பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி………


அப்படியெல்லாம் எதுவுமே இல்லீங்க…. !

அந்த மாதிரி எதுவும் இருந்திருந்தா…. டாடா, பிர்லா, அம்பானிங்க எல்லோருமே ஒரு 20, 30 கம்ப்யூட்டர் வாங்கி, ஒரு 40, 50 பேர வேலைக்கு வச்சிக்கிட்டு, அவங்க கிட்ட இருக்குற காசு எல்லாத்தையுமே கொட்டி ஷேர் மார்க்கெட்டிலேயே பணத்தை சம்பாதிச்சிட மாட்டாங்களா?

அவ்வளவு ஏன்? விஜய் மல்லையாவும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நஷ்டத்தை இங்கே டிரேட் செய்து ஈடு கட்டியிருக்க மாட்டாரா என்ன?

ஆனால், ரீடெயில் (retail) முதலீட்டாளர்களாகிய நாம்தான் இதையெல்லாம் புரிந்து கொள்ள மறுக்கின்றோம். யாரேனும் எடுத்துச் சொன்னாலும், (“இவ்ளோ நல்லவரா நீங்க?” என்பது மாதிரி) அவர்களை ஏற, இறங்க ஒரு லுக் விடுகின்றோம்.

இந்த “சொல்ற பேச்சக் கேக்காம இருக்குறதுக்கு” ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. இது ஒரு கிளாசிக். ஏன்னாக்கா, சொந்தக் காசிலேயே சூன்யம் வச்சிக்கிட்டது இது, அப்படியே கொஞ்சம் “ஒயிங்க்,, ஒயிங்க்,,,னு சக்கரம், சக்கரமா கோடுங்க எல்லாம் சுத்திக்கினே ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்”

2007 இறுதி: 2008 ஜனவரி – மார்க்கெட் ரொம்ப நல்லா ஏறிக்கொண்டேயிருந்த நேரம். நாமெல்லாம் எதை வாங்கினாலும் அது இலாபத்திலேயே மேலே, மேலே சென்றது. நிறைய, நிறைய IPO-க்களும் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமும் இலாபத்தில்தான் லிஸ்ட் ஆகின. அப்போதுதான் RELIANCE POWER (ரிலையன்ஸ் பவர்) என்ற ஒரு மாபெரும் IPO-வும் வந்தது. எங்கேயும் (பாங்க், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டும்போது லைனில் நின்றவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், என்றெல்லாம்) யாரைப் பார்த்தாலும், எந்த டி‌வி சேனலைத் திருப்பினாலும், தினசரிகள், வார, மாத இதழ்கள் எல்லாவற்றிலும் இதைப் பற்றிய பஜனைதான். ஆனால், ஒரு சில நிபுணர்கள் மட்டுமே, “இந்த நிறுவனம் இன்னமும் தனது ஆலைகளை நிறுவவில்லை. இதற்கு வருமானமும் வர நான்கைந்து ஆண்டுகள் ஆகும். எனவே, இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்” என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு சிலரோ, “இது சுடப்படாத ஒரு செங்கல்லை, ஜிகினாத் தாள் கொண்டு கவர் செய்து, அலங்காரமெல்லாம் செய்து கொடுக்கப்படும் ஒரு கிஃப்ட் மாதிரிதான். எனவே இதில் உங்களின் முதலீட்டைத் தவிர்த்துவிடுங்கள். இந்தக் கல் சூளையில் சுடப்பட்டு, செங்கல்லாக மாறி, அதன் பிறகு கட்டப்பட்டு, முடிக்கப்பெறும் வீடுதான் உங்களுக்குத் தேவை. அதற்காக இப்போதே இந்த சுடப்பதாத செங்கல்லை வாங்குவீர்களா?” என்றும் கடுமையாக, ஆனால் அழகான உவமானத்துடன் எச்சரித்தார்கள்.

ஆனால், நாமெல்லாம் கேட்டோமா? கெட்டோம்தான்; இதில் முதலீடு செய்து கெட்டோம்தான். அதிலும் நம்மில் பலரும், இந்த IPO-விற்காகவே, வீட்டிலிருக்கும் நண்டு, சிண்டுகள் பேரிலெல்லாம் பான் கார்ட் வாங்கி, டீமாட் கணக்குத் துவங்கி, எல்லோரது பெயரிலேயும் அப்ளை செய்தோமே! (அப்போதுதான் அடுத்தவனை விட நமக்கு அதிகமாக ஒதுக்கீடு கிடைக்குமென்று!). IPO லிஸ்டிங் ஆன பிறகு அந்த நிறுவனப் பங்கின் விலை எப்படி சென்றதென்று நாமனைவரும் அறிந்த ஒன்றே!

அந்த ஒரு IPO-வே நம்மில் பலருக்கும் சிறந்ததோர் ஆசானாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நான் அதில் நிறையவே கற்றுக்கொண்டேன்.

ஃபிளாஷ்பேக் முடிஞ்சிடிச்சிங்க!

கம்மிங்க் பேக் டூ தி டாபிக், நாம் கற்றுக்கொள்வதில்தானிருக்கிறது நமது வெற்றி, தோல்விகள். அதற்காகத்தான் சென்றவாரம் நான் ஒரு பயிற்சி வகுப்பையும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நடத்தினேன். ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

அதன் தொடர்ச்சியாக மேலும் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு வேறு எப்போது வகுப்புகள் நடைபெறும் என்றும் கேட்டுள்ளீர்கள். கான்பரன்ஸ் ஹால் வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்துவதென்பது ஒரு மாபெரும் சவாலாக உள்ளது.

அதனை ஈடு கட்டவே, நாம் ஏன் இண்டெர்நெட்டை உபயோகிக்கக்கூடாது என்று ஒரு சில நண்பர்கள் தெரிவித்த யோசனையின்படி ஆன்லைனிலேயே ஸ்கைப் மற்றும் டீம்வியூவர் (teamviwer) கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஆரம்பித்து விட்டேன்.

சிலபஸ்:

கிளாஸ் #1 (6 மணி நேரம்)

Beginners: (இளநிலை முதலீட்டாளர்கள் – அதாவது முதல் முதலில் பங்குச் சந்தைக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு)

a) Basics of Fundamental analysis: (ஃபண்டமண்டல் அனாலிசிஸ்) (3 மணி நேரம்) – Quaterly reports, PBT, PAT, QoQ, YoY, IPO, EPS, PE, Bonus Issue.

b) Introduction to Technical analysis: (டெக்னிக்கல் அனாலிசிஸ்) ட்ரெண்ட் லைன், சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ், டிமாண்ட் & சப்ளை, சார்ட் பேட்டர்ன்கள் (3 மணி நேரம்)

கிளாஸ் #2:

3×5 EMA CO ஸ்ட்ராடஜி (3 மணி நேரம்) – பாங்க் நிஃப்டி, நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் EOD முறையில், சார்ட் பார்க்காமல் டிரேட் செய்யலாம்.

கிளாஸ் #3:

34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி (4 மணி நேரம்) – சார்ட் பார்த்து இண்ட்ராடே / ஸ்விங்க் டிரேட் செய்ய ஏற்றது.

விருப்பமுள்ளவர்கள் என்னை 97 8989 6067 என்ற எண்ணிலோ, babukothandaraman@gmail.com என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

13 Responses to பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி………

 1. sir சொன்ன மாதிரி சம்பாதிப்பது சுலபம்னா டாடா,பிர்லா எல்லாரும் சம்பாதிச்சுருவாரு வாஸ்தவம்தான்.ஆனா நீங்க பங்குசந்தையில் சம்பாதிக்க பயிற்சி அளிப்பதா சொல்றீங்க இது உண்மையான வழினா டாடா,பிர்லா உங்ககிட்ட பயிற்சி எடுத்து சம்பாதிக்கலாம்ல.ஏன்னா அவுங்க கோடீஸ்வரர் அவுங்க மூதலீடு செய்து சம்பாதிக்கல்லாம்ல ஒரு சின்ன சந்தேகம்தான்.

  • //ஒரு சின்ன சந்தேகம்தான்.//
   சபாஷ்! சரியான கேள்வி சுரேஷ்!
   1) அவர்களின் ஒரு சில கம்பெனிகளும் (பேலன்ஸ் ஷீட்டைப் பார்த்தால் தெரிய வரும்), ஹெட்ஜிங் (hedging) என்ற முறையிலே டிரேடிங்கில் ஈடுபடுகிறார்கள்; மற்ற சில கம்பெனிகளின் பங்குகளிலும் முதலீடு செய்கிறார்கள்.
   2) அவங்க என்கிட்ட பயிற்சி எடுக்க வந்தார்களேயானால், அவர்களுக்கும் நான் மிக்க மகிழ்ச்சியுடன் (உங்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பேனோ, அது போலவேதான்) சொல்லிக்கொடுக்கத் தயார்.

   வெற்றியும், தோல்வியும் என்ன என்பதைப் பற்றித் தங்களின் முகநூல் முகப்பிலேயே போட்டு வைத்திருக்கும் நீங்கள் அறியாததல்ல இது. 🙂

   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

 2. Uday says:

  Hi, I know nothing in shares……but a little bit of abc. Will this class be usefull for me? Is any fees involved; if yes how much?

 3. Bala says:

  Excellent decision sir. I was feeling bad that I could not attend your session. Hopefully I can make it this time.

  Thank you,

  Balakrishnan

 4. venkatesh says:

  என்னால் தங்களுடைய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த ஆன்லைன் பயிற்சி விபரங்களை தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

  • ஹலோ திரு வெங்கடேஷ்,
   தகவல்களை ஈமெயிலில் அனுப்பியுள்ளேன். தங்களின் inbox-இல் பார்க்கவும்.
   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

 5. ஐயா நான் இன்னிக்கிதான் உங்க வலைதளத்தையே எதேச்சையா பார்த்தேன் .
  ரொம்பவே மிஸ் பண்ணிட்டோமோன்னுதான் பீல் பண்றேன்.என்ன ஒரு யதார்த்தநடை.என்னை மாதிரி ஆங்கில அறிவு ரொம்ப கம்மியா வச்சிக்கிட்டு
  முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபட்டகதையா,நானும் பங்குச்சந்தையில
  சாதிக்கணும் என்ற வெறியோடு உள்ளே வந்தேன்.ஆனா ஏகப்பட்ட (லட்சங்கள்)
  பணத்தை இழந்ததுதான் மிச்சம்.இப்பதான் கொஞ்சம்,கொஞ்சம்னா உங்க நாலேஜ்ல ஆயிரத்தில,இல்ல லட்சத்தில ஒருபங்கு கத்து கிட்டு லாபம் கம்மியா இருந்தாலும் பரவால்ல நஷ்ட்டம் வந்துடக்கூடாதுன்னு,ரொம்ப ஜாக்கிரதையா
  பண்ணிகிட்டிருக்கேன்.எனக்கு உங்க வலைதளத்த படிச்ச உடனே அம்பானி,வாரன்
  பப்பட்டேல்லாம் கனவுல வராங்க.சார்.இனிமேல் தொடர்ந்து உங்க வலைதளத்துல பவனிப்பேன்.தொடர்ந்து இதே மாதிரி எளிய நடைல உங்க மனச எங்களுக்கு காட்டுங்க ,நன்றி!வாழ்த்துக்கள் !!

  • ஹலோ திரு.வரதராஜன்,
   தங்களின் கருத்துக்களுக்கு நன்றி!
   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

 6. lL says:

  Goodmorning B kothandaraman sir , I am LS from tiruchendur. i am a commerce graduate,i am doing the business as a part time in my house recently started only. For the past 5years i am collecting the sharmarket knowledge i.e.investing, trading of shares etc.,from variousbooks and newspapers and also from t.v. also from NanayamVikatan tamil .weekly.last week i saw your kkwp website.its verynice and simple for the beginnersalso.thank u very much..please guide me one Q i.e what are thewebsites are there to know about sharemarkets ,pricegraphs and their techniques&fundamantalanalysis.etc…please give me the names of them otherthan the following websites.moneycomtrol.com,niftydoctor,nseindia.com,niftyfiftystocks.com,,www.icharts.in/charts.html.please guide me thankyou sir i am expecting ur reply soon.thank you.

  • Hello LS!
   Thanks for your feedback.
   Good luck for your biz success!
   Websites: Of all the websites mentioned I visit only the NSE.com.
   icharts: I’m not a frequent visitor. But there are a lot of trading systems available.
   I’ve frequented and contributed regularly in traderji.com and inditraders.com. Of late, I don’t visit them.
   Please understand that “the learning” is entirely different from “the trading”. Markets are the best teacher.
   So, if you could understand a few trading strategies from these sites, you may analyze and initiate trades based on them and find out what suits for you!
   Good luck!
   Regards,
   Babu Kothandaraman

 7. arulmurugan says:

  Hi, I know nothing in shares……but a little bit of abc. Will this class be usefull for me? Is any fees involved; if yes how much?

  regards
  K.arulmurugan

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: