பாகம் 2 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு


ஹலோ!

ஓ! வாட் எ மெடிக்கல் மிராக்கிள்!

நேற்று பாகம் 1-இல் (இதனைப் படிக்க இங்கே கிளிக்கிடவும்) WIPRO மற்றும் IDFC ஆப்ஷன்களில் வெவ்வேறு விதமான ஸ்ட்ராடஜிக்களில் கால் & புட் வாங்கி, எக்ஸ்பைரி வரை வைத்திருந்தால், எந்த அளவிற்கு இலாபம் (பேப்பரில்தானுங்க! இதெல்லாம் இன்னும் டிரேட் பண்ண ஆரம்பிக்கலை) வருகிறதென்றும் எழுதியிருந்தேன்.

இந்த IDFC-யில் நியர் OTM (Near OTM)தான் வாங்குவது போல பேக் டெஸ்ட் செய்திருந்தேன். அதிலே 609% – அதாவது போட்ட முதலுக்கு, 6 மடங்கு வரை இலாபம் வருவதாகக் குறித்திருந்தேன்.

(நியர் OTM: 14/8 அன்று ஃப்யூச்சர் 112.30 லெவலில் இருந்தபோது Aug120CE & Aug100PE – இவற்றில் லாங் பொசிஷன் எடுத்தது. இதுதான் 28/8 அன்று ஸ்குயர் ஆஃப் செய்யும்போது, 15 நாட்களில் 6 மடங்கு இலாபத்தைத் தருவதாக இருக்கின்றது)

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
IDFC 14-Aug 112.3   14-Aug   28-Aug 15 days
        112.30   at 79.50 P & L  
      AUG120CE 1.50   0.05 32,300.00  
      AUG100PE 1.15   18.75    
QTY 2000   TOTAL 2.65 0.00 18.80 P & L %  
      Amount 5300 0 37600 609%  

இதற்கே நான் மலைத்துப் போய், “ஆப்ஷனில் இந்த அளவிற்கு சாத்தியமா?” என்றும் கேட்டிருந்தேன். “அட! இதெல்லா ஜூஜுபி-ங்க!” என்பது போல அடுத்து வரும் ஒரு கணக்கு காட்டுகிறது.

இந்த நியர் OTM (near OTM) – ஐக் கொஞ்சம் ஃபார் OTM (Far OTM)-ஆக மாற்றினால் என்ன இலாபம் கிடைக்கிறதென்பதுதான் இந்த “மெடிக்கல் மிராக்கிள்” கட்டுரையின் சாராம்சம்!

இதுல, ஒண்ணு (ஆக்சுவலா, இரண்டு) நீங்க நல்லா புரிஞ்சிக்கணுமுங்க!

நியர் OTM: விலை 110-இல் இருக்கும்போது அதற்குப் பக்கத்திலேயே இருக்கும் 120CE & 100PE எல்லாம் நியர் OTM வகைப்படும் ஆப்ஷன்கள்.

ஃபார் OTM (Far OTM): தற்போதைய மார்க்கெட் விலைக்கு ரொம்ப தூரத்தில் இருக்கும் ஸ்டிரைக் ப்ரைஸ்களான 130CE & 90PE போன்றவை இந்த வகையிலே சேர்க்கலாம்.

(என்னங்க! இந்த நியர் மற்றும் ஃபார் OTM-கள் பற்றிய விளக்கங்கள் ஈஸியாகப் புரியுதுங்களா?)

அடுத்ததாக, இந்த ஃபார் (Far) OTM-களான 130CE மற்றும் 90PE-க்களை வாங்கினால், இதே 15 நாட்களில் அது சுமார் 15-1/2 மடங்கு (1545%) இலாபம் தருவதாகக் கூறுகிறது.

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
IDFC 14-Aug 112.3   14-Aug   28-Aug 15 days
        112.3   at 79.50 P & L  
      AUG130CE 0.20   0.05 17,000.00  
      AUG90PE 0.35   9.00    
QTY 2000   TOTAL 0.55 0.00 9.05 P & L %  
      Amount 1100 0 18100 1545%  

இது உண்மையிலே சாத்தியமா? கணக்குகளின் படி இது சாத்தியமாகத்தான் தெரிகிறது. ஆனால், நடைமுறைப் படுத்துவதெப்படி?

இதுதான் ஒரு சில விதிமுறைகளுக்குட்பட்டு, டிரேடிங் ஸ்ட்ராடஜிக்களை கடைபிடித்து வணிகம் (பிசினஸ்) செய்வதற்கான வழிமுறையாக இருக்கும்.

இதையே சூதாட்டமாக (gambling) மாற்றுவதெப்படி? ரொம்ப சிம்பிள்! இதிலே இலாபம் தருவது PE-தான். எனவே 130CE வாங்குவதை நமது கணக்கிலிருந்து நீக்கி விடலாம். எனவே, 14/8 அன்று 90PE மட்டும் வாங்குவதாக (குருட்டாம்போக்கில், எந்தவொரு ஸ்ட்ராடஜியும் இல்லாமல்) வைத்தால் அது சுமார் 25 மடங்கு (2471%) இலாபம் தருவதாகக் காட்டுகிறது.

ஆனால், இதை மட்டும் வாங்க வேண்டுமென்று நமக்கெப்படித் தெரியும்? அதனால்தான் இந்தவொரு டிரேடை மட்டும் – சூதாட்டம் – என்று சொல்கிறேன்

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
IDFC 14-Aug 112.3   14-Aug   28-Aug 15 days
        112.3   at 79.50 P & L  
              17,300.00  
      AUG90CE 0.35   9.00    
QTY 2000   TOTAL 0.35 0.00 9.00 P & L %  
      Amount 700 0 18000 2471%  

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு:

1. இவையெல்லாம் இதுவரையிலும் பேப்பர் டிரேட்கள் தான். ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்.

2. இவை போன்ற 6 மடங்கு, 15 மடங்கு, 25 மடங்கு இலாபம் என்றெல்லாம் படிக்கும்போது, உங்கள் மனத்திலேற்படும் (பேர்)ஆசைகளை அடக்கி, மூளை போடும் கணக்குகளுக்குட்பட்டு, “இது சாத்தியமா? நடைமுறைக்கு ஏற்றதா?” என்ற கேள்விகளை நீங்க கேட்க ஆரம்பிச்சிங்கன்னா, மிகவும் சீக்கிரமாகவே நீங்க ஒரு கட்டுப்பாடான  டிரேடரா வந்துடுவீங்க!

நீங்க…………. நல்லா வருவீங்க!

Advertisements

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

4 Responses to பாகம் 2 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு

 1. Ram says:

  சற்றே பெரிய கமெண்ட் 🙂

  1) இந்த ஸ்டாக்கில் F & O வர்த்தகம் செய்வது என்று எப்படி முடிவு செய்தீர்கள். அதை தனிப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறீர்களா?

  2) நீங்கள் செய்துள்ளது போல straddle trade – ஏதாவது ஒரு திசையில் நல்ல அதிகப்படியான மூவ்மென்ட் உள்ள போது லாபம் கொடுக்கும். பக்கவாட்டு/sideways மூவ்மென்ட் உள்ள போது PE, CE இரண்டுமே நஷ்டமாகிற வாய்ப்பு இருக்கிறது. இங்கே தான் எந்த பங்கை வர்த்தகம் செய்ய தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியத்துவம் பெருகிறது.

  3) OTM CE , PE – மிகவும் illiquid ஆக இருக்க வாய்ப்புள்ளது.

  4) இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையாக இருக்கலாம் –
  பெரும்பாலும் ஆரம்பத்தில் சரியான stoploss வைப்பது இல்லை. இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டு, 2 ரூபாய்க்கு வாங்கிய PE ஐ 2.5 க்கு விற்று இருந்தால் கொஞ்சம் லாபத்தோடு வெளியே வந்திருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இதன் விளைவாக அடுத்தடுத்த trade களில் மிக சீக்கிரமே விற்று லாபத்தை புக் செய்கிற தவறு நிகழ்கிறது

  • ஹலோ ராம்,
   1. F&O டிரேட் செய்ய எந்தப் பங்கைத் தேர்வு செய்வது என்பது பற்றி சொல்வதானால், நான் நிஃப்டி 50-இல் இருக்கும் ஸ்டாக்குகளை மட்டுமே ரேண்டம் (random) முறையில் பேக் டெஸ்ட் செய்கிறேன்.
   2. பக்கவாட்டு மார்க்கெட்டுக்கு உதவாத ஸ்ட்ராடஜி. அதனால், அது போன்ற சமயங்களில் செய்த முதலீடு பூராவும் நஷ்டமாகும் வாய்ப்புள்ள ஸ்ட்ராடஜி இது.
   3. OTM ஆப்ஷன்கள் இது போன்ற ஸ்டாக்குகளில் மிகவும் குறைந்த அளவே வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதால், நான் இன்டெக்ஸ் ஆப்ஷன்களில் பேக் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.
   4. //இதன் விளைவாக அடுத்தடுத்த trade களில் மிக சீக்கிரமே விற்று லாபத்தை புக் செய்கிற தவறு நிகழ்கிறது// அனைவரும் செய்கின்ற ஒன்றுதானே இது. அதனால்தான், இந்த ஸ்ட்ராடஜியில் “எது நடந்தாலும், (மிகப் பெரிய இலாபம் வரும்போது தவிர) எக்ஸ்பைரி வரை ஹோல்ட் செய்து பார்க்கலாமே” என்ற ஒரு விதியினை உள்ளடக்கியுள்ளேன்.

   அன்புடன்,
   பாபு கோதண்டராமன்

 2. Aravindan says:

  ஹாய் பாபு ,

  தயவு செய்து உங்கள் நம்பர் அல்லது ஈமெயில் தர முடியுமா ? எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

  இப்படிக்கு அரவிந்தன் .

  எனது ஈமெயில் fearfearsme14@gmail.com

  Please reply

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: