டே டிரேடிங் ஸ்ட்ராடஜி: SPECULATOR-இன் 34 EMA ரிஜக்ஷன் (34EMA Rejection method)


ஹலோ!

icharts.in என்ற கம்பெனி சார்ட்டுக்களை இலவசமாகவும் (கொஞ்சம் கம்மியான வசதிகளுடன்) மற்றும் paid service-ஆகவும் வழங்கிக்கொண்டு வருகிறது. அவர்கள் ஒரு forum-உம் நடத்தி வருகிறார்கள்.

அதிலேயிருந்து Speculator என்ற பெயரில் எழுதும் திரு. நவீன் ஸ்வாமி என்றொரு உறுப்பினர் எழுதியுள்ள இந்த டிரேடிங் ஸ்ட்ராடஜியின்  லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

Thanks to Mr.Naveen Swamy aka SPECULATOR of icharts forum

அது http://www.icharts.in/forum/ssps-speculators-swing-pivot-system-t3444.html.

இதிலே அவர் ஐந்து வெவ்வேறு தலைப்புகளில், இந்த ஸ்ட்ராடஜியின் 5 முக்கிய அம்சங்களை விளக்கி எழுதியிருக்கிறார்.

இது டேடிரேடிங்-குக்கு அவர் 15min டைம்ஃபிரேமில் உபயோகப்படுத்துவதெப்படியென்று விரிவாக எழுதியுள்ளார். மேலும் இந்த ஸ்ட்ராடஜியை அவர் சென்ற வருடம் பெங்களூருவில் நடைபெற்ற Traders Carnival 2012 (டிரேடர்ஸ் கார்னிவல் – #TC2012 – இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கிடுக)-இல் பங்கேற்றவர்களுக்குச் சொல்லியும் கொடுத்துள்ளார்.

என்ன? இது ஃபுல் அண்ட் ஃபுல் இங்கிலீஷில்தானிருக்கிறது. தமிழில் இன்னும் கொஞ்சம் நாட்களில் எழுதுகிறேன். அதுவரையிலும், அவருடைய கொள்கை விளக்கங்களை (:)) ஒரு லுக் விட்டுப்பாருங்கள்!

என்ஜாய்!
பாபு கோதண்டராமன்

20130418 நிஃப்டியின் அலசல்


நாம் முன்னர் பார்த்துள்ள ஹெட் & ஷோல்டர் அமைப்பின்படி 5200 வரை கீழே செல்லக்கூடிய ஒரு அமைப்பாக இருக்கிறதென்று எழுதியிருந்தேன்.

20130418 NIFTY 1 Daily

நெக்லைன் உடைந்தபிறகு, ஏப்ரல் 3 அன்று நெக்லைனை ஒரு ரீடெஸ்ட் செய்த பிறகு, 5477 வரை வந்தது இன்டெக்ஸ்.

— x x — x x — x x —

ஜனவரி 29, ’13 ஹையைப் பார்த்தால் அது 6111.80 என்ற லெவலிலே இருக்கிறது. இந்த 6111.80 டோ 5477.20 வரையிலான இறக்கம் 634.60 புள்ளிகளாகும். இந்த இறக்கத்தின் Fibonacci retracements லைன்கள் கீழேயிருக்கும் மற்றொரு சார்ட்டில் வரைந்து பார்த்தால்,

 38.2% retracement = 5720

50.0% retracement = 5795

61.8% retracement = 5870

என்ற லெவல்களிலிருப்பதைப் பாருங்கள்.  ஆக, தற்சமயம் 5870 லெவல்கள் ஒரு ரெஸிஸ்டென்சாக அமைய ஒரு வாய்ப்பிருக்கிறது.

20130418 NIFTY 2 Fib levels

இதே சார்ட்டிலேயே DTL என்று குறிப்பிட்டு, ஒரு கோட்டினை சுட்டிக்காட்டியுள்ளேன். இது ஜனவரி மற்றும் மார்ச் “ஹை” விலைகளை இணைத்து வரையப்பட்டுள்ள ஒரு டௌண்ட்ரெண்ட் லைன். இந்த லைனும் ஒரு ரெஸிஸ்டென்சாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். இது சாய்வாக இருப்பதால், ஒரு 5820-5840 லெவல்களை இந்த DTL லைன் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, நிஃப்டியின் தற்போதைய ஏற்றமானது ஒரு ரெஸிஸ்டென்ஸ் லெவல்களுக்கு மிக அருகிலிருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

— x x — x x — x x —

மூன்றாவதாக உள்ள இந்த வார வரைபடத்தைப் பாருங்கள்.

படம் 3: நிஃப்டி வார வரைபடம். அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்

படம் 3: நிஃப்டி வார வரைபடம். அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்

அதிலே, 2009 மார்ச் “லோ”வையும், (ஜெனிஃபர் லோபஸ் – Jennifer Lopez – “ஜே லோ” இல்லைங்க! J) 2011 மார்ச் லோ”வையும் (கட்டம் கட்டி ஹைலைட் செய்யபட்டுள்ள இடங்கள்) சேர்த்து ஒரு லைன் வரைந்து, அதனை அதே திசையிலேயே மேலே நோக்கி நீட்டி வரைந்தால், அந்த அப்ட்ரெண்ட் லைன், ஜனவரி 2012-இலும், ஏப்ரல் 2013-இலும் (அட! போன வாரந்தாங்க!) சப்போர்ட்டாக இருந்திருக்கிறது. இந்த சப்போர்ட் தொடருமா? காளைகள் வலிமை பெறுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

DLF-I: 34EMA ரெஸிஸ்டென்ஸ் & 200 EMA&SMA சப்போர்ட்


ஹலோ!
முன்குறிப்பு: நான் முந்தைய பதிவிலே சொன்னது போல, kaalaiyumkaradiyum@googlegroups.com-இல் எனது பதிவுகளைத் துவங்கியுள்ளேன். நீங்களும் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இணைந்துகொள்ளுங்கள்! இனிமேல் இந்த blog-இல் நான் எழுதுவது குறைந்துவிடும். நன்றி!

DLF-I-இல் 34 EMA R-ஆகவும், 200 MA-க்களின் band ஒரு சப்போர்ட்டாகவும் இருப்பதைப் பாருங்கள்.

சிகப்பு நிற வட்டத்துக்குள், விலை லோயர் லோ உருவாக்குகிறது. ஆனால், அதற்கு நேர்கீழே RSI-யானது ஒரு ஹையர் ஹை உருவாக்கி, பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் காட்டுகிறது.

அங்கு ஹைலைட் செய்துள்ள இடத்தில் RSI டபுள் டாப் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த டாப்-ஐ உடைத்து RSI மேலே சென்றால், அப்போது ‘BUY’.
அக்டோபர், நவம்பர் 2012-இல் 200 MA-க்களின் band கீழாக உடைபட்டாலும், அப்போது நல்ல சப்போர்ட்டாக இருந்தது. இப்போதும் இந்த band சப்போர்ட்டாக இருக்குமா? “History repeats itself” என்று சொல்கிறார்களே, அதுபோல சரித்திரம் மறுபடியும் நடக்குமா?

பார்க்கலாம்!
அன்புடன்,
பாபு கோதண்டராமன்

34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I

34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I

தனிமரம் தோப்பாகுமா?


அனைவருக்கும் எனதினிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சென்ற மூவிங்க் ஆவரேஜ்-ரீல் 2 போஸ்ட்டிலேயே இந்தத் தலைப்பினைக் கடைசி வரியாக எழுதி, ஒரு க்ளூ கொடுத்திருந்தேன்.

அதற்கேற்றாற்போலவே, நண்பர் திரு. சரவணன் அவர்களும் blog-இல் கமெண்ட்ஸ் எழுதும்போது சார்ட்ஸ் இணைக்க முடியுமாவென்று கேட்டிருந்தார்.

என் மனதிலே பலநாட்களாகவே ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதுவரையிலே இந்த blog-இல் நான் எழுதி வந்தது, எனக்கென்னவோ “நான் மட்டும்தான் எழுதுகிறேன்; மற்றவர்கள் எழுத வாய்ப்புத் தராமலிருக்கிறேனோ” என்ற ஐயப்பாட்டினை எனக்குள் எழுப்பியது. Oneway communication என்பார்களே, அதைப்போல.

நான் மட்டும் என்ற நிலை மாறி, அனைவரும் என்றாக வேண்டும் என்று விரும்புகின்றேன். அதனால்தான் இந்த Google குரூப் தொடங்கியுள்ளேன். இதிலே, நீங்களும் மறுமொழி கூறலாம்; அல்லது புதிய தலைப்பிலே உங்களது எண்ணங்களையும் எழுதலாம்.

குரூப்பிலே யார், எதைப் பற்றியெழுதினாலும் அதெல்லாம் உங்களின் ஈமெயில் இன்பாக்ஸில் வந்து சேர்ந்துவிடும். நீங்கள் கேட்பது போல சார்ட்டுக்களை ஈமெயிலிலிருந்தே இணைத்தனுப்பலாம். அனைவருக்கும் ரொம்பவும் ஈசியாக இருக்குமென்று நம்புகிறேன்.

மேலும், இந்த blog சர்வீஸ் எப்போது வேண்டுமானாலும் முடக்கப்படலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெப்சைட் ஆரம்பிக்கலாமாவென்றும் யோசனை வந்தது. ஆனால், அதிலேயும் நான் மட்டுமேதான் எழுதுவேன் என்ற நிலையிருந்ததால், இதி லாக ஒக குரூப்தா மஞ்ச்சிதி (இது போல ஒரு குரூப்தான் நல்லது)-ன்னு முடிவெடுத்தேன்.

யாஹூ! டெக்னிக்கல் இன்வெஸ்டார் (Yahoo! Technical Investor) குரூப் ஒன்று இங்கிலீஷிலேயே டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி நன்கு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதுபோலவே நமது இந்த கூகிள் க்ரூப்பில், நாம் தங்க்லீஷை மையப்படுத்தி, ஆங்கிலத்திலும் கட்டுரைகளை வரவேற்கிறோம். நீங்கள் அனைவரும் உங்களுக்குத் தெரிந்த வரையில் பங்கேற்றால்தான் எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும்! தெரியாதவர்களும் “இது என்ன? அதி எட்டா (அது எப்படி என்று சுந்தரத் தெலுங்கினில்)? ஈ ஸ்ட்ராடஜி எந்தா?” என்று கேள்விகள் கேட்டுத் தெரிந்தவர்களை மேலும் படிக்கத் தூண்டுங்கள்! என்னங்க? டீல்தானே? 🙂

இப்போது நான் தனி மரமாக இல்லை; ஒரு தோப்பாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தத் தோப்பு மக்களுக்குப் பயனளிக்குமென்று நம்புவோம்! அது உங்கள் கையில்தான் உள்ளது. அந்த நம்பிக்கையுடன் நாம் நம் மழலையடியை எடுத்து வைப்போம்!

emailid: kaalaiyumkaradiyum@googlegroups.com

நான் நிறைய பேருக்கு இந்த குரூப்பிலிருந்து இன்விட்டேஷன் அனுப்பியுள்ளேன். உங்களது spam/இன்பாக்ஸ்-இல் ஒரு லுக் விட்டுப் பாருங்கள். இன்னும் நிறைய பேருக்கு இன்றைய மாலைக்குள் அனுப்பி வைக்கிறேன்.

அதுவரைக்கும் இந்தப் பாடல் வரிகளை சும்மா ஒரு ஹம்மிங்க் செய்து பாருங்களேன்!

    கூகிள் கூகிள் பண்ணிப் பாத்தேன் உலகத்துல
          இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
    யாஹூ யாஹூ பண்ணிப் பாத்தும் இவனப் போல
         எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல

நன்றிகள் பல!

அன்புடன்,
பாபு கோதண்டராமன்

காண்போம்! கற்போம்! கற்பிப்போம்!

நிஃப்டி மற்றும் பாங்க் நிஃப்டியின் மூவிங் ஆவரேஜ்கள்: ஒரு பார்வை! ரீல்-2


ரீல்-1-ஐப் படிப்பதற்கு இதிலே கிளிக்கிடவும்

அதிலே சொல்லியிருந்தது போல நான் இரண்டு சார்ட்டுக்குமே விளக்கம் சொல்லப் போவதில்லை. ஏனெனில், எனக்கு நன்றாகத்தெரியும், நீங்களெல்லாம் சும்மாவே ஒரு கோடு போட்டிருந்தால், அதிலேயே ரோடு போடக்கூடிய வல்லமை படைத்தவர்களென்று! (எப்படி! சைக்கிள் gap-பில நான் உங்களுக்கு “ஜில்”ல்லுன்னு ஐஸ் வச்சிட்டேன்! 🙂 இந்த சம்மருக்கு நல்லா இருக்கா?),

நான் போட்டிருந்த நிஃப்டி சார்ட்!

படம் 1: நிஃப்டி 20130411

படம் 1: நிஃப்டி 20130411

நான் நிஃப்டி சார்ட் மட்டும் விளக்கங்களுடன் கீழே தருகிறேன். இதைப் பார்த்து, பார்த்து நீங்களே பாங்க்நிஃப்டி மற்றும் உங்களுக்குப் பிடித்த ஸ்டாக்குகளில் பயிற்சி செய்து பாருங்களேன்!

படம் 2: திரிவேணி சங்கமம்!

படம் 2: திரிவேணி சங்கமம்!

 

படம் 3: 34EMA-வா? கொக்கா?

படம் 3: 34EMA-வா? கொக்கா?

 

படம் 4: தூரத்துச் சொந்தம்!

படம் 4: தூரத்துச் சொந்தம்!

 

படம் 5: அதெல்லாம் சரிங்க! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா? பாங்க் மேனேஜர் என்னைப் பார்த்துச் சிரிப்பாரா?

படம் 5: அதெல்லாம் சரிங்க! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா? பாங்க் மேனேஜர் என்னைப் பார்த்துச் சிரிப்பாரா?

 

இன்று மூவிங் ஆவரேஜ்கள் எப்படி சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டன்ஸாக இருக்கின்றன;  அவற்றை வைத்து எப்படி டிரெண்டின் வலிமையைச் சொல்வது; எப்படி ஒரு சிம்பிள் டிரேடிங் ஸ்ட்ராடஜி அமைப்பது; அதை டெஸ்ட் செய்வதெப்படி என்றெல்லாம் பார்த்திருக்கிறோம்.

இதெல்லாம் என் சைடிலிருந்து ஒரு சில இன்ஃபர்மேஷன்தானுங்க! முதலீடும், முடிவும் உங்களுடையதாகவே இருக்கட்டும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

தனிமரம் தோப்பாகுமா? 🙂

 

 

 

20130412 இன்போசிஸின் இன்றைய இறக்கம்


Infosys:
இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள காலாண்டு நிதிநிலை அறிக்கை, வட கொரியாவின் போர் அறிவிப்பை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு நாட்களாக வந்த வதந்திகளைக் கேட்டுக்கொண்டிருந்த நம்மையும், அந்த வதந்திகளை நம்பி அதில் long பொசிஷன் எடுத்த முதலீட்டாளர்களையும் வடிகட்டின, அடி முட்டாள்கள் என்று இன்று வந்த இவ்வறிக்கை நிரூபித்துவிட்டது.

வீக்லி சார்ட்டினைப் பார்க்கும்போது, கடந்த வருடம் 2012, இதே ஏப்ரல் மாதம் 13-ஆந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தை ஒப்பிடும்போது அப்போது 15.7% வீழ்ந்திருந்தது. இதைத்தான் “History repeats itself” என்று சொல்கிறார்களோ!

padam 1: INFY 20120412 vs 20130413 fall

padam 1: INFY 20120412 vs 20130413 fall

டெய்லி வரைபடத்திலோ, 200 EMA&SMA-க்களுக்கு மிக, மிகத் தூரத்தில்,மேலேயிலிருந்த நேற்றைய முடிவு விலை, இன்று இந்த மிக முக்கியமான, அந்த இரண்டு MA-க்களுக்கும் நடுவே உள்ள சப்போர்ட் பட்டையை (2522 to 2625 price band), மிகவும் சர்வசாதாரணமாக (செல்போன் பேசிக்கொண்டே ரயில்வே டிராக்கைக் க்ராஸ் செய்கிறோமே, அது போல 😦 ) உடைத்துக் கொண்டு கீழே சென்று விட்டது.

padam 2: INFY-யின் இன்றைய இறக்கம் எல்லா சப்போர்ட்டுகளையும் போட்டுத் தாக்குத் தாக்கென்று தாக்கி விட்டதே!

padam 2: INFY-யின் இன்றைய இறக்கம் எல்லா சப்போர்ட்டுகளையும் போட்டுத் தாக்குத் தாக்கென்று தாக்கி விட்டதே!

ஆக்சுவலாப் பாத்தோம்னா, இந்த சப்போர்ட் zone-ஐ உடைக்கிறதுக்கு ரொம்ப வலிமை தேவை. எங்கேயோ இருந்த விலை, சுமார் 550 புள்ளிகள் வரை வீழ்ந்து இந்த zone-ஐ உடைச்சிருக்கிறதுனால, இன்ஃபோசிஸ் ரொம்பவே weak-ஆகிக்கொண்டு வருகிறதோ? அந்த அளவுக்கு அவர்களின் பலவீனம் வலிமை வாய்ந்ததாகி விளங்குகிறதோ?

படம் 3: தன்னந்தனியாய்..... !

படம் 3: தன்னந்தனியாய்….. !

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

TECHNICAL ANALYSIS PROGRAMME (TAP) at Madras Stock Exchange


ஹலோ ஃபிரண்ட்ஸ்!

நம்ம ஒரு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர்தான் டெக்னிக்கல் அனாலிசிஸ் கோர்ஸ் நடத்துவது பற்றி இந்த லிங்க்கில் டிஸ்கஸ் செய்தோம்.

இதோ நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி!

மெட்ராஸ்  ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனக்கு அனுப்பியுள்ள இந்த மெசேஜ்ஜில் உங்கள் ஆசை நிறைவேறுமென்று நம்புகிறேன். ஏப்ரல் 17 முதல் ஜூலை 17 வரையிலான அனைத்து புதன்கிழமைகளில், மாலை 6:00-7:30 மணிக்கு, டெக்னிக்கல் அனாலிசிஸ் கோர்ஸ் நடத்துவதாக எனக்குத் தெரியப் படுத்தியுள்ளார்கள்.

சேருங்கள்! பயனடையுங்கள்!

மு.கு: இது நான் நடத்துவதல்ல!

MSE IINSTIITUTE OF CAPIITAL MARKETS
MADRAS STOCK EXCHANGE LIMITED
TECHNICAL ANALYSIS PROGRAMME (TAP)
TECHNICAL ANALYSIS PROGRAMME (TAP) is a first of its kind advanced training program offered by MSEICM. The main objective of organizing this Programme is to impart knowledge and skills related to the basic techniques of analyzing price movements of traded stocks/indices to programme participants in the simplest form. Basic knowledge of capital market is essential to participate in the programme. This Programme introduces candidates to the world of stock markets from the perspective of chart reading. This course will help the candidates to arm themselves with desired skill sets to take investment and trading decisions based on technical analysis. This programme also provides a head start to candidates aspiring to become technical analysts in the stock market.

Topics Covered
Introduction to technical analysis,
tenets of TA, types of charts, trends
Supports and Resistances
Moving averages, gaps
Trend lines and trend channels
Oscillators – ROC, RSI, MACD
Oscillators – Stochastics, Bollinger
Bands and Couple of other oscillators
Chart Patterns – Reversal and Continuation Patterns
Japanese Candlesticks – reversal patterns
Japanese Candlesticks – continuation patterns
Fibbonacci levels
Dow Theory
Elliot Wave Theory
Technical Analysis in commodity and forex market
Creating a trading system
Test

When:
On all Wednesdays, commencing from
17th April 2013 till 17th July 2013

Where:
Madras Stock Exchange Building,
4th Floor, Second Line Beach,
Chennai – 600001

Time:
6.00 pm to 7.30 pm
Fee: Rs. 5000/- inclusive of Service Tax.

Registrations:
First come First Serve Basis. Only 15 registrations will be accepted.
Registrations on or before 15th April.
Important:
Being a Technical Programme all participants are advised to carry their own laptops. Course material will be
provided in each class.

For registration:
Madras Stock Exchange Ltd, 3rd Floor, Second Line Beach, Chennai 600001.
044-25228951/52/53.
Email: am_mktg@mseindia.in

நிஃப்டி மற்றும் பாங்க் நிஃப்டியின் மூவிங் ஆவரேஜ்கள்: ஒரு பார்வை! ரீல்-1


நிஃப்டி மற்றும் பாங்க்நிஃப்டி-யின் டெய்லி சார்ட்டுகளைக் கீழே பாருங்கள். இவற்றிலே 34 EMA (கோல்ட் கலர் லைன்), 200 SMA (கரும் பச்சை நிறக்கோடு) & 200 EMA (வயலட் கலர் கோடு) ஆகியவற்றை மட்டும் குறித்துள்ளேன்.

201304011 NIFTY I

மூவிங்க் ஆவரேஜ்கள் என்ன செய்கின்றன? ஏதேனும் டைவர்ஜென்ஸ்(கள்) தெரிகின்றனவா?

மூவிங்க் ஆவரேஜ்கள் என்ன செய்கின்றன? ஏதேனும் டைவர்ஜென்ஸ்(கள்) தெரிகின்றனவா?

நீங்க என்ன பார்க்கணும்னா, இந்த லெவல்கள் (கோடுகள்) எல்லாம் எப்படி சப்போர்ட்டா இருக்குது; சப்போர்ட் உடைந்த பிறகு எப்படி ரெஸிஸ்டன்சா மாறுது; அப்புறம் இந்த கோடுகளின் ரெஸிஸ்டன்ஸ் உடைந்தபிறகு, எப்படி மறுபடியும் சப்போர்ட்டா மாறுது; இந்தக் கோடுகளை நம்பி டிரேட் செய்தால், ட்ரெண்டுல இருக்கும்போது எப்படி இருந்திருக்கும்; sideways மார்க்கெட்டுல என்னவாகியிருப்போம் அப்படீன்னு எல்லாம் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!

அது மட்டுமில்லாம, இந்த மூவிங்க் ஆவரேஜ்களே எப்பெல்லாம் ஒன்றையொன்று கட் செய்து கொள்கின்றன; அப்போதெல்லாம் விலை எப்படிப் போகிறது; ஷார்ட் MA எங்கெல்லாம் லாங் MA-வில் சப்போர்ட் அல்லது ரெஸிஸ்டன்ஸ் எடுக்கிறது என்றெல்லாம் நிறையவே பாயிண்ட்ஸ் குறிச்சி வச்சிக்குங்க! (நிறைய பாயிண்ட்ஸ்சுக்காகத்தான் இந்த ரெண்டு சார்ட்டும் செலக்ட் செஞ்சிருக்கேன்!)

அப்படியே RSI-யும் கொடுத்திருக்கேன். எங்கெல்லாம் டைவர்ஜென்ஸ் தெரியுதுன்னும் பார்த்து வையுங்கள். (ஆஹா! இவருக்கு வேற வேலையே இல்லையான்னு கேக்குறீங்களா? என்னங்க பண்றது? பழக்க தோஷம்! 🙂 )

உங்களுக்கு (ஆகா..என்னமா சமாளிக்கிறேன் பாருங்க! நியாயமாப் பாத்தா, எனக்குத்தான் கொஞ்சம் டைம் தேவைப்படுது… 🙂 )ரெண்டு நாள் டைம் கொடுக்கிறேன். மீண்டும் சனிக்கிழமை மாலை சந்திக்கலாம்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

டைவர்ஜென்ஸ் இருக்குதா? இல்லையா? – ரீல் 2


 

டைவர்ஜென்ஸ் இருக்குதா? இல்லையா? – ரீல் 1-இன் தொடர்ச்சி!

அதுக்குள்ளாற புதன்கிழமை வந்துடுச்சே! ஹையா…. ஜாலி..ஜாலி!

படம் 1

படம் 1

ஹலோ ஃபிரண்ட்ஸ்!

இந்த மிஸ்டரி சார்ட் எந்த ஸ்டாக்குன்னு பாக்கறதுக்கு முன்னாடி, இதை அனலைஸ் செஞ்சிடலாம்.

என்னோட கேள்வி!

இதுல டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு கேட்டிருந்தேன். ஆமாம்! கண்டிப்பா தெரியுது. விலையானது A, B & C ஆகிய இடங்கள்ள ஒரே சம லெவலில் இருக்கும்போது, இ&ஆ-க்கள் (RSI & MACD) லோயர் ஹைக்களை உருவாக்கி ஒரு டௌன்ட்ரெண்டில் செல்கிறது. அதுதான் அம்புக்குறிகளே போட்டுக் காட்டியிருக்கிறேனே!

விலை: ஒரே லெவல் & இ&ஆ-க்கள் ஒரு திசையில் செல்வது = கேட்டகரி (category) 2 வகை டைவர்ஜென்ஸ் இது. [ஆஹா! Category-யைத் தமிழ்ல எழுதும்போது தமிழ் எப்படி விளையாடுது பாருங்களேன்! அம்மாடியோவ்!)

எந்தக் category என்பது முக்கியமல்ல. ஆனால் இ&ஆ-க்கள் கீழ் நோக்கிச் செல்வதால், இது ஒரு நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்-ஆக எடுத்துக் கொள்கிறோம். அதாவது, விலையானது கீழே செல்வதற்கு வாய்ப்புகளிருக்கும் சிக்னலை இந்த சார்ட் தெரியப்படுத்துகிறது.

இது சிக்னல்தான். அப்படியானால் ஷார்ட் பொசிஷன் எடுக்க என்ன கன்ஃபார்மேஷன் வேண்டும்?

இப்போது RSI-யைப் பார்க்கவேண்டும்.

படம் 2: என்ட்ரி மற்றும் ஸ்டாப்லாஸ் விளக்கம்

படம் 2: என்ட்ரி மற்றும் ஸ்டாப்லாஸ் விளக்கம்

இது (e1) [e for entry] என்று குறிப்பிட்டுள்ள சமீபத்திய லோயர் லோ அளவினை உடைத்துக் கீழே செல்லும்போதோ அல்லது RSI-யில் வரைந்துள்ள கருநீலநிற அப்ட்ரெண்ட் லைனையோ (e2) உடைத்துக் கீழே செல்லும்போதோ அப்போது என்ன விலையிருக்கிறதோ, அந்த இடத்தில் ஷார்ட் செல்லலாம்.

ஸ்டாப்லாஸ்: RSI-யில் மேலே வரைந்திருக்கிறேனே, டௌன்ட்ரெண்ட் லைன், அதுதான் ஸ்டாப்லாஸ். RSI அதை உடைத்துக்கொண்டு (s1) மேலே செல்லும்போது ஷார்ட் பொசிஷனிலிருந்து நாம் வெளியே வந்து விட வேண்டும். அல்லது இன்னொரு இடத்துல கூட ஸ்டாப்லாஸ் வச்சிக்கலாம். அது எங்கன்னா, (s2)-ன்னு [s for stoploss] குறிச்சிருக்கிற RSI-யின் சமீபத்திய ஹையர் ஹை. இந்த s1, s2 எல்லாம் உங்க ரிஸ்க் எடுக்குற பர்ஸ் சைஸைப் பொறுத்து நீங்களே தீர்மானிச்சிக்கோணும்! ஆமா… இதான் நாட்டாமையோட தீர்ப்பு…!

ஆனா, இது ரொம்ப ரிஸ்க்கியான டிரேட். ஏன்னா, டார்கெட்டே தெரியாம, ரிஸ்க் மட்டுமே தெரிஞ்சி எடுக்குற ஒரு டிரேடா இருக்குது. அதாவது, ஆழம் தெரியாம காலை நாம் வைக்கிறோம்! ஜாக்கிரதை! (இதெல்லாம் ஒரு இன்ஃபார்மேஷன்தான்)

இதுவரைக்கும் பெரிய டைவெர்ஜென்ஸ் பார்த்து, அடுத்து என்ன நடக்கலாம் என்று ஒரு அலசல் அலசினோம். அடுத்து (நடந்து முடிந்த) சின்னச்சின்ன டைவர்ஜென்ஸ்களை அலசலாம்.

A, B & C-ன்னு குறிப்பிட்டுள்ள இடங்கள்ள ஹைலைட் செஞ்சிருக்கேனே, lbw அப்பீல் செய்யும்போது, டி‌வி-யில ஸ்டம்ப்ஸ் to ஸ்டம்ப்ஸ் பிட்ச் மேப் ஷேடு அடிச்சி காண்பிப்பாங்களே, அந்த மாதிரிதான் 🙂

படம் 3: சின்னச் சின்ன டைவர்ஜென்சுகள்!

படம் 3: சின்னச் சின்ன டைவர்ஜென்சுகள்!

இதுல A-யில பாத்தீங்கன்னா, விலையானது ஒரு ஹை, அதற்கப்புறம் ஒரு ஹையர் ஹையா தெரியுது. அப்படியே நேர்கீழே பாத்தீங்கன்னா, RSI-யில ஹை, அப்புறம் ஒரு லோயர் ஹைன்னு ஒரு சின்னதா நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரியுது.

என்னங்க, நான் சொல்றது ஏதாச்சும் புரியுதான்னேன்?

ஏன்னா, B-யிலும் இதே மாதிரிதான் ஒரு சின்ன நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரியுது. C-யில ஒண்ணுமில்லை.  இதையே, இதற்கடுத்தக் குறைந்த டைம்ஃப்ரேமில் பார்த்தால், இன்னும் நல்லா தெரியுமோ என்னவோ?

சரிங்க! இத்தோட இந்த டைவர்ஜென்ஸ் பத்தின கேள்விக்கு நம்மோட அனாலிசிஸை முடிச்சிக்கலாம்.

(—-xxx—-)

இன்னமும் நான் இதோட பேரைச் சொல்றதுக்கு முடியல. ஏன்னா, கீழேயிருக்கிற படத்துல நான் ஒரு ட்ரையாங்கில் (triangle) {முக்கோணம்} வரைஞ்சிருக்கேன். இந்த R (R for ரெஸிஸ்டென்ஸ்)-ஐ உடைத்து மேலேயும் போகலாம். அல்லது S (S for சப்போர்ட்)-ஐ உடைத்துக் கீழேயும் போகலாம். ஆனால், இதிலே எதற்கான வாய்ப்பு அதிகமென்று கொஞ்சம் யோசிக்கலாம். நான் ஏன் யோசிக்கலாம்னு சொல்றேன்னா, நிஜமாலுமே இப்ப கொஞ்சம் யோசிக்கணுமுங்க!

படம் 4: ஒரு triangle!

படம் 4: ஒரு triangle!

இதுல என்னன்னா, ஒவ்வொரு தடவையும் மேலே போன விலை, ஒரு குறிப்பிட்ட லெவலில் மூணு தடவை முட்டி மோதி கீழே இறங்கி விட்டது. அப்படி ஒவ்வொரு தடவை கீழே வரும்போதும், ஹையர் லோக்களாக அமைந்துள்ளது. அதாவது முதல் தடவை கீழே இறங்கி வரும்போது ஒரு லோ உருவாகியது. இரண்டாம் முறை கீழே இறங்கும்போது அதற்குக் கொஞ்சம் மேலேயே நின்று மேலே திரும்பிவிட்டது. மூன்றாவது தடவை கீழே வரும்போதோ முதல் இரண்டு லோ லெவல்கள் வரையிலும் கீழேயிறங்காமல் அவற்றிற்கு மேலேயே நின்று, ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்குமா, இல்லையா என்ற நிலையில் இருக்கிறது.

ஏதோ ஒரு ரீசனுக்காகத்தான் விலை ஹையர் லோக்களை உருவாக்கி, கீழே செல்லாமலிருப்பதால், இந்த பேட்டர்ன் R-ஐ உடைத்து மேல் பக்கமாகச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

Triangle பேட்டர்ன்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே “கிளிக்”கிடுங்கள்!

உஸ்ஸ்… அப்பாடா! இப்பவே கண்ணக் கட்டுதே!

“என்னங்க இதெல்லாம் நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ? நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லிட்டு கீழே இறங்கும்னு சொன்னீங்க! அப்புறம் ட்ரையாங்கில்னு சொல்லிட்டு மேலேயும் போகலாம்னு சொல்றீங்களே“ன்னு கேக்காதீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இதே ட்ரையாங்கிலோட சப்போர்ட் லைன் உடைபட்டால் கீழே செல்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.

அதனாலதான் சொல்றாங்க, “டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது விஞ்ஞானம் அல்ல; அது ஒரு கலை” அப்டீன்னு!

நம்ம மேலே போகும்னு சொல்றதுனால மேலே போகணும்னு ஒண்ணும் அவசியமில்லை; கீழேயிறங்கும்னு சொன்னதுனால அது கீழேயிறங்கணும்னு ஒண்ணும் அவசியமில்லை. Factu… factu…! கரெக்டு… கரெக்டு…!

நம்ம இதெல்லாம் அலசி ஆராய்ந்து, எந்த மாதிரி டிரேட் எடுக்கணும்னு முடிவெடுத்து, அதுல எவ்வளவு ரிஸ்க், அந்தளவு ரிஸ்க் எடுக்கும்போது எந்தளவு நமக்கு ரிவார்ட் கெடைக்கறதுக்கு சான்ஸ் இருக்குதுன்னு பாத்து, அந்த ரிஸ்க், ரிவார்ட் ரேஷியோவுக்கு நம்ம பர்ஸ், பாங்க் பேலன்ஸ் தாக்குப் பிடிக்குமான்னு நல்லா யோசிச்சி டிரேட் எடுக்கறதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். (உஸ்ஸ்… அப்பாடா….. எவ்ளோ பெரிய செண்டென்ஸ் எழுதியிருக்கேன்!)

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

ஓ! மை காட்! இது நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட்டுன்னு சொல்றதுக்கு மறந்துட்டேனே! நாளைக்கு நிஃப்டியோட டெய்லி சார்ட்டப் போட்டு ஒரு தாக்குத் தாக்கலாம். சரீங்களா!

படம் 5: நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட். இதுதாங்க அந்த சார்ட்

படம் 5: நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட். இதுதாங்க அந்த சார்ட்

டெக்னிக்கல் அனாலிசிஸ் – கற்கக் கசடற


ஹலோ!

சமீப நாட்களாக (நான் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி) இந்த blog-இல் எழுத ஆரம்பித்ததிலிருந்து, இதற்கு மிகவும் ஒரு நல்ல ஆதரவிருப்பதாக உணரமுடிகிறது. இருந்தாலும் இதற்கு முந்தைய பதிவான, “டைவர்ஜென்ஸ் இருக்குதா? இல்லையா?” என்ற பதிவிற்கு நான் எதிர்பார்த்த அளவிற்கு பதில்கள் இதுவரையிலும் வரவில்லை. பரவாயில்லை! ஏனெனில், எழுதுவென்பது கொஞ்சம் (நிறையவே) கஷ்டமான வேலைதான். J

நிற்க! எனினும் எனக்கு நிறைய பேர் தனிப்பட்ட முறையில் கடிதம் (லெட்டர் எல்லாம் ஒண்ணும் இல்லீங்க….. ஈமெயில்தாங்க!) எழுதித் தொடர்பு கொண்டு “டெக்னிக்கல் அனாலிசிஸ் class ஏதேனும் நடத்துகிறீர்களா?” என்று கேட்டுள்ளீர்கள். இதுவரையிலும் அப்படியேதும் எண்ணம் இல்லாமலிருந்தது. ஒரு சிலர் கேட்டிருக்கவே, இன்னும் யாருக்காவது டெக்னிக்கல் அனாலிசிஸ் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால், எனக்கு ஒரு வரி ஈமெயில் அனுப்பி வையுங்கள். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று வைத்துக்கொள்ளலாம்.

ஒரு basic-ஆனா கோர்ஸ் சிலபஸ் பற்றி யோசனை செய்து கீழே எழுதியிருக்கின்றேன். உங்களின் கருத்துக்களையும் கூறவும்.

 டெக்னிக்கல் அனாலிசிஸ் – Basics

  • ஒரு நாள் கோர்ஸ் (9am to 5pm?) 8am என்றால் கூட எனக்கு ஓகே-தான் J
  • கட்டணம்: ரூ. 1200-லிருந்து 2500-க்குள் (உங்களுக்கு எங்கு வேண்டுமென்பதைப் பொறுத்தது. 3/5 ஸ்டார் ஹோட்டலிலா அல்லது ஏதேனும் ஒரு கான்பரன்ஸ் ஹாலிலா, சென்னையின் மத்தியப் பகுதியிலா அல்லது அம்பத்தூரிலா [ஆஹா…. இது எங்க ஊராச்சே!] என்றெல்லாம் கலந்தாலோசிக்க வேண்டும். எனக்கு ரூ.1000/-த்திற்கும் அதிகமாகாமலிருக்க வேண்டுமென்பதுதான் ஆசை!)
  • குறைந்தது, ஒரு 8 பக்க கோர்ஸ் மெடீரியல் (தமிழில் மட்டுமே!). 8 பக்கமென்பது அதிகமானாலும் அதிகமாகலாம். மாடல் சார்ட்டுகளை நான் இணைத்தால், அது ஒரு 15-16 பக்கங்கள் கூட வரலாம். இதுவும் எனக்கு ஓகே-தான்.
  • டீ, காஃபி இரு வேளை, மதிய உணவு (வெஜ் ஒன்லி) J
  • எப்போது? அதுதான் தெரியவில்லை. மே மாதத்தில்? இல்லை ஜூனிலா?

கோர்ஸ் சிலபஸ்:

1. மார்க்கெட் டைப்:

a) ட்ரெண்டிங் மார்க்கெட் b) sideways மார்க்கெட்

a.1) அப்ட்ரெண்ட் மார்க்கெட்

a.2) டௌன்ட்ரெண்ட் மார்க்கெட்

a.3) ட்ரெண்ட்லைன்கள்: வரைவதெப்படி?

a.4) சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ் கண்டுபிடிப்பதெப்படி?

b.1) பக்கவாட்டு மார்க்கெட் கண்டுபிடிப்பதெப்படி?

இத்தகைய மார்க்கெட்டுகளில் டிரேட்/இன்வெஸ்ட் செய்யும் ஸ்ட்ராடஜி.

2. சார்ட் பேட்டர்ன்கள்:

a) Continuation (ட்ரெண்ட் தொடரும்) பேட்டர்ன்: Bullish Flag, Bearish Flag

b) ரிவர்ஸல் (ட்ரெண்ட் திரும்பும்) பேட்டர்ன்: ஹெட் & ஷோல்டர், தலைகீழ் ஹெட் & ஷோல்டர், டபுள் டாப் (double top), டபுள் பாட்டம் (double bottom)

c) நியூட்ரல் பேட்டர்ன்: ட்ரையாங்கில் (முக்கோணம்)

 3. Money management: ரிஸ்க்:ரிவார்ட் ரேஷியோ எவ்வாறு அமைத்துக் கொள்வது?

4. மேலே கற்றுக்கொண்டதிலிருந்து ஒரு சில(4 அல்லது 5) பேட்டர்ன்களின் மாதிரி டிரேட் எடுத்து, அந்த டிரேட்களை நிர்வகிக்கும் டிரேடிங் சைக்காலஜி பற்றியும் ஒரு ஒரு மணி நேரம் மாடல் டிரேட் பயிற்சி எடுக்கலாம்.

—– xxxxx —–

மிகப்பெரிய எச்சரிக்கை

இந்தக் கோர்சில் கலந்து கொண்டு, அடுத்த நாளே ஒரு பத்தாயிரம், இருபதாயிரம் சம்பாதிக்கலாமென்று நினைக்காதீர்கள். என்னால் அப்படியொரு காரன்டி கொடுக்கவே முடியாது. அப்படியெல்லாமிருந்தால், நான் ஏன் இந்த மாதிரி blog எழுதிக்கொண்டு, இந்த மாதிரி ஒரு training கோர்ஸ் நடத்துகிறேன் என்றெல்லாம் இருக்கப்போகிறேன்? நானே இந்த மாதிரி டிரேட் செய்து, அந்தப் பணத்தை சம்பாதித்து இந்நேரம் ஹவாய் தீவுகளிலோ, லண்டனிலோ இந்தக் கோடை விடுமுறையை என்ஜாய் செய்து கொண்டிருப்பேனே? எனவே டெக்னிக்கல் அனாலிசிஸ் கற்றுக்கொள்ள ஆர்வமிருந்து, இந்தக் கோர்ஸ் அட்டென்ட் செய்து, அதற்குப் பிறகும் ஒரு ஆறேழு மாதங்கள் தொடர்ந்து சார்ட்டுகள் பார்த்து வந்தால் மட்டுமே இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளமுடியும்.

அதேபோல, வீட்டில் கம்ப்யூட்டரில் டெய்லி ஒரு 40-50 சார்ட்டுகளாவது பார்த்தால்தான் நன்கு தேர்ச்சி பெற முடியும்.

இந்தக் கோர்ஸைப் பற்றிச் சொல்வதானால், இது ஒரு அடிப்படையான ஆனால் மிக, மிக முக்கியமான சிலபஸ். இது தெரிந்தால்தான் மேலும், மேலும் டெக்னிக்கல் அனாலிசிஸின் மேலும் பல அட்வான்ஸ்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஈசியாக இருக்கும்.

மேலும் எனது எண்ணங்கள்!

எனக்கு இந்தக் கோர்ஸிலேயே மூவிங் ஆவரேஜ், கேண்டில்ஸ்டிக் சார்ட்ஸ், Fibonacci series, டிரேடிங் ஸ்ட்ராடஜிகள் முதலானவைகளை சேர்த்துக்கொள்ள ஆசைதான். ஆனால், இருக்கும் நேரம் போதாதென்று நினைக்கின்றேன்.

உங்களின் கருத்துக்கள்!

மேலும் எதைச் சேர்க்கலாம், எதைச் சேர்த்தால் பயனுள்ளதாக இருக்குமென்று தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்! [என்னங்க?…. ஓ! sunday பிரியாணி சேர்த்தால் நல்லா இருக்கும்னு சொல்றீங்களா! :)].

உங்கள் பதில் கடிதம் எதிர்பார்த்து,

பாபு கோதண்டராமன்