காளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்! பாகம் 2


சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைக்கிறார்கள்

இடம்: ஹோட்டல் ஸற்குரு, பாண்டிச்சேரி! நாள்: நவம்பர் 30, 2013

திரு. B. ஸ்ரீராம்

திரு. B. ஸ்ரீராம்

2.

திரு. B.கிருஷ்ணகுமார்

திரு. B.கிருஷ்ணகுமார்

3.

திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

திரு. B.ஸ்ரீராம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்கள். பழக்கூடையும் ரெடியாக இருக்கிறது! :) மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இவை வழங்கப்பட்டன.

திரு. B.ஸ்ரீராம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்கள். பழக்கூடையும் ரெடியாக இருக்கிறது! :) மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இவை வழங்கப்பட்டன.

பங்கேற்பாளர்கள்

DSCN1393 DSCN1394 DSCN1395 DSCN1396 DSCN1397 DSCN1398 DSCN1399  DSCN1411 DSCN1412

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் IAP 2013 12 07


ஹலோ!

மாதமிருமுறை மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நடத்தும் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு முகாம்களின் ஒரு பகுதியான, வரும் சனிக்கிழமை 07/12/2013 அன்று மாலை, “சார்ட் பேட்டர்ன்களை எவ்வாறு பயன்படுத்துவது?” எனற தலைப்பினிலே நான் பேச இருக்கின்றேன்! இல்லையில்லை…. படம் காட்ட இருக்கின்றேன்!

நேரம்: மாலை 4:00 – 6:00

இடம்: எக்ஸ்சேஞ்ச் வளாகம், 30-செகண்ட் லைன் பீச், சென்னை – 600001 (சென்னை பீச் இரயில் நிலையம் எதிர்புறம் & GPO-விற்குப் பின்னால்)

அனுமதி இலவசம்! (முன்பதிவு செய்துகொள்ளுங்கள்)

Contact Details: 25228951/52/53

Email: mse.investoredu@gmail.com

 

தேநீர்: மாலை 3:30

 

 

 

 

MSE INSTITUTE OF CAPITAL MARKETS

of

MADRAS STOCK EXCHANGE LIMITED

 

Cordially invite you for the

 

INVESTORS AWARENESS & EDUCATION PROGRAMME

on

 

How to use Chart Patterns effectively?”

 

By

 

Mr. Babu Kothandaraman,

Investment Consultant

 

 

Date: Saturday, 7th December, 2013

Time:  04.00 p.m. to 06.00 p.m.

 

Venue: Exchange Building, IV Floor,

30, Second Line Beach,

Chennai-600 001.

 

Request confirmation of Participation

on or before 6th December, 2013

 

Contact Details: 25228951/52/53

Email: mse.investoredu@gmail.com

 

No Registration Fee                                                  Tea:  3.30 p.m.

 

Profile of Mr. Babu Kothandaraman

 

He holds Diploma in Hotel Management and Catering Technology from the Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition.

 

He is a system trader, an avid follower of technical analysis.  He writes about Technical Analysis in Tamil, on his blog “Kaalaiyum Karadiyum”.  He also writes articles in magazines.  He is also a visiting faculty at BSE.   He has conducted a couple of training sessions on technical analysis.

காளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்!


ஹலோ நண்பர்களே!

DSC_0329

கடந்த இரு நாட்களும் எனக்கொரு புதிய அனுபவமாக இருந்தது! ஆமாம்! இந்த செமினாரின் சிறப்புவிருந்தினார்களான திரு ஸ்ரீராம் மற்றும் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் காலை 4 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளனர்; மதுரைலிருந்து க்ரிஷ் வெங்கடேஷ் அவர்கள் இரவுப்பயணமாக காலை 6 மணியளவில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.

விழாவினைச் சிறப்பிக்க வந்திருக்கும் மும்மூர்த்திகள்! (இடமிருந்து வலம்) திரு. B. ஸ்ரீராம், திரு. கிருஷ்ணகுமார், திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

விழாவினைச் சிறப்பிக்க வந்திருக்கும் மும்மூர்த்திகள்! (இடமிருந்து வலம்) திரு. B. ஸ்ரீராம், திரு. கிருஷ்ணகுமார், திரு. க்ரிஷ் வெங்கடேஷ்

என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இவர்கள் மூவருக்கும்!

சில பங்கேற்பாளர்கள் சேலம், சென்னையிலிருந்து வெள்ளி இரவே வந்து சேர்ந்தனர்; ஈரோடு, திருச்செங்கோடு, திருத்தணி முதலிய இடங்களிலிருந்தும் இரவுப்பயணமாக காலையில் வந்து சேர்ந்தனர். மேலும் பல சென்னை பங்கேற்பாளர்கள் சென்னையிலிருந்து, குறிஞ்சிப்பாடி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்களிலிருந்தும் விடியலில் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.

வழிகாட்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழி!

வழிகாட்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழி!

வரவேற்பு அறிவிப்புப் பலகை!

வரவேற்பு அறிவிப்புப் பலகை!

குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சி தொடங்கியது!

அடியேன்தானுங்க!

அடியேன்தானுங்க!

அன்புடன், பாபு கோதண்டராமன்

(தொடரும்)

செஸ், கிரிக்கெட் மற்றும் காளையும் கரடியும் 2013


ஹலோ!

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் செஸ் சாம்பியன்ஷிப் 3 மற்றும் 4-ஆம் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்துள்ளன. டி‌வி வர்ணனையாளர்கள் கம்ப்யூட்டர்களை வைத்து சொல்லும் ஒரு சில மூவ்களையே ஒரு சில சமயங்களில் இவர்கள் (ஆனந்தும், கார்ல்சனும்) ஆடினாலும், பல சமயங்களில் புது வித வேரியேஷன்களை ஆடி நம்மைப் பரவசப் படுத்துகிறார்கள். மூன்றாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்பு நிறக்காய்களுடன் விளையாடியபோது, “இப்போது ரெபெட்டிவ் மூவ் (மூன்று முறை ஒரே மாதிரியான நகர்த்துதல்கள்) ஆடி டிரா செய்யும் நிலைதான் இருக்கிறது” என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீண்ட யோசனைக்குப் பிறகு கார்ல்சனின் ராணியை h1 கட்டத்திற்கு நகர்த்தி ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார். நான்காவது ஆட்டத்திலே ஒன்டே கிரிக்கெட் போன்றதொரு ஆட்டத்தினை ஆடினார்கள். அத்தனை சுவாரஸ்யம்!

யார் சொன்னது செஸ் ஒரு விறுவிறுப்பில்லாத ஆட்டமென்று? விஷி ஆனந்த் வெற்றியடைய நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்!

Vishy with mom

அடுத்ததாக நமது மண்ணின் மைந்தர் இன்னொருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் நமது சச்சின்! அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள்! அவரும் ஒரு சரித்திர நாயகன்தான்! ஆனந்த் மற்றும் சச்சின் ஆகியோரின் கால கட்டதில்தான் நாமும் இருக்கின்றோம் என்பதில் பெருமைப்படுகின்றேன்!

SRT200 2 SRT200 1

அடுத்ததாக நமது பாண்டிச்சேரி “காளையும் கரடியும் 2013″ நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற ஞாயிறு வெளிவந்த நாணயம் விகடனிலும் மறுபடியும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கின்றேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் பணம் செலுத்தி பதிவும் செய்து கொண்டுள்ளனர்.

இதுவரையிலும் பணம் கட்டாதவர்கள், தயவு செய்து நவம்பர் 21-ஆந்தேதிக்குள் பணம் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் “Plan your trade; trade your plan” என்பதற்கேற்ப சிறப்பாக இந்தக் கருத்தரங்கத்தினை நடத்தித் தரமுடியுமென்று நம்புகிறேன்.

மேலும் அனைவரும் ஒரு ஃபோட்டோவுடன் கூடிய அரசாங்க அடையாள அட்டையினை (Photo ID) எடுத்து வரவும். இது ஹோட்டல் செக்யூரிட்டி முறைக்காக!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

காளையும் கரடியும் 2013 – சில புகைப்படங்கள்


ஹலோ!

உங்களின் பேராதரவிற்கு நன்றிகள்! உங்களில் சிலர் வெகு தூரத்திலிருந்து வருபவர்கள் முதல் நாளிரவே (வெள்ளிக்கிழமையே) தங்குவதற்கு அறை வேண்டுமென்று கேட்டுள்ளீர்கள். ஒருவருக்கு ரூ.800/- (டபுள் ஆக்குபன்சி முறையில்) அங்கேயே தங்கிக்கொள்ளலாம்.

ஹோட்டல் சற்குருவின் வெப் லிங்க் இது.

கருத்தரங்கம் அனைத்து விபரங்களுக்கும் இங்கே கிளிக்கிடவும்!

மேலும் சில நிழற்படங்கள்!

DSCN1305

DSCN1297

DSCN1299

DSCN1301

DSCN1304

DSCN1309

டிஸ்கௌண்ட்டிற்கு முந்துங்கள்! அக்டோபர் 25-க்குள் முன்பதிவு செய்யுங்கள்!


ஹலோ!

பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கும் ரெஸிடென்ஷியல் “காளையும் கரடியும் 2013″ கருத்தரங்கத்திற்கான சிறப்புத் தள்ளுபடி – early bird offer ரூ. 500/- பெற நாளைக்குள் (அக்டோபர் 25-ஆந்தேதிக்குள்) பதிவு செய்து கொள்ளுங்கள்! இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. நாளைக்கப்புறம் இந்த ஆஃபர் கிடையாது.

2 பேர் கொண்ட குழுக்களுக்கான சிறப்புத்தள்ளுபடி தொடர்கிறது.

இதுவரையிலும் பதிவு செய்துகொண்டவர்களுக்கும், என்னைத் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கும், இமெயில் வழியாக விளக்கம் கேட்டவர்களுக்கும் எனது நன்றிகள். உங்களனைவரின் ஆதரவிற்கும் நன்றி!

மேலும், நான்கு வெவ்வேறு விதமான நிபுணர்களின் கருத்துக்களுடன் மற்ற டிரேடர்களும் பங்கேற்று, கருத்தரங்கம் நடைபெறும் ஹோட்டல் ஸற்குருவிலேயே சனிக்கிழமை (நவ. 30) இரவு தங்குவதற்கு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்தப் புதுமைக் கருத்தரங்கத்தின் ஏற்பாடுகளை, அர்த்தத்தினை உங்களில் நிறைய பேரும் வரவேற்றுள்ளீர்கள். இதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

பல்வேறு ஸ்ட்ராடஜிக்களின் விதிமுறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்! டிரேடிங் செய்வதற்கான ரிஸ்க் மேனேஜ்மெண்ட் கொள்கைகளைப் புரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் யாரென்று உணர்ந்து, உங்களுக்கேற்ற ஸ்ட்ராடஜி எதுவென்று புரிந்து டிரேட் செய்யுங்கள்!

கட்டுப்பாடான டிரேடராக உருவாகுங்கள்; உருமாறுங்கள்! வெற்றிகள் தானாகத் தேடி வரட்டும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

காளையும்கரடியும் 2013 பாண்டிச்சேரி – விபரங்களின் தொகுப்பு


ஹலோ!

வரும் நவம்பர் 30 & டிசம்பர் 1 தேதிகளில் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கும் “காளையும் கரடியும் 2013″ என்ற கருத்தரங்கத்தைப் பற்றிய நான்கு பதிவுகளையும் ஒன்றாக இங்கே தொகுத்துள்ளேன். எனவே, யாரும் இங்கே, அங்கே என்று அலைய வேண்டாமே!

1. காளையும் கரடியும் 2013  என்றால் என்ன? (மாத்தி யோசி…. பாலாகுமாரா….. இங்கே கிளிக்கிடவும்)

2. காளையும் கரடியும் 2013 – பாண்டிச்சேரியில் (இங்கே கிளிக்கிடவும்)

3. காளையும் கரடியும் 2013 – பேச்சாளர்கள் (இங்கே கிளிக்கிடவும்)

4. காளையும் கரடியும் 2013 –பணம் செலுத்தும் முறை (இங்கே கிளிக்கிடவும்)

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

கட்டுப்பாடான டிரேடர் கம்யூனிட்டியாக உருவாகலாமே! :)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 825 other followers