இன்றைய தினம்… நாணயம் விகடனில் எனது முதல் கட்டுரை


ஹலோ!

இந்தக் காளையும்கரடியும் blog வழியாக என்னுடைய வாசகர்களாகிய உங்களுடன் தொடர்பிலிருந்து கொண்டிருக்கின்றேன். நீங்களும் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றிய எனது பல்வேறு கட்டுரைகளையும், ஸ்ட்ராடஜிக்கள் பற்றிய புதிய விஷயங்களைப் பற்றி நான் எழுதி வந்ததையும்  தொடர்ந்து ஆதரித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

தமிழிலேயே டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றித் தொடர்ந்து எழுதி வந்ததை ஆதரிக்கும் விதமாக விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மைப் பொறுப்பாசிரியர் ஆகியோர் ஆதரவில் இன்றைய நாணயம் விகடன் (6/10/2013 தேதியிட்ட) இதழில் “பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்” என்ற எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது. இதன் மூலம் மேலு தமிழ் வாசகர்களை அறியும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இக்கட்டுரையே அச்சிலேறும் எனது முதல் கட்டுரையாகவும் அமைந்துள்ளதால், இந்த நாள்… இனிய நாள்…. எனக்கொரு பொன் நாள்!

நாணயம் விகடன் ஆசிரியர், முதன்மைப் பொறுப்பாசிரியர் மற்றும் அவர்களது குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தருணத்தில் என்னைத் தமிழில் எழுதிடத் தூண்டிய, திரு B. ஸ்ரீராம், MSE-யில் பயிற்சி வகுப்புகள் நடத்திட வாய்ப்புகளித்த திரு. நாகப்பன் வள்ளியப்பன், இயக்குனர், MSE அவர்களுக்கும் மற்றும் எனது நலம் விரும்பும் நண்பர் திரு. குருநாதன், உதவி மேலாளர், மார்க்கெட்டிங்க் பிரிவு, BSE சென்னை அவர்களுக்கும் எனது நன்றிகள்!

எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் வாசகர்களாகிய உங்களை நான் மறக்க முடியுமா? உங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: எனது கட்டுரையினை நாணயம் விகடன் இதழில் படித்துப் பார்த்து விட்டு, நிறை,குறைகளை நாணயம் விகடன் முகநூல் (கருத்துக்களைப் பதிவு செய்ய) பக்கத்தில் தவறாமல், தயங்காமல் பதிவு செய்யுங்கள்! தங்களின் மேலான கருத்துக்களே என் போன்றோரின் எழுத்துக்களுக்கு மேலும், மேலும் மெருகேற்றும்!