நாணயம் டாட் காமில் எனது ரிலையன்ஸ் அலசல்!


ஹலோ!

படித்துப் பார்த்து, எவ்வளவு தேறுமென்று அங்கேயே மார்க் போடுங்களேன்!

எது நன்றாக இருந்தது; எது நன்றாக இல்லை என்றெல்லாம் கொஞ்சம் சொன்னீர்களேயானால், அடுத்து வரும் கட்டுரைகளுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க இங்கே கிளிக்கடவும்

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Advertisements

நாணயம் விகடன் டாட் காமில் எனது ITC அலசல்


ஹலோ!

இந்த முதலிரண்டு படங்களும் ஐ‌டி‌சியின் அபார வளர்ச்சியினைக் காட்டுகின்றனவாக அமைந்துள்ளன.

18 மாதங்களில் 125% வளர்ச்சியும், அதிலேயே zoom

செய்யப்பட ஏழு மாதங்களில் 60% வளர்ச்சியுமாக, செப்டம்பர் ’11-இல் 181 லெவலைத் தொட்ட விலை,

அதற்குப் பின்னர் 165 என்ற லெவல் வரை இறங்கி வந்துள்ளது. இந்த

மேலும் படித்திட இங்கே கிளிக்கிடவும்

உங்களது மேலான கருத்துக்களை அங்கேயே தயவு செய்து பதிவு செய்யவும்! நன்றிகள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

விகடன் டாட் காம்-இல் எனது அலசல்: TATASTEEL


ஹலோ!

“வேறென்ன வேண்டும்….

இது போதும் எனக்கு”

என்று பாடலாம் போலிருக்கிறது.

சென்ற வாரம் எனது “பங்குச்சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்” என்ற கட்டுரை முதல் முறையாக 6.10.2013 தேதியிட்ட நாணயம் விகடனில் அச்சிலேறியது உங்களில் பலருமறிந்த ஒன்றுதான்.

நேற்றோ, “EZ டெக்னிக்கல் அனாலிசிஸ் டாடா ஸ்டீல் அலசல்” என்ற இன்னுமொரு கட்டுரை, (ஹூம்…. கட்டுரை என்று சொல்ல முடியாது; “படம் வரைந்து பாகங்களைக் குறித்து விளக்கமாக எழுது” என்ற 20 மார்க் கொஸ்டீன் போல ஒரு விளக்கமானதொரு விளக்கம்) விகடன் குழுமத்தாரின் இணையதளத்திலே வெளியாகிவுள்ளது.

இதனைப் படிக்க இங்கே கிளிக்கிடவும்.

இதிலே ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நாணயம் விகடன் இணைய தளத்திலே “உங்கள் கருத்து” (படத்திலே வட்டமிடப்பட்டுள்ளது)  என்ற பகுதியில் உங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும்; நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டவும். உங்களது கருத்துக்கள்தான் எனக்கு டானிக்.

உங்களது கருத்துக்களை, எண்ணங்களை இங்கே தயவு செய்து பதிவு செய்யுங்கள்!

உங்களது கருத்துக்களை, எண்ணங்களை கட்டுரையின் முடிவினிலே, இங்கே தயவு செய்து பதிவு செய்திடுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: பேட்டர்ன்களும் டிரேடுகளும் YESBANK


ஹலோ!

YESBANK-இல் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு தலைகீழ் ஹெட் & ஷோல்டர் (I HnS) பேட்டர்னை கவனித்து வருகிறேன்.

இதிலே கவனிக்க வேண்டியவை:

1. இருக்கும் டிரெண்டோ கீழ்த்திசையிலே.

2. இந்த அமைப்போ ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸல் பேட்டர்ன்.

3. சோ, BUY சிக்னல் கன்ஃபர்மேஷன் கிடைக்கும் போது, தகுந்த stoploss வைத்து லாங் பொசிஷன் எடுக்கவேண்டும்.

4. இந்த பேட்டர்ன் ஃபெய்லியர் ஆகி, டிரெண்டின் திசையிலேயே தனது பயணத்தைத் தொடருமானால், நமது பொசிஷனை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மேலும் பல விபரங்கள் படங்களிலேயே!

படம் 1: YESBANK-இல் தெரியும் ஒரு டௌன்ட்ரெண்ட்
படம் 1: YESBANK-இல் தெரியும் ஒரு டௌன்ட்ரெண்ட்

1. 17/05/13 அன்றைய ஹை 517.70 என்ற லெவலிலிருந்து 28/08/13 அன்றைய லோ 225.85 என்ற லெவல் வரை கீழே இறங்கியுள்ளது. சுமார் மூன்று மாதம் 10 நாட்களில் விலையானது சுமார் 43% வரை கீழே இறங்கியுள்ளது. படத்திலே தெரியும் படத்தினிலே குறிப்பிடப்பட்டுள்ள லோயர் லோ (LL – Lower Low), லோயர் ஹை (LH – Lower High)-க்களும் தற்போதிருக்கும் டௌன்ட்ரெண்டினை உறுதி படுத்துகின்றன.

 

2. இந்த இரண்டாவது படத்திலே முந்தைய படத்திலிருக்கும் குறிப்புகளையெல்லாம் நீக்கிவிட்டு, தற்போது ஒரு தலைகீழ் ஹெட் & ஷோல்டர் (I-H&S: Inverted Head & Shoulders) அமைப்பினைக் குறித்துள்ளேன். இதிலே LS = லெஃப்ட் ஷோல்டர்; RS= ரைட் ஷோல்டர். நெக்லைன் என்பது தலைப் பகுதி ஷோல்டர்களுடன் சேரும் இடங்களை இணைத்து வரையப்பட்டுள்ள கழுத்துப்பகுதியாகும்.

படம் 2: தலைகீழ் ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன் - Inverted Head & Shoulder pattern (I HnS)

படம் 2: தலைகீழ் ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன் – Inverted Head & Shoulder pattern (I HnS)

 இந்த சார்ட் பேட்டர்னிலே, நெக்லைன்  313-318 என்ற லெவல்களிலேயிருந்து, ஒரு ரெஸிஸ்டன்ஸாக இருக்கின்றது. நமக்குத் தேவை என்ன தெரியுமா? இந்த ரெஸிஸ்டன்ஸ் உடை(தை)பட்டு, விலை மேலே செல்ல வேண்டும். அதுவும் மிகுந்த வால்யுமுடன் இந்த ரெஸிஸ்டன்ஸ் உடைக்கப்பட வேண்டும். ஒரு டிரேட் சும்மா எடுத்து விடலாமா? கூடாது.3. “ரிஸ்க் எவ்வளவு? ரிவார்ட் எவ்வளவு?” என்று கணக்கிட வேண்டும்: சப்போஸ் நெக்லைன் உடைபட்டு விலை மேலே சென்றால், எதுவரை செல்லும்? எங்கே ஸ்டாப்லாஸ் வைப்பது? டார்கெட் கணக்கிடும் முறை பற்றியும் இப்போது பார்க்கலாம்.

முதலில் டார்கெட் சோன் (target zone) கணக்கிடுவோம். அதாவது, எத்தனை புள்ளிகள் வரை மேலே உயர வாய்ப்பிருக்கிறதென்று பார்ப்போம். தலைப்பகுதி அமைப்பின் லோ 225.85. இதிலிருந்து ஒரு செங்குத்துக் கோட்டினை மேல் நோக்கி வரைந்தால், அது 315 என்ற லெவலிலே நெக்லைனைத் தொடுகிறது. இந்த இரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாடு = 315-225 = 90 புள்ளிகள். ஆக, விலையானது இந்த நெக்லைனை உடைத்துக்கொண்டு மேலே செல்ல ஆரம்பித்தால். அந்த பிரேக்அவுட் இடத்திலிருந்து 90 புள்ளிகள் வரை மேலே செல்ல வாய்ப்பிருக்கும் அமைப்பாகக் கருதப்படுகிறது.

சரிங்க! இந்த 90 புள்ளிகள் இலாபத்திற்கு நாம் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும்? நெக்லைன் பிரேக்அவுட் ஆகுமிடத்திலிருந்து, ரைட் ஷோல்டரின் லோ வரைக்குமான வேறுபாடுதான் நமது ரிஸ்க்கின் அளவு. ரைட் ஷோல்டரின் லோ 274.20 ஆகும் நெக்லைன் பிரேக்அவுட் ஆகுமிடமாக நாம் 315 என்ற லெவலையே எடுத்துக் கொள்ளலாம். சோ, ரிஸ்க் = 315 – 274 = 41 புள்ளிகள்.

ரிஸ்க்:ரிவார்ட் = 41:90 = சுமார் 1: 2-1/4 (அதாவது நாமெடுக்கும் ஒவ்வொரு புள்ளி ரிஸ்க்கிற்கும் நமக்கு சுமார் இரண்டே கால் புள்ளிகள் வரை இலாபம் கிடைக்கக்கூடிய அமைப்பு. இது RR ரேஷியோ நமக்குச் சரிப்பட்டு வந்தால் மட்டுமே டிரேட் எடுக்க வேண்டும். இல்லையென்றால், சும்மா வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். எப்படி கட்டுப்பாடான டிரேடராக உருவாக சார்ட் பேட்டர்ன்கள் உதவி புரிகின்றன என்பதனைப் பாருங்கள்)

டார்கெட் கணக்கிடும் முறை: இது பிரேக்அவுட் லெவலுடன், டார்கெட் சோன், என்று கணக்கிட்டுள்ளோமே 90 புள்ளிகள் அதைக் கூட்டிக் கொள்ளவேண்டும். அதாவது டார்கெட் = 315 + 90 = 405 லெவல்கள் வரையிலும் செல்லக்கூடிய அமைப்பிது.

ஸ்டாப்லாஸ்: ரைட் ஷோல்டரின் லோ-வான 274.20-க்கும் கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.

4. இருக்குது.. ஆனால் இல்லை!: 18/09/2013 அன்று விலையானது நாம் 315 என்ற கணக்கிட்டுள்ள நெக்லைன் பிரேக்அவுட் லெவலை உடைத்துக்கொண்டு 319.40 வரை மேலே சென்ற பங்கானது, 315.85 என்ற அளவிலே முடிவடைந்தது.  வால்யூம் அப்படியொன்றும் பிரமாதமாக இருந்துவிடவில்லை. எனவே, சும்மாயிருப்பதே மேல் என்று டிரேட் எடுக்காமல் இருந்துவிட வேண்டும். அடுத்த நாள் கேப் அப் ஓபன் ஆகி 347.40-இல் ஆரம்பித்த விலை நமக்கொரு என்ட்ரி சான்ஸே கொடுக்கவில்லை. ஏனெனில், நமது பிரேக்அவுட் சோன் 315 என்ற லெவல்கள். விலையிருப்பதோ 347 மற்றும் அதற்கும் மேலே. ஆக, நமது ரிஸ்க்கான 41 புள்ளிகளுடன், இப்போது மேலும் 32 (347-315 = 32) புள்ளிகள் சேர்ந்து 73-ஆக உயர்கிறது. ஆக 73 புள்ளிகள். ஆக இந்தளவு அதிகரிக்கப்பட்ட ரிஸ்க்கில் டிரேட் என்ட்ரி செய்யாமலிருப்பதே உத்தமம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! “அடடா! நேற்றே வால்யூம் இல்லையென்று டிரேட் எடுக்காமல் விட்டோமே! எடுத்திருந்தால் இன்றே கொஞ்சம் இலாபம் பார்த்திருக்கலாமே” என்று மனம் அலை பாயத்தான் செய்யும்: குறைபடத்தான் செய்யும். ஆனால், அதற்காக நாம் தப்பும், தவறுமான டிரேடுகளை எடுக்கக்கூடாது. மார்க்கெட்டில் பொறுமை மிக அவசியம். மார்க்கெட் என்றுமிருக்கும். வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அந்தத் தருணங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

படம் 3: கேப் அப் ஓபனில் நோ சான்ஸ்! ஆனால், ரீ-டெஸ்ட் நடக்குதுங்க!

படம் 3: கேப் அப் ஓபனில் நோ சான்ஸ்! ஆனால், ரீ-டெஸ்ட் நடக்குதுங்க!

 

5. மறு வாய்ப்பு: முன்னர் ரெஸிஸ்டன்சாக இருந்த நெக்லைன் தற்போது (27/09) சப்போர்ட்டாக மாறும் வாய்ப்பிருப்பதைக் கவனியுங்கள். டெக்னிக்கல் அனாலிசிஸில் இதனை ரீ-டெஸ்ட் என்று சொல்வார்கள். முந்தைய ரெஸிஸ்டன்ஸை சப்போர்ட்டாக எடுதுக்கொள்ள சந்தை முயற்சி செய்கிறது. இது சந்தை நமக்களிக்கும் இன்னொரு வாய்ப்பாக நாம் பார்க்கவேண்டும். விலையானது 302 என்ற லோ வரை வந்துள்ளது. இங்கேயிருந்து மறுபடியும் 315 என்ற நெக்லைன் லெவலினை உடைத்துக் கொண்டு மேலே சென்றால் நாம் முன்னர் சொன்ன ஸ்டாப்லாஸ் லெவல் வைத்து பங்கினை வாங்கலாம். சப்போஸ், நமது ஸ்டாப்லாஸ் லெவலான 274-க்கும் கீழே சென்று விட்டால், இந்த அமைப்பினை, தோல்வியடைந்த அமைப்பாகக் கருதி (Pattern failure – பேட்டர்ன் ஃபெய்லியர்) நாம் முன்னர் இருந்துவரும் டௌன்டிரெண்டின் திசையிலேயே டிரேட் எடுக்கக் வேண்டும். 

6. தற்போதைய நிலவரம் (4/10/2013):  iஇதுவரையிலும் நாம் பார்த்துக் கொண்டிருந்தது 27/9/2013 வரையிலான நிலவரத்தினை மட்டுமே. 4/10/2013 (கடந்த வார) முடிவு வரையினிலே, விலை நெக்லைன் சப்போர்ட்டுக்குக் கீழே வர்த்தகமாகி, மறுபடியும், அதன் மேலேயே முடிந்துள்ளது. ஸ்டாப்லாஸ்-உம் அடிபடவில்லை. எனவே, தற்போது BUY நிலையிலுள்ளது. (நெக்லைனை வலது பக்கமாகக் கொஞ்சம் நீட்டி வரைந்து பார்த்தால், விலை நெக்லைனுக்கு மேலே முடிந்துள்ளதால், க்ளோஸிங் விலையியான 315-இல் BUY பொசிஷன் எடுத்துள்ளோம்) 

படம் 4: YESBANK தற்போதைய (4/10) நிலவரம்

படம் 4: YESBANK தற்போதைய (4/10) நிலவரம்

 

ஸ்டாப்லாஸ், ரிஸ்க், ரிவார்ட் எல்லாம் என்னன்னு புரியுதுங்களா? என்னது? புரியலையா? “நான் ரொம்ப ஷாக் ஆயிட்டேன்!” மறுபடியும் இந்தக் கட்டுரையை ரண்டு, மூணு தபா படிச்சிப் பாருங்க! புரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம்தான், டிரேட் எடுக்கவேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்திலேயே இந்தக் கட்டுரையானது “படம் வரைந்து, பாகங்களைக் குறி” என்று 15மார்க் கொஸ்டீன் போல வடிவமைத்துள்ளேன்.

இன்னமும் புரியலைன்னா………….. எனக்கொரு லைன் பதில் எழுதுங்க! சரியா?

அன்புடன்,

பாபு கோதண்டராமன்