நீங்க இந்த புல்லிஷ் மார்க்கெட் ரேலியை நம்பறீங்களா?


அப்புறமென்ன?

கீழேயிருக்கும் நிஃப்டி ஃப்யூச்சர் ஹவர்லி சார்ட்டைப் பாருங்கள்! தற்போது 34EMA-விற்குக் கீழே முடிந்துள்ளது. அதற்கு மேலே செல்லும்போது தற்போதைய லோயஸ்ட் லோ-வினை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு லாங் போகலாம்.

இது 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி! நான் வேண்டுமென்றே விலை லெவல்களைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்களே சார்ட் பார்த்து, 34EMA லெவல் என்ன, அதற்குமேல் போனால் எந்த லெவலில் வாங்கவேண்டும், ஸ்டாப்லாஸ் வைக்க லோயஸ்ட் லோ என்ன லெவல் என்றெல்லாம் நீங்களே பார்க்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்!

நான் மீன் கொடுக்கமாட்டேன்; ஆனால், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கின்றேன்! 🙂

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

அன்புடன்

பாபு கோதண்டராமன்

ஜல்லிக்கட்டுக் காளை, ராகேஷ் ஜூஞ்ஜென்வாலா!


ஹலோ!

ராகேஷ் ஜூன்ஜென்வாலா “போர்ப்ஸ்” பத்திரிக்கையில் பில்லியனர் என்று பட்டியலிடப்பட்டுள்ளவர். இவரின் RARE enterprises (RAkesh மற்றும் இவரது மனைவ் REkha ஆகியோரின் பெயரின் முதலிரண்டு எழுத்துக்களை இணைத்து நிறுவனத்தின் பெயரை அமைத்துள்ளார்) மூலம் பங்குச் சந்தையிலே முதலீடு செய்து வருகின்றார். “இந்தியாவின் வாரன் பஃப்ஃபே” என்றழைக்கப்படுபவர்.

இவர் என்னென்ன வாங்குகிறார், என்னென்ன விற்கிறார் என்பதை சந்தை ஆர்வலர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவ்வாறிருக்கும் நிலையினில், இப்போதைய காளைகளின் ஆதிக்கம் மிக்க சந்தையில் இவரது போர்ட்ஃபோலியோவின் வளர்ச்சி குறித்த ஒரு சில கட்டுரைகள் பல்வேறு நாளிதழ்களிலும், வலைத் தளங்களிலும் நேற்றும், இன்றும் தலை காட்டத் துவங்கியுள்ளன. அவற்றின் சாராம்ஸத்தை இங்கே காண்போம். வாருங்கள்!

படம் 1: 2008 சரிவுக்கு முன்னும், பின்னும்

படம் 1: 2008 சரிவுக்கு முன்னும், பின்னும்

 

1 RJ Nifty rise

 

1 RJ zz Nifty 1 year

ஒரு மணி நேரத்துக்கு, ஒரு பென்ஸ் கார் (ஆடி கார்) வாங்கலாம்லா…..!

 

வெறும் 8 கோடி ஷேர்கள்தான்!

வெறும் 8 கோடி ஷேர்கள்தான்!

 

மேலும் சில பங்குகளின் கையிருப்பு

மேலும் சில பங்குகளின் கையிருப்பு

 

ராகேஷ் ஜூஞ்ஜென்வாலாவா, கொக்கா?

ராகேஷ் ஜூஞ்ஜென்வாலாவா, கொக்கா?

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும்!


இன்றைய வரலக்ஷ்மி பூஜை நாளின் செல்வம் பெருக, வளம் கொழிக்க நல்வாழ்த்துக்கள்!

வளம் கொழிக்கும் ஒரு பங்கின் ஞாபகம் வருகிறது. 28 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கம்பெனியிடம் இப்போது சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலே கேஷ் பேலன்ஸ் இருக்கின்றது. இது இன்னமும் லிஸ்டிங் செய்யப் படாததால், ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்ஃபர் மட்டுமே ஷேர் சர்டிஃபிகேட் மூலமாக நடைபெறுகின்றது.

ஒரு பங்கின் விலை, புத்தக மதிப்புப்படி, ரூ. 65,000 என்று வர்த்தகமாகிறதாம். ஆனாலும், சுமார் ஒன்றரை லட்சம் வரையிலும் (ஒரு பங்கிற்கு மட்டும்) கூட விலை போகிறதாம்.

ஏனெனில், நிர்வாகத்தில் இயக்குனர் பொறுப்பில் வர ஒரு சில பெரிய கைகள் ஆர்வம் காட்டுகின்றனவாம். அதனாலேயே இந்த அளவிற்கு விலை போகிறதாம்.

அதிலேயும் சுமார் எட்டு சதவீத முதலீட்டாளர்கள் யாரென்றே தெரிய வில்லையாம். அதாவது அந்த ஷேர் சர்டிஃபிகேட்கள் யாரிடம் இருக்கின்றவென்றே தெரியவில்லையாம்.  உடனேயே உங்கள் வீட்டில் பழைய ஆவணங்கள் வைத்திருக்கும், தாத்தா, பாட்டியினுடைய  அலமாரி, பெட்டி முதலியானவைற்றைத் திறந்து, TMB (தமிழ்நாடு மெர்க்கண்ட்டைல் பாங்க்) ஷேர்களை அவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்களா என்று எதற்கும் ஒரு தடவை செக் பண்ணிடுங்க!

🙂

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

செய்தி உபயம்: திரு. செந்தில் சின்னதுரை

செல்வ வளம் பெருகட்டும்!

செல்வ வளம் பெருகட்டும்!