செஸ், கிரிக்கெட் மற்றும் காளையும் கரடியும் 2013


ஹலோ!

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் செஸ் சாம்பியன்ஷிப் 3 மற்றும் 4-ஆம் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்துள்ளன. டி‌வி வர்ணனையாளர்கள் கம்ப்யூட்டர்களை வைத்து சொல்லும் ஒரு சில மூவ்களையே ஒரு சில சமயங்களில் இவர்கள் (ஆனந்தும், கார்ல்சனும்) ஆடினாலும், பல சமயங்களில் புது வித வேரியேஷன்களை ஆடி நம்மைப் பரவசப் படுத்துகிறார்கள். மூன்றாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்பு நிறக்காய்களுடன் விளையாடியபோது, “இப்போது ரெபெட்டிவ் மூவ் (மூன்று முறை ஒரே மாதிரியான நகர்த்துதல்கள்) ஆடி டிரா செய்யும் நிலைதான் இருக்கிறது” என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீண்ட யோசனைக்குப் பிறகு கார்ல்சனின் ராணியை h1 கட்டத்திற்கு நகர்த்தி ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார். நான்காவது ஆட்டத்திலே ஒன்டே கிரிக்கெட் போன்றதொரு ஆட்டத்தினை ஆடினார்கள். அத்தனை சுவாரஸ்யம்!

யார் சொன்னது செஸ் ஒரு விறுவிறுப்பில்லாத ஆட்டமென்று? விஷி ஆனந்த் வெற்றியடைய நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்!

Vishy with mom

அடுத்ததாக நமது மண்ணின் மைந்தர் இன்னொருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் நமது சச்சின்! அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள்! அவரும் ஒரு சரித்திர நாயகன்தான்! ஆனந்த் மற்றும் சச்சின் ஆகியோரின் கால கட்டதில்தான் நாமும் இருக்கின்றோம் என்பதில் பெருமைப்படுகின்றேன்!

SRT200 2 SRT200 1

அடுத்ததாக நமது பாண்டிச்சேரி “காளையும் கரடியும் 2013” நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற ஞாயிறு வெளிவந்த நாணயம் விகடனிலும் மறுபடியும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கின்றேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் பணம் செலுத்தி பதிவும் செய்து கொண்டுள்ளனர்.

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

6300-இல் நிஃப்டி: என்ன செய்யலாம்?


ஹலோ!

“கங்கா ஸ்நானம் ஆச்சா?” 🙂 உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்! மார்க்கெட்டும் நிறைய நல்ல செய்திகளையே கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

2010 நவம்பரில் தீபாவளி ஏற்றத்திற்குப் பிறகு, இந்த வருடமும் தீபாவளியன்று மார்க்கெட் 6300 லெவலைக் கடந்துள்ளது. தீபாவளி போனஸ் ஒவ்வொரு வருடம் கிடைத்தாலும் (ஒரு சில லக்கியானவர்களுக்கு) மார்க்கெட் என்னவோ ஒரு சில தீபாவளிகளின் போது மட்டும்தான், நல்ல ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதுதான் உண்மை! 2008 ஜனவரியின் உச்சத்தின் போது தீபாவளி இல்லையே! ஆனால், ஒவ்வொரு தீபாவளியின் போது மட்டும் நமது மனம் “மார்க்கெட் பாசிட்டிவாக முடியாதா?” என்று ஏங்குகின்றது.

என்னிடம் BSE Sensex விபரங்கள் இல்லை; அதனால், இங்கே கீழே நிஃப்டி ஃப்யூச்சர் மற்றும் நிஃப்டி ஸ்பாட் விபரங்களைக் கொடுத்துள்ளேன் (இன்றைய முஹரத் டிரேடிங் முடிவு வரையிலும்).

 

நிஃப்டி ஃப்யூச்சர் ஹை
1/9/2008 6336.00
11/5/2010 6349.00
11/1/2013 6369.95 (Close:   6358)
11/3/2013 6383.00

நிஃப்டி ஃப்யூச்சர் இந்த நவம்பர் 1-அன்று, 2010 நவம்பர் ஹையைவிட மேலே முடிந்துள்ளது.  நிஃப்டி ஸ்பாட் என்ன சொல்கிறதென்று பார்க்கலாம்.

 

நிஃப்டி ஸ்பாட் ஹை
1/8/2008 6357.10
11/5/2020 6338.50
11/3/2013 6342.95

ஆனால், நிஃப்டி ஸ்பாட் இன்னமும் 2008 ஜனவரி ஹையைத் தாண்டவில்லை.  ஆகவே, பிரேக்அவுட் நடக்கும்போது, தகுந்த ஸ்டாப்லாஸ் வைத்து டிரேட் செய்யவும்!

By the way, இன்னொரு நல்ல செய்தியினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். BSE Institute Ltd (BIL)-இல் விசிட்டிங் ஃபேகல்டி (Visiting Faculty) என்ற முறையிலே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்