34EMA-வில் TCS-இன் cup & handle பேட்டர்ன்


ஹலோ!

பங்குச்சந்தையில் பங்குகளின் சார்ட்டுகளைப் பார்க்கும்போது பல்வேறு விதமான அமைப்புகள் (பேட்டர்ன்கள்) தெரிவதுண்டு.

ஹெட்&ஷோல்டர் (ஷாம்பூவேதான் 🙂 ), தலைகீழ் ஹெட்&ஷோல்டர், முக்கோணங்கள், வெட்ஜ்(wedge) போன்றவைகளுடன் cup&handle (கப் & ஹாண்டில்) என்கின்ற அமைப்பும் ஒரு முக்கியமான அமைப்பாகக் கருத்தப்படுகிறது.

கீழேயிருக்கும் TCS Fut-இன் hourly சார்ட்டினைப் பாருங்கள். படத்திலேயே இந்த அமைப்புக்கான இலாபத்தைக் கணக்கிடும் முறையையும் கொடுத்துள்ளேன். இதிலே என்ன விசேஷமென்றால், 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும் வொர்க் அவுட் ஆகிறது. பேட்டர்ன் + ஸ்ட்ராடஜி = ஒரு சூப்பர் காம்பினேஷன்.

படம்: TCS I hourly சார்ட்டில் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு"

படம்: TCS I hourly சார்ட்டில் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு”

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

காளையும் கரடியும் பங்குச்சந்தைப் பயிற்சி வகுப்பு (34EMA ரிஜக்ஷன்)


ஹலோ!

ஒரு டே டிரேடர் என்றால், நாள் பூராவும் டிரேடிங் செய்துகொண்டேதான் இருக்கவேண்டுமா? நீண்ட நாளைய முதலீட்டாளர் என்றால் எப்போதாவது ஒரு சில தடவைகள்தான் பங்குகள் வாங்க வேண்டுமா?

இவர்கள் யாரும் பொசிஷன் டிரேடிங் செய்யலாமா?

கண்டிப்பாகச் செய்யலாம். கீழேயிருக்கும் SESAGOA Fut சார்ட்டினைப் பாருங்கள். இரண்டு SELL மற்றும் ஒரு BUY கண்டிஷன்கள் உருவாகி, இவை மூன்றிலும் பிராஃபிட்டும் (நல்லபடியாக) எடுக்கப்பட்டுள்ளது. இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டாவது SELL & பிராஃபிட் எடுத்தபிறகு, அடுத்த BUY வரும் வரை நாம் எதுவும் டிரேட் எடுக்கவில்லை. ஏனெனில், நமது சிஸ்டம் நம்மை எந்த டிரேடும் எடுக்கச் சொல்லவில்லை.

படம் 1: SESAGOA I-வில் SELL மற்றும் BUY வாய்ப்புகளும், சும்மா "கம்முன்னு" இருக்க வேண்டிய காலமும்

படம் 1: SESAGOA I-வில் SELL மற்றும் BUY வாய்ப்புகளும், சும்மா “கம்முன்னு” இருக்க வேண்டிய காலமும்

இதுபோல சிஸ்டத்தின் விதிமுறைகளின் படி டிரேட் எடுக்குமாறு விதிகள் கூறும்போது டிரேட் எடுப்பதும், மற்ற சமயங்களில் டிரேட் செய்யாமலிருப்பதும் ஒரு நல்ல டிரேடருக்குறிய சிறப்பம்சம்தானே!

அடுத்த படமான TATASTEEL-I-இல் பார்த்தால் அனைத்தும் SELL என்ட்ரிகள்தான்.  அதுவும் நான்காவது SELL-இன்போது ஸ்டாப்லாஸ் அடித்து, மறுபடியும் ஒரு டிரேட் நல்லபடியாக அமைந்துள்ளதைப் பார்க்கலாம்.

படம் 2: TATASTEEL-I-உம் 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும்

படம் 2: TATASTEEL-I-உம் 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும்

INFY gap up ஓபனிங்கும், ஆப்ஷன் கேள்விகளும்!


ஹலோ!

INFY-யின் காலாண்டு அறிக்கை வரும்போதெல்லாம் சந்தையிலே ஒரு மிகப்பெரிய சலசலப்பு ஏற்படுகிறது. அதுவும், சமீபத்திய அறிக்கை வெளியீடுகளின்போது 10-லிருந்து 20 சதவீதம் வரை gap (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஏற்பட்டுள்ளது. இது போன்ற சமயங்களில், மிகப்பெரிய, அனுபவம் வாய்ந்த டிரேடர்கள் கூட மிக ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், கும்கி படத்திலே மாணிக்கத்துக்கு எருமை மாட்டை வைத்து ட்ரைனிங் கொடுப்பார் ஹீரோ. ஆனால் மாணிக்கமோ அந்த மாட்டைப் பார்த்து பயந்து ஓடிவிடும். இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவே அனுபவம் வாய்ந்த. மிகப் பெரிய டிரேடர்கள் மிக ஜாக்கிரதையாக INFY அறிக்கை தினத்தைக் கையாள்கிறார்கள்.

20130712 INFY result to result KK Blog 

டெக்னிக்கல் அனாலிசிஸ் யாஹூ! குரூப்பில் வந்த ஒரு உரையாடலை இங்கே எழுது’கிறேன். ரொம்பவும் அருமையாகக் கேள்விகள் அமைந்து பல்வேறு டிரேடர்களும் அவரவர்களின் அபிப்பிராயங்களை எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் நன்றி! (I’m just a messenger)

மனீஷ் குப்தா: INFY 2550-இலிருந்தபோது 400 புள்ளிகள் உயருமென்று (காலாண்டு அறிக்கையினால்) எதிர்பார்த்தேன். அதனால், 11/07 அன்று 2900CE-ஐ 56.50 என்ற அளவிலே வாங்கினேன். 12/07 அன்று நான் எதிர்பார்த்ததைப் போலவே, INFY ஃப்யூச்சர் 2914 வரை சென்றது. ஆனால் 2900CE 62.05 வரை மட்டுமே உயர்ந்தது. நான் 60.05-இல் விற்று 3.50 மட்டுமே இலாபம் பார்த்தேன்.

இவ்வளவு பெரிய gap up இருந்தும், ஏன் 2900CE ஆப்ஷன் உயரவில்லை? நான் சரியான ஸ்டிரைக் ப்ரைஸ் தேர்ந்தெடுக்கவில்லையா? ரிஸ்க் கம்மியாக எடுத்து Deep OTM வாங்குவதுதான் என்னுடைய எண்ணம்.

ஆப்ஷன் விலை நிர்ணயத்தினை பாதிக்கும் அம்சங்கள் என்ன?   

 

பிரசாந்த் கிரிஷ்: ஒரே வார்த்தையில் சொல்வதானால், Implied Volatility (ஐ‌வி) என்று சொல்வதுதான் உங்களது கேள்விக்குச் சரியான பதிலாக இருக்கும். சாதாரண சமயங்களில் இருக்கும் INFY-யின் volatility (ஏற்ற, இறக்கங்கள்)-யை விட, காலாண்டு அறிக்கை வரும் நேரங்களில் IV(ஐ‌வி) மூன்று மடங்காக இருக்கிறது. அறிக்கை வெளியான பிறகு IV(ஐ‌வி) மட,மடவென்று சரிந்து விடுகிறது.

இவ்வாறு ஐ‌வி மட,மடவென்று சரியும்போது, வாங்குபவர்கள் மட்டுமல்ல, ஆப்ஷன் விற்பவர்கள் கூட இலாபம் பார்ப்பதில்லை. நானறிந்த நண்பர் ஒருவர், ஒரு டஜன் 2500/2600 strangle வைத்திருந்து இலாபம் பார்த்தாலும் கூட, அவர் எடுத்த ரிஸ்குக்குத் தகுந்த இலாபமாக அது இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

மனீஷ் குப்தா: அப்படியானால் சரியான ஜோடி ஆப்ஷன்களை எப்படி  வாங்கி, விற்பது? இவ்வாறு IV (ஐ‌வி) மற்றும் gap up அல்லது gap down  வைத்து எவ்வாறு சரியான ஸ்டிரைக் ப்ரைஸ்-ஐ நிர்ணயிப்பது?

ஒரு சிலர் Deep OTM CE/PE-யை வாங்குங்கள் என்கிறார்கள்: ஒரு சிலர் இரண்டையும் விற்று விடுங்கள் என்கிறார்கள்.

ஆப்ஷன்கள் வாங்கவோ, விற்கவோ செய்யும்போது, ஒவ்வொரு ஸ்டிரைக் ப்ரைஸ்-உம் எந்த அளவிற்கு உயரும்/குறையும் என்று பார்த்து, ஒரு சரியான ஸ்டிரைக் ப்ரைஸ் தேர்ந்தெடுக்க ஏதேனும் கணக்கீடுகள் உள்ளனவா? 

 

பிரசாந்த் கிரிஷ்: ஒரு gap up/gap down இருக்கிறதென்று எல்லோரும் எதிர் பார்க்கும்போது, ஆப்ஷன்களின் விலையும் அதற்கேற்றாற்போல உயர்கின்றன. எந்த அளவிற்கு உயருமென்பது, எவ்வளவு gap இருக்கிறதென்பதைப் பொறுத்தே அமைகிறது.

உதாரணத்திற்கு,INFY-யின் சென்ற காலாண்டறிக்கையின்போது,IV(ஐ‌வி) அந்தளவிற்கு உயரவில்லை; ஏனெனில், ஒரு 7-8%-தான் gap இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் அனைவரையும் ஆச்சரியப் படுத்தி விட்டு, ஆப்ஷன் எழுதியவர்களையும் (விற்றவர்கள்) நஷ்டப் படுத்தியது.

எந்த ஸ்டிரைக் ப்ரைஸ் வாங்குவதென்ற உங்களின் கேள்விக்கு, உங்களின் ரிஸ்க் எந்தளவிற்கு இருக்குமென்பதைப் பொறுத்துத்தான் என்பதே பதிலாக அமையும்.

In The Money (ITM) ஆப்ஷனின் Delta(டெல்டா) அதிகளவில் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தது போல மார்க்கெட் ஓபன் சாதகமாக இருந்தால், உங்கள் இலாபம் அதிகளவில் உயர சாதகமாக உள்ளது. நீங்கள் Out of The Money (OTM)செல்லச் செல்ல, Delta-வின் பங்கு (IV-ஐ‌வி அதிகமாகும்போது) மிகவும் குறையும் (Vega-வேகா என்றொரு இன்னொரு அம்சம் இப்போது வரும்)

ஃப்யூச்சர் என்றெடுத்தால் விலை என்ற ஒன்று மட்டும்தான் பார்க்கவேண்டும். ஆனால், ஆப்ஷன் என்று பார்த்தால் அதிலே ஆறு பல்வேறு விதமான அம்ஸங்களைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இவற்றைத்தான் Greeks (கிரீக்ஸ்) என்று சொல்கிறார்கள். இவைகள்தான் ரிஸ்க் மற்றும் விலையைத் தீர்மானிக்கின்றன.

இந்த ஆறு அம்சங்களின் தாக்கத்தைப் புரிந்து கொண்டோமானால், நாம் முடிவெடுக்கலாம் – வாங்கவா? விற்கவா? என்று. இந்த முடிவெடுத்த பின்னர், சரியான ஸ்டிரைக் ப்ரைஸ் தேர்ந்தெடுப்பது ரொம்பவும் எளிதாக இருக்கும். ஏனெனில், நீங்கள் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் ஸ்டிரைக் ப்ரைஸ் அமையும்.

 

ஹாரி சிங்: நான் ஐ‌வி போன்ற டெக்னிக்கல் வார்த்தைகளை உபயோகிக்க விரும்பவில்லை.

நீங்கள் ஏன் 400 புள்ளிகள் உயரும் என்றவொரு நிலையை எடுத்தீர்கள்? அது ரொம்பவும் அதிகமில்லையா?

#1. இன்று INFY 2800-இல் இருக்கும்போது, 400 புள்ளிகள் தாண்டி 3200CE வெறும் ரூ. 2/-இல் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதை வாங்குவீர்களா?

#2. ரிசல்ட்டுக்கு முன்னர் ITM ஆப்ஷன் 164 என்ற அளவில் இருந்தது. இப்போது 60 என்ற அளவிலே குறைந்திருப்பது ஏன்?

#3. Donald Rumsfeld “தெரிந்த தெரிந்தவைகள் இருக்கின்றன; தெரிந்த தெரியாதவைகள் இருக்கின்றன; தெரியாத தெரியாதவைகளும் இருக்கின்றன. ஆனால், தெரியாத தெரிந்தவைகள் இருக்கின்றனவா என்று மட்டும் தெரியவில்லை” என்று சொல்லியிருப்பார். (நான்: அட! என்னங்க? இவர் என்ன விசுவின் அண்ணனாக இருப்பாரோ? J) (There are known knowns, known unknowns and unknown unknowns. Not sure if there are unknown knowns)

Infy-யின் ரிசல்ட் இதிலே இரண்டாவது வகையான தெரிந்த தெரியாதவைகள் வகையைச் சேர்ந்ததாக அமைகிறது. நிறைய பேர் gap இருக்குமென்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனாலும், அதை வைத்து டிரேட் செய்ய விரும்பவில்லை. 

#4. நீங்கள் 400 புள்ளிகள் உயருமென்று எதிபார்த்தது போலவேதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதனாலேயே, ரிசல்ட்டுக்கு முன்னால் ஆப்ஷன் பிரிமியம் உயர்ந்தது. ரிசல்ட் வந்தபின்னர், தெரிந்த தெரியாதது),  தெரிந்த தெரிந்ததாக (known unknown has become known known) மாறி விட்டது. பிரிமியமும் கரைந்து விட்டது.

#5. இதையே இப்படிப் பாருங்களேன்! ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய லாட்டரி, ஒரு லட்சம் பேருக்குக் கிடைக்கும்போது என்னவாகும்? உங்களுக்காவது ஒரு பங்கு கிடைத்தது. நிறைய பேருக்கு டிக்கெட் காசு கூட மிஞ்சியிருக்காது.

 

அபிஜித் பிரபாகர்: இதனையே இன்னமும் சுருக்கமாச் சொல்ல வேண்டுமானால், .

நான் ஒரு இரண்டாடுகளுக்கு முன்னால், பங்குச் சந்தைக்குப் புதியவனாக இருந்தபோது, ஆப்ஷன்களில்தான் மிகவும் சுலபமாகவும், வேகமாகவும் பணம் சம்பாதிக்கலாமென்ற எண்ணம் கொண்டிருந்தேன். நாட்கள் செல்லச் செல்லத்தான் “குறைந்த விலை ஆப்ஷன்கள் ITM-இல் வருவதில்லை; அப்படி குறைந்த விலை ஆப்ஷன்கள் OTM-இல் கிடைக்கும்போது, அவை worthless expiryஆகின்றன” என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்த்த திசையில் விலை சென்றாலும் கூட, ஐ‌வி மற்றும் Time Decay போன்ற Greeksஅந்த விலை குறைந்த OTM ஆப்ஷன்களை மிகவும் அதிகமாக பாதிக்கின்றனவென்றும் புரிந்து கொண்டேன்.

நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாம் லாட்டரி டிக்கெட் என்று வாங்கும் ரொம்பவும் விலை கம்மியான Deep OTM ஆப்ஷன்களை விற்பது யாரென்று. மிகப்பெரிய முதலைகள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்த ஆப்ஷன்களை hedging செய்கிறார்கள்.

ஆப்ஷன்களை வாங்குவதால் மட்டுமே இலாபம் பார்க்க முடியும்; ஆனால்…… அது ஒன்றும் நிறைய பேர் நினைப்பது போல ரொம்பவும் சுலபமானதல்ல.

 

ரமேஷ் ராமச்சந்திரன்: ஆப்ஷன்களை, அதிலும் மிகவும் குறிப்பாக OTM ஆப்ஷன்களை வாங்கும்போது, ஒரு நாளைக்கு மேல் கையில் வைத்துக் கொள்ளக் கூடாது. எப்படி இண்ட்ரா டே டிரேடிங்கில் ஆப்ஷன் வாங்கி விற்பது என்று பார்க்கலாம்.

12 ஜூலை 2013: நிஃப்டி ஃப்யூச்சர் 6000-க்கும் மேலே ஆரம்பமாகி, முந்தைய நாளின் ஹை-யான 5960-க்குக் கொஞ்சம் கீழே வரை சென்றது. பின்னர் 9:30-லிருந்து மதியம் 2:00 வரை அதே லெவலிலேயே ஒரு 14 புள்ளிகன் என்ற ரேஞ்சிலேயே(range) வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. நாளின் ஆரம்பத்தில் bearish-ஆக இருந்த நிலை, ஒரு range bound என்ற நிலைக்கு மாறியிருந்தது.

மதியம் 2:00 மணிக்கு ஒரு வலிமையான மேல் நோக்கிய மாற்றம் ஏற்பட்டு, ஒரு அரை மணி நேரத்திற்கு மறுபடியும் ஒரு 6 புள்ளிகள் ரேஞ்சிலேயே (ஆனால் முந்தைய 14 புள்ளிகள் டிரேடிங் ரேஞ்சுக்கு மேலேயே)  வர்த்தகமாகியது.

பிரேக்அவுட் டிரேடிங் ஸ்ட்ராடஜி படி பார்த்தால், ஒரு 30 புள்ளிகள் வரையிலும் உயர்ந்து 6000 லெவலைத் தொட வாய்ப்புள்ள நிலை. இந்த 5975 என்ற அளவிலே லாங் சென்றால், ஸ்டாப்லாஸ் 5960 (முந்தைய நாளின் ஹை). ரிஸ்க்; ரிவார்ட் என்பது 15:30 (1:2) என்ற அளவிலே இருப்பதால் இது ஒரு நல்ல டிரேடாகவும் அமைகிறது.

ஒருவேளை, இந்த டிரேட் தப்பாகி, 5960-க்குக் கீழே சென்றால், அந்த இறக்கமானது மிகவும் வலிமையாக இருந்திருக்கும். லாங் சென்றதில் ஏற்பட்ட நஷ்டத்தை, மற்றொரு ஷார்ட் டிரேட் எடுத்து  ஈடு கட்டிவிடலாம்..  

நான் என்ன சொல்ல வருகிறேனென்றால், இப்போது OTM 6000CE வாங்குவதற்கு மிகவும் சரியான சந்தர்ப்பம். இந்த OTM, நிஃப்டி நாம் எதிர்பார்த்த வகையிலே சென்றால், ITM-ஆக மாறி நல்ல இலாபத்தைக் கொடுக்கும் வாய்ப்பிது.

நிஃப்டி 5975-இல் இருந்த போது 60-லிருந்த 6000CE, நிஃப்டி 6000-ஐத் தொட்டபோது, 75-ஆக உயர்ந்திருந்தது.

அதாவது நிஃப்டியின் 30 புள்ளிகள் உயர்வீற்கு, ஆப்ஷன் 15 புள்ளிகள் உயர்ந்தது.

ஒரு லட்ச ரூபாயில் 200 நிஃப்டி ஃப்யூச்சர் (4 லாட்) வாங்கியிருப்பதாக வைத்துக்கொண்டால், இலாபம் = 200x30=6000

அதே 6000CE ஆப்ஷனில், 1500 (30 லாட்) வாங்கியிருப்போமேயானால், இலாபம் = 1500x15= 22,500 ரூபாயாக இருந்திருக்கும்.

நீங்கள் கையில் பொசிஷன் வைத்திருக்கும் காலம் கூடக் கூட, Time Decay-யினால் ஆப்ஷனின் மதிப்பு குறையும்.

ஆப்ஷன் டிரேடிங் என்பது ஒரு multi dimensional செயல்பாடு. அதன் ஒவ்வொரு அம்ஸத்தையும் புரிந்து கொண்டு, வெற்றி காண நேரமும், உழைப்பும் அவசியம்.

நிஃப்டியின் கன்னித்தீவு(கள்) – பாகம் 2


பாகம் -1 இங்கே கிளிக்கிடவும்

ஹலோ! என்ஜாய்!

நிஃப்டியின் கன்னித்தீவுகள்-பாகம் 2

நிஃப்டியின் கன்னித்தீவுகள்-பாகம் 2

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

காளையும்கரடியும் பயிற்சி வகுப்பு #1, சென்னை, 04 ஆகஸ்ட் 2013


ஹலோ!

நான் இதுவரையிலும் சில, பல டிரேடிங் ஸ்ட்ராடஜிகள் பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். உங்களில் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு,அவற்றினைப் பற்றிப் பல்வேறு சந்தேகங்களையும், விளக்கங்களையும் பரிமாறிக் கொண்டு, தெளிவு பெற்று டிரேட்-உம் செய்து வருகிறீர்கள். மேலும் சிலர், “இதைப்பற்றிய விளக்கங்களை நீங்கள் ஒரு வகுப்பு நடத்தி, பயிற்சி கொடுங்களேன்!” என்றும் என்னை அன்புத்தொல்லை கொடுத்து வருகிறீர்கள்.

இதனால், 3×5 EMA க்ராஸ்ஓவர் மற்றும் 34EMA ரிஜக்ஷன் ஆகிய இரண்டு ஸ்ட்ராடஜிகள் பற்றியும் ஒரு பயிற்சி வகுப்பின் வழியாக உங்களுடன் கலந்துரையாடலாமென்றிருக்கின்றேன்.

இடம்: மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வளாகம். 4-வது மாடி, எண்-30, செகண்ட் லைன் பீச் (Second Line Beach), சென்னை – 600001. (சென்னை பீச் இரயில் நிலையம் & பர்மா பஜார் அருகில், தலைமைத் தபால்நிலையம் பின்புறம்)

நாள்:04 ஆகஸ்ட் 2013காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும்

பயிற்சி விபரம் (Agenda)

9:30 -10:45 am: டெக்னிக்கல் அனாலிசிஸ் – ஒரு மேற்பார்வை (ட்ரெண்ட்லைன், சப்போர்ட், ரெஸிஸ்டன்ஸ், ட்ரெண்டிங் மார்க்கெட் & பக்கவாட்டு (sideways) மார்க்கெட்)

10:45am-11:05am: தேநீர் இடைவேளை

11:05am – 12:45pm: 34 EMA ஸ்ட்ராடஜி (ஸ்டாக்குகள் மற்றும் இன்டெக்ஸ்களுக்கானது. சார்ட் பார்த்து டிரேட் செய்ய வேண்டிய ஸ்ட்ராடஜி). ட்ரெண்டிலிருக்கும் ஸ்டாக்குகளில் என்ட்ரி கண்டுபிடித்து பொசிஷன் எடுக்க உதவுகிறது.

12:45pm – 1:30pm: மதிய உணவு

1:30pm – 3:15pm: 3×5 ஸ்ட்ராடஜி (பாங்க் நிஃப்டி & நிஃப்டிக்கு ஏற்றது EOD முறையில். சார்ட் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய முடிவு விலை மூலம், Ms Excel முறையில் அடுத்த நாளைக்கான ரிவர்ஸல் பாயிண்ட் கணக்கிடப்பட்டு, காலை 9:30 மற்றும் மாலை 3:10 மணிக்கு மட்டும் மார்க்கெட் பார்த்தால் போதும். நாள் பூராவும் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. முழுநேர வேலை செய்பவர்கள், இல்லத்தரசிகளுக்கு ஏற்ற ஸ்ட்ராடஜி. டிரேடர்களும் இந்தப் புதிய ஸ்ட்ராடஜியை தங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த Ms Excel ஃபைல் உங்களுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்)

3:15pm 03:35pm: தேநீர் இடைவேளை

3:35pm – 5:00pm: இந்த இரண்டு முறைகளிலும் எவ்வாறு டிரேடிங் செய்வது என்ற simulated டிரேடிங் செஷன் (simulated trading session) மற்றும் கேள்வி நேரம்

3x5 முறையில் ஒரு லாட் பாங்க்நிஃப்டி மற்றும் நிஃப்டி இலாப,நஷ்டக் கணக்கு!

Bank Nifty

2008

2009

2010

2011

2012

2013 மே வரை

Intraday trades

19

21

22

19

30

8

System Trades

34

38

30

43

37

19

Brokerage paid

7950

8850

7800

9300

10050

4050

Intraday points loss

-4597

-4125.1

-4209.4

-2919.3

-4838.8

-1495.6

System Gain / Loss

10470.8

8128.87

7396.63

5582.8

7573.96

2771.77

Net Points Gain / Loss

5873.76

4003.79

3187.27

2663.5

2735.18

1276.13

Rs Gain per Lot

138894

91244.7

71881.7

57287.5

58329.5

27853.2

Nifty

Intraday trades

28

24

29

23

33

13

System Trades

32

38

40

39

27

15

Brokerage paid

9000

9300

10350

9300

9000

4200

Intraday points loss

-3194.5

-2487.5

-1479.6

-2539.7

-2226

-683.34

System Gain / Loss

4618.28

3199.77

2651.38

3488.44

2871.76

926.52

Net Points Gain / Loss

1423.74

712.29

1171.82

948.74

645.76

243.18

Rs Gain per Lot

62187

26314.5

48241

38137

23288

7959

Diff b/w BNF & NF

76707

64930.2

23640.7

19150.5

35041.5

19894.2

 

Disclaimer:பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க்குகள் நிறைந்தது. முந்தைய காலத்தின் செயல் திறன் இலாபம் முதலானவை வருங்காலத்திலும் இருக்குமென்று கூற முடியாது. பங்கு வர்த்தகத்தில் உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு இந்தக் கட்டுரை ஆசிரியர் பொறுப்பல்ல.

 

தொடர்புக்கு: பாபு கோதண்டராமன், babukothandaraman@gmail.com,

https://kaalaiyumkaradiyum.wordpress.com/ (காளையும்கரடியும்)

கரெக்ஷனுக்கும், ட்ரெண்ட் ரிவர்சலுக்கும் ரொம்ப நிறையவே வேறுபாடுகள் உள்ளன


ஹலோ!

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர்: பிரசாந்த் கிரிஷ். இவர் டெக்னிக்கல் அனாலிசிஸ் யாஹூ! குரூப்பினைத் தோற்றுவித்தவர். ட்விட்டரில் @Prashanth_Krish. தமிழாக்கமும், வரைபடங்களும் நான்தானுங்க!

இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நாள் 23 ஜனவரி 2013 என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். இனி அவரின் கட்டுரைக்குள் செல்வோம்! என்ஜாய்!

கரெக்ஷனுக்கும், ட்ரெண்ட் ரிவர்சலுக்கும் ரொம்ப நிறையவே வேறுபாடுகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், எந்தவொரு மேஜர் ட்ரெண்ட் இருக்கிறதோ, அந்த டிரெண்டுக்கு எதிர்த்திசையில், மேலே சொன்ன இரண்டுமே ஒரு ஸ்டாக்கின் விலையை எடுத்துச்செல்லும்; ஆனால், கரெக்ஷன் மேஜர் டிரெண்டுக்கு எந்தத் தலைவலியையும் கொடுக்காமல் மறுபடியும் வலுவிழந்து விடும்.

அது சரி! முதலில், ஒரு மேஜர் ட்ரெண்ட் எந்தத் திசையிலிருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? அதற்கான விதிமுறைகள் ஏதேனும் உள்ளனவா? அதைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

என்னைப் பொறுத்த மட்டிலும், முதலில் ஒரு ஸ்டாக் 200 நாள் EMA-விற்கு மேலேயா அல்லது கீழேயா என்றுதான் பார்ப்பேன்.

உதாரணத்திற்கு TATAGLOBAL-ஐப் பார்த்தால், இது 200 நாளைய EMA-விற்கு மேல்தான் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இது bullish-தான்.

ஆனால், (200 அல்லது 100 போன்ற) ஒரு மிகப்பெரிய EMA-வை எடுத்துக் கொண்டால், அதன் தொய்வும் (lag) மிக அதிகமாக இருக்கும். அதாவது, ஒரு பங்கின் விலை தற்போது 300 ரூபாயில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதன் 200EMA-வானது 210ரூபாய் என்ற அளவிலே இருக்கும்போது, இந்த (300-210) 90 ரூபாய் வேறுபாடுதான் தொய்வு (lag) என்று சொல்லப்படுகிறது. விலையானது இந்த 300-லிருந்து, ஒரு 70-80 ரூபாய் கீழே இறங்கி வந்தால், (200 EMA-வும் கொஞ்சம் மேலே ஏறி வர வாய்ப்புள்ளதால்), அப்போது 200EMA-விற்குக் கீழே விலையானது வந்துவிடும்.

படம் 1: TATAGLOBAL டெய்லி சார்ட்

படம் 1: TATAGLOBAL டெய்லி சார்ட்

அப்படியென்றால், “ஒரு 20-25% இறங்கிய பிறகுதான் நமக்கு bearish என்று தெரிந்து, ரிவர்ஸல் பற்றித் தெரிந்து கொள்வோமா? இது ரொம்பவும் தாமதமில்லையா? அதற்கு முன்னாலேயே தெரிந்து கொள்ள வேண்டாமா? அதுவும் ஒரு ஸ்ட்ராங்க் டிரெண்டில் 200EMAவிற்கும் விலைக்குமிடையே ரொம்பவும் பெரிய வேறுபாடு இருக்குமே!” என்று கேட்டால், அடுத்ததாக இன்னொரு ஃபில்டர் (filter) உபயோகிக்கவேண்டும்.

இந்த இரண்டாவது ஃபில்டர் என்னவாக இருக்குமென்றால், ரொம்பவும் அடிப்படை விஷயமான ட்ரெண்ட்லைன்தான்(trendline) அது. இந்த ட்ரெண்ட்லைனையும் வரைவதற்கு ஒரு கண்டிஷன் உள்ளது. அது என்னவென்றால், ஒரு டைம்ஃபிரேம் மேலே உள்ள சார்ட்டில்தான் வரைந்து பார்க்கவேண்டும். அதாவது. முதலில் 200 நாளைய EMA-வை டெய்லி (daily) சார்ட்டில் வரைந்தோம். அதனால், ட்ரெண்ட்லைனை (டெய்லிக்கு அடுத்த மூத்தவரான) வார (வீக்லி) வரைபடத்தில் வரைந்து பார்க்க வேண்டும்.

எனவே, TATAGLOBAL வார வரைபடத்தில் ஒரு ட்ரெண்ட்லைனை வரைந்தோமானால் (குறைந்தது மூன்று புள்ளிகளையாவதுத் தொட வேண்டும்), அது இன்னமும் ஒரு பாசிட்டிவ் நிலையில்தான் இருக்கிறதென்று தெரிகிறது.

படம் 2: TATAGLOBAL வார வரைபடம்

படம் 2: TATAGLOBAL வார வரைபடம்

இதுவும், ஒரு டச் அண்ட் கோ (touch and go) என்ற நிலையிலிருப்பதால், நாம் மூன்றாவதாகவும் ஒரு ஃபில்டரையும் உபயோகிக்கலாம்.

அந்த மூன்றாவது ஃபில்டர் இன்னமும் ரொம்பவும் சிம்பிளானதுதான். அது என்னவென்றால், ரொம்பவும் வலிமையான ஒரு சப்போர்ட்  உடைபட்டுள்ளதாவென்று பார்க்கவேண்டும். “என்னங்க? வலிமையான சப்போர்ட்னு (strong support) சொல்றீங்களே! அதை எப்படி கண்டுபிடிப்பது?” அப்படின்னு கேளுங்களேன்! அட, சும்மாதான் கேளுங்களேன்! J

முந்தைய மாதங்களில்/வருடங்களில் ஏதேனும் ஒரு விலை (லெவல்) ஒரு நான்கைந்து முறை ரெஸிஸ்டன்சாக இருந்திருக்க வேண்டும். இப்படி நான்கைந்து முறை முட்டி மோதி உருவாகிய ஒரு வலிமையான ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு, விலை மேலே சென்றால், அந்தப் பழைய, வளிமயான ரெஸிஸ்டன்ஸ் தற்போது ஒரு வலிமையான சப்போர்ட்டாக இருக்குமென்பது டெக்னிக்கல் அனாலிசிஸின் ஒரு தங்க விதி (golden rule).

இதன்படி பார்த்தால், TATAGLOBAL-இன் 135-140 லெவல் ஒரு வலிமையான சப்போர்ட்டாக இருக்கிறது. 147-இல் ஒரு மைனர் சப்போர்ட்டும் தெரிகிறது. ஆனால், இதுவரை அந்த லெவல் டெஸ்ட் செய்யப்படாததால், அதற்கு அந்த அளவு முக்கியத்துவமில்லை.

ஒரு ஹெட் & ஷோல்டர் பேட்டர்னும் தெரிகிறது. அது ஒரு திடமான சிக்னலாக இருக்குமாவென்றும் நிச்சயமில்லை. என்னைப் பொருத்தவரையிலும், இது போன்ற அமைப்புகளெல்லாம் பார்ப்பவர்களின் கண்களில்தானிருக்கின்றன (Beauty lies in the eyes of the beholder) (beer holder இல்லைங்க) J.

நான் Larry Williams-இன் Pro Go Indicator-ஐ அந்த அளவு விரும்புபவனில்லை; இருந்தாலும் அதிலும் ஒரு சில நல்ல தகவல்களிருக்கின்றன. அதன்படி பார்த்தால், TATAGLOBAL-இல் 2012 அக்டோபரிலிருந்து professionals (அதாவது, சந்தையின் திமிங்கலங்களும், சுறாக்களும் J#இது நான் எழுதனதுங்க! பிரசாந்த் எழுதுனதில்லை#) விற்றுக்கொண்டிருக்கிறார்களென்றுதான் தெரிய வருகிறது. இது காளைகளுக்குக் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்குமென்று நம்புகிறேன். அது மட்டுமில்லைங்க! இந்த செக்டாரில் இந்த ஸ்டாக் ஒன்றும் வலிமையானதல்ல. அதனால, செக்டார் அடிவாங்கும்போது, இது ரொம்பவே (ஸ்ட்ராங்கா இருக்குற மத்த ஸ்டாக்குகளை விட) சறுக்கும்.

Cheers

Prashanth

நிஃப்டியின் கன்னித்தீவு(கள்)


ஹலோ!

Island reversal எனபது டெக்னிக்கல் அனாலிசிஸில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுகின்ற ஒரு விஷயம்.

ஒரு பங்கானது ஒரு குறிப்பிட்ட திசையிலே, உதாரணத்திற்கு, மேலே சென்று கொண்டிருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். (துட்டா? money-ஆ? சும்மா வைத்துக்கொள்வோம். <<“காசா? பணமா?” அப்படீங்கரதுதான் கானா பாலாவின் தாக்கத்தால் மாறிடிச்சிங்க>>) அப்படி மேலே போய்க்கிட்டிருக்கிறது திடீர்னு ஏதோ ஒரு சில காரணங்களினால் மறுபடியும் வேகமாக ஒரு Gap Up ஆகி இன்னமும் மேலே செல்லும் நிலை ஏற்படலாம். அப்புறம் அடுத்த நாளே அல்லது கொஞ்ச நாளைக்கப்புறம் மறுபடி சில பல காரணங்களினால் Gap Down ஆகி, ஒரு இடைவெளி விட்டு, “சர்”ரென்று கீழே விழ ஆரம்பிக்கும்.

இப்போது பார்த்தீர்களேயானால், மேலே செல்லும்போது ஒரு இடைவெளி (gap); கொஞ்ச நேரம்/நாள் மேலேயே மேகக் கூட்டங்களுடன் விளையாடிவிட்டு, கீழே இறங்கும்போதும் ஒரு இடைவெளி (gap).  இந்த இரண்டு gap-களுக்கு நடுவே இருக்குது பாருங்க, அதைத்தான் தீவுத் திருப்பம் (isalnd reversal) என்று சொல்கிறார்கள்.

இந்த மாதிரி திரும்பும்போது, அந்த gap அல்லது அந்தப் பேட்டர்னின் ஹை, இவற்றில் ஏதாவது ஒன்றை நம்முடைய ரிஸ்க்குக்குத் தகுந்தவாறு ஸ்டாப்லாஸ்-ஆக வைத்து ஷார்ட் போகவேண்டும். இப்போது, நிஃப்டியின் (Fut) இந்தச் சார்ட்டைப் பாருங்கள். என்ஜாய்!

படம்: NIFTY I கன்னித்தீவு

படம்: NIFTY I கன்னித்தீவு

அன்புடன்!

பாபு கோதண்டராமன்

பி.கு: “கன்னித்தீவுன்னு போட்டீங்க? லைலா எங்க சார்?”னு எல்லாம் கேக்கக்கூடாது. 🙂