1020-லிருந்து 17.70 வரை – விஷால் ரீடெயில்


ஹலோ ஃபிரண்ட்ஸ்!

கொஞ்சம் V வரிசை ஸ்டாக்குகளையெல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்தேன். அதிலே எனது கவனத்தை ஈர்த்தது இவ்விரண்டு ஸ்டாக்குகளும்தான். ஏனெனில், முன்னொரு காலத்திலே, அதாவது சந்தை zooooooom என்று மேல் நோக்கிச் சென்று கொண்டிருத்த காலத்தில் (2007/2008-களில்) வந்த செய்திகளின் தாக்கத்தை வைத்து இவ்விரண்டினை வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் பல லட்சக் கணக்கிலிருப்பார்கள். இன்று வரை விற்காமல், மேலும் மேலும் விலை குறைந்து வந்து போதெல்லாம் ஆவரேஜ் செய்து வந்தவர்களும் ஏராளம். அதன் நிலைமை என்னவாயிற்று? பார்க்கலாம்.

VISHALRET

ராம் சந்திரா அகர்வால் அவர்களின் VISHAL RETAIL-இன் IPO ரூ. 240-க்கு 81 மடங்கு subscribe செய்யப்பட்டது.  எத்தனை ஆயிரம் பேர் முண்டியடித்துக்கொண்டு முதலீடு செய்தோம்? 2007 ஜூலை 4-ஆந்தேதி (அமெரிக்க independance day) IPO-வில் ரூ.472.50/-இல் ஆரம்பித்த இன்னிங்ஸ் அன்று மாலை மிகவும் வெற்றிகரமாக ரூ.784.40-இல் முடிந்தது. (85 ball century on debut மாதிரி ஒரே கலக்கல்தான் போங்க! – அந்த ஷிகார் தவான் தம்பிய இங்க ஒப்பிடறதுக்கு மனசு வரலதான். இருந்தாலும், opening சூப்பர்-ஆ இருக்குதே! அந்தத் தம்பி நல்லா வளர, வாழ வாழ்த்துக்கள்!)

ஆறே மாதங்களில், அதாவது 2008 ஜனவரி 7-ஆந்தேதி உச்ச விலையாக ரூ.1,020/-ஐத் தொட்டது. அதன் பிறகு ஆசை யாரை விட்டது? நம்மில் யாரேனும், அதன் பிறகு, ஒரு trailing stoploss வைத்து பிராஃபிட் பார்த்தோமா? இல்லையே!

20120315 VISHALRETlinefrom970 to 17n70படம்: விஷால் ரீடெயில் – ஃப்ரம் IPO to குப்பைத்தொட்டி

அதெல்லாம் போகட்டும் 2008 ஜூன் மற்றும் ஜூலையில் ஒரு ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன் வடிவெடுத்து, 740-760 லெவல்கள் உடைபட்ட போதாவது (படத்திலிருக்கும் சிகப்புக் கலர் நெக்லைன்) இந்த ஸ்டாக்கை விற்றிருக்க வேண்டும். விற்கவில்லையே!

ஜூனில் உடைபட்ட பிறகு, நாம் வெளியே வர, மார்க்கெட் நமக்கு  மறுபடியும் ஒரு சான்ஸ் ஜூலையில் கொடுத்தது. அதாவது ஜூனில் உடைபட்ட நெக்லைன் சப்போர்ட், ஜூலையில் “ரீடெஸ்ட்” செய்யப்பட்டு அது ரெஸிஸ்டன்ஸ்-ஆக மாறியது. அப்போதாவது வெளியில் வந்தோமா?

இல்லையே! மேலும் மேலும் கீழேயிறங்க, நாம் மேலும் மேலும் நம்பிக்கையுடன்தானே ஆவரேஜ் செய்தோம்? நமது நம்பிக்கையெல்லாம் தூள் தூளானது; எது நடந்துவிடக்கூடாதென்று பயந்தோமோ, அந்த பயமே கடைசியில் நிஜமானது.

ஆயிரம் ரூபாய் ஹை எங்கே? ரூ.17.70 பைசா எங்கே? (தற்போது இது V2RETAIL என்ற பெயரில் மறு நாமகரணம் சூட்டப்பட்டு ரூ.10/- என்ற அளவிலே இன்றைய தேதியில் வர்த்தகமாகிறது.

ஆண்டவா!

எங்கே ட்ரெண்ட்லைன் சப்போர்ட் உடைபட்டு, ட்ரெண்ட் மாறுகிறதோ, அங்கேயே பொசிஷனை கட் செய்யும் மன வலிமையைக் கொடு.

எங்கே பேட்டர்னின் சப்போர்ட் உடைபடுகிறதோ, அங்கேயாவது வெளியில் வர துணிவைக் கொடு.

“சார்ட்-ஐ மட்டும் பாருடா பாபு; நியூஸ்-ஐப் பார்க்காதே!” அப்படீன்னு நல்ல புத்தியக் கொடு.

“தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை – ஆவரேஜ்-தான்” அப்படிங்கற பன்ச் டயலாக்-ஐ என் புத்தியில எப்படியாவது ஏத்திடு சாமி!

பக்தன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: ஹையா! இன்னொரு ஸ்டாக் என்னன்னு இப்பவே சொல்ல மாட்டேனே! நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! 🙂

என்னங்க? ஓ.. க்ளூ வேணுமா? அதான் V வரிசைன்னு சொல்லிட்டேனே!

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: