ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்‌ மார்க்கெட்டில் Security in Ban Period


Security in Ban Period

நீங்க ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மார்க்கெட்டில் டிரேட் செய்பவராகவிருந்தால், இதைப் பற்றித் தினமும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தடை செய்யப்பட்ட பங்குகளில் வர்த்தகம் (புதிய பொசிஷன் எடுத்தால்) செய்தால் 5,000, 10,000 என்று ஃபைன் கட்ட வேண்டி வரும். புதிய பொசிஷன்கள்தான் எடுக்கக் கூடாது. முன்னரே கையிலிருக்கும் பொசிஷன்களை ஸ்குயர்-ஆஃப் செய்யலாம்.
டீலர் பக்கத்திலமர்ந்தோ அல்லது அவருக்கு ஃபோன் செய்தோ வர்த்தகம் செய்யும்போதெல்லாம் அவர் நம்மை இது பற்றி ஞாபகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. இப்போது நம்மில் பலரும் ஆன்லைன் முறையில் செய்வதால், நாம்தான் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். இது பற்றி NSE-யின் வெப்சைட்டில்  (இங்கே கிளிக்கிடவும்)  தினமும் அப்டேட் செய்யப்படுகிறது.

ஒரு சில ஸ்கிரீன் ஷாட்ஸ்

படம் 1: NSE வெப்சைட்டில் எப்படி கண்டு பிடிப்பதென்று ஒரு விளக்கம்

படம் 1: NSE வெப்சைட்டில் எப்படி கண்டு பிடிப்பதென்று ஒரு விளக்கம்

 

 

 

 

 

அன்புடன், பாபு கோதண்டராமன்

படம் 2: எக்ஸெல் ஃபைலின் ஒரு தோற்றம்

படம் 2: எக்ஸெல் ஃபைலின் ஒரு தோற்றம்

20140725 ஒரு சில ஸ்டாக்குகளின் சார்ட்டுகள்


MCDOWELL மேலே டபுள் டாப் ரெஸிஸ்டன்ஸ் (தற்போது இது முக்கியமல்ல); கீழேயிருக்கும் தற்போதைய விலை, முந்தைய சப்போர்ட்டில் உள்ளது. மேலே செல்ல வாய்ப்புள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

 

APOLLOTYRE டபுள் டாப்பின் சப்போர்ட் அதற்கு முன்னும், பின்னும் எவ்வாறு ரெஸிஸ்டன்ஸாக இருக்கிறதென்று பாருங்கள்!

APOLLOTYRE ஃப்யூச்சர்

APOLLOTYRE ஃப்யூச்சர்

AXISBANK முந்தைய ரெஸிஸ்டன்ஸ் தற்போது சப்போர்ட்டாக மாறியுள்ளதா? பார்க்கலாம்.

AXISBANK ஃப்யூச்சர்

AXISBANK ஃப்யூச்சர்

BANKNIFTY நீங்களே யோசியுங்கள்! புரிய வில்லையென்றால், இந்தக் கட்டுரையினை ஓரிரு முறை படித்து விட்டு, மறுபடியும் பாருங்கள். ஈசியாகப் புரியுமென்று நினைக்கின்றேன். குட் லக்!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

HINDALCO

ஜாக்கிரதை! ஒரு பெயரிஷ் என்கல்ஃபிங்க் கேண்டில், அதுவும் இந்த அப்டிரெண்டில். (மேலும் விபரங்களுக்கு, 2010 நவம்பர் தீபாவளியன்று SBIN கேண்டில் என்னவென்று ஒரு தடவை செக் செய்து கொள்ளுங்கள்)

HINDALCO ஃப்யூச்சர்

HINDALCO ஃப்யூச்சர்

HINDPETRO (HPCL)

அப்ட்ரெண்டில் காணப்படும் இந்த fallling wedge அமைப்பின் ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு மேலே சென்றால், BUY

HPCL Falling Wedge

HPCL Falling Wedge

ICICIBANK

முந்தைய ரெஸிஸ்டன்ஸ் லெவல் தற்போது ஸ்ட்ராங்க் சப்போர்ட்டாக இருக்கின்றது. (வட்டமிடப்பட்டுள்ள பகுதிகள்)

ICICIBANK

ICICIBANK

LT டபுள் டாப் சப்போர்ட்டை உடைத்து மீண்டும் அதன் மேலேயே இருக்கின்றது. (மதில் மேல் பூனை)

LT டபுள் டாப்

LT டபுள் டாப்

NMDC ஃப்யூச்சர் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் அமைந்து, நெக்லைன் உடைபட்டு முந்தைய சப்போர்ட் (நெக்லைன்) இப்போது ரெஸிஸ்டன்சாக மாறி ஒரு ரீடெஸ்ட் நடக்கிறது. அதுவும் இன்றைய கேண்டில் அந்த ரெஸிஸ்டன்ஸ் லெவலில் பெயரிஷ் என்கல்ஃபிங்க்காக இருப்பதால், நல்லதொரு ஷார்ட் டிரேட் போக வாய்ப்புள்ள அமைப்பிது

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

JPASSOCIAT ஃப்யூச்சர் லோயர் ஹை, லோயர் லோ அமைந்து ஒரு தெளிவான டவுன்டிரெண்டைக் காட்டுகிறது.

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

SAIL ஃப்யூச்சர் சார்ட்டில் தெரியும் டவுன்ட்ரெண்ட் லைனில் பெயரிஷ் என்கல்ஃபிங்க் பேட்டர்ன் தெரிவதால், குறைந்த ரிஸ்க் ஷார்ட் டிரேட் எடுக்கலாம்.

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

TATASTEEL தலைக்கு மேலே இருக்கும் ரெஸிஸ்டன்ஸ், RSI-யின் நெகட்டிவ் டைவர்ஜென்சால் வலிமையாகக் காணப்படுகிறது

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

க்வீன் SBIN ஃப்யூச்சர் 3 தடவை சப்போர்ட்டாக இருந்த லைன் நான்காவது முறை உடைபட்டுள்ளது. இப்போது அது ரெஸிஸ்டன்சாக இருக்கிறது. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்

20140725 SBIN S n2 R

கிங் ரிலையன்ஸ்

ஒரு டபுள் டாப் பேட்டர்ன் அமைந்து, சப்போர்ட் உடைபட்டு, தற்போது அந்த லெவல் ரெஸிஸ்டன்சாகத் தெரிகிறது

20140725 RELIANCE dbl top S n2 R

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

 

 

 

ரிலையன்ஸ் $579 மில்லியன் ஃபைன் கட்டணுமாம்: நோட்டீஸ்


இது 10/07/2014 அன்றே அளிக்கப்பட்டுள்ளது. 14/07/2014 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

2013-14 : $ 579 மில்லியன்

முந்தைய பாக்கி (ஃபைன்):

2010-11: $ 457 மில்லியன்

2011-12: $ 548 மில்லியன்

2012-13: $ 792 மில்லியன்

செய்தி இங்கே!
http://www.business-standard.com/article/companies/govt-imposes-fresh-kg-d6-penalty-of-579-million-on-ril-114071400812_1.html

RIL 20140713

——————————————————————————-

எனது நண்பர்களிடமிருந்து….
ரிலையன்ஸ் ஷார்ட் செல்வது உசிதமல்ல…. ரிலையன்ஸ் எப்போதும் நல்ல செய்திகள் வரும்போது சரிவதும், கெட்ட செய்திகள் வரும்போது ஏறுமென்பதும் வழக்கமாம்.

(10-ஆந்தேதியே இந்த நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது. இந்த விபரமறிந்தவர்கள் முதலிலேயே ஷார்ட் சென்றிருக்கலாமல்லவா? வெள்ளிக்கிழமையன்றே  2.9% இறங்கி விட்டது. இப்போது ரீடெயில் ஷார்ட் செல்லும்போது அவர்கள் ஷார்ட் கவரிங் செய்து மேலே செல்வதற்கான வாய்ப்புகளே அதிகமாம்!)

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்