம்: நிஃப்டியின் 200SMA

கடந்த இரு நாட்களாக (26 & 28 மார்ச்; 27 ஹோலி விடுமுறை. 29 Good Friday விடுமுறை), மேலே செல்லும் வகையிலான white candle (ஒயிட் கேண்டில்ஸ்டிக்) உருவாகியுள்ளது. அதாவது ஒரு 5620 என்ற லெவலிலிருந்து 5,682.55 என்ற லெவலில் முடிந்திருக்கிறது. அதாவது காளைகள் சந்தைக்குள் வந்து வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஏன் இந்த 5620 என்பதைக் கொஞ்சம் பார்த்தால். அது 200 SMA (சிம்பிள் மூவிங்க் ஆவரேஜ்)-ஆக அமைகிறது (பச்சை நிறக் கோடு). மார்க்கெட்டும் oversold கண்டிஷனில் இருத்துள்ளது. எனவே, இங்கு ஒரு bounce back ஆகி மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதை நான் ஏன் எழுதுகிறேனென்றால் 200SMA மற்றும் 200EMA போன்றவை ஒரு நல்ல சப்போர்ட் அல்லது ரெஸிஸ்டன்ஸ்-ஆக மாறுவதற்கான வாய்ப்புகளிருக்கின்றன எனபதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இங்கே இது ஒரு சப்போர்ட்டாக மாறியுள்ளது.

இன்னமும் HnS பேட்டர்ன் இருப்பதால், இப்போது மேல்நோக்கிச் செல்லும் விலை நெக்லைனை ரீடெஸ்ட் செய்யும்போது என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்! 🙂

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130326 RANBAXY Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 2


ஹலோ!

நேத்து போட்டு வச்சிருந்த RANBAXY சார்ட்டப் பாத்துட்டீங்களா?

மிகப் பெரிய எச்சரிக்கை:

டே டிரேடிங்கே (Day trading) ரொம்ப ரொம்பக் கஷ்டமானது. அதுல பணம் சம்பாதிக்கறத விட, இழப்பதற்கான சான்ஸ்தான் ரொம்ப அதிகம். அதுல போயிட்டு இந்த டைவர்ஜென்ஸ் ரொம்பவே நஷ்டத்தை ஏற்படுத்தறதுக்கான சான்ஸ்கள் இன்னமும் ஏராளம். “டைவர்ஜென்ஸ் பாக்கறதுன்னா மினிமம் ஒரு மணி நேர (Hourly) சார்ட்டுல பாக்கறதுதான் பெட்டர். 5, 15, 30 நிமிஷ சார்ட்டுல பாக்கறது ரொம்பவே ரிஸ்க்”குன்னு சந்தையில இருக்கிற மத்த டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் எல்லாம் எச்சரிக்கை செய்யறாங்க.

அதனால இந்த டைவர்ஜென்ஸ் கட்டுரைய ஒரு எக்ஸாம்பிள்-ஆ மட்டும் எடுத்துக்கிட்டு, இத Hourly, Daily, Weekly சார்ட்டுல யூஸ் பணக் கத்துக்கோங்க!

 இப்ப நம்ப சார்ட்டுக்குள்ளாற போகலாம்.

இங்க 1#, 2#, 3A# மற்றும் 4A# அப்படின்னு நாலு செங்குத்துக் கோடுகள் போட்டுட்டேன். ஏன்னா, இங்கெல்லாம்தான் ப்ரைஸ் “லோயர் லோ”-வா ஆகியிருக்கு. அதாவது 1-ஐ விட 2 கம்மி; 2-ஐ விட 3A கம்மி; 3A-ஐ விட 4A கம்மி.

படம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1

படம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1

இத ரண்டு குரூப்-ஆ பிரிச்சிக்கலாம். குரூப் 1-ல 1, 2 & 3A-வை எடுத்துக்கலாம். குரூப் 2-ல 3A & 4A-வை தனியா (dhaniya=மல்லி இல்லைங்க; separate-ஆ) எடுத்துக்கலாங்கறேன்!

குரூப் 1-ல ப்ரைஸ் புதிய புதிய கம்மி விலைகளைத் தொடும்போது, MACD histogram bars மற்றும் RSI-யில் மேல் நோக்கிச் செல்லும் வாய்ப்பு தெரியுது.

அதுக்கப்புறம் விலையும் ஏறுது.

குரூப் 2-ல பாத்தோம்னா,

படம் 2: RANBAXY குரூப் 2

படம் 2: RANBAXY குரூப் 2

3A-ஐ விட 4A புதிய “லோ”. ஆனாக்கா, MACD-யின் மூவிங் ஆவரேஜ் லைன்களும், RSI மற்றும் STOC-களும் நல்லா பாசிட்டிவ்வா தெரியுது. அதுக்கப்புறமும் விலை மறுபடியும் நல்லா மேலே ஏறுது. 4A-வுல 425 லெவல்ல இருந்த ஸ்டாக், 435க்கு மேல போய், அதுக்கப்புறம் அதுக்குக் கீழ கொஞ்சம் கரெக்ஷன் ஆகி வந்து, மறுபடியும் மேலே ஏறி, 445, 446-ன்னு வந்திருக்குது.

அதெல்லாம் சரிங்க! இதெல்லாம் பாக்குறதுக்குத்தான் நல்லாருக்கு. ஆனா டிரேட் எடுக்கறதுக்கு முன்னாடியே எவ்வளவு ரிஸ்க், எவ்வளவு ரிவார்ட்-ன்னு கணக்குப் போட முடியுமான்னு, “முடியாது”ன்னுதான் சொல்லணும்.

மேலும், 2# என்ற இடத்திலும் டைவர்ஜென்ஸ் இருந்தாலும், அதுக்கப்புறமும் ப்ரைஸ் குறைஞ்சிட்டுத்தான் வந்தது. 3A-க்கப்புறம்தான் மேலே ஏறியது. ஆனா, 3A# மற்றும் 4A#-க்களை கம்பேர் செய்யும்போது, ரண்டாவது டைவ்ர்ஜென்ஸ் இடத்திலேயே (அதாவது 4A# குரூப் 2-ல) மேலே ஏறிடிச்சி. ஆனா, குரூப் 1-ல இத மாதிரி 2#-லேயே மேலே ஏறவில்லையே!

எனவே, இந்தக் கட்டுரையானது ஒரு இன்ஃபர்மேஷன்தானுங்க!

Don’t worry! இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டு பயிற்சி கொடுக்காம இருப்பேனுங்களா? ஹ..ஹ..ஹா…! 🙂 எல்லா Bank ஸ்டாக்குகளையும் டெய்லி, வீக்லியில ஒரு லுக் விட்டுப் பாருங்க! ஏதாச்சும் டைவர்ஜென்ஸ் எங்கேயாச்சும் சப்போர்ட் இல்லை ரெஸிஸ்டன்ஸ் கிட்டேயிருக்குதான்னும் பாருங்க!

பாருங்க! பாருங்க! பாத்துக்கிட்டேயிருங்க! 🙂

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130326 RANBAXY-I Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 1


என்னங்க? டே டிரேடிங்னு சொன்னவுடனே, நாக்கைச் சப்புக் கொட்டிக்கிட்டு, “ஆஹா! பத்தாயிரம் போட்டவுடனே, பத்து லட்சமா மாறி கூரையப் பிச்சிக்கிட்டுப் பணம் கொட்டப்போகுது”ன்னு நெனைக்காதீங்க! டே டிரேடிங்ல பணம் சம்பாதிச்சவங்களை விட, விட்டவங்கதான் அதிகம் //எனக்குத் தெரிஞ்ச வரையிலும்//. நான் இங்க எழுதறதெல்லாம் ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான். “எப்பத்திலிருந்து இவன் அந்தக் காளையும்கரடியும் blog-அப் படிக்க ஆரம்பிச்சானோ, அன்னையிலிருந்து ஒரு மார்க்கமாத்தான் இருக்கான்” அப்டீன்னு உங்க அம்மா சொல்ற மாதிரி வச்சிக்காதீங்க. என் பேர ரிப்பேர் பண்ணிடாதீங்க J

“இந்த டிரேட்ல எவ்வளவு ரிஸ்க் இருக்குது?; எவ்வளவு லாபம் இருக்குது (ரிஸ்க்: ரிவார்ட் –ரேஷியோன்னு சொல்றது)?: இந்தட் டிரேட் எடுத்து சப்போஸ் லாஸ்-ல போச்சின்னா, அத நம்ம பர்ஸ் தாக்குப் பிடிக்குமா? நம்ம ஆத்தா வையுமா?” அப்டீன்னு Money Management – (MM – பண நிர்வாகம்) நீங்கதான் செய்யணும்.

இதுக்கெல்லாத்துக்கபுறமும் OK-ன்னு தோணிச்சின்னா, “எத்தனை ஸ்டாக் (அல்லது லாட்) பொசிஷன் எடுக்கலாம்” அப்டீங்கற Position Sizing (PS) பத்தியும் ஒரு கணக்கு போட்டு நீங்கதான் முடிவெடுக்கணும்.

இதையெல்லாத்தையும் தாண்டி day trading-ல ஒரு பொசிஷன் எடுத்துட்டு, அது லாபத்தில இருந்தா, அத எடுக்கக் கத்துக்கணும். சப்போஸ் ஸ்டாப்லாஸ் அடிச்சிடிச்சின்னா, அந்த நஷ்டத்துல பொசிஷனக் கட் பண்ணவும் தைரியம் வரணும். அப்படி நஷ்டத்துல இருக்கும்போது, வெளியே வராம, “இல்ல! இல்ல! நான் அதக் carryover செஞ்சிட்டு, மறுபடி எப்ப லாபத்துல வருதோ அப்ப வெளிய வந்துறேன்னு வேல்யூ இன்வெஸ்டரா (value investor) மாறிடறேன்” அப்டீன்னு அடம் பிடிச்சீங்கன்னா, இந்த டே டிரேடிங் ஆட்டத்துக்கு நீங்க போகக்கூடாதுன்னுதான் நான் சொல்வேன். இது சைக்காலஜி (Psychology). இந்த MM, PS & Psychology பத்தியெல்லாம் கொஞ்ச நாளைக்கப்புறமா எழுதறேன்.

சரிங்க! இப்ப இந்த 5 min டைம்ஃபிரேம்ல இருக்குற இந்த RANBAXY FUT சார்ட்டைப் பாத்து எங்கெங்க டைவர்ஜென்ஸ் தெரியுதுன்னு பாத்து வையுங்க!

படம்: RANBAXY-i 5 min chart

படம்: RANBAXY-i 5 min chart

 

 

நான்தான் மேலேயே எழுதிட்டேனே! “பாகம்-1”-ன்னு! அப்புறம் என்னங்க? “பாகம்-2” நாளைக்குத்தான்! அதுவரைக்கும்…..

 

அன்புடன்

பாபு கோதண்டராமன்

 

20130325 LICHSGFIN ஒரு டெக்னிக்கல் பார்வை


20130325 LICHSGFIN ஒரு டெக்னிக்கல் பார்வை

ஹலோ!

நேற்றைய பதிவிலே, LIC Housing Finance-இன் சார்ட்டைப் போட்டு, அதைப் பற்றி இன்று எழுதுகிறேனென்று சொல்லியிருந்தேன். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இதுதாங்க அந்தப் படம்.

படம் 1: LICHSGFIN - சும்மா! ஒரு glance விடுங்க!

படம் 1: LICHSGFIN – சும்மா! ஒரு glance விடுங்க!

 முதலில் எனக்குத் தெரிவது ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் பேட்டர்ன்தான்

ஹி..ஹி..ஹீ. எங்கே போனாலும் நான் அதை விட மாட்டேனுங்க! இந்தப் படத்திலிருந்து உங்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கிறேன்.

படம் 2: LICHSGFIN - தெரியுதா ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் வடிவமைப்பு?

படம் 2: LICHSGFIN – தெரியுதா ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் வடிவமைப்பு?

அ) தலைப்பகுதியின் உச்சத்திலிருந்து, அதற்கு நேர்கீழே நெக்லைன் வரை ஒரு செங்குத்துக்கோடு (vertical line) வரையுங்கள். அந்தக்கோடு நெக்லைனை எந்த ப்ரைஸ் லெவலில் தொடுகிறது என்று பாருங்கள். பிறகு, டார்கெட் சோன் (target zone), அதாவது எத்தனை புள்ளிகள் இறங்க வாய்ப்பிருக்கிறது எனக் கண்டுபிடிக்கவும்.

ஆ) இந்த H&S பேட்டர்ன், நெக்லைனை எந்த இடத்தில் உடைத்துக்கொண்டு கீழே சென்றுள்ளது (neckline breakdown area)? அதன் அளவு என்ன?

இ) இந்த நெக்லைன் பிரேக்டௌன் அளவிலிருந்து, டார்கெட் சோன் அளவைக் கழித்தால் உங்களுக்கு டார்கெட் கிடைத்து விடும்.

என்னங்க! டார்கெட் கண்டுபிடிக்கிறீங்களா? (“என்னங்க சார்! அதுதான் அந்த பேட்டர்னில் இருந்து நன்றாகக் கீழே இறங்கிவிட்டதே! இங்க்கா எந்துக்கு கண்டுபிடிக்கவால?”ன்னு தெலுங்குல கேக்குறீங்களா? சும்மா! ஒரு பயிற்சிக்குன்னுதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேனுங்களே!

இருங்க, இருங்க! முதல்ல இந்தப் பாட்ட கும்க்கி ஸ்டைல்ல பாடிப் பாருங்க!

 சொல்லிட்டேனே….

   ஒரு பயிற்சின்னு…

சொல்லும்போதே….

   ஒரே ஜாலிதான்..

“பாபு! போதும்யா…! அவங்கெல்லாம் தாங்க மாட்டாங்கய்யா..! நிறுத்திடுங்கப்பு….!” அப்படீன்னும் பரவை முனியம்மா அவர்களின் ஸ்டைலிலும் சொல்லிப் பாத்துடுங்க.

ஈ) அட சொல்ல மறந்துட்டேனுங்க! நான் மறந்தாலும், இனிமே நீங்க மறக்காதீங்க! TA-விலே ஸ்டாப்லாஸ் முக்கியமுங்க! இந்த H&S-க்கு, ரைட் ஷோல்டர் டாப்தான் ஸ்டாப்லாஸ். அதுவும் என்னன்னு பாருங்க!

உ) அப்டீயே இந்த டிரேடுக்கு ரிஸ்க் எவ்வளவு; ரிவார்ட் எவ்வளவுன்னும் கணக்குப் போட்டுப் பாத்து, நமக்கேத்த டிரேடான்னும் பாத்துக்கோணும். (ரிஸ்க் அதிகமாயிருந்து, ரிவார்ட் கொஞ்சம்தான்னா அந்த மாதிரியான டிரேட் எல்லாம் எடுக்காதீங்க!)

சரிங்க! அடுத்த அலசல்!

அடுத்தது நாம் கொஞ்ச நாட்களாகப் பார்த்துவந்த டைவர்ஜென்சுகளில் ஒன்றான பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்தாங்க! 2013 ஆரம்பிச்சத்திலிருந்தே விலையானது குறைந்துகொண்டேயிருக்கின்றது. மார்ச் ஆரம்பத்தில் 234 என்ற “லோ” விலை. அதற்கப்புறம் மார்ச் கடைசி வாரத்தில் (தற்போது) அதைவிடக் குறைந்து ஒரு 215 என்ற அளவில் மற்றொரு “லோ” லெவல். ஆனால், MACD histogram மற்றும் RSI, இந்த இரண்டு “லோ” விலைகளுக்கும் சம்மந்தமில்லாமல் மேலே செல்வதைப் பாருங்கள். கரடிகள் வலிமை இழக்கிறார்களோ என எண்ணத்தோன்றும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் அமைப்பு இது.

படம் 3: எல்‌ஐ‌சி‌எச்‌எஸ்‌ஜி‌எஃப்‌ஐ‌என் -  பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம் 3: எல்‌ஐ‌சி‌எச்‌எஸ்‌ஜி‌எஃப்‌ஐ‌என் – பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

அடுத்த அலசல் மிகவும் முக்கியமான ஒரு நியதி

இது டெக்னிக்கல் அனாலிசிஸில் அடிக்கடி நிகழ்வது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். “ரீடெஸ்ட்” என்கிற டெக்னிக்கல் அனாலிசிஸின் ஒரு மிகப்பெரிய உண்மைக்கும், இதற்கும் மிகவும் நெருங்கிய உறவிருக்கிறது. “என்னங்க பாபு! மறுபடியும் நீங்க கன்னா, பின்னான்னு எழுத ஆரம்பிக்கிறீங்களே” அப்டீன்றீங்களா? என்னங்க செய்றது? நான் சின்ன வயசிலேயிருந்தே அப்படிதாங்க!

சரிங்க! படத்துக்குள்ளாற போலாமா?

படம் 4: LICHSGFIN - S, R-ஆக மாறுவது!

படம் 4: LICHSGFIN – S, R-ஆக மாறுவது!

புள்ளி 1 மற்றும் 2-ஐச் சேத்து, அப்டீயே ஒரு ரெட் கலர் லைன் வரைஞ்சேனா? “என்னாச்சி?” (ந.கொ.ப.கா படம் பாத்துட்டீங்களா? :)) அந்த லைன் அப்படியே 3 அப்புறம் 4-ன்ற இடங்கள்ள அருமையா ஒரு சப்போர்ட்டா (அட! சப்போட்டா பழம் இல்லீங்க; Support = ஆதரவு நிலை) இருக்குறதப் பாருங்க.

பிப்’13 இரண்டாவது வாரத்துல இந்த சப்போர்ட் உடைபட்டு, விலை கீழேயிறங்கிடிச்சி. அப்புறம் ஒரு வாரத்துக்குள்ள (#5 என்ற இடத்தில்) மறுபடியும், முன்னே சப்போர்ட்டாக இருந்த அந்த லைனைப் போய்த் தொட்டுத் திரும்பற ப்யூடி(beauty)-யைப் பாருங்க. இதைத்தான் ரீடெஸ்ட் அப்டீன்னு சொல்றது. மார்க்கெட் கொடுக்கும் ஒரு சான்ஸ். (மார்க்கெட்டில் பொறுமை அவசியம்னு நான் முதல்ல பல தடவை எழுதியிருக்கேனுங்களே!). அதாவது முன்னாடி சப்போர்ட்டா இருந்த அந்த லைன், இப்போ ரெசிஸ்டன்ஸா மாறுவதுதான் இந்த ரீடெஸ்ட்.

நான் ஏன் beauty அப்டீன்ற வார்த்தையை பயன்படுத்தினேனென்றால், ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாமல் 3 மற்றும் 4 என்ற இடங்களில் சப்போர்ட் எடுப்பதும், அதேபோல #5 மற்றும் #6 ஆகிய இடங்களில் ரெஸிஸ்டன்சாக மாறுவதும், இந்த டைனமிக் (dynamic) மார்க்கெட்டில் எப்படி சாத்தியமாகிறது?

மார்க்கெட் இன்னுமொரு சான்ஸ்-ஐ, மார்ச் இரண்டாவது வாரத்துல அழகா கொடுக்குது பாருங்க. இன்னொரு தடவை ரீடெஸ்ட் நடக்குது; இன்னொரு தடவை முந்தைய சப்போர்ட், இப்போதைய ரெஸிஸ்டன்ஸா மாறுது. (முன்னாளில் காதலி; இப்போதைய மனைவி!) ஹ…ஹ..ஹா… என்ன ஒரு அருமையான உவமையோட இந்த கட்டுரையை முடிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெற்றுக்கொள்வது ….

அன்பு நண்பன்,

பாபு கோதண்டராமன்

20130325 LICHSGFIN (பாகம் 1) இந்தச் சார்ட்டையும் கொஞ்சம் டெக்னிக்கலாப் பாருங்க!


ஹலோ!

இப்போதைக்கு இந்த LIC Housing Finance சார்ட்டுல என்னென்ன தெரியுதுன்னு பாருங்க! நேத்தே ஒரு க்ளூ கொடுத்திருந்தேன். அது மட்டுமில்லாம வேற ஏதேனும் தெரியுதான்னு பாருங்க! டெக்னிக்கல் அனாலிசிஸ் கத்துக்கறதுக்கு இது ஒரு அருமையான கேஸ் ஸ்டடி (case study) சார்ட். நாளைக்கு மீதி விவரங்களோட உங்கள மீட் பண்றேன்!

Image

C U!

அன்புடன்

பாபு கோதண்டராமன்

20130322 NIFTY Negative Divergence நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்


ஹலோ

நேற்றைய பதிவிலே, நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் பற்றி சொல்கிறேன் என்றேனே, அதுதான் இப்போதைய பதிவு.

டைவர்ஜென்ஸ் (Divergence) என்றால் என்ன?

அதாவது, நமது சார்ட்டில் பங்குகளின் விலையானது OHLC மற்றும் வால்யூம் வைத்துக் குறிக்கப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையிலேயே மேலும் (CCI, MACD, OBV, RSI, STOC, etc, போன்ற) பற்பல இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் (இ & ஆ என்று சுருக்குகிறேனுங்க!) (Indicators & Oscillators) கணக்கிடப்படுகின்றன.

டெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த விலை மற்றும் இ & ஆ ஆகியவற்றின் போக்கை ஒப்பிடுவதே டைவர்ஜென்ஸ் எனப்படும் தியரி.

சப்போஸ் விலையானது மேல் நோக்கி ஏறுகிறதென்றால், அதிலிருந்து கணக்கிடப்படும் இ & ஆ-வும் மேல் நோக்கித்தான் செல்ல வேண்டுமென்பது நியதி. அதேபோல, விலையானது இறங்குமுகத்திலிருந்தால், இ & ஆ-வும் அதனைப் பின்பற்ற வேண்டும்.

1. பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் (Positive divergence)

சப்போஸ் ஒரு பங்கின் விலையானது, கீழ்நோக்கி டௌன்டிரெண்டில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு கால கட்டத்திலே அது வலிமை பெற்று மேலே செல்ல யத்தனிக்கும் போதோ (அல்லது) அந்த டௌன்ட்ரெண்ட் முடிவுக்கு வரும் காலங்களிலோ இ&ஆ-க்களில் வலிமை கூடி, மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலையின் போக்கு டௌன்டிரெண்டாக இருந்தாலும், இது வலிமையைக் காட்டுவதால் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.

2. நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (Negative divergence)

பாசிட்டிவ்வுக்கு நேரெதிர் நெகட்டிவ் (ஆ! என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா?) J.

ஒரு பங்கின் விலை அப்ட்ரெண்டில் இருக்கும்போது, இ&ஆ-க்களில் டௌன்ட்ரெண்ட் தெரிந்தால் அது அந்த அப்டிரெண்டின் வலிமை குறைந்து வருவதைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. என்னதான் விலை மேலே சென்றுகொண்டிருந்தாலும், இது நெகட்டிவ் நியூஸ் ஆதலால், நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.

நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

இப்போது இந்த நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள். டிச’12-ஜன’13 என்ற இந்த இரண்டு மாத காலகட்டத்திலே, இன்டெக்ஸ் அப்ட்ரெண்டில் பயணிக்கிறது.

அதற்கு நேர்கீழே, MACD, RSI மற்றும் STOC போன்ற இ&ஆ-க்கள் டௌன்டிரெண்டில் (சிகப்பு நிறப் புள்ளிக் கோடுகள்) செல்வதைப் பாருங்கள்.

படம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

இந்நிலை காளைகளின் குன்றி வரும் வலிமையைக் காட்டும் அளவுகோலாக கணக்கிடப்படுகிறது.

“சரிங்க! நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லி, காளைகளின் வலிமை குறைந்து கொண்டே வருதுன்னு சொல்றீங்க! நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம்?” அப்படீன்னு கேக்குறீங்களா? அடுத்த படத்தைப் பாருங்கள்!

படம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)

படம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)

1. மேலே விலையானது டிச’12-ஜன’13 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கொண்டு கீழே செல்கிறது.

2. அதேபோல MACD, RSI மற்றும் STOC-க்கள் தங்களின் சப்போர்ட் லைன்களை உடைத்துக்கொண்டு கீழே செல்வதையும் பாருங்கள்.

இதிலே, மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளான 1 மற்றும் 2 உடைபடுதல்கள், இரண்டு மாத கால நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கப்புறம்தான் நடக்கிறது.

இந்த நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் என்பது சிக்னல். பிப்’13-இல் உடைபடுதல்தான் கன்ஃபர்மேஷன் (confirmation). இந்தக் கன்ஃபர்மேஷன் கிடைத்த பிறகுதான் நீங்கள் பிராஃபிட் எடுப்பதோ அல்லது/மற்றும் மேலும் ஷார்ட் போவதோ செய்ய வேண்டும்.

என்னங்க! ஏதாவது புரியுதுங்களா? ரொம்பக் குழப்பிட்டேனா? என்னங்க செய்யறது? அதே டயலாக்தானுங்க! “குழம்பின குட்டையிலதாங்க மீன் பிடிக்க முடியுமுங்க”

சரி! ஒரு ஹோம்வொர்க்!

ஹ.ஹ..ஹா… பயந்துட்டீங்களா? சும்மா….! J

1. நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கு உதாரணமா ஒரு சார்ட் போட்டுட்டேன். பாசிட்டிவ் டைவர்ஜென்சுக்கு LICHousingFinance டெய்லி சார்ட் பாருங்க! ஏதாவது தெரியுதான்னு சொல்லுங்க.

2. இப்ப சொல்றதுதான் ரொம்ப முக்கியமானது. இவ்ளோ நாளா பயங்கர அப்டிரெண்டில இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுங்களா? அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க! எதுலேயாவது வலிமை குறையுதான்னு சொல்லுங்க!

 

பாருங்க! பாருங்க! நல்லாப் பாருங்க! பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்!

சரிதானுங்களே? J

அன்புடன்,

பாபு கோதண்டராமன்