கரெக்ஷனுக்கும், ட்ரெண்ட் ரிவர்சலுக்கும் ரொம்ப நிறையவே வேறுபாடுகள் உள்ளன


ஹலோ!

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர்: பிரசாந்த் கிரிஷ். இவர் டெக்னிக்கல் அனாலிசிஸ் யாஹூ! குரூப்பினைத் தோற்றுவித்தவர். ட்விட்டரில் @Prashanth_Krish. தமிழாக்கமும், வரைபடங்களும் நான்தானுங்க!

இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நாள் 23 ஜனவரி 2013 என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். இனி அவரின் கட்டுரைக்குள் செல்வோம்! என்ஜாய்!

கரெக்ஷனுக்கும், ட்ரெண்ட் ரிவர்சலுக்கும் ரொம்ப நிறையவே வேறுபாடுகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், எந்தவொரு மேஜர் ட்ரெண்ட் இருக்கிறதோ, அந்த டிரெண்டுக்கு எதிர்த்திசையில், மேலே சொன்ன இரண்டுமே ஒரு ஸ்டாக்கின் விலையை எடுத்துச்செல்லும்; ஆனால், கரெக்ஷன் மேஜர் டிரெண்டுக்கு எந்தத் தலைவலியையும் கொடுக்காமல் மறுபடியும் வலுவிழந்து விடும்.

அது சரி! முதலில், ஒரு மேஜர் ட்ரெண்ட் எந்தத் திசையிலிருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? அதற்கான விதிமுறைகள் ஏதேனும் உள்ளனவா? அதைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

என்னைப் பொறுத்த மட்டிலும், முதலில் ஒரு ஸ்டாக் 200 நாள் EMA-விற்கு மேலேயா அல்லது கீழேயா என்றுதான் பார்ப்பேன்.

உதாரணத்திற்கு TATAGLOBAL-ஐப் பார்த்தால், இது 200 நாளைய EMA-விற்கு மேல்தான் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இது bullish-தான்.

ஆனால், (200 அல்லது 100 போன்ற) ஒரு மிகப்பெரிய EMA-வை எடுத்துக் கொண்டால், அதன் தொய்வும் (lag) மிக அதிகமாக இருக்கும். அதாவது, ஒரு பங்கின் விலை தற்போது 300 ரூபாயில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதன் 200EMA-வானது 210ரூபாய் என்ற அளவிலே இருக்கும்போது, இந்த (300-210) 90 ரூபாய் வேறுபாடுதான் தொய்வு (lag) என்று சொல்லப்படுகிறது. விலையானது இந்த 300-லிருந்து, ஒரு 70-80 ரூபாய் கீழே இறங்கி வந்தால், (200 EMA-வும் கொஞ்சம் மேலே ஏறி வர வாய்ப்புள்ளதால்), அப்போது 200EMA-விற்குக் கீழே விலையானது வந்துவிடும்.

படம் 1: TATAGLOBAL டெய்லி சார்ட்

படம் 1: TATAGLOBAL டெய்லி சார்ட்

அப்படியென்றால், “ஒரு 20-25% இறங்கிய பிறகுதான் நமக்கு bearish என்று தெரிந்து, ரிவர்ஸல் பற்றித் தெரிந்து கொள்வோமா? இது ரொம்பவும் தாமதமில்லையா? அதற்கு முன்னாலேயே தெரிந்து கொள்ள வேண்டாமா? அதுவும் ஒரு ஸ்ட்ராங்க் டிரெண்டில் 200EMAவிற்கும் விலைக்குமிடையே ரொம்பவும் பெரிய வேறுபாடு இருக்குமே!” என்று கேட்டால், அடுத்ததாக இன்னொரு ஃபில்டர் (filter) உபயோகிக்கவேண்டும்.

இந்த இரண்டாவது ஃபில்டர் என்னவாக இருக்குமென்றால், ரொம்பவும் அடிப்படை விஷயமான ட்ரெண்ட்லைன்தான்(trendline) அது. இந்த ட்ரெண்ட்லைனையும் வரைவதற்கு ஒரு கண்டிஷன் உள்ளது. அது என்னவென்றால், ஒரு டைம்ஃபிரேம் மேலே உள்ள சார்ட்டில்தான் வரைந்து பார்க்கவேண்டும். அதாவது. முதலில் 200 நாளைய EMA-வை டெய்லி (daily) சார்ட்டில் வரைந்தோம். அதனால், ட்ரெண்ட்லைனை (டெய்லிக்கு அடுத்த மூத்தவரான) வார (வீக்லி) வரைபடத்தில் வரைந்து பார்க்க வேண்டும்.

எனவே, TATAGLOBAL வார வரைபடத்தில் ஒரு ட்ரெண்ட்லைனை வரைந்தோமானால் (குறைந்தது மூன்று புள்ளிகளையாவதுத் தொட வேண்டும்), அது இன்னமும் ஒரு பாசிட்டிவ் நிலையில்தான் இருக்கிறதென்று தெரிகிறது.

படம் 2: TATAGLOBAL வார வரைபடம்

படம் 2: TATAGLOBAL வார வரைபடம்

இதுவும், ஒரு டச் அண்ட் கோ (touch and go) என்ற நிலையிலிருப்பதால், நாம் மூன்றாவதாகவும் ஒரு ஃபில்டரையும் உபயோகிக்கலாம்.

அந்த மூன்றாவது ஃபில்டர் இன்னமும் ரொம்பவும் சிம்பிளானதுதான். அது என்னவென்றால், ரொம்பவும் வலிமையான ஒரு சப்போர்ட்  உடைபட்டுள்ளதாவென்று பார்க்கவேண்டும். “என்னங்க? வலிமையான சப்போர்ட்னு (strong support) சொல்றீங்களே! அதை எப்படி கண்டுபிடிப்பது?” அப்படின்னு கேளுங்களேன்! அட, சும்மாதான் கேளுங்களேன்! J

முந்தைய மாதங்களில்/வருடங்களில் ஏதேனும் ஒரு விலை (லெவல்) ஒரு நான்கைந்து முறை ரெஸிஸ்டன்சாக இருந்திருக்க வேண்டும். இப்படி நான்கைந்து முறை முட்டி மோதி உருவாகிய ஒரு வலிமையான ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு, விலை மேலே சென்றால், அந்தப் பழைய, வளிமயான ரெஸிஸ்டன்ஸ் தற்போது ஒரு வலிமையான சப்போர்ட்டாக இருக்குமென்பது டெக்னிக்கல் அனாலிசிஸின் ஒரு தங்க விதி (golden rule).

இதன்படி பார்த்தால், TATAGLOBAL-இன் 135-140 லெவல் ஒரு வலிமையான சப்போர்ட்டாக இருக்கிறது. 147-இல் ஒரு மைனர் சப்போர்ட்டும் தெரிகிறது. ஆனால், இதுவரை அந்த லெவல் டெஸ்ட் செய்யப்படாததால், அதற்கு அந்த அளவு முக்கியத்துவமில்லை.

ஒரு ஹெட் & ஷோல்டர் பேட்டர்னும் தெரிகிறது. அது ஒரு திடமான சிக்னலாக இருக்குமாவென்றும் நிச்சயமில்லை. என்னைப் பொருத்தவரையிலும், இது போன்ற அமைப்புகளெல்லாம் பார்ப்பவர்களின் கண்களில்தானிருக்கின்றன (Beauty lies in the eyes of the beholder) (beer holder இல்லைங்க) J.

நான் Larry Williams-இன் Pro Go Indicator-ஐ அந்த அளவு விரும்புபவனில்லை; இருந்தாலும் அதிலும் ஒரு சில நல்ல தகவல்களிருக்கின்றன. அதன்படி பார்த்தால், TATAGLOBAL-இல் 2012 அக்டோபரிலிருந்து professionals (அதாவது, சந்தையின் திமிங்கலங்களும், சுறாக்களும் J#இது நான் எழுதனதுங்க! பிரசாந்த் எழுதுனதில்லை#) விற்றுக்கொண்டிருக்கிறார்களென்றுதான் தெரிய வருகிறது. இது காளைகளுக்குக் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்குமென்று நம்புகிறேன். அது மட்டுமில்லைங்க! இந்த செக்டாரில் இந்த ஸ்டாக் ஒன்றும் வலிமையானதல்ல. அதனால, செக்டார் அடிவாங்கும்போது, இது ரொம்பவே (ஸ்ட்ராங்கா இருக்குற மத்த ஸ்டாக்குகளை விட) சறுக்கும்.

Cheers

Prashanth

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

One Response to கரெக்ஷனுக்கும், ட்ரெண்ட் ரிவர்சலுக்கும் ரொம்ப நிறையவே வேறுபாடுகள் உள்ளன

  1. ganesh619 says:

    பாபு சார் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: