ACC-யில் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் 20130830


விளக்கங்கள் படத்திலேயே!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

ஹெட் அண்ட் ஷோல்டர்: ACC

ஹெட் அண்ட் ஷோல்டர்: ACC

டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…..


“கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால், உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது;

கற்றுக்கொள்ள மாட்டேனென்று அடம் பிடித்தால், யாராலும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியாது”

– நன்றி: இன்டர்நெட்

ஒவ்வொரு வருஷமும் இந்த பப்ளிக் எக்ஸாம் எழுதற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ, மாணவிகளைப் பாத்தீங்கன்னா, டியூஷன் போக ஆரம்பிச்சுடுவாங்க. அன்றாடம் காலையும், மாலையும் வகுப்புகளிருக்கும். கடைசி மூன்று, நான்கு மாதங்களுக்கு மாடல் டெஸ்ட், எக்ஸாம்-ஆக எழுதிக் கொண்டிருப்பார்கள். இப்படியெல்லாம் படித்து, எழுதுவதால் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் திறமையும் (அவர்களின் கெப்பாஸிட்டிக்கேற்ப) ஒரு 10%-15% உயர்கிறது. இதிலேயே ஒரு சிலரைப் பார்த்தீங்கன்னா, 25%முதல் 30% வரை தங்களின் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களது சொந்த முயற்சியில், கூடுதல் அக்கரையெடுத்து, பாடங்களை நன்கு புரிந்துகொண்டு, வீட்டிலும் கொஞ்சம் அதிகமாகக் கவனம் செலுத்தி தங்களது திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். வெகு சிலரோ மாநில, மாவட்ட அளவிலே உயர் தகுதி நிலைகளை அடைகிறார்கள்.

“என்னங்க? டெக்னிக்கல் அனாலிசிஸ் கத்துக்கொடுப்பீங்கன்னு பார்த்தால், ஏதோ பப்ளிக் எக்ஸாம் பத்தியெல்லாம் சொல்றீங்களே!”ன்னு கேக்குறீங்களா? வெயிட்; வெயிட்! இரண்டுக்குமே சம்பந்தம் இருக்குதுங்க. அனைவருக்கும் ஒரே சிலபஸ்ஸாக இருந்தாலும், ஒவ்வொருவரின் முயற்சி, திறமை, அணுகுமுறைக்கேற்பத்தான் மாணவ, மாணவிகளில்  வெற்றி வாய்ப்புகள் அமைகின்றன.

அதே போல மார்க்கெட் ஒன்றாக இருந்தாலும், இண்வெஸ்டர்கள்/டிரேடர்கள் தேர்ந்தெடுக்கும் பங்குகள், முதலீட்டுச் சாதனங்கள் (FnO, கேஷ் மார்க்கெட், கமாடிட்டி, ம்யூச்சுவல் ஃபண்ட்), வணிகம் செய்யும் உத்திகள், முதலீடு மற்றும் வேறு பல காரணிகள்தான் ஒவ்வொரு முதலீட்டாளரின் வெற்றி, தோல்வியின் அளவுகளை தீர்மானிக்கின்றன.

ஃபண்டமண்டல் அனாலிசிஸ் / டெக்னிக்கல் அனாலிசிஸ் முதலான விஷயங்களை வைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இவையிரண்டுமே, ஒரு 75% சாமான்ய முதலீட்டாளர்களுக்கு கொஞ்சமும் புரிவதில்லை. இரண்டுமே கொஞ்சம் டிரை (dry) சப்ஜெக்ட்கள்தான். நிறைய புத்தகங்கள் வாசித்து, நெட்டில் படித்து, பேஸ்புக் வீடியோக்கள் பார்த்து, ஒரு சில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தாலும் “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது” என்பது போல, டிரேடிங்-கில் உதவுவது போலத் தெரியவில்லை. இதற்கென்ன காரணம்?

இந்த சப்ஜெக்ட்கள் எல்லாம் dry-ஆக இருந்து, படிக்க ஆரம்பிக்கும்போதே பிடிக்க மாட்டேன் என்கிறதல்லவா? இப்போது நான் உங்களுக்கு ஒரு ரொம்பவும் சிம்பிளான பயிற்சி கொடுக்கின்றேன். முயன்று பாருங்கள்! டெக்னிக்கல் அனாலிசிஸ் மீது உங்களுக்கு ஒரு காதல் (……….. ஆமாங்க, காதல்தான்!) வருகிறதாவென்று பாருங்கள். வரும்: கண்டிப்பாக வரும். வரணும்! (நாட்டாம! தீர்ப்ப மாத்திச் சொல்லு)

டெக்னிக்கல் அனாலிசிஸ்-ஐ எப்படி சுவாரஸ்யமாக இருக்குமாறு மாற்றி உங்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்று யோசித்தபோதுதான் (ரூம் போட்டுத்தான் யோசித்தேனுங்க! அதுவும் “மாத்தி யோசி” மாதிரி. 🙂 ) “ஹையா! இது நல்லாருக்கே!”ன்னு தலைக்கு மேலே ஒரு பல்ப் எறிஞ்சிதுங்க!

கடந்த ஜூலை 19-ஆந்தேதியன்று கீழேயிருக்கும் TCS I Hourly chaart போட்டு இந்த கப் அண்ட் ஹாண்டில் பேட்டர்ன் பார்த்தீர்களாவென்று கேட்டிருந்தேன்.

படம் 1: TCS I படம் 1: 20130719 கப் அண்ட் ஹாண்டில் பேட்டர்ன்

படம் 1: TCS I படம் 1: 20130719 கப் அண்ட் ஹாண்டில் பேட்டர்ன்

இப்போது இதே TCS I-இன் இன்றைய நிலையை, Hourly-க்குப் பதிலாக டெய்லி சார்ட்டில் பார்க்கலாம். Hourly-யில் இருந்த அதே மசாலாதான் (8EMA மற்றும் 34EMA-க்கள்) டெய்லியிலும் உள்ளன.

படம் 2: 34EMA-வின் மகிமை!

படம் 2: 34EMA-வின் மகிமை!

என்ன தெரிகிறது? இரண்டாவது படத்திலே 2013 மார்ச் வரையிலும் மேலே சென்ற பங்கானது, ஜூலை வரையிலும் 34EMA-வைச் சுற்றி, சுற்றி வந்தே டூயட் பாடிக் கொண்டிருந்தது. ஜூலையில் மேலே சென்றது, ஆகஸ்ட்டில் கீழே வந்து, 34EMA-வைத் தொட்டுவிட்டு, ரிஜக்ட் ஆகி, மறுபடியும் மேலே சென்றுவிட்டது (என் வழி … தனி வழி… என்பது போல!)

(அது சரிங்க! அஞ்சு மாசமா ஒண்ணா சுத்தித் திரிஞ்சிக்கிட்டிருந்த இந்த ரண்டு பேரும் – அதுதாங்க விலையும், 34EMA-வும்- ஆகஸ்ட்டிலிருந்து ஏங்க பிரிஞ்சிட்டாங்க? 34EMA-வானது விலையை ஏனிப்படித் துரத்தியடிக்குது? ஏதாவது கசமுசாவா?)

“யோவ் .. பெருசு! இந்த வயசான காலத்துல உனக்கேன்யா இந்த அக்கப்போர்”னு சொல்றீங்களா! 🙂

இனிமேல் உங்களோட இண்டரெஸ்ட்தாங்க! உடனே சார்ட்டப் பாருங்க; 34EMA லைன் போடுங்க. ஸ்டாக் டிரெண்டில் இருக்கும்போதும், சைட்வேஸ் மார்க்கெட்டில் இருக்கும்போதும் 34EMA விலையை என்ன செய்கிறதென்பதை நோட் பண்ணுங்க! நிஃப்டி ஃபிஃப்டி ஸ்டாக்ஸ் பாத்தாலே போதுங்க! இந்த சூட்சுமம் நன்றாக விளங்கும்.

நீங்க ரெடியா?

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? உங்களுக்கு இதைப் படிச்சிட்டு, சார்ட்டெல்லாம் 34EMA வச்சிச் செக் பண்ணிட்டப்புறமும், இண்டரெஸ்ட் ரொம்ப அதிகமா இருந்துச்சின்னா, 34-ஐ, 13, 21, 55 அப்படீன்னு மாத்திப் போட்டெல்லாம் மறுபடியும் செக் பண்ணுங்க! என்ஜாய்!

 

காக்கா உட்காரப் பன(ண)ம்பழம் விழுந்த கதையாக……


ஹலோ!

கடந்த 16-ஆந்தேதி வெள்ளிக்கிழமையன்று நிஃப்டியில் முக்கோணம் தெரிகிறதென்று எழுதியிருந்தேனே!  டார்கெட் 1 = 5180 மற்றும் டார்கெட் 2 = 4950 என்றும் கிறுக்கியிருந்தேனே! பொறுத்திருந்து பார்க்கலாமென்றேனே!

“என்னங்க? தேனே… தேனே… ன்னு சொல்றீங்களே”ன்னு  கேக்குறீங்களா? வேறொன்னுமில்லீங்க! இன்னைக்கு நிஃப்டி 5118.85 என்ற அளவு வரை கீழே சென்று வந்துள்ளது. ஆக, டார்கெட் 1 எட்டியாகிவிட்டது. அதுவும் எட்டு நாட்களிகளிலேயே.

இங்கே ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். ஏதோ நான் பார்த்துப் போட்டதாலேயே அந்த டார்கெட் வந்து விட்டதென்று நினைத்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்குப் பிறகுதான் இந்தியா ரூபாயின் மதிப்பு இந்த அளவிற்கு சரியுமென்று எதிர்பார்த்தோமா என்ன?

என்ன ஒன்று, “டெக்னிக்கல் அனாலிசிஸ்-நா ரியர் வியூ மிர்ரர் மாதிரிதான். முன்னமே நடந்ததை வைத்து தியரியாக என்ன வேண்டுமானாலும் அலசலாம்” என்று சொல்பவர்களும் இந்த மாதிரி பேட்டர்ன் பார்த்து டார்கெட் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கலாமே!

16 ஆகஸ்ட் அன்று பார்த்த ட்ரையாங்கில் உடைபட்டு, இன்று டார்கெட் 1 கிடைத்து விட்டது

16 ஆகஸ்ட் அன்று பார்த்த ட்ரையாங்கில் உடைபட்டு, இன்று டார்கெட் 1 கிடைத்து விட்டது

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130816 நிஃப்டியில் ஒரு முக்கோணம்….


ஹலோ!

நிஃப்டியில் ஒரு ட்ரையாங்கில் (triangle – முக்கோணம்) அமைப்பு தெரிகிறது. அது உடைபட்டு, ஒரு ரீ-டெஸ்ட் நடந்து மறுபடியும் உடைபட்டுள்ளது.

உடைபட்ட இடம்: 5650 லெவல்.

அதிலிருந்து இன்னமும் 450 புள்ளிகள் மற்றும் 700 புள்ளிகள் கீழே செல்ல வாய்ப்புள்ள அமைப்பிது.

டார்கெட் 1: 5650-470 = 5180

டார்கெட் 2: 5650-700 = 4950

பொறுத்திருந்து பார்க்கலாம்!

படம்: நிஃப்டியில் தெரியும் முக்கோணம்!

படம்: நிஃப்டியில் தெரியும் முக்கோணம்!

 

 

 

 

சென்னைப் பங்குச்சந்தை (MSE)-யின் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்


சென்னைப் பங்குச்சந்தை (Madras Stock Exchange), முதலீட்டாளர்களுக்கான இலவச விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்களை, பிரதி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 17-ஆந்தேதியன்று  மாலை 4 மணியளவில் அடுத்த முகாம் நடக்க இருக்கிறது.

இடம்: சென்னைப் பங்குச்சந்தை, 4-வது மாடி, எண்-30, செகண்ட் லைன் பீச் (Second Line Beach), சென்னை – 600001. சென்னை பீச் இரயில் நிலையம் & பர்மா பஜார் அருகில், தலைமைத் தபால்நிலையம் பின்புறம்.

தொடர்புக்கு: 044-2521 8100

உரையாற்றுபவர்கள்:

திரு. S. வெங்கடேசன், பொருளாளர், தமிழ்நாடு இன்வெஸ்டார் அசோசியேஷன்

தலைப்பு: “இந்திய  IT துறை – எதிர்காலம்”  (Indian IT services – Future Outlook)

திரு. V. நாகப்பன், இயக்குனர், செ.ப.ச

Mr. V. Nagappan, Director, MSE, will also interact with the participants.

மாலை 3:30pm – 4:00pm: தேநீர்

 

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி………


அப்படியெல்லாம் எதுவுமே இல்லீங்க…. !

அந்த மாதிரி எதுவும் இருந்திருந்தா…. டாடா, பிர்லா, அம்பானிங்க எல்லோருமே ஒரு 20, 30 கம்ப்யூட்டர் வாங்கி, ஒரு 40, 50 பேர வேலைக்கு வச்சிக்கிட்டு, அவங்க கிட்ட இருக்குற காசு எல்லாத்தையுமே கொட்டி ஷேர் மார்க்கெட்டிலேயே பணத்தை சம்பாதிச்சிட மாட்டாங்களா?

அவ்வளவு ஏன்? விஜய் மல்லையாவும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நஷ்டத்தை இங்கே டிரேட் செய்து ஈடு கட்டியிருக்க மாட்டாரா என்ன?

ஆனால், ரீடெயில் (retail) முதலீட்டாளர்களாகிய நாம்தான் இதையெல்லாம் புரிந்து கொள்ள மறுக்கின்றோம். யாரேனும் எடுத்துச் சொன்னாலும், (“இவ்ளோ நல்லவரா நீங்க?” என்பது மாதிரி) அவர்களை ஏற, இறங்க ஒரு லுக் விடுகின்றோம்.

இந்த “சொல்ற பேச்சக் கேக்காம இருக்குறதுக்கு” ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. இது ஒரு கிளாசிக். ஏன்னாக்கா, சொந்தக் காசிலேயே சூன்யம் வச்சிக்கிட்டது இது, அப்படியே கொஞ்சம் “ஒயிங்க்,, ஒயிங்க்,,,னு சக்கரம், சக்கரமா கோடுங்க எல்லாம் சுத்திக்கினே ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்”

2007 இறுதி: 2008 ஜனவரி – மார்க்கெட் ரொம்ப நல்லா ஏறிக்கொண்டேயிருந்த நேரம். நாமெல்லாம் எதை வாங்கினாலும் அது இலாபத்திலேயே மேலே, மேலே சென்றது. நிறைய, நிறைய IPO-க்களும் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமும் இலாபத்தில்தான் லிஸ்ட் ஆகின. அப்போதுதான் RELIANCE POWER (ரிலையன்ஸ் பவர்) என்ற ஒரு மாபெரும் IPO-வும் வந்தது. எங்கேயும் (பாங்க், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டும்போது லைனில் நின்றவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், என்றெல்லாம்) யாரைப் பார்த்தாலும், எந்த டி‌வி சேனலைத் திருப்பினாலும், தினசரிகள், வார, மாத இதழ்கள் எல்லாவற்றிலும் இதைப் பற்றிய பஜனைதான். ஆனால், ஒரு சில நிபுணர்கள் மட்டுமே, “இந்த நிறுவனம் இன்னமும் தனது ஆலைகளை நிறுவவில்லை. இதற்கு வருமானமும் வர நான்கைந்து ஆண்டுகள் ஆகும். எனவே, இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்” என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு சிலரோ, “இது சுடப்படாத ஒரு செங்கல்லை, ஜிகினாத் தாள் கொண்டு கவர் செய்து, அலங்காரமெல்லாம் செய்து கொடுக்கப்படும் ஒரு கிஃப்ட் மாதிரிதான். எனவே இதில் உங்களின் முதலீட்டைத் தவிர்த்துவிடுங்கள். இந்தக் கல் சூளையில் சுடப்பட்டு, செங்கல்லாக மாறி, அதன் பிறகு கட்டப்பட்டு, முடிக்கப்பெறும் வீடுதான் உங்களுக்குத் தேவை. அதற்காக இப்போதே இந்த சுடப்பதாத செங்கல்லை வாங்குவீர்களா?” என்றும் கடுமையாக, ஆனால் அழகான உவமானத்துடன் எச்சரித்தார்கள்.

ஆனால், நாமெல்லாம் கேட்டோமா? கெட்டோம்தான்; இதில் முதலீடு செய்து கெட்டோம்தான். அதிலும் நம்மில் பலரும், இந்த IPO-விற்காகவே, வீட்டிலிருக்கும் நண்டு, சிண்டுகள் பேரிலெல்லாம் பான் கார்ட் வாங்கி, டீமாட் கணக்குத் துவங்கி, எல்லோரது பெயரிலேயும் அப்ளை செய்தோமே! (அப்போதுதான் அடுத்தவனை விட நமக்கு அதிகமாக ஒதுக்கீடு கிடைக்குமென்று!). IPO லிஸ்டிங் ஆன பிறகு அந்த நிறுவனப் பங்கின் விலை எப்படி சென்றதென்று நாமனைவரும் அறிந்த ஒன்றே!

அந்த ஒரு IPO-வே நம்மில் பலருக்கும் சிறந்ததோர் ஆசானாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நான் அதில் நிறையவே கற்றுக்கொண்டேன்.

ஃபிளாஷ்பேக் முடிஞ்சிடிச்சிங்க!

கம்மிங்க் பேக் டூ தி டாபிக், நாம் கற்றுக்கொள்வதில்தானிருக்கிறது நமது வெற்றி, தோல்விகள். அதற்காகத்தான் சென்றவாரம் நான் ஒரு பயிற்சி வகுப்பையும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நடத்தினேன். ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

அதன் தொடர்ச்சியாக மேலும் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு வேறு எப்போது வகுப்புகள் நடைபெறும் என்றும் கேட்டுள்ளீர்கள். கான்பரன்ஸ் ஹால் வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்துவதென்பது ஒரு மாபெரும் சவாலாக உள்ளது.

அதனை ஈடு கட்டவே, நாம் ஏன் இண்டெர்நெட்டை உபயோகிக்கக்கூடாது என்று ஒரு சில நண்பர்கள் தெரிவித்த யோசனையின்படி ஆன்லைனிலேயே ஸ்கைப் மற்றும் டீம்வியூவர் (teamviwer) கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஆரம்பித்து விட்டேன்.

சிலபஸ்:

கிளாஸ் #1 (6 மணி நேரம்)

Beginners: (இளநிலை முதலீட்டாளர்கள் – அதாவது முதல் முதலில் பங்குச் சந்தைக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு)

a) Basics of Fundamental analysis: (ஃபண்டமண்டல் அனாலிசிஸ்) (3 மணி நேரம்) – Quaterly reports, PBT, PAT, QoQ, YoY, IPO, EPS, PE, Bonus Issue.

b) Introduction to Technical analysis: (டெக்னிக்கல் அனாலிசிஸ்) ட்ரெண்ட் லைன், சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ், டிமாண்ட் & சப்ளை, சார்ட் பேட்டர்ன்கள் (3 மணி நேரம்)

கிளாஸ் #2:

3×5 EMA CO ஸ்ட்ராடஜி (3 மணி நேரம்) – பாங்க் நிஃப்டி, நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் EOD முறையில், சார்ட் பார்க்காமல் டிரேட் செய்யலாம்.

கிளாஸ் #3:

34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி (4 மணி நேரம்) – சார்ட் பார்த்து இண்ட்ராடே / ஸ்விங்க் டிரேட் செய்ய ஏற்றது.

விருப்பமுள்ளவர்கள் என்னை 97 8989 6067 என்ற எண்ணிலோ, babukothandaraman@gmail.com என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

ரிஸ்க்கா? அது எனக்கு ரஸ்க் சாப்டற மாதிரி..!


நாம் அனைவரும் ஏதேனும் ஒரு மோட்டார் வாகனம் வைத்துள்ளோம். அவற்றின் கெபாஸிட்டிக்கேற்ப அதிக பட்ச வேகம் 100km, 140km, 200 km என்று ஸ்பீடோமீட்டரில் குறிக்கப்பட்டிருக்கும். நாம் தினசரி வேலைக்குச் செல்லும்போதோ, மார்க்கெட் அல்லது கிரவுண்டிற்குச் செல்லும்போதோ நம்மால் அந்த அளவு வேகத்திற்கு சென்று வருகிறோமா? அவ்வளவு ஏன், எப்போதாவது வெளியூர் போகும்போது ஹை-வேஸில்தான் அந்த அளவு வேகம் சென்றிருக்கிறோமா? சரி! நாம்தான் செல்லவில்லை. ஆனாலும் மற்ற வாகனங்கள் மிக,மிக அதிக பட்ச வேகத்தில் பறக்கின்றனவா? இல்லையே!

ஆனால், டிரேடர்கள் மட்டும் ஏன் உயர்ந்த பட்ச வேகத்திலேயே பறக்க ஆசைப்பட்டு ஆக்சிலரேட்டரில் வைத்த காலை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? (இல்லை முறுக்கிய throttle-ஐ முறுக்கியபடியே வைத்துக்கொண்டு பயணம் செய்ய எத்தனிக்கிறார்கள்?)

வெறும் 30-40 ஆயிரம் வைத்துக்கொண்டு, ஸ்டாக் புரோக்கர் கொடுக்கிறார் என்பதற்காக 7-8 மடங்கு leverage எடுத்து, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலே வர்த்தகம் செய்வது எதற்காக? நாம் டே-டிரேடிங் செய்கிறோம் என்பதற்காக நமக்கு என்ன கொம்பு முளைத்து விட்டதா? நாம் மட்டும்தான் வணிகர்களா என்ன?

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே, நாமும் பல வணிகர்களைச் சந்திக்கின்றோம். மளிகைக்கடை, அரிசிக்கடை வியாபாரிகள், பூ, பழம் விற்பவர்கள், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்பவர்கள் எல்லாம் நம்முடைய ஏரியாவில் நம் கண் முன்னாலேயே வளர்ந்திருப்பார்கள்; வளர்ந்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இவர்களுக்கெல்லாம் என்னதான் வாடிக்கையாளர்கள் ஆதரவு, லொகேஷன் அட்வாண்டேஜ், தரமான சேவை முதலியன நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், நாம் பார்க்க மறப்பது (மறுப்பதும் கூட) அவர்களின் money management எனப்படும் பண மேலாண்மைத் திறன்தான்.

நாம் ஈசியாகச் சொல்லிவிடலாம், “என்ன சார்! அவங்க கையிலே எப்பவுமே பணம் புழங்கிக் கிட்டேயிருக்கு. என்ன பிரச்னை வந்தாலும் சமாளிச்சுடலாமே”ன்னு. அது கரெக்ட்தான்; ஆனாலும் அது மட்டுமே அவர்களின் வெற்றிக்குச் சரியான காரணமில்லை. கையில் பணம் புழங்குவதென்பது வேறு: பிசினசுக்குத் தக்கவாறு, இருக்கும் பணத்தை வைத்துத் தகுந்த அளவு ரிஸ்க் எடுப்பதென்பது வேறு. அவர்களுக்கும் பிஸினஸில் சில, பல சமயங்களில் கஷ்ட, நஷ்டங்கள் வந்திருக்கும். அப்போதெல்லாம் அவர்களின் ரிஸ்க் மானேஜ்மென்ட் எவ்வாறாக இருந்திருக்குமென்று நாம் யோசிக்க வேண்டும்.

மளிகைக்கடைக்காரருக்கு ஒரு சில பிராண்ட் (brand) சரக்குகள் தேங்கிப் போகலாம். பூக்கடைக்காரருக்கும், பழக்கடைக்கடைக்காரருக்கும் சரக்குகள் விற்காமல் அழுகிப் போகலாம்.  இதைத் தவிர்க்கவே அவர்களின் பொசிஷன் சைஸிங் (position sizing- நம்முடைய பாஷையில்) கிருத்திகை, அமாவாசை போன்ற விசேச நாட்களுக்கும், ஏனைய சாதாரண நாட்களுக்கும் வேறுபடும்.

அவர்களுக்குத் தெரியும் எப்போது அதிக ரிஸ்க் எடுக்கலாம்; எப்போது ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்ளவேண்டுமென்று!

இந்தத் தத்துவத்தை டிரேடர்கள் புரிந்து கொண்டார்களேயானால் பங்குச்சந்தையில் நிலைத்திருக்கலாம்; இலாபம் ஈட்டலாம்.

புரிந்து கொள்வோமே!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பயிற்சி வகுப்பின் தாக்கம்!


ஹலோ!

உங்களுக்கெல்லாம் தெரியும் கடந்த ஞாயிறன்று (4/8/2013) என்னுடைய பயிற்சி வகுப்பு  நடந்து முடிந்ததென்று. ஒரு சில புதிய முதலீட்டாளர்களுக்கு இது கொஞ்சம் ஓவர்டோஸ் போலத்தானிருந்ததாம்.

ஒரு சில லாங் டெர்ம் முதலீட்டாளர்கள் 34EMA -வை வைத்து குறுகிய கால ஸ்விங்க் டிரேட் பொசிஷன்கள்  எடுக்கலாமேவென்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

ஒரு சில டேடிரேடர்கள் 3×5 EMA- எக்ஸெல் முறையை வைத்து இன்டெக்ஸ்-இல் பொசிஷன் டிரேட் எடுக்கலாமேவென்றும் நினைக்கிறார்களாம்.

எனக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நமது காளையும் கரடியும் வாசகர்களில் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு ஊக்கம் கொடுத்ததால்தான் (ஊக்கம் மட்டும்தாங்க! ஊக்க மருந்து இல்லீங்க!) இது வெற்றியடைய காரணமாக இருந்தது என்று சொல்லலாம்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

நண்பர் ஸ்ரீநிவாசன் DM அவர்களின் பாங்க் நிஃப்டி 34இ‌எம்‌ஏ ரிஜக்ஷன் ஷார்ட். சபாஷ்!

SriniDM பாங்க் நிஃப்டி 20130806 34EMA ரிஜக்ஷன் குறிப்புகள்

SriniDM பாங்க் நிஃப்டி 20130806 34EMA ரிஜக்ஷன் குறிப்புகள்