Linear சார்ட்டில் ட்ரெண்ட்லைன் பிரேக்அவுட்; Log-இல்?


சிம்பிள்தான்!

நிஃப்டி 8800FebPE சார்ட்

2015 02 13 tamil NF8800pe will u trade this bo with divergence

 

 

2015 02 13 tamil NF8800pe log scale will u trade this bo with divergence

ஃபோகஸ் … ஃபோகஸ் …. ஆன் லீடர்ஸ்


இதுல என்ன சொல்றாங்கன்னா….

கெடைக்கப்போற பலாக்காய விட கையில இருக்குற கலாக்காயே மேல்! இதுல ரொம்ப முக்கியமான சொல் : லீடர்ஸ்!

செக்டார் லீடர்ஸ்ல இதுவரைக்கும் SIP ஆரம்பிச்சிருக்கீங்களா? என்ன நான் சொல்றது?

Trading card 395 buy more of what you have LEADERS

தை அமாவாசையில் …..


2015 01 20 ATH index nifty sensex Bears 05 sad

பனி விழும் மலர்வனம்


அருமையான படம். விளக்கமே தேவையில்லை; அப்படியே பார்க்கலாம்!

Snow is falling

இதுல நீங்க எப்பூடீஈஈ?


இன்றைய ட்விட்டரில் வந்த இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு டே டிரேடர் மற்றும் ட்ரெண்ட் டிரேடரின் ஒரு நாள் வாழ்க்கையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

அது சரி! இதிலே நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கிறீர்கள்? இந்தப் படத்திலே சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்களா? இல்லையா? எது சரி? எது தவறு?

உங்கள் அனுபவத்திலிருந்து பதில் எழுதுங்களேன்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

A day in the life of a Day trader vs Trend trader

 

நீங்க இந்த புல்லிஷ் மார்க்கெட் ரேலியை நம்பறீங்களா?


அப்புறமென்ன?

கீழேயிருக்கும் நிஃப்டி ஃப்யூச்சர் ஹவர்லி சார்ட்டைப் பாருங்கள்! தற்போது 34EMA-விற்குக் கீழே முடிந்துள்ளது. அதற்கு மேலே செல்லும்போது தற்போதைய லோயஸ்ட் லோ-வினை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு லாங் போகலாம்.

இது 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி! நான் வேண்டுமென்றே விலை லெவல்களைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்களே சார்ட் பார்த்து, 34EMA லெவல் என்ன, அதற்குமேல் போனால் எந்த லெவலில் வாங்கவேண்டும், ஸ்டாப்லாஸ் வைக்க லோயஸ்ட் லோ என்ன லெவல் என்றெல்லாம் நீங்களே பார்க்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்!

நான் மீன் கொடுக்கமாட்டேன்; ஆனால், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கின்றேன்! 🙂

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

அன்புடன்

பாபு கோதண்டராமன்

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்‌ மார்க்கெட்டில் Security in Ban Period


Security in Ban Period

நீங்க ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மார்க்கெட்டில் டிரேட் செய்பவராகவிருந்தால், இதைப் பற்றித் தினமும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தடை செய்யப்பட்ட பங்குகளில் வர்த்தகம் (புதிய பொசிஷன் எடுத்தால்) செய்தால் 5,000, 10,000 என்று ஃபைன் கட்ட வேண்டி வரும். புதிய பொசிஷன்கள்தான் எடுக்கக் கூடாது. முன்னரே கையிலிருக்கும் பொசிஷன்களை ஸ்குயர்-ஆஃப் செய்யலாம்.
டீலர் பக்கத்திலமர்ந்தோ அல்லது அவருக்கு ஃபோன் செய்தோ வர்த்தகம் செய்யும்போதெல்லாம் அவர் நம்மை இது பற்றி ஞாபகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. இப்போது நம்மில் பலரும் ஆன்லைன் முறையில் செய்வதால், நாம்தான் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். இது பற்றி NSE-யின் வெப்சைட்டில்  (இங்கே கிளிக்கிடவும்)  தினமும் அப்டேட் செய்யப்படுகிறது.

ஒரு சில ஸ்கிரீன் ஷாட்ஸ்

படம் 1: NSE வெப்சைட்டில் எப்படி கண்டு பிடிப்பதென்று ஒரு விளக்கம்

படம் 1: NSE வெப்சைட்டில் எப்படி கண்டு பிடிப்பதென்று ஒரு விளக்கம்

 

 

 

 

 

அன்புடன், பாபு கோதண்டராமன்

படம் 2: எக்ஸெல் ஃபைலின் ஒரு தோற்றம்

படம் 2: எக்ஸெல் ஃபைலின் ஒரு தோற்றம்

நிஃப்டி 15/03/2014 Nitin Bagde


ஹலோ!

ரொம்ப நாளைக்கப்புறம்…… சந்தோஷம்!

நிதின் Bagde என்பவரது ஆராய்ச்சிக் கட்டுரை யாஹூ! டெக்னிக்கல் அனாலிசிஸ் என்ற குழுவிலே வாரா, வாரம் வந்து கொண்டிருக்கிறது. இவர் வேவ் தியரி ஸ்பெஷலிஸ்ட்; அதிலும் Glenn Neely என்பவரின் Neo Wave (நியோ வேவ் neowave.com) முறைப்படி பங்குச்சந்தையினை அலசுகிறார்.

அவரது லேட்டஸ்ட் ரிபோர்ட் இதோ! (ஒரு சில இடங்களிலே தமிழிலே மொழிபெயர்த்திருக்கின்றேன்). நம் அனைவரின் நன்றிகளும் Nitin Bagde அவர்களுக்குத்தான்!

 Date : 15/03/2014

Weekly roadmap for Nifty cash

Analysis : Anticipation for next 2-3 weeks.

அடுத்த 2-3 வாரங்களுக்கான எதிர்பார்ப்பு!

Weekly wave chart updated till 14/03/2014

1.      The pattern anticipated from the end of wave circled d is Diametric

2.      The last leg of anticipated Diametric is wave (G) and it may have been completed.

3.      The major resistance is at 6620 and the index is not expected to go above it

6620 மேஜர் ரெஸிஸ்டன்ஸாக இருக்கும்; இன்டெக்ஸ் அதைத் தாண்டி மேலே செல்ல வாய்ப்புகள் இருக்காதென்று சொல்கிறார்.

4.      The crucial support is at 6430 and its breach will confirm the completion of wave (G).

6430 என்பது ஒரு கிரிட்டிக்கலான சப்போர்ட்டாக இருக்கும். அதை உடைத்துக்கொண்டு கீழே சென்றால் வேவ் (G) (படத்தினைப் பார்க்கவும்) முடிந்து விட்டதென்பதை உறுதி செய்யும்.

5.      The important weekly levels to watch on Nifty cash are 6620 and 6430. If index moves below 6430 then whatever top is formed below 6620 will be the major top which may not be visited during next 2-3 months.

முக்கியமான வார லெவல்களாக 6620 மற்றும் 6430 ஆகியவை (நிஃப்டி ஸ்பாட் மார்க்கெட்டில்) விளங்குகின்றன.

6430-க்குக் கீழே சந்தை சென்றுவிட்டால், 6620-க்குக் கீழே எந்த லெவல் ஹை-யாக இருக்கின்றதோ, அதுதான் மேஜர் டாப்-ஆக இருக்கும்; இதனை அடுத்த 2-3 மாதங்களுக்குத் தொடுவதற்கான வாய்ப்புகளும் கம்மிதான்.

6.      But if Nifty cash moves above 6620 then the count inside wave (G) will change. In this case, probably, there is missing wave (x) somewhere around 6375. Hence, wave (g) will end around 6375 and the move from 6375 to 6562.85 will be wave (a) of some corrective pattern. The next down move from 6562.85 to 6432.70 will be wave (b). Currently, the index may be in wave (c). The breach of 6620 may push index towards 6650.

ஆனால், நிஃப்டி ஸ்பாட் மார்க்கெட்டில் 6620-க்கு மேலே சென்று விட்டால், அவரின் (G) வேவின் அனைத்து கணக்குகளும் மாறும் என்றும் தெளிவு படுத்துகிறார்.

Nitin20140314 1stpic

 

Continued

Analysis : Anticipation for next week.

அடுத்த வாரத்திற்கான எதிர்பார்ப்பு!

Weekly wave chart updated till 14/03/2014

Nitin20140314 2ndpic

1.      The probability is high that wave (G) has completed.

2.      If wave (G) is completed then Nifty cash should fall till minimum of 5950 on or before 18th April 2014.

3.      The crucial levels to watch for next 2-3 days are 6430 and 6565. The breach below 6430 may push index towards our target of 5950 whereas breach of 6565 may push it towards 6620-6650 area.

(G) வேவ் முதிந்துவிட்டதென்ற நிலைப்பாட்டில், நிஃப்டி ஸ்பாட் மார்க்கெட்டில், குறைந்த பட்சம் 5950 வரை கீழே செல்ல (அதுவும் ஏப்ரல் மாதம் 18-ஆந்தேதிக்குள்) வாய்ப்பிருக்கின்றது.

அடுத்த 2-3 நாட்களுக்கான முக்கிய லெவல்கள்: 6430 மற்றும் 6565. 6430-க்கும் கீழே சென்றால் நமது இலக்கான 5950 வரை செல்லவும், 6565-க்கும் மேலே சென்றால், 6620-6650 வரை செல்லவும் வாய்ப்புகளிருக்கின்றன.

Conclusion

1.      The important levels to watch during next week are 6620 and 6430.

2.      The breach above 6620 may push index towards 6650 levels.

3.      The breach below 6430 will indicate that major top is in place.

4.      The completion of pattern (if 6620 is not crossed and 6430 is breached) will open Nifty cash for downward move that may reach till minimum of 5950.

5.      The minimum target of 5950 (if 6620 is not crossed and 6430 is breached during the week) may be reached before end of April 2014 (maximum time) with high probability of it reaching before 18th April, 2014.

 

 

 

Other factors indicating that top may have been formed.

The Nifty cash is at important Fibonacci resistance level where the last candle is “High wave” pattern which indicates reversal if its low is taken out.

கீழே வார வரைபடத்தில், நிஃப்டி ஸ்பாட் ஒரு முக்கியமான ஃபிபோனாக்கி ரெஸிஸ்டன்ஸ் லெவலில் இருக்கின்றத்தைப் பார்க்கலாம். சென்ற வாரத்தின் லோ உடைபடுமானால், ரிவர்ஸல் கன்ஃபார்ம் ஆகிவிடும்.

Nitin20140314 3rdpic

The

USDINR has formed “Long legged Doji” on support created by confluence of 34 EMA and horizontal support line. The probability is high that the currency may move towards 63 levels.

US$INR சார்ட்டில் ஒரு Long legged டோஜி உருவாகியுள்ளது. அது எங்கேயென்று பார்த்தால், 34EMA மற்றும் முந்தைய சப்போர்ட் லெவல்களிலேதான். INR 63 வரை மேலே செல்ல வாய்ப்பிருக்கின்றது.

Regards,

Nitin Bagde

nitin_in@yahoo.com

2013 – நிஃப்டி பங்குகளின் வளர்ச்சி விகிதங்கள்!


ஹலோ!

இப்போது நிஃப்டி பங்குகளின் நிலவரம்!

2013 Nifty gainers n losers 1 of 42013 Nifty gainers n losers 2 of 42013 Nifty gainers n losers 3 of 42013 Nifty gainers n losers 4 of 4

6300-இல் நிஃப்டி: என்ன செய்யலாம்?


ஹலோ!

“கங்கா ஸ்நானம் ஆச்சா?” 🙂 உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்! மார்க்கெட்டும் நிறைய நல்ல செய்திகளையே கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

2010 நவம்பரில் தீபாவளி ஏற்றத்திற்குப் பிறகு, இந்த வருடமும் தீபாவளியன்று மார்க்கெட் 6300 லெவலைக் கடந்துள்ளது. தீபாவளி போனஸ் ஒவ்வொரு வருடம் கிடைத்தாலும் (ஒரு சில லக்கியானவர்களுக்கு) மார்க்கெட் என்னவோ ஒரு சில தீபாவளிகளின் போது மட்டும்தான், நல்ல ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதுதான் உண்மை! 2008 ஜனவரியின் உச்சத்தின் போது தீபாவளி இல்லையே! ஆனால், ஒவ்வொரு தீபாவளியின் போது மட்டும் நமது மனம் “மார்க்கெட் பாசிட்டிவாக முடியாதா?” என்று ஏங்குகின்றது.

என்னிடம் BSE Sensex விபரங்கள் இல்லை; அதனால், இங்கே கீழே நிஃப்டி ஃப்யூச்சர் மற்றும் நிஃப்டி ஸ்பாட் விபரங்களைக் கொடுத்துள்ளேன் (இன்றைய முஹரத் டிரேடிங் முடிவு வரையிலும்).

 

நிஃப்டி ஃப்யூச்சர் ஹை
1/9/2008 6336.00
11/5/2010 6349.00
11/1/2013 6369.95 (Close:   6358)
11/3/2013 6383.00

நிஃப்டி ஃப்யூச்சர் இந்த நவம்பர் 1-அன்று, 2010 நவம்பர் ஹையைவிட மேலே முடிந்துள்ளது.  நிஃப்டி ஸ்பாட் என்ன சொல்கிறதென்று பார்க்கலாம்.

 

நிஃப்டி ஸ்பாட் ஹை
1/8/2008 6357.10
11/5/2020 6338.50
11/3/2013 6342.95

ஆனால், நிஃப்டி ஸ்பாட் இன்னமும் 2008 ஜனவரி ஹையைத் தாண்டவில்லை.  ஆகவே, பிரேக்அவுட் நடக்கும்போது, தகுந்த ஸ்டாப்லாஸ் வைத்து டிரேட் செய்யவும்!

By the way, இன்னொரு நல்ல செய்தியினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். BSE Institute Ltd (BIL)-இல் விசிட்டிங் ஃபேகல்டி (Visiting Faculty) என்ற முறையிலே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்