20130326 RANBAXY Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 2


ஹலோ!

நேத்து போட்டு வச்சிருந்த RANBAXY சார்ட்டப் பாத்துட்டீங்களா?

மிகப் பெரிய எச்சரிக்கை:

டே டிரேடிங்கே (Day trading) ரொம்ப ரொம்பக் கஷ்டமானது. அதுல பணம் சம்பாதிக்கறத விட, இழப்பதற்கான சான்ஸ்தான் ரொம்ப அதிகம். அதுல போயிட்டு இந்த டைவர்ஜென்ஸ் ரொம்பவே நஷ்டத்தை ஏற்படுத்தறதுக்கான சான்ஸ்கள் இன்னமும் ஏராளம். “டைவர்ஜென்ஸ் பாக்கறதுன்னா மினிமம் ஒரு மணி நேர (Hourly) சார்ட்டுல பாக்கறதுதான் பெட்டர். 5, 15, 30 நிமிஷ சார்ட்டுல பாக்கறது ரொம்பவே ரிஸ்க்”குன்னு சந்தையில இருக்கிற மத்த டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் எல்லாம் எச்சரிக்கை செய்யறாங்க.

அதனால இந்த டைவர்ஜென்ஸ் கட்டுரைய ஒரு எக்ஸாம்பிள்-ஆ மட்டும் எடுத்துக்கிட்டு, இத Hourly, Daily, Weekly சார்ட்டுல யூஸ் பணக் கத்துக்கோங்க!

 இப்ப நம்ப சார்ட்டுக்குள்ளாற போகலாம்.

இங்க 1#, 2#, 3A# மற்றும் 4A# அப்படின்னு நாலு செங்குத்துக் கோடுகள் போட்டுட்டேன். ஏன்னா, இங்கெல்லாம்தான் ப்ரைஸ் “லோயர் லோ”-வா ஆகியிருக்கு. அதாவது 1-ஐ விட 2 கம்மி; 2-ஐ விட 3A கம்மி; 3A-ஐ விட 4A கம்மி.

படம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1

படம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1

இத ரண்டு குரூப்-ஆ பிரிச்சிக்கலாம். குரூப் 1-ல 1, 2 & 3A-வை எடுத்துக்கலாம். குரூப் 2-ல 3A & 4A-வை தனியா (dhaniya=மல்லி இல்லைங்க; separate-ஆ) எடுத்துக்கலாங்கறேன்!

குரூப் 1-ல ப்ரைஸ் புதிய புதிய கம்மி விலைகளைத் தொடும்போது, MACD histogram bars மற்றும் RSI-யில் மேல் நோக்கிச் செல்லும் வாய்ப்பு தெரியுது.

அதுக்கப்புறம் விலையும் ஏறுது.

குரூப் 2-ல பாத்தோம்னா,

படம் 2: RANBAXY குரூப் 2

படம் 2: RANBAXY குரூப் 2

3A-ஐ விட 4A புதிய “லோ”. ஆனாக்கா, MACD-யின் மூவிங் ஆவரேஜ் லைன்களும், RSI மற்றும் STOC-களும் நல்லா பாசிட்டிவ்வா தெரியுது. அதுக்கப்புறமும் விலை மறுபடியும் நல்லா மேலே ஏறுது. 4A-வுல 425 லெவல்ல இருந்த ஸ்டாக், 435க்கு மேல போய், அதுக்கப்புறம் அதுக்குக் கீழ கொஞ்சம் கரெக்ஷன் ஆகி வந்து, மறுபடியும் மேலே ஏறி, 445, 446-ன்னு வந்திருக்குது.

அதெல்லாம் சரிங்க! இதெல்லாம் பாக்குறதுக்குத்தான் நல்லாருக்கு. ஆனா டிரேட் எடுக்கறதுக்கு முன்னாடியே எவ்வளவு ரிஸ்க், எவ்வளவு ரிவார்ட்-ன்னு கணக்குப் போட முடியுமான்னு, “முடியாது”ன்னுதான் சொல்லணும்.

மேலும், 2# என்ற இடத்திலும் டைவர்ஜென்ஸ் இருந்தாலும், அதுக்கப்புறமும் ப்ரைஸ் குறைஞ்சிட்டுத்தான் வந்தது. 3A-க்கப்புறம்தான் மேலே ஏறியது. ஆனா, 3A# மற்றும் 4A#-க்களை கம்பேர் செய்யும்போது, ரண்டாவது டைவ்ர்ஜென்ஸ் இடத்திலேயே (அதாவது 4A# குரூப் 2-ல) மேலே ஏறிடிச்சி. ஆனா, குரூப் 1-ல இத மாதிரி 2#-லேயே மேலே ஏறவில்லையே!

எனவே, இந்தக் கட்டுரையானது ஒரு இன்ஃபர்மேஷன்தானுங்க!

Don’t worry! இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டு பயிற்சி கொடுக்காம இருப்பேனுங்களா? ஹ..ஹ..ஹா…!🙂 எல்லா Bank ஸ்டாக்குகளையும் டெய்லி, வீக்லியில ஒரு லுக் விட்டுப் பாருங்க! ஏதாச்சும் டைவர்ஜென்ஸ் எங்கேயாச்சும் சப்போர்ட் இல்லை ரெஸிஸ்டன்ஸ் கிட்டேயிருக்குதான்னும் பாருங்க!

பாருங்க! பாருங்க! பாத்துக்கிட்டேயிருங்க!🙂

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

4 Responses to 20130326 RANBAXY Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 2

  1. Vimal says:

    Nice posts Mr.Babu! It would be a warning for beginners.

  2. GANDHI says:

    BABU JI THANK YOU VERYMUCH. IT HAS MY NEDU NAAL KORIKKAI to learn the technicals in our own language. YOUR LESSONS ARE ELIMAI, PUDUMAI AND ALSO MUZHUMAI. — THODARGA UMADHU THONDU

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: