DLF-I: 34EMA ரெஸிஸ்டென்ஸ் & 200 EMA&SMA சப்போர்ட்


ஹலோ!
முன்குறிப்பு: நான் முந்தைய பதிவிலே சொன்னது போல, kaalaiyumkaradiyum@googlegroups.com-இல் எனது பதிவுகளைத் துவங்கியுள்ளேன். நீங்களும் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இணைந்துகொள்ளுங்கள்! இனிமேல் இந்த blog-இல் நான் எழுதுவது குறைந்துவிடும். நன்றி!

DLF-I-இல் 34 EMA R-ஆகவும், 200 MA-க்களின் band ஒரு சப்போர்ட்டாகவும் இருப்பதைப் பாருங்கள்.

சிகப்பு நிற வட்டத்துக்குள், விலை லோயர் லோ உருவாக்குகிறது. ஆனால், அதற்கு நேர்கீழே RSI-யானது ஒரு ஹையர் ஹை உருவாக்கி, பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் காட்டுகிறது.

அங்கு ஹைலைட் செய்துள்ள இடத்தில் RSI டபுள் டாப் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த டாப்-ஐ உடைத்து RSI மேலே சென்றால், அப்போது ‘BUY’.
அக்டோபர், நவம்பர் 2012-இல் 200 MA-க்களின் band கீழாக உடைபட்டாலும், அப்போது நல்ல சப்போர்ட்டாக இருந்தது. இப்போதும் இந்த band சப்போர்ட்டாக இருக்குமா? “History repeats itself” என்று சொல்கிறார்களே, அதுபோல சரித்திரம் மறுபடியும் நடக்குமா?

பார்க்கலாம்!
அன்புடன்,
பாபு கோதண்டராமன்

34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I

34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

4 Responses to DLF-I: 34EMA ரெஸிஸ்டென்ஸ் & 200 EMA&SMA சப்போர்ட்

 1. C.V.Srinivasan says:

  ஏன் சார் இங்கே எழுதுவதை நிறுத்த போறீங்க இங்கே நீங்க தொடர்ந்து எழுதுங்க சார் ஏன் என்றால் இங்கே உங்களின் எல்லா பதிவுகளையும் எப்போது வேண்டும் என்றாலும் பார்க்கும் வசதி இருக்கிறது மேலும் உங்கள் பதிவுகள் நீங்கள் பதிவு செய்தவுடன் இங்கே பதிவு செய்தவர்களின் மின் அஞ்சலுக்கு உடனே தகவல் வந்து விடுகிறது இது போன்ற பல நல்ல விஷயங்கள் இங்கே இருக்கிறது

  • ஹலோ ஸ்ரீநிவாசன் சார்!
   உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

   Blog-இல் பல நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றினை மறுப்பதற்கில்லை. ஆனால், Blog-இல் எழுதும்போது நான் தனியொரு நபராக உணர்கிறேன். எனது சார்ட்டுக்கள்; எனது அலசல்கள். இப்படி எல்லாமே “எனது, எனது” என்றுதான் அமைகின்றன. என்னைப் பொறுத்தவரையிலும் blog என்பது ஒரு வழிப்பாதைதான்.

   அதே சமயம் குரூப் என்பது கலந்துரையாடல் என்று கருதுகிறேன். மற்றவர்களும் இந்த அலசல்களில் ரொம்பவும் ஈஸியாக (ஈமெயிலிலிருந்தே பதில்கள் அனுப்பலாம்; புதிய தலைப்புகளில் அவர்களது சார்ட்டுக்களையும், கருத்துக்களையும் kaalaiyumkaradiyum@googlegroups.com என்ற id-க்கு எழுதியனுப்பலாம். யார் குரூப்பில் எழுதினாலும், இங்கேயும் அது மெம்பர்களின் ஈமெயிலுக்கு வந்துவிடும்.

   Blog-இல் எனது கருத்துக்களை எழுதி, எத்தனை ஹிட்ஸ்/வியூ-ஆகியுள்ளதென்றுப் பார்த்துப் பெருமைப் படுவதை விட, அதே கருத்துக்களை குரூப்பில் எழுதி, மேலும் பலரது எண்ணங்களையும் மறுபதிவு செய்வதற்கு ஈஸியாக இருப்பது குருப் என்பது ஆனது தாழ்மையான கருத்து.

   உங்களின் மறு கருத்து?
   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

   • ஸ்ரீநிவாசன் சார்!
    மேலும் ஒன்று. இங்கே எனது blog-இல் பதிவு செய்து வைத்துள்ளவர்கள் முப்பது பேர்தான். அதனால் நான் ஒவ்வொரு முறை எழுதிய பிறகும், எனது gmail contacts (தமிழ் தெரிந்த) அனைவருக்கும் forward செய்கிறேன். ஒரு சில நாட்களில ஒரு பதிவிற்கு மேல் எழுதியனுப்பும்போது எனது ஈமெயில் அக்கவுண்ட் lock செய்யப்பட்டு விடுகிறது என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    பாபு கோதண்டராமன்

 2. C.V.Srinivasan says:

  உண்மை தான் ஆனால் இங்கேயும் உங்கள் பதிவுகளை எழுதுங்கள் இங்கே உங்கள் பதிவுகள் நிரந்தரமாக இருக்கும் எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயன் பெறலாம் இந்த வசதி குரூப்பில் கிடையாது குரூப்பில் உங்கள் பழைய பதிவுகள் சில சமயம் காணாமல் கூட போக வாய்ப்பு உள்ளது எனவே இங்கேயும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்…..

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: