JP Associates: By க்ரிஷ் – பாகம் 2


பாகம் 1 – இங்கே கிளிக்கிடவும் 

ஹலோ!

முந்தைய சார்ட்டுகளுக்கு அவருடைய அலசல்களைப் பார்த்தோம். அதிலே அவர் குறித்திருந்த டார்கெட் லெவல்களை அடைந்து விட்டிருக்கின்றது. மூன்றாவது டார்கெட்டான 43 லெவல்கள் தொடப்பட்டு விட்டன.

 JP Associates: மூன்றாவது டார்கெட்டான ரூ.43 லெவல்களை அடைந்து விட்டது.

JP Associates: மூன்றாவது டார்கெட்டான ரூ.43 லெவல்களை அடைந்து விட்டது.

அன்புடன்,

 

IDFC அலசல் – by க்ரிஷ்


இது IDFC hourly சார்ட்

படம் 1: IDFC ஒரு மணி நேர சார்ட்

படம் 1: IDFC ஒரு மணி நேர சார்ட்

அடுத்த சார்ட்டில், க்ரிஷ் வெங்கடேஷ் வார வரைபடத்தைப் போட்டு, அதிலே கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வரும் A-B-C கரெக்ஷன் பற்றியும் எழுதியுள்ளார். வேவ் C-ஆனது, வேவ் A-யின் 78.6% அளவிற்கு வந்திருக்கிறது: இன்னமும் கீழே வரைந்துள்ள மஞ்சள் நிறக் கோட்டிற்கு (சேனல் லைன்) வரவில்லை. ஆனால், தற்போதைய வால்யூமும், இன்ஸைட் (inside bar) பார் என்ற உள்ளடங்கிய பார் அமைப்பும் வலிமையைக் காட்டுகின்றன. மேலே செல்ல வாய்ப்புள்ள அமைப்பிது.

படம் 2: IDFC வார வரைபடம் (ABC கரெக்ஷன்; மஞ்சள் நிறச் சேனல் கோடுகள்)

படம் 2: IDFC வார வரைபடம் (ABC கரெக்ஷன்; மஞ்சள் நிறச் சேனல் கோடுகள்)

JP Associates : By க்ரிஷ்


நமது நீண்ட நாளைய நண்பர் க்ரிஷ் வெங்கடேஷ் அவர்களின் ஒரு சில சார்ட்டுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! அவரும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போதுதான் சமீப காலமாக நம்முடன் உலவ வந்திருக்கிறார்.

படம் 1: JA ASSOCIATES 20130823

படம் 1: JA ASSOCIATES 20130823

“என்னங்க? அவரோட கிராஃபிக்ஸ் எல்லாம் பட்டையக் கெளப்புதா?” அவரோட வியூக்களும்தான்! பின்னே பாருங்களேன்! அடுத்த சார்ட்டில் 37 என்ற முதல் டார்கெட் கிடைத்துள்ளது.

படம் 2: JP ASSOCIATES 20130905

படம் 2: JP ASSOCIATES 20130905 – 37 என்ற முதல் டார்கெட் நிறைவேறியுள்ளது.

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 10


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

முடிவெடுத்தல் (Decision making)

அத்தியாயம் 1 – அத்தியாயம் 2 – அத்தியாயம் 3 – அத்தியாயம் 4

செயல்படுத்துதல் (Execution)

அத்தியாயம் 5

மேனேஜ்மெண்ட் (Management)

அத்தியாயம் 6அத்தியாயம் 7 அத்தியாயம் 8அத்தியாயம் 9

அத்தியாயம் 10 தொடர்கிறது.

முதலில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மாத காலமாக தொடர்ந்து எழுத முடியாமைக்கு மன்னிப்பு கோருகிறேன்.

இப்போது  பிரமிடிங்க் பற்றிப் பார்ப்போம்!

விதி 8: தேவைப்பட்டால், பிரமிடிங்க் செய்யலாம்

முந்தைய அத்தியாயத்தில் ஒரு பிரமிட் படம் போட்டிருந்தேன். பிரமிட் எப்படியிருக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. “பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்”-ஆக இருக்கும். மேலே போகப் போக அளவில் சிறியதாகிக் கொண்டேயிருக்கிறதல்லவா? இது எப்படி பங்குச் சந்தை முதலீடு/வணிகத்திற்கு உபயோகமாகிறதென்று பார்க்கலாம்.

சப்போஸ், நாம் ஒரு பொசிஷன் எடுத்துள்ளோம். மார்க்கெட்டானது, நாம் எடுத்த டிரேட் படியே, இலாபத்தில் செல்கிறதென்று வைத்துக்கொள்வோம். அப்போது, அதன் திசையிலேயே மேலும் மேலும் நமது பொசிஷனை அதிகரித்துக் கொள்வதே “பிரமிடிங்க்” எனப்படும். இதற்கு 1) மார்க்கெட்டனது “ஸ்லோ அண்ட் ஸ்டெடி” (slow & steady) என்ற வாக்கிலே 2) ஒரே திசையில் (டிரெண்டில்) இருக்கவேண்டும். வலிமையான புல்லிஷ் மற்றும் பேரிஷ் மார்க்கெட்டுகள் பிரமிடிங்க் செய்ய உகந்தவை.

1) இன்வர்ஸ் *Inverse* மற்றும் 2) நார்மல் *Normal* முறைகளிலே பிரமிடிங்க் செய்யலாம்.

நார்மல் பிரமிடிங்கில் மார்க்கெட்டானது நமது டிரேடின் திசையிலேயே சென்று, நமக்கு இலாபத்தை கொடுத்துக்கொண்டிருந்தால், மேலும், மேலும் முதலில் எந்த அளவில் பொசிஷன் எடுத்திருந்தோமோ, அதே எண்ணிக்கையில் பொசிஷனை அதிகரித்துக் கொள்வதாகும். அதாவது, முதலில் 50 ஷேர்கள் வாங்கியிருந்தால், அடுத்தடுத்த டிரேட்களில் 50, 50 ஷேர்களாக வாங்கிக் குவிப்பதாகும்.

இன்வர்ஸ் பிரமிடிங்கில் எப்படி டிரேட் எடுப்பதென்று கீழேயுள்ள சிறிய அட்டவணையில் பார்க்கலாம்.

டிரேட் நம்பர்

விலை

Buy எண்ணிக்கை

மொத்த விலை

சராசரி விலை  (ஷேர்கள் கையிருப்பு)

1

2

3

4

5

6

மொத்தம் 

ரூ. 75

ரூ. 80

ரூ. 85

ரூ. 90

ரூ. 95

ரூ 100

300

150

75

35

25

15

600

ரூ.22,500

ரூ.12,000

ரூ. 6,375

ரூ. 3,150

ரூ. 2,375

ரூ. 1,500

ரூ. 47,900

ரூ. 75.00 (300)

ரூ. 76.67 (450)

ரூ. 77.86 (525)

ரூ. 78.62 (560)

ரூ. 79.32 (585)

ரூ. 79.83 (600)

இம்முறையில் பிரமிடிங்க் செய்யும்போது, சராசரி விலையானது, முதலில் வாங்கிய விலைக்கு அருகாமையிலிருக்காறு பொசிஷன்கள் எடுக்கப்படுகின்றன. அதாவது, அடுத்தடுத்த டிரேட்களில், ஷேரின் விலையேற்றத்திற்குத் தக்கவாறு (இந்த எடுத்துக்காட்டில்) பங்குகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து கொண்டே போவதைப் பாருங்கள்.

ஏன்? இவ்வாறு செய்தால், மொத்தமுள்ள 600 பங்குகளின் சராசரி விலையானது நமது முதல் டிரேட்-ஆன ரூ.75-க்குப் பக்கத்திலேயே இருக்கிறது. ஆனால் மார்க்கெட்டிலோ, கடைசியாக ரூ. 100-இல் டிரேட் ஆகிறது. அதனால், நமக்கு நல்ல இலாபம்தானே?

குட் லக்!

(தொடரும்

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 9


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

முடிவெடுத்தல் (Decision making)

அத்தியாயம் 1 – அத்தியாயம் 2 – அத்தியாயம் 3 – அத்தியாயம் 4

செயல்படுத்துதல் (Execution)

அத்தியாயம் 5

மேனேஜ்மெண்ட் (Management)

அத்தியாயம் 6அத்தியாயம் 7 அத்தியாயம் 8

அத்தியாயம் 9 தொடர்கிறது.

நம்முடைய டிரேட் இலாபத்திலிருக்கும்போது என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

(ஆஹா… ஞாபகம் வந்திடிச்சே எனக்கு! அதான் இந்தப் பக்கமா வந்து ஒருநடை எழுதிட்டுப் போகலாமுன்னு வந்திருக்கேன். ரொம்ப சாரிங்க! கொஞ்சம் (நெறையவே) வேலையிருக்கிறதுனால முன்பு போல எழுத முடியவில்லை)

விதி 7: நீங்க கிரிக்கெட் மட்டையைச் சுழற்றும் போதெல்லாம் காற்றைத்தான் அடிக்கிறீர்களா? கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க!

நீங்க எடுக்குற டிரேட் எல்லாமே தொடர்ச்சியா உங்களைக் கவிழ்த்துக் கொண்டேயிருந்தால், உங்களோட டிரேடிங்கை உடனே நிறுத்தி வையுங்கள். ஏன்னா, இந்தத் தோல்விகளெல்லாம் எதைச் சொல்லுதுன்னா, “எலே! என்னலே! நானு இங்குட்டு இந்தப் பக்கமா போயிட்டிருக்கேன்! நீ என்னமோ அந்தப் பக்கமா பராக்கு பாத்துக்கிட்டே வேறெங்கேயோ போரயே!” அப்படின்னு ஒரு எச்சரிக்கையை சொல்லுது. அதனால, கொஞ்சம் டிரேடிங் எல்லாம் நிறுத்திட்டு, “நாம் ஏன் மார்க்கெட் செல்லும் திசையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான திசையில் நமது டிரேட்களை எடுக்கிறோம்? அதை எப்படி சரி செய்வது?” என்ற ஆராய்ச்சியில் இறங்கி, நமது தவறுகளைக் களைந்தெறிய முயற்சிக்க வேண்டும்.

இதே நீங்க அடிக்கிறதெல்லாம் சிக்சர், பௌண்டரி-ன்னு போயிட்டேயிருந்துதுன்னா, நிறுத்தாதீங்க! அதே தொடர் தோல்விகள் வந்தால், மார்க்கெட் ஏதோ சொல்ல விரும்புதுன்னு புரிஞ்சிகிட்டு, அது என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கணும்.

அடுத்த வாரம் Pyramiding அதாவது, பிரமிடிங்க் என்கிற “இலாபத்தில் பொசிஷன் இருக்கும்போது, மேலும் பொசிஷன் சைஸை அதிகரிப்பது” என்பது பற்றி பார்க்கலாம்!

படம்: பிரமிட்

(தொடரும்


வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 8


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

முடிவெடுத்தல் (Decision making)

அத்தியாயம் 1 – அத்தியாயம் 2 – அத்தியாயம் 3 – அத்தியாயம் 4

செயல்படுத்துதல் (Execution)

அத்தியாயம் 5

மேனேஜ்மெண்ட் (Management)

அத்தியாயம் 6அத்தியாயம் 7

அத்தியாயம் 8 தொடர்கிறது.

சென்ற அத்தியாயத்தில் இலாபம் வரும்போது என்ன செயல் வேண்டுமென்று பார்க்க ஆரம்பித்தோம். மேலும் தொடர்வோம்.

விதி 5: கண்ணில் தெரியும் இலாபத்தை நஷ்டமாக மாற்றாதீர்கள்!

ரொம்ப சிம்பிள்! நீங்க எடுக்குற டிரேட், நீங்க நெனைச்ச மாதிரியே இலாபத்தின் பக்கமாக நகர ஆரம்பிக்கும்போது என்ன செய்வீங்க?

நானாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட லெவல் போனத்துக்கப்புறம், பாதி பொசிஷனை இலாபத்தில் கொடுத்து விடுவேன். அப்புறம் ஒரு டிரைலிங்க் ஸ்டாப் லாஸ் “Trailing Stop Loss”(TSL) போட்டுடுவேன். இந்த TSL எப்படி போடுவேன்னா, ஒரு முக்கியமான சப்போர்ட் லெவலுக்குக் கொஞ்சம் மேலே போட்டு, அப்படியே அந்த TSL அடிச்சாலும், எனக்கு எந்த நஷ்டமும் வராத ஒரு லெவல்ல போட்டுக்குவேன். புரியுதுங்களா?

சப்போஸ், ஒரு 100 abc ஸ்டாக்குகளை ரூ.112 லெவலில் வாங்குகிறேன் (டார்கெட் 119.50; ஸ்டாப் லாஸ் 109.50) என்று வைத்துக் கொள்வோம். இதிலே, ரிஸ்க் 2.50; ரிவார்ட் 7.50 அதாவது 1:3

இதிலே நாம் ஒரு ஸ்டாக்குக்கு ரூ 2.50 என்ற அளவிலே, 100 ஸ்டாக்குகளுக்கு ரூ 250/- ரிஸ்க் எடுத்துள்ளோம் என்று கவனித்துக் கொள்ளுங்கள்.

டிரேடும் 114, 115 என்று இலாபத்தில் இருக்கிறது. இப்போது, பாதி பொசிஷனை (அதாவது 50 ஸ்டாக்குகளை) 115 என்ற அளவிலே கொடுத்து விடுவேன். அதாவது 50 x ரூ 3 = ரூ 150 என்ற அளவிலே என்னுடைய ரிஸ்கைக் குறைத்துக் கொள்வேன். (ஆரம்பத்திலிருந்த ரிஸ்க் எவ்வளவுன்னு ஞாபகமிருக்கிறதா?)

250 – 150 = ரூ 100/-தான் என்னுடைய தற்போதைய ரிஸ்க்.

ரிஸ்க்கைக் குறைத்தாகி விட்டது. அதனால், இலாபத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டும். அதாவது, மீதி இருக்கிற 50 ஸ்டாக்குகளுக்கு 112. 50 அல்லது 113 என்று எங்கே ஒரு முக்கியமான சப்போர்ட் இருக்கிறதோ, அதற்குக் கொஞ்சம் மேலாக ஒரு TSL போட்டுக்கொள்வேன்.

இந்த TSL அடிபட்டால், நஷ்டம் ஏதுமில்லை; அடிபடாமலிருந்தால், இலாபம் மேலும் பெருகும்.

விதி 6: இலாபத்தின் ஒரு பகுதியை, வெளியில் எடுத்து விடுங்கள்.

அதாவது, உங்களுடைய டிரேடிங் அக்கவுண்ட்டிலிருக்கும் இலாபத்தில், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட பகுதியை (25%, 40%, 50% என்று எந்த நம்பர் உங்கள் நியூமராலஜி லக்கி நம்பரோ, அந்த அளவில் :-)) வெளியில் எடுத்து விடுங்கள்.

(தொடரும்)

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 7


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

முடிவெடுத்தல் (Decision making)

அத்தியாயம் 1 – அத்தியாயம் 2 – அத்தியாயம் 3 – அத்தியாயம் 4

செயல்படுத்துதல் (Execution)

அத்தியாயம் 5

மேனேஜ்மெண்ட் (Management)

அத்தியாயம் 6

அத்தியாயம் 7 தொடர்கிறது.

விதி 3: எண்ட்ரியா? ரொம்ப ஈஸி! எக்ஸிட்டா? அப்டீன்னா என்னா?

//ஒரு டிரேடுல இருந்து வெளியில வர்றதுதான் ரொம்ப கஷ்டமானது//

ஒரு ட்ரேடை மேனேஜ் செய்வதற்கு ஒரே ஒரு வழிதானிருக்கிறது. அது இலாபத்திலிருந்தால், மேலும் பெருகட்டும்; நஷ்டத்திலிருந்தால், ஏதாவது ஒரு எக்சிட் எடுத்து, வெளியில் வந்து நஷ்டத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும்.

வெற்றியாளர்கள் எல்லாம் பல்வேறு வகை டெக்னிக்குகள் உபயோகித்து என்ட்ரி எடுப்பார்கள். ஆனால், நஷ்டம் என்று ஒன்று கண்ணில் பார்த்து விட்டால், நஷ்டத்தைக் குறைக்க உடனடியாக வெளியில் வந்துவிட்டு “துண்டைக் காணோம்; துணியைக் காணோம்” என்று ஓட்டமெடுத்து விடுவார்கள்.

வெற்றியடைய மறுப்பவர்களோ, பல்வேறு வகை டெக்னிக்குகள் உபயோகித்து என்ட்ரி எடுத்தாலும், இலாபகரமான சமயங்களில் இதே பல்வேறு வகை டெக்னிக்குகளை உபயோகித்துத் தங்களின் இலாபத்தின் அளவினைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

விதி 4: நாம் நினைத்தபடியே மார்க்கெட்டானது சரியான திசையில் சென்று, நமது டிரேட் இலாபத்திலிருந்தால் …… ரிலாக்ஸ், ப்ளீஸ்!

நாம எடுக்குற ஒண்ணு, ரெண்டு டிரேட்கள், எக்குத்தப்பா சரியா இருந்து, பிளஸ்ஸுல இருந்துதுன்னா, வர்ற இலாபத்தை மேலும் அதிகரிக்கச் செய்யணும். அந்த டிரேட்ல இருந்து வெளியில வந்துடக் கூடாது. அதாவது, “அது அப்படியிருக்கும், இது இப்படியிருக்கும்” அப்டீன்னு எல்லாம் நாமளா நெனச்சிண்டு எக்சிட் ஆயிடக்கூடாது.

மார்க்கெட் என்ன சொல்றதுன்னு, நன்னா கவனிக்கணும். புரியறதா? அதாவது, மார்க்கெட்தான் நம்ம வெளியில வர்றதுக்கான காரணத்தச் சொல்லணும்; நம்மளோட மனசு சொல்லப்படாது.

அப்படி ஒண்ணு ரெண்டு பொசிஷன்கள் இலாபத்தில இருந்து, கொஞ்சம் ஏதேனும் கைச்செலவுக்கு பைசா தேவைப்பட்டால், நீங்கள் வேற எப்படியாவதுதான் அந்தச் செலவுகளைப் பாத்துக்கணும் (ஆஹா! என்கிட்ட கேட்டுடாதீங்க! :-))

வெற்றியா? மேலும், மேலும் வளரவிடணும்னு ஒரு வெறி வந்துடனும்; நஷ்டமா? அதன் வாலை ஒட்ட நறுக்கிடனும். ஏன் நஷ்டத்தை நறுக்கிடனும்? ஏனெனில், நம்மோட முதலீட்டைக் காப்பாத்திக்கனும். நோ முதலீடு, நோ டிரேடிங்! சிம்பிள்!

ஒரு டிரேடர் வெற்றியடையறது, அவர் தனது இலாபத்தை எப்படி மேலும் வளர்த்து, நஷ்டத்தைக் குறைத்துக் கொள்கிறார் என்னும் டிரேட் மேனேஜ்மெண்ட் திறமையில்தானிருக்கிறது.

பாபு கோதண்டராமனின் இடைச்செருகல் 

(இதற்கு ஒரு அருமையான ஒரு புத்தகம் ஒன்று சொல்கிறேன். படித்துப் பாருங்கள்! 1952-54 நிகழ்வுகளின் பதிவு அது. நிக்கோலஸ் டார்வாஸ் என்ற ஒரு டான்ஸர், தான் எப்படி “டார்வாஸ் பாக்ஸ் தியரி” மூலம் ஸ்டாக் மார்க்கெட்டில் இரண்டு மில்லியன் டாலர் (அதுவும் அந்த காலகட்டத்து டாலர்) சம்பாதித்தார் என்று தனது டிரேட் விபரங்களைக் கொடுத்துள்ளார். மேலும் விபரமாகச் சொல்லி, சஸ்பென்ஸை உடைக்க மாட்டேன். படித்தால்தான் புரியும் அதன் சுவாரஸ்யம்! ஜமாயுங்கள்!

புத்தகத்தின் பெயர்: How I made $2,000,000 in the stock market

நூலாசிரியர்: Nicolas Darvas

(தொடரும்)

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 6


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

இதுவரையிலும், முடிவெடுத்தல் (Decision making) பற்றி

அத்தியாயம் 1அத்தியாயம் 2அத்தியாயம் 3அத்தியாயம் 4

ஆகியவற்றிலும்,  செயல்படுத்துதல் (Execution) பற்றி

அத்தியாயம் 5 -இலும் பார்த்தோம்.

இப்போது, அடுத்ததாக வரும் மேனேஜ்மெண்ட் (Management) பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு சினிமாப் படக் காட்சியைப் பார்க்கலாம்.

படம்: தசாவதாரம்;
இடம்-சென்னை விமான நிலையத்தில், அமெரிக்காவிலிருந்து வந்த விஞ்ஞானி கமலை, “டண், டக்கு, டண், டக்கு” பின்னணி இசையுடன் “நாயுடு காரு” கமல் விசாரணை செய்யும் காட்சியில் வரும் ஒரு சிறிய பகுதி.
நாயுடு காரு: (விஞ்ஞானியின் தமிழ் தடுமாற்றத்தைப் பார்த்து) ஏமிய்யா? நானு ஆந்த்ராவிலிருந்து வந்து, தமிழக் கத்துக்கிட்டுப் பேசும்போது, நீ தமிழ்நாட்டுலேயோ பொறந்து, வளந்துட்டு தமிழ் பேசுறதுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டயேன்னா, தமிழ் எப்படிய்யா வளரும்?
விஞ்ஞானி கமல்: (கொஞ்சம் அவசரம், கொஞ்சம் பதற்றம், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் இயலாமை கலந்த பார்வையுடன் அவரைப் பார்த்து)….ஊஊம்ம்….. உங்களை மாதிரி யாராவது வந்து காப்பாத்துவாங்க, சார்!

இந்தக் காட்சியில வருவது மாதிரிதாங்க என்னோட நிலைமையும் இப்போது. தமிழ்ல எழுத ஆரம்பிச்சப்புறம், என்னென்ன கேள்விகள் மனசுக்குள்ளார வருது தெரியுங்களா?

மேனேஜ்மெண்ட்-க்கு “மேலாண்மை”யா? “மேலான்மை”யா? கொஞ்சம் (இல்ல, இல்ல; நிறையவே) கொழம்புதுங்க!

Management – மேலாண்மை

விதி 1: உங்களின் வணிக முதலீட்டை (Trading Capital) பத்து சமமான ரிஸ்க் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள்

“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு, “நான் ஒரு சராசரி டிரேடர்” என்பதாகத்தான் பதிலிருக்கும். அவ்வாறிருக்கும் பட்சத்தில், நம்முடைய நிலையும், முதலீட்டுத் தொகையும் ஒரு சில வரைமுறைகளுக்கு உட்பட்டதாகத்தானிருக்கும். இதற்கு மாறாக, சந்தையோ, எண்ணிலடங்கா டிரேடர்களைக் கொண்டு ஒரு வலிமைமிக்க சக்தியாக விளங்குகிறது.

நாம் ஒரு ரூபாயைத் தொலைத்தால், சந்தையும்தான் தொலைக்கும். ஆனாலும், அதன் வலிமையின் முன் நாம் ஒரு சிறு துறும்புதான். அதனால்தான், நஷ்டங்களைக் குறைத்துக்கொள்ள நமது ரிஸ்க்-இன் அளவினைக் குறைப்பதே உத்தமம்.

முதலீட்டுத் தொகை ஒரு லட்சம் என்றால், இதனை 10 சம பங்குகளாக ரூ.10,000/- என்ற அளவில் பிரித்து, பத்து டிரேடுகளுக்கு வரும்படி வரும் படி டிரேட் சைஸ் அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு வகைக் கணக்கீடு.

இன்னொரு வகைக் கணக்கீடு எப்படியெனில், கையிருப்பில் ஒரு 10% மட்டுமே ஒரு டிரேடுக்கான முதலீடு என்பதாகும்.கணக்கீட்டைப் பார்ப்போம்.

ஆரம்ப முதலீடு – ரூ. 1,00,000 (விதி – ஒவ்வொரு டிரேடுக்கும் கையிருப்பில் 10% மட்டும் ரிஸ்க் கேபிட்டலாக முதலீடு செய்வது. நான் 10% என்று ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்கிறேன். அது 8%, 6%, 7% என்று எந்த அளவிலும் இருக்கலாம்)

முதல் டிரேடுக்கு: ரூ. 10,000  (அதாவது கையிருப்பான ஒரு லட்சத்தில் 10% என்ற இலட்சியத்துடன் நாம் இருப்பதால்; இதில் அலட்சியம் ஏதும் வேண்டாம்) உபயோகிக்கலாம்.

     முதல் டிரேடுக்குப் பிறகு தற்போதைய கையிருப்பு 90,000

2-ஆம் டிரேடுக்கு: ரூ. 9,000 (கையிருப்பில் 10%) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

     2-ஆம் டிரேடுக்குப் பிறகு தற்போதைய கையிருப்பு: ரூ. 81,000.

3-ஆம் டிரேடுக்கு: ரூ. 8,100 மட்டும்தான் நம்முடைய முதலீடாக இருக்கும் (ரூ. 81,000/-த்தின் 10%).

இப்போது, நீங்கள் ஏதேனும் பொசிஷனிலிருந்து வெளியே வந்து விட்டால், கையிருப்பு கூடும். அதற்குத் தகுந்தவாறு உங்களின் அடுத்த டிரேட் மதிப்பும் மாறும்.

கையிருப்புக்குத் தகுந்தவாறு, ஒரு குறிப்பிட்ட (மாறுபடாத) சதவிகிதத்தில் நம்முடைய டிரேட் சைஸ் மாறும் முறை புரியுதுங்களா? கையில காசு அதிகமா இருக்கும்போது, ரிஸ்க் கேபிடல் அதிகமாகுது; கையில பேலன்ஸ் கம்மியாகும்போது, ரிஸ்க் கேபிடலும் அதுக்குத் தகுந்த மாதிரி குறையுது.

(சாராம்சம்: ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்!)

விதி 2: ஒரு நல்ல டிரேடானது, ஆரம்பத்திலிருந்தே இலாபகரமாகத்தானிருக்கும்

ஒரு டே-டிரேடரின் அலுவலக நேரத்தில் (;-)), அவர் வாங்கிய (அல்லது விற்ற) ஸ்டாக்குகளின் விலையேற்ற, இறக்கங்கள் அவ்வப்போது இலாபத்தையோ, நஷ்டத்தையோ காட்டிக் கொண்டிருக்கும். இவையெல்லாம் சந்தையின் கூச்சல்கள் “Market noises” என்பதினால் ஏற்படக்கூடிய நிலையாகும்.

ஒரு டிரேடர், ஒரு ஸ்டாக் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதில் நஷ்டமடைகிறார் என்றால், ஒன்று அவர் வாங்கியது “ஹை”யாக இருக்கவேண்டும்; இல்லையெனில், ஒரு கீழிறக்கச் சந்தையிலே (Downtrending market) வாங்கியிருக்க வேண்டும்.

அதே, அவர் இலாபத்திலிருக்கிறார் என்றால், ஒன்று அவர் “லோ”-வில் வாங்கியிருக்க வேண்டும்; மற்றொன்று அவர் வாங்கிய இடத்திலிருந்து, மேலும் விலையேற அந்த ஸ்டாக்கிலே இன்னமும் வலிமை இருந்திருக்க வேண்டும்.

இவ்வாறு, ஒரு டிரேட் ஆரம்பத்திலேயே இலாபத்தில் செல்கிறதென்றால், அது மேலும் இலாபத்தைக் கொடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

(தொடரும்)

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 5


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

அத்தியாயம் 1அத்தியாயம் 2அத்தியாயம் 3அத்தியாயம் 4

இதுவரையிலும், முடிவெடுத்தல் (Decision making) பற்றி பார்த்தோம். இப்போது, செயல்படுத்துதல் (Execution) பற்றிப் பார்க்கலாம்.

செயல்படுத்துதல்

விதி 1: கே. பாலச்சந்தருக்கு “இரு கோடுகள்”; டிரேடர்களாகிய நமக்கு “இரு ஆர்டர்கள்”

ஒரு ஆர்டர் போட்டு, டிரேடுல என்ட்ரி ஆனவுடன், ஸ்டாப்லாஸ் ஆர்டர் போட்டுடனும்! இத நான் சொல்லலீங்க. 1922-லேயே தாமஸ் டெம்பிள் ஹாய்ன் (Thomas Temple Hoyne) என்பவர் தன்னுடைய “ஸ்பெகுலேஷன் – Speculation: Its sound principles and rules for its practice” என்ற புத்தகத்துல “நான் எப்பப்பெல்லாம் மார்க்கெட்ல ஆர்டர் போட்டு, பொசிஷன் எடுக்கிறேனோ, உடனுக்குடனேயே ஸ்டாப்லாஸ் ஆர்டரும் போட்டுடுவேன்” அப்படீன்னு சொல்லியிருக்கிறார். இதைத்தான் அவர் “இரண்டு-ஆர்டர் ரூல்” அப்படீன்னு சொல்றார். ஒரு ஆர்டர் என்ட்ரிக்கு; மறு ஆர்டர் ஸ்டாப்லாஸுக்கு.

“மார்க்கெட்டானது இப்படித்தான் போகும்; இல்ல, அப்படித்தான் அடிக்கும்” என்றெல்லாம் எப்படி வேண்டுமானாலும் நினைப்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால், ஸ்டாப்லாஸ் ஆர்டர்னு ஒன்றை எங்கேயாவது, ஒரு லெவலில் போட்டு வைக்க வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட விகிதாசாரம் (%) என்றோ, அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நம்பராகவோ இருக்கலாம். ஏனெனில், நிபுணத்துவம் வாய்ந்த டிரேடர்களெல்லாம் “தங்களுடைய ஸ்டாப்லாஸ் எது?” என்று நன்றாகத் தெரிந்துதான் டிரேடில் இறங்குவார்கள். அவங்களே அப்படீன்னா, நாமளும் அப்படித்தானே இருக்கோனும்!

விதி 2: சரியான ஆர்டர் முறைகளை பின்பற்றி டிரேடில் ஈடுபடவும்

என்னுடைய முக்கால்வாசி ஆர்டர்கள் முழுவதும் மார்க்கெட் ஆர்டர்கள்தான். நான் ஏதேனும் பொசிஷன் எடுக்கணும்னா, மார்க்கெட் ஆர்டர் போட்டு, அப்போது என்ன விலையிருக்கிறதோ அந்த விலையிலேயே டிரேட்-ஐ செயல்படுத்துவேன். (அப்பாடா! “செயல்படுத்துதல்” என்ற அத்தியாயத்துல “செயல்படுத்துவேன்” என்ற வார்த்தையை எப்படியோ கஷ்டப்பட்டு நுழைச்சிட்டேன்!) அதே மாதிரி, டிரேடுல இருந்து எக்சிட் ஆகணும்னாலும், மார்க்கெட் ஆர்டர் போட்டு, அப்போதிருக்கிற விலையிலேயே வெளியே வந்துடுவேன்.

“அதெல்லாம் முடியாது. நான் மத்த ஆர்டர் முறைகளையும் உபயோகிப்பேன்” என்று கூறுபவராக நீங்கள்? அப்படியானால், என்ட்ரிக்கு மார்க்கெட் ஆர்டரும், எக்சிட்டுக்கு மத்த ஆர்டர் முறைகளையும் உபயோகிக்கலாம்.

பாபு கோதண்டராமனின் குறிப்பு: “மத்த ஆர்டர் டைப்புகளா? ஒண்ணுமே புரியலையே!” அப்படீன்னு சொல்றீங்களா? நான் முன்னர் எழுதிய “ஷேர் மார்க்கெட் ஆர்டர்கள் – மார்க்கெட் & லிமிட் ஆர்டர்கள்” என்ற பதிவினை இங்கே கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்.

அடுத்த வாரத்திலிருந்து, Management – மேலாண்மை பற்றி பார்க்கலாம். அதுலதான் மேட்டர் ரொம்ப ஜாஸ்தியாயிருக்குது. 🙂

(தொடரும்)

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 4


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: பாபு கோதண்டராமன்

அத்தியாயம் 1அத்தியாயம் 2அத்தியாயம் 3

விதிகள் தொடர்கின்றன.

விதி 9: உங்களின் இலாபத்தை முன்னரேயே தீர்மானிக்காதீர்கள்

அதாவது, உங்களுடைய “லாங்” டிரேட் இலாபத்தில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நீங்கள் கணித்தபடியே மார்க்கெட் செல்கிறதென்றால், அது உங்களின் கணிப்பை விடவும் மேலே செல்லலாம். ஏனெனில், நீங்கள் கணித்தபோதிருந்ததை விட மேலும் வலுவான நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கலாம். எனவே “டிடெய்லிங்க் ஸ்டாப் லாஸ்” போட்டு, டிரெண்டின் வலிமையை முழுவதுமாக அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

விதி 10: ஒரு பங்கு மேலிருந்து ரொம்பக் கீழே விழுந்துள்ளதா? ஸ்டாப்! அதை வாங்காதீர்கள்! அதே போல உச்சத்திலிருக்கும் பங்கை விற்காதீர்கள்!

ஓ! இது ரொம்பக் கஷ்டமான மேட்டரா இருக்குதுங்களா?

ஒரு காளையின் பிடியிலிருக்கும் பங்கு, கீழே விழுந்துடிச்சின்னா, அந்த மாதிரி விழுந்தது புல் (Bull) மார்க்கெட்டில் ஏற்படும் வழக்கமான பின்னிழுப்பா அல்லது காளையாக இருந்தது கரடியாக மாறிவிட்டதா (ட்ரெண்ட் ரிவர்ஸ் கியர் போட்டு விட்டதா?) என்பதை முதலில் கணிக்க வேண்டும்.

முதலீட்டாளர்களும், தினசரி வர்த்தகர்களும், “ஆல்-டைம் ஹை” எனப்படும் உச்சத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் முந்தைய உச்சங்கள் உடைபட்டு மேலும் புதிய உச்சங்கள் உருவாகும்போது சந்தை “ஸ்டாப் Buy ஆர்டர்களை” (ஷேர் மார்க்கெட் ஆர்டர்கள் பதிவு ஞாபகம் வருகிறதா?) டெஸ்ட் செய்து வலிமையைக் காட்டுகிறது.

விதி 11: ஒரு pullback பின்னிழுப்புக்குப் பின் ஏற்படும் புதிய உச்சத்தில் வாங்குபவராக மாறுங்கள்

ஓ! மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், யார் யார் கம்மியான விலையில் “லாங்” பொசிஷன் எடுத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும்.

சந்தையானது, ஒரு ரேஞ்சிலிருந்து உடைத்துக் கொண்டு மேல் பக்கமாகச் செல்வது, வலிமையைக் காட்டுகிறது. அப்போது வலிமையாக மேலே செல்லலாம்; அல்லது மேலே செல்வது போல “கண்ணாமூச்சி” காட்டிவிட்டு மறுபடியும் ரேஞ்சுக்குள்ளேயும் வந்து விடலாம்.

வலிமையுடன் மேலே செல்லும்போது, என்ன நடக்கிறதென்று பார்ப்போம். அப்போது இரண்டு விதமான டிரேடர் க்ரூப்புகள் “லாங்” செல்வார்கள்.

ஒன்று, முன்னர் ஷார்ட்டில் இருக்கும் தினசரி வர்த்தகர்களும், பொசிஷன் டிரேடர்களும், கையிலிருக்கும் “ஷார்ட்”தைக் கவர் செய்து, “லாங்” பொசிஷன் எடுப்பார்கள்.

அடுத்ததாக, கம்மியான விலையில் “லாங்” எடுத்திருக்கும் முதலீட்டாளர்களும், மேலும் புதிய “லாங்” பொசிஷன் எடுத்து தங்களது கையிருப்பை அதிகரித்துக் கொள்வார்கள்.

டிரிபிள் டாப் (Triple top breakout) பிரேக் அவுட் எனப்படும் சமநிலையில் உள்ள மூன்று உச்சங்களை உடைத்து மேலே செல்வது டபுள் டாப் பிரேக் அவுட்டை (Double top) ரொம்பவும் வலிமையானதாக இருக்கும்.

பிரேக்கவுட்டிற்குப் பிறகு நடக்கும் பின்னிழுப்பு குறைவான வால்யூமிலும், அதன் பிறகு விலையேர்ரம் அதிக வால்யூமிலும் நடைபெற்றால், காளைகள் வலிமையடைகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மேலே சென்று “கண்ணாமூச்சி” ஆடிவிட்டு, அதே வேகத்தில் கீழே வந்து விட்டால், அது “False breakout” (ஃபால்ஸ் பிரேக் அவுட்) ஆக அமையும்.

விதி 12: கத்திரிக்காய் முற்றினால், கடைவீதிக்குத்தான் வந்தாக வேண்டும்

அதாவது, காலம் கனிந்து, சாதகமாக இருந்தால், மார்க்கெட் திரும்பித்தான் ஆக வேண்டும். மார்க்கெட்டை ஆராய்ச்சி செய்யும்போது, விலை மற்றும் வால்யூம் வைத்துத்தான் பெரும்பாலானவர்கள் ஆராய்கிறார்கள். அதைப்போல, இன்னமும் சொல்லப் போனால், அவற்றை விட, டைம் சைக்கிள் அனாலிசஸ் (time cycle analysis) எனப்படும் காலத்தை அளவுகோலாக வைத்து செய்யப்படும் ஆராய்ச்சியும் மிக முக்கியமானதாகும்.

உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட ரேஞ்சிலேயே விலையானது மேலுக்கும், கீழுக்குமாக யோ-யோ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தால், அதிலே நிறைய தடவை காலச் சுழற்சி முறையிலே விலை ஒரு பக்கத்திலிருந்து, இன்னொரு பக்கத்திற்கு செல்வதைப் பார்க்கலாம்.

விதி 13: என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியலைன்னா, “ஒண்ண்ண்ணும் செய்யாம,  சும்மா கம்ம்ம்ம்முனு இருங்க”

“ஒண்ணும் செய்யாம சும்மா இருக்குறதே ஒரு பெரிய வேலைதான்”னு வடிவேலு ஒரு படத்தில ஜோக்கடிப்பாரே! நாம வாங்கிய ஏதேனும் ஒரு பொருள் பிடிக்கலைன்னா, அதை திருப்பிக் கொடுத்துட்டு ரீஃபண்டோ அல்லது எக்ஸ்சேஞ்சோ செய்து கொள்ளலாம். பங்குச்சந்தையிலே சில சமயங்களில் என்ன நடக்கிறதேன்றே புரியாது. அந்த மாதிரி நேரங்களில், நாம் கொஞ்சமும் கூச்சப்படாமல் “கேலரியில்” உட்கார்ந்து நடக்கும் ஆட்டத்தை வேடிக்கைப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; நாமும் விளையாடி அடி, உதைபட்டு வரக்கூடாது.

விதி 14: டிப்ஸ் பணம் பண்ணாது!

நல்ல டிப்ஸ் கொஞ்சம் பேருக்குத்தான் கிடைக்கும். மோசமான டிப்ஸோ எல்லோருக்கும் கிடைக்கும். அதனால, நாமே மார்க்கெட்டின் விலையேற்றங்களை அலசி, ஆராய்ந்து முடிவெடுப்பதுதான் பணம் ஈட்டுவதற்கான நல்வழியாக அமையும். நாமே நமது வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிப்பவராகவும் அமைகிறோம்.

இவ்வாறு மார்க்கெட்டின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வதனால் எந்தவொரு டிப்ஸின் உதவியுமில்லாமல், நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும், எந்த மார்க்கெட்டிலும் வணிகம் செய்யலாம். மார்க்கெட்டுகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இயங்குபவைதான். இதை விட்டுவிட்டு, நாம் டிப்ஸின் மூலம் மட்டுமே வணிகம் செய்பவராக இருந்தால், டிப்ஸ் எந்த மார்க்கெட்டுக்குக் கிடைக்கிறதோ, அந்த மார்க்கெட்டில் மட்டுமே நம்மால் வணிகத்தில் ஈடுபட முடியும். மேலும், நாம் ஒருவரைச் சார்ந்து டிப்ஸ் வாங்கும் போது, அவர் வேறொருவரிடமிருந்து வாங்கி நமக்குக் கொடுப்பவராகக் கூட இருக்கலாம். இது இப்படியே ஒரு தொடர்கதை போல செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

கடந்த மூன்று அத்தியாயங்களில் முடிவெடுத்தல் (Decision making) பற்றிய சில விதிமுறைகளைப் பார்த்தோம். அடுத்த வாரங்களில், செயல்படுத்துதல் (Execution) பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பாபு கோதண்டராமனின் இன்னொரு இடைச்செருகல்: (நாராயணா! இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலையே!) 🙂

இந்தக் கட்டுரையை எழுதியவர் நண்பர் ஜெ‌கே-தான். அவரின் எண்ணங்களை என்னால் முடிந்த வரையில் புரிந்து கொண்டு, தமிழில் மாற்றம் செய்துள்ளேன். அதனால்தான், தயங்காமல் நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டி எழுதவும்! அப்போதுதான் மேலும் பல விளக்கங்களை அவரிடமிருந்து நான் பெற்று உங்களுக்களிக்க முடியும்! நன்றி!

(தொடரும்)