20130315 VARUN 295-லிருந்து 11.70 வரை


ஹலோ!

நேற்றைய கட்டுரைக்கப்புறம், இன்னொரு V வரிசை ஸ்டாக் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்களென்று நினைக்கிறேன். அது VARUN-தான்.

2011 கடைசியிலும், 2012 ஆரம்பத்திலும் இதைப் பற்றிய ஒரு சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியே வரத் துவங்கின. இந்தக் கம்பெனியைப் பற்றிய ஒரு ரிப்போர்ட்டில் “Varun Industries one of the fastest growing conglomerate which has evolved from being India’s largest exporter of stainless steel kitchenware to large set up of Wind power energy, Oil & Gas, Mines & Minerals, Gem & Jewellery & Agro business. ….. It has diversified into mines and minerals in Madagascar and awarded 1,111 mining blocks of Uranium (thorium and Gold as byproducts) covering reserve of 1.7 Mn MT of Uranium, 4.35 Mn MT of thorium and 53,000 kgs of Gold. Additionally it has onshore and offshore Oil and Natural Gas block at Madagascar covering 20,000 sq. km. It has an installed capacity of 8.95 MW wind turbine plant in Rajasthan and Tamil Nadu generating carbon credits of 17,351 VER annually. Source: Company, Globe Research” என்று சொல்லியிருந்தார்கள்.

மேலும், அக்கட்டுரையிலே “ரேர் எர்த் (rare earth)” என்ற ஒரு புதிய சொற்றொடரையும் குறிப்பிட்டு

“Rare Earth- Steroids for the New world Economy
Rare earth is a series of 16 metals integral to the hybrid automotive, high technology, defense and aerospace industries with virtually no substitutes.”

என்றும் எழுதியிருந்தார்கள்.

என்ன ரெகமண்ட் செய்திருந்தார்கள் தெரியுமா? இங்கே கீழே கொடுக்கிறேன் பாருங்கள்!

Multi bagger Idea / Value Unlocking

Recommendation

CMP – 251                Target Price: 534 (Upside 112%)     Investment time: 12 mn
மேலேயிருப்பதெல்லாம் செப்டெம்பர் 5, 2011 தேதியிட்ட அறிக்கையில் வந்ததன் ஒரு சிறு பகுதி.

அதன் பிறகு என்னவாயிற்று? கீழே இருக்கும் இரண்டு சார்ட்டுகளைப் பாருங்கள்!

படம் 1: VARUN INDUSTRIES - அப்பர் சர்க்யூட் & லோயர் சர்க்யூட்

படம் 1: VARUN INDUSTRIES – அப்பர் சர்க்யூட் & லோயர் சர்க்யூட்

கீழே, வீக்லி சார்ட்டில் தெரியும் வலிமை குன்றிய நிலை – ‘நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்’

படம் 2: நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (விலையில் ஹையர் ஹை; இண்டிகேட்டர்களில் லோயர் ஹை)

படம் 2: நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (விலையில் ஹையர் ஹை; இண்டிகேட்டர்களில் லோயர் ஹை)

மேலே உள்ள சார்ட்டில் “3” என்று குறிப்பிடப்பட்டுள்ள டைவர்ஜென்சுக்குப் பிறகு அப்ட்ரெண்ட் லைன் உடைபடுவதைப் பாருங்கள். இங்கே டைவர்ஜென்ஸ் என்பதை வலிமை குன்றிய நிலையின் சிக்னலாக(signal) எடுத்துக்கொள்ள வேண்டும். அப்ட்ரெண்ட் லைன் உடைபடுவதை “confirmation” ஆக எடுத்துக்கொண்டு நாம் வெளியே வந்திருக்க வேண்டும்.

ஆக டெக்னிக்கல் அனாலிசிஸில் signal கிடைத்தபிறகு, confirmation-உம் கிடைத்தால், நாம் உடனடி action எடுக்க வேண்டுமென்பதை இந்த ஸ்டாக் நமக்கு நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20110812 தங்கமே தங்கம்!


தங்கம் 2011 ஆகஸ்ட் 12 – ஒரு மணி நேர வரைபடத்தில் ஒரு ஹெட்&ஷோல்டர்ஸ் அமைப்பு தெரிகிறதாவென்று பாருங்கள்!

ஏதேனும் புரியவில்லையெனில் ஒரு வரி பதில் போடவும் (தமிழிலோ அல்லது இங்கிலீஷ்லேயோ) நோ ப்ராப்ளம்!

படம் 1: தெரிகிறதா?

 

படம் 2: புரிகிறதா?

மேலே உள்ள இரண்டு படங்களுமே ஒன்றுதான். 20110812 அன்றைய தங்கத்தின் 1 மணி நேர வரைபடம் (Hourly Chart). இதிலே ஒரு ஹெட்&ஷோல்டர்ஸ் அமைப்பு தெரிகிறதாவென்று பாருங்கள்!
இரண்டாவது படத்தில் லெஃப்ட் ஷோல்டர், ஹெட் & ரைட் ஷோல்டர்களின் அமைப்பினை ஆரஞ்ச் வண்ணத்தில் வளைவுக்கோடுகளாகக் காட்டியுள்ளேன்.

UTL1 & UTL2 என்று நீல நிறத்தில் இரண்டு கோடுகள் உள்ளன. இவை இரண்டும் வெவ்வேறு டிகிரிகளில் உள்ள அப்ட்ரெண்ட் லைன்கள். லெஃப்ட் ஷோல்டர், UTL1-ஐ உடைத்துக் கொண்டு கீழே இறங்கிய பிறகு, ஹெட் பேட்டர்ன் உருவாகும்போது UTL1 ரெஸிஸ்டன்ஸாக மாறுவதைக் கவனியுங்கள்.பிறகு, ஹெட், UTL2 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கீழே இறங்கி சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள நெக்லைனை உருவாக்குகிறது.
ரைட் ஷோல்டர், ஹெட்-டை விட லோயர் ஹை-யில் அமந்து, நெக்லைனை உடைத்துக் கீழே இறங்குகிறது. மறுபடியும் மேலே வந்து, முன்னர் சப்போர்ட்டாக இருந்த நெக்லைனின் ரெஸிஸ்டன்ஸை முட்டி மோதி நிற்கிறது. இவ்வாறு உடைபட்ட இடத்தை மீண்டும் வந்து தொட்டுப் பார்ப்பது ரீடெஸ்ட் எனப்படும்.
இந்த ரீடெஸ்ட் நடக்கும்போதோ, அல்லது நெக்லைன் முன்னர் உடைந்த சமயத்திலோ “ஷார்ட்” போவது, இந்த ஹெட்&ஷோல்டர் அமைப்பினை வைத்து டிரேட் செய்பவர்களின் வழக்கமாகும்.
ஷார்ட் டிரேட் என்ட்ரி லெவல்: 1735 – 1740 லெவல்
ஸ்டாப்லாஸ் : 1768 (ரைட் ஷோல்டரின் ஹை)
டார்கெட் = 1742 (நெக்லைன் உடைபட்ட இடம்) – 82 =1661. அதாவது 1661 வரை கீழே செல்ல ஒரு வாய்ப்புள்ள அமைப்பிது.
அது சரி! டார்கெட்டில் குறிக்கப்பட்டுள்ள 82 எப்படி வருகிறது என்று கேட்கிறீர்களா? இன்னுமொரு சின்ன கணக்கு!
ஹெட்-டின் ஹை: 1813. அதற்கு நேர்க்கீழே உள்ள நெக்லைனின் மதிப்பு 1732. இதன் வித்தியாசம்தான் (1813-1732) 81 புள்ளிகள். இதைத்தான், நெக்லைன் உடைபட்ட இடத்திலிருந்து குறைத்து, டார்கெட்டைக் கணக்கிட்டுள்ளோம்.
இதிலேயே, நாம் ஒரு ரிஸ்க்:ரிவார்ட் ரேஷியோவையும் கணக்கிடலாம்.
ரிஸ்க்: ஸ்டாப்லாஸுக்கும், என்ட்ரி-க்கும் உள்ள வித்தியாசம் (1768 – 1735)=33 புள்ளிகள்
ரிவார்ட்= 82 புள்ளிகள்.
ரிஸ்க்:ரிவார்ட்=33:82 —> 1: 2.50
அதாவது ஒரு ரூபாய் ரிஸ்க்குக்கு, 2ரூபாய் 50 பைசா இலாபம் (வந்தால்) ஈட்டித் தரக்கூடிய ஒரு நல்ல அமைப்பிது.
குறிப்பு: எனது குறிப்புகளின் படி டிரேடில் ஈடுபடுவது இலாபத்தை அளிக்காமலுமிருக்கலாம். இது படித்துத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட உரை. நீங்களே சுய முடிவெடுத்து டிரேடில் ஈடுபடுங்கள்!

-பாபு கோதண்டராமன்