ரிஸ்க்கா? அது எனக்கு ரஸ்க் சாப்டற மாதிரி..!


நாம் அனைவரும் ஏதேனும் ஒரு மோட்டார் வாகனம் வைத்துள்ளோம். அவற்றின் கெபாஸிட்டிக்கேற்ப அதிக பட்ச வேகம் 100km, 140km, 200 km என்று ஸ்பீடோமீட்டரில் குறிக்கப்பட்டிருக்கும். நாம் தினசரி வேலைக்குச் செல்லும்போதோ, மார்க்கெட் அல்லது கிரவுண்டிற்குச் செல்லும்போதோ நம்மால் அந்த அளவு வேகத்திற்கு சென்று வருகிறோமா? அவ்வளவு ஏன், எப்போதாவது வெளியூர் போகும்போது ஹை-வேஸில்தான் அந்த அளவு வேகம் சென்றிருக்கிறோமா? சரி! நாம்தான் செல்லவில்லை. ஆனாலும் மற்ற வாகனங்கள் மிக,மிக அதிக பட்ச வேகத்தில் பறக்கின்றனவா? இல்லையே!

ஆனால், டிரேடர்கள் மட்டும் ஏன் உயர்ந்த பட்ச வேகத்திலேயே பறக்க ஆசைப்பட்டு ஆக்சிலரேட்டரில் வைத்த காலை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? (இல்லை முறுக்கிய throttle-ஐ முறுக்கியபடியே வைத்துக்கொண்டு பயணம் செய்ய எத்தனிக்கிறார்கள்?)

வெறும் 30-40 ஆயிரம் வைத்துக்கொண்டு, ஸ்டாக் புரோக்கர் கொடுக்கிறார் என்பதற்காக 7-8 மடங்கு leverage எடுத்து, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலே வர்த்தகம் செய்வது எதற்காக? நாம் டே-டிரேடிங் செய்கிறோம் என்பதற்காக நமக்கு என்ன கொம்பு முளைத்து விட்டதா? நாம் மட்டும்தான் வணிகர்களா என்ன?

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே, நாமும் பல வணிகர்களைச் சந்திக்கின்றோம். மளிகைக்கடை, அரிசிக்கடை வியாபாரிகள், பூ, பழம் விற்பவர்கள், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்பவர்கள் எல்லாம் நம்முடைய ஏரியாவில் நம் கண் முன்னாலேயே வளர்ந்திருப்பார்கள்; வளர்ந்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இவர்களுக்கெல்லாம் என்னதான் வாடிக்கையாளர்கள் ஆதரவு, லொகேஷன் அட்வாண்டேஜ், தரமான சேவை முதலியன நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், நாம் பார்க்க மறப்பது (மறுப்பதும் கூட) அவர்களின் money management எனப்படும் பண மேலாண்மைத் திறன்தான்.

நாம் ஈசியாகச் சொல்லிவிடலாம், “என்ன சார்! அவங்க கையிலே எப்பவுமே பணம் புழங்கிக் கிட்டேயிருக்கு. என்ன பிரச்னை வந்தாலும் சமாளிச்சுடலாமே”ன்னு. அது கரெக்ட்தான்; ஆனாலும் அது மட்டுமே அவர்களின் வெற்றிக்குச் சரியான காரணமில்லை. கையில் பணம் புழங்குவதென்பது வேறு: பிசினசுக்குத் தக்கவாறு, இருக்கும் பணத்தை வைத்துத் தகுந்த அளவு ரிஸ்க் எடுப்பதென்பது வேறு. அவர்களுக்கும் பிஸினஸில் சில, பல சமயங்களில் கஷ்ட, நஷ்டங்கள் வந்திருக்கும். அப்போதெல்லாம் அவர்களின் ரிஸ்க் மானேஜ்மென்ட் எவ்வாறாக இருந்திருக்குமென்று நாம் யோசிக்க வேண்டும்.

மளிகைக்கடைக்காரருக்கு ஒரு சில பிராண்ட் (brand) சரக்குகள் தேங்கிப் போகலாம். பூக்கடைக்காரருக்கும், பழக்கடைக்கடைக்காரருக்கும் சரக்குகள் விற்காமல் அழுகிப் போகலாம்.  இதைத் தவிர்க்கவே அவர்களின் பொசிஷன் சைஸிங் (position sizing- நம்முடைய பாஷையில்) கிருத்திகை, அமாவாசை போன்ற விசேச நாட்களுக்கும், ஏனைய சாதாரண நாட்களுக்கும் வேறுபடும்.

அவர்களுக்குத் தெரியும் எப்போது அதிக ரிஸ்க் எடுக்கலாம்; எப்போது ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்ளவேண்டுமென்று!

இந்தத் தத்துவத்தை டிரேடர்கள் புரிந்து கொண்டார்களேயானால் பங்குச்சந்தையில் நிலைத்திருக்கலாம்; இலாபம் ஈட்டலாம்.

புரிந்து கொள்வோமே!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

6 Responses to ரிஸ்க்கா? அது எனக்கு ரஸ்க் சாப்டற மாதிரி..!

 1. rajesh says:

  Dear Babu Sir,
  This is really such a valuable tip for any trader. Thanx again for educating us.
  Rajesh

 2. Thanks and your real life examples are really excellent!!
  Nachunu killivitta madiri iruku!!

 3. Geetha says:

  Super Punch sir. Example samaya irundhudu.. Brokers are giving leverages just to lose our captial. We need to be very careful on that. Nice article sir.

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: