நம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2


சென்ற பதிவிலே… அதையே பார்ட் – 1 – ஆக வைத்துக் கொள்வோம்…. நாம் பார்த்தது என்ன? 0 மற்றும் 1 ஆகிய இரு எண்களை எடுத்துக்கொண்டு ஒரு வகையான எண்களின் தொடர்ச்சியினைக் கண்டு பிடித்தோம். ஆக்ச்சுவலா, நாம எதுவுமே கண்டு பிடிக்கலை. இத்தாலியில், பைசா நகரத்தைச் சேர்ந்த (பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் ஞாபகத்துக்கு வருதுங்களா? J) லெனார்டோ (எ) ஃபிபோனாச்சி என்பவர்தான் இத்தகைய எண்களின் வரிசையைக் கண்டுபிடித்தார். இது ஃபிபோனாச்சி சீரீஸ் (Fibonacci series) என்று மிகப் பிரபலமாக அறியப்பட்டுள்ளது. அப்படியென்ன ஸ்பெஷல் இந்த எண்களில் என்று கேட்கிறீர்களா? கொஞ்சம், கொஞ்சமாகப் பார்க்கலாம்… வாருங்கள்! பை தி வே, முதல் பதிவிலே பிழை திருத்தம் செய்திருக்கிறேன்.

“சொல்லில் குற்றமா? பொருளில் குற்றமா?”

“பொருளில்தான் குற்றம் உள்ளது”

அதைத்தான் நான் திருத்தியுள்ளேன். ஒரு தடவை படித்துப் பார்த்து விடுங்கள். (பார்ட் – 1 படிக்க இங்கே சொடுக்கவும்)

அதற்கு முன், முதல் பதிவிலே நான் கேட்டிருந்த கேள்விகளுக்கான பதில்கள் இதோ! சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

1.  ஃபிபோனாச்சி வரிசை எண்கள்

0 மற்றும் 1 – ஐ எடுத்து, இரண்டையும் கூட்டி,

வரும் விடையான 1 – உடன் முந்தைய எண்ணான 1-ஐக் கூட்டி,

இப்போது வரும் 2-உடன் முந்தைய எண்ணான 1-ஐக் கூட்டி,

இப்போது வரும் விடையான 3-உடன் முந்தைய எண்ணான 2-ஐக் கூட்டி,

இப்போது வரும் விடையான 3-உடன் முந்தைய எண்ணான 2-ஐக் கூட்டி,

இப்போது வரும் விடையான 5-உடன் முந்தைய எண்ணான 3-ஐக் கூட்டி,,,,,, ஷப்பாஆஆடாஆஆ….மிடில…. ரொம்ப சிம்பிள்ங்க… இதோ அந்த எண்கள்!

அட்டவணை 1 - யான் பெற்ற இன்பம் .. பெறுக இவ்வையகம்! ஃபிபோனாச்சி எண்கள் வரிசை

அட்டவணை 1 – யான் பெற்ற இன்பம் .. பெறுக இவ்வையகம்! ஃபிபோனாச்சி எண்கள் வரிசை

இப்படி தொடரி போல நீண்டு கொண்டே செல்கின்ற வரிசைக்கு 0 மற்றும் 1-தான் ஆரம்பப் புள்ளிகள். மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1-இன் கடைசி நீள் வரிசையிலிருக்கும் 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, … என்ற எண்களை கவனித்துப் பார்த்தீர்களேயானால், முதலிரண்டு எண்களான 0 மற்றும் 1-ஐத் தவிர மற்ற எண்கள் அனைத்துமே அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இவ்வாறு இந்த ஃபிபோனாச்சி எண் வரிசையைக் கணக்கிடுவதுதான் முதல் படி. இன்னமும் நாம் பல்வேறு படிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. அதிலே இரண்டு ஸ்பெஷல் காரணிகளை நீங்கள் அல்ரெடி கண்டுபிடித்து விட்டீர்கள். ஆம்! உங்களின் ஹோம்வொர்க்தான். விடை கண்டுபிடித்து விட்டீர்கள்தானே?

பகுதி 2 – அ மற்றும் ஆ

என்ன செய்யவேண்டுமெனச் சொல்லியிருந்தேன்?

//ஒரு எண்ணை அதற்கு முன்னால் உள்ள எண்ணால் வகுக்கவும்.

அதேபோல, ஒரு எண்ணை அதற்குப் பின்னால் உள்ள எண்ணால் வகுக்கவும்

//

முதலில் ஒன்று சொல்லியாக வேண்டும். இனிமேல் வரும் இந்தப் பயிற்சிகளுக்கு “0” தேவையில்லை. 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55 …. என்ற வரிசையினை உபயோகித்துக் கொள்ளலாம்.

அடுத்து நான் இனி வரும் அட்டவணைகளில் குறிப்பிட்டிருக்கும் F1, F2, F3 என்பது என்னவென்று சொல்லி விடுகிறேன். எந்த ஓர் எண்ணை எடுத்துக் கொண்டாலும் அது F1 என்று அர்த்தம். அதற்கடுத்த எண் F2; மற்றும் மூன்றாவது எண் F3. அதாவது,

5 – F1 என்றால், 8 – F2; 13 – F3

21 – F1 என்றால், 34 – F2; 55 – F3. இது புரிகிறதா?

இப்போது பகுதி “2-அ” பயிற்சியில் ஒரு எண்ணை அதற்கு முன்னால் உள்ள பெரிய எண்ணால் வகுக்க வேண்டும். F1/F2

பகுதி “2-ஆ” பயிற்சியில் ஒரு எண்ணை அதற்குப் பின்னால் உள்ள சிறிய எண்ணால் வகுக்க வேண்டும். ரொம்ப சிம்ப்பிளாக F2/F1 என்று வைத்துக் கொள்வோம். இதோ அட்டவணை 2

அட்டவணை 2 - F1/F2 & F2/F1

அட்டவணை 2 – F1/F2 & F2/F1

F1/F2 என்று சிறிய எண்ணை, அதற்கடுத்தாற்போல் வரும் பெரிய எண்ணால் வகுக்கும்போது, முதல் ஏழு எண்களுக்குப் பிறகு 0.618 என்ற ரேஷியோவில் நிலை கொண்டு விட்டதைக் காணலாம். இதுதான் கணித உலகில் கோல்டன் ரேஷியோ (Golden ratio) எனப்படுகிறது.

F2/F1 என்று ஒரு பெரிய எண்ணை, அதற்குப் பின்னாலிருக்கும் சிறிய எண்ணால் வகுக்கும்போது, முதல் எட்டு எண்களுக்குப் பிறகு 1.618 என்ற ரேஷியோவில் நிலை கொண்டு விட்டதைப் பாருங்கள்!

இதுதானே உங்களின் விடையும்?

பகுதி 3 – F1/F3 & F3/F1

// என்ன ஒரு வித்தியாசமென்றால், ஒரு எண்ணை, அதற்கு இரண்டு எண்கள் முன்னால் உள்ள எண்ணால் வகுக்க வேண்டும்.//

இதனை F1/F3 என்று எழுதிக் கொள்ளலாம்தானே?

// ஒரு எண்ணை அதற்கு இரண்டு எண்கள் பின்னால் உள்ள எண்ணால் வகுக்க வேண்டும்.//

இது F3/F1 ஆகும். F1, F2 & F3 கான்செப்ட்டை ஏன் அறிமுகப்படுத்தினேனென்று இப்போது புரிகிறதா? இதோ அட்டவணை 3

அட்டவணை 3 - F1/F3 & F3/F1 ரேஷியோக்கள்

அட்டவணை 3 – F1/F3 & F3/F1 ரேஷியோக்கள்

இந்த ரேஷியோக்களையும் பார்த்தால், F1/F3-யில் ஆறு வகுத்தல்களுக்குப் பிறகு, 0.382 என்றதொரு நிலையான ரேஷியோவில் நிற்கிறது. F3/F1-இல் எட்டு வகுத்தல்களுக்குப் பிறகு அனைத்துமே 2.618 என நிலை கொண்டுள்ளது.

நான் போட்டிருக்கும் கணக்கீடுகள் சரியா? உங்களின் விடைகளும், என்னுடைய விடைகளும் சரியாக அமைந்திருக்கின்றனவா?  நீங்கள் சரி பார்த்துச் சொல்லுங்கள், நான் சரியாகப் போட்டுள்ளேனா என்று!

இன்றைக்கு இத்துடன் போதும்….

வீட்டுப்பாடம்! சந்தோஷம்தானே?

வீட்டுப்பாடம்! சந்தோஷம்தானே?*****

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பார்ட் 1

பார்ட் 3 (வரும்)

பார்ட் 4 (வரும்)

திரும்ப வந்துட்டேன்னு சொல்லுங்க…


ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ, அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லுங்க…..!

ஹலோ! வணக்கம்! எதைப் பத்தி பத்தி, பத்தியா எழுதலாம்னு நெனைச்சா, எனக்கு நம்பர்ஸ் பத்தி எழுதலாமேன்னு தோணுச்சி. அதுவும் ரொம்ப நாளைக்கப்புறம் பாக்குறதனால ரொம்ப ஈசியாவே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு ஆரம்பிக்கலாம். சரீங்களா?

1 -இல் ஆரம்பிப்போம். இதனுடன் 1-ஐக் கூட்டுவோம்

1 + 1 = 2

இதை வரிசைப்படுத்தி எழுதினால் 1,1,2

கருத்துப் பிழை: 

தெய்வக் குத்தம் ஆகிடிச்சிங்க! மன்னிச்சிடுங்க! நாம் ஆரம்பிப்பது 1-லிருந்து என்று எழுதியுள்ளேன். ஆக்ச்சுவலா, 0-விலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது 0-வையும், அதற்கடுத்த எண்ணான 1-ஐயும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்விரண்டு எண்களையும் கூட்டினால்,

0 + 1 = 1 என வருகிறது. இதனை வரிசைப்படுத்தி எழுதினால்,

0, 1, 1 என்று வருகிறது.

இதில் விடையாக (இதனை நீங்கள் ‘வடையாக’ எனப் படித்தால் கம்பெனி பொறுப்பாகாது) 🙂 வந்த 1-ஐயும், அதற்கு முந்தைய எண்ணாயுள்ள ஒன்றையும் கூட்டிக்கொள்ள வேண்டும்.

1 + 1 = 2 என வருகிறது. இப்போது இதுவரையிலும் உபயோகப் படுத்திய எண்களை வரிசைப்படுத்தி எழுதினால்,

0, 1, 1, 2 என வருகிறது.

(உஷ்… அப்பாடாஆஆ! தெய்வக் குத்தம் நீங்கிடிச்சிங்க! இனிமேல் ஒரிஜினல் தொடர்கிறது!)

இப்போது இந்த 2-ஐயும் அதற்கு முந்தைய எண்ணான 1-ஐயும் கூட்டுவோம்.

2 + 1 = 3

வரிசைப்படுத்தி எழுதினால் 0, 1, 1, 2, 3

இப்போது மூன்றுடன் அதற்கு முந்தைய எண்ணான 2-ஐக் கூட்டுவோம்

3 + 2 = 5

மறுபடியும் வரிசைக்கிரமமாக எழுதினால் 0, 1, 1, 2, 3, 5 என்று வருகிறது. அடுத்து 5-ஐயும் அதற்கு முந்தைய எண்ணான 3-ஐயும் கூட்டுவோம்.

5 + 3 = 8

இப்போது அனைத்து எண்களையும் வரிசைப்படுத்தி எழுதினால் 0, 1, 1, 2, 3, 5, 8 என்று வருகின்றது.

இதுதான் உங்களுக்கு வீட்டுப்பாடம். ஆமாம்! உங்களுக்கேத் தெரியும். நான் ஹோம்வொர்க் கொடுத்துக் கற்றுக் கொள்ள வைப்பவனென்று. அதுவும், இன்று ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி நல்ல விசேஷமான நாள். இதில் நம்பிக்கையுள்ளவர்களும் சரி, நம்பிக்கையில்லாதவர்களும் சரி, இந்த எண்களைப் பற்றிப் புதிதாக இன்று தெரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம்.

வீட்டுப்பாடத்திற்கு வருவோம். இதுபோல, 8-ஐயும் அதற்கு முந்தைய எண்ணான 5-ஐயும் கூட்டுங்கள். அதன் பின் வரும் விடையுடன் 8-ஐக் கூட்டுங்கள். அப்படித் தொடர்ந்து கூட்டிக் கொண்டே வந்து, வரும் எண்களை வரிசைப்படுத்தி எழுதி வாருங்கள்.

0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, …….. என்று குறைந்த பட்சம் ஒரு 50-60 எண்களையாவது வரிசைப் படுத்துங்கள். ரொம்ப ஈசிதாங்க! இப்பத்தான் ஸ்மார்ட் ஃபோன் கையில இருக்கே. இது வீட்டுப்பாடத்தில் பகுதி 1

இப்போது பகுதி 2-ற்கு வருவோம்.

ஒரு எண்ணை அதற்கு முன்னால் உள்ள எண்ணால் வகுக்கவும்.

அதேபோல, ஒரு எண்ணை அதற்குப் பின்னால் உள்ள எண்ணால் வகுக்கவும்

அதாவது

1/1 = ?

2/1 = ?

3/2 = ?

5/3 = ?

8/5 = ?

13/8 = ?

இப்படி நீங்கள் கண்டு பிடித்த/ கணக்கிட்ட அந்த 50-60 வரிசை எண்களுக்கும் இந்த மாதிரியான (பெரிய எண்/ அதற்கு முந்தைய சிறிய எண்) விகிதத்தைக் கணக்கிடவும். (இது பகுதி 2 – அ)

இப்போது பகுதி 2-ஆ என்னவென்றால், (ஒரு எண்/ அதற்குப் பின்னால் வரும் பெரிய எண்) என்ற விகிதத்தைக் கண்டுபிடியுங்கள். கீழே பாருங்கள்!

1/1 = ?

1/2 = ?

2/3 = ?

3/5 = ?

5/8 = ?

8/13 = ?

என்ன புரிகிறதா? இது வரைக்கும் ஈசிதான். அடுத்த பகுதி-3-உம் ஈசியாகத்தானிருக்கும். (கைப்புள்ள மைண்ட் வாய்ஸ்: என்னாது? பகுதி 3-ஆஆஆஆஆ?) 🙂

பகுதி 3

இதிலும் (அ), (ஆ) பிரிவுகள் உண்டு, பகுதி-2 போலவே.

அதே விகிதங்கள் உண்டு, பகுதி-2 போலவே!

என்ன ஒரு வித்தியாசமென்றால், ஒரு எண்ணை, அதற்கு இரண்டு எண்கள் முன்னால் உள்ள எண்ணால் வகுக்க வேண்டும்.

3-அ)

2/1 = ?

3/1 = ?

5/2 = ?

8/3 = ?

13/5 = ?

….

3-ஆ)

ஒரு எண்ணை அதற்கு இரண்டு எண்கள் பின்னால் உள்ள எண்ணால் வகுக்க வேண்டும்.

1/2 = ?

1/3 = ?

2/5 = ?

3/8 = ?

5/13 = ?

8/21 = ?

….

….

இவ்ளோதாங்க இன்னைக்கு வீட்டுப்பாடம். இதெல்லாம் போட்டுப் பாத்துட்டுச் சொல்லுங்க. ஏதாச்சும் புரியலைன்னாலும் கமெண்ட்டிடுங்க. ஒரு பத்துப் பதினைந்து பேராவது (இது பற்றித் தெரியாமலிருந்து, இப்போதுதான் இது என்ன மாதிரியான கணக்கு முறை என்று யோசிப்பவர்கள்) கமெண்ட் போடுங்க. பெருசா விடையெல்லாம் எழுத வேண்டாம். “நான் போட்டுட்டேன். இது எதற்கு”ன்ற மாதிரி எழுதினாலே போதும். இவை என்ன மாதிரியான எண்கள், இவற்றின் முக்கியத்துவமென்ன? இவற்றிற்கும், காளையும், கரடிக்குமென்ன சம்மந்தம்? என்றெல்லாம் இனி வரும் நாட்களில் பேசலாம்.

பகுதி 1, பகுதி 2 – அ & ஆ மற்றும் பகுதி 3 – அ & ஆ. ஒரு டைரி, ஒரு பேனா/பென்சில், ஒரு கால்குலேட்டர் இருந்தால் போதும; போட்டுடலாம். எக்ஸெல் தெரிந்திருந்தாலும் …….

மகிழ்ச்சி!

பார்ட் – 2 (இங்கே சொடுக்கவும்)

+++++++++

நீண்ட நாட்களுக்குப் பின்,

பாபு கோதண்டராமன்

 

 

..

 

 

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்


TMB

  • 1921-இல் ₹ 28 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி, இப்போது சுமார் ₹ 2400 கோடி பணக் கையிருப்பை (கேஷ் பேலன்ஸ்) வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
  • இதன் புத்தக மதிப்பை வைத்து இந்தப் பங்கின் விலை சுமார் ₹6,000-6,500 என்று மதிப்பிடப்பட்டுள்ளது
  • நிற்க! பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாததால் இந்தப் பங்கை வெளிச்சந்தையில்தான் வாங்கவேண்டும். அதாவது வேறு யார் பெயரிலாவது ஷேர் சர்டிஃபிகேட் இருந்தால், அவரிடமிருந்துதான் வாங்க முடியும்.
  • மறுபடியும் நிற்க! அப்படியே வாங்க முற்பட்டாலும், விற்பவர் இதற்கு ₹1.50 முதல் ₹1.70 வரையும் விலை கேட்க வாய்ப்பிருக்கிறது.
  • ஏன்?
  • Because, டிமாண்ட்தான் பாஸ்!
  • இவையெல்லாவற்றை விடவும் இன்னொரு மிக சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், சுமார் 8 சதவீதப் பங்குகளை யார் வைத்திருக்கிறார்களென்றே தெரியவில்லையாம்.
  • வங்கி ஆரம்பித்து 90 வருஷங்களுக்கு மேலாகி விட்டதல்லவா? அந்தக் கால கட்டத்திலே வாங்கியவர்களில் சிலர் தங்களின் வாரிசுகளுக்குச் இந்த முதலீட்டைப் பற்றிச் சொல்லவில்லையோ என்னவோ, அதனாலேயே மேலும் டிமாண்ட் கூடுகிறது.
  • So, உங்க தாத்தா, பாட்டி கிட்டயிருந்து உங்களுக்கு ஏதாவது பெட்டி, அலமாரி கிடைத்திருந்தால், அதனை நல்லா ஒரு லுக் விடுங்க!

செய்தி உபயம்: நண்பர் திரு. செந்தில் சின்னதுரை

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: இந்தப் பதிவினை நான் ஏற்கனவே எழுதிதாக ஞாபகம். ஆனால் இந்த வலைப்பூவில் அதைக் காணக் கிடைக்கவில்லை. அதனால்தான் மறு பதிவு.

லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும்!


இன்றைய வரலக்ஷ்மி பூஜை நாளின் செல்வம் பெருக, வளம் கொழிக்க நல்வாழ்த்துக்கள்!

வளம் கொழிக்கும் ஒரு பங்கின் ஞாபகம் வருகிறது. 28 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கம்பெனியிடம் இப்போது சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலே கேஷ் பேலன்ஸ் இருக்கின்றது. இது இன்னமும் லிஸ்டிங் செய்யப் படாததால், ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்ஃபர் மட்டுமே ஷேர் சர்டிஃபிகேட் மூலமாக நடைபெறுகின்றது.

ஒரு பங்கின் விலை, புத்தக மதிப்புப்படி, ரூ. 65,000 என்று வர்த்தகமாகிறதாம். ஆனாலும், சுமார் ஒன்றரை லட்சம் வரையிலும் (ஒரு பங்கிற்கு மட்டும்) கூட விலை போகிறதாம்.

ஏனெனில், நிர்வாகத்தில் இயக்குனர் பொறுப்பில் வர ஒரு சில பெரிய கைகள் ஆர்வம் காட்டுகின்றனவாம். அதனாலேயே இந்த அளவிற்கு விலை போகிறதாம்.

அதிலேயும் சுமார் எட்டு சதவீத முதலீட்டாளர்கள் யாரென்றே தெரிய வில்லையாம். அதாவது அந்த ஷேர் சர்டிஃபிகேட்கள் யாரிடம் இருக்கின்றவென்றே தெரியவில்லையாம்.  உடனேயே உங்கள் வீட்டில் பழைய ஆவணங்கள் வைத்திருக்கும், தாத்தா, பாட்டியினுடைய  அலமாரி, பெட்டி முதலியானவைற்றைத் திறந்து, TMB (தமிழ்நாடு மெர்க்கண்ட்டைல் பாங்க்) ஷேர்களை அவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்களா என்று எதற்கும் ஒரு தடவை செக் பண்ணிடுங்க!

🙂

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

செய்தி உபயம்: திரு. செந்தில் சின்னதுரை

செல்வ வளம் பெருகட்டும்!

செல்வ வளம் பெருகட்டும்!

 

 

2013 – ஒரு டஜன் வழுக்கல்கள்!


ஹலோ!

முந்தைய பதிவுகளிலே (2013 – ……) எக்ஸெல் ரிபோர்ட்டில் பார்த்த பங்குகளில் (2013 – இல்) மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த 12 பங்குகளின் வரைபடங்கள்!

இந்தப் படங்களைப் பார்த்தால், ஆவரேஜிங் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

2013 1a PRAKASHCON 2013 1b NET4 2013 1c CHROMATIC 2013 1d COREEDUTEC2013 1e OMNITECH 2013 1f DHANUS 2013 1g MMTC 2013 1h DRDATSONS 2013 1i AQUA 2013 1j MICROTECH 2013 1k VISESHINFO 2013 1l VKSPL

2013 – ஒரு பார்வை!


ஹலோ!

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2014 அனைவருக்கும் வளமான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்!

சென்ற வருடத்தின் வளந்த மற்றும் வீழ்ந்த பங்குகளின் ஒரு சிறு விபரம்…. உங்களது பார்வைக்கு!

முதலில் நல்ல செய்தி! வளர்ச்சி விகிதங்கள்!

2013 Gain1

2013 Gain22013 Gain3

அடுத்ததாக வீழ்ந்த பங்குகள்

90 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ந்த பங்குகள்!

2013 Loss 90pc n more 1

80% முதல் 90% வரையிலும் வீழ்ச்சி கண்டவை!

2013 Loss between 80 n 90 1

2013 Loss between 80 n 90 2

70% முதல் 80% வரை வீழ்ந்தவை!

2013 Loss between 70 n 80 1 of 3

2013 Loss between 70 n 80 2 of 3

2013 Loss between 70 n 80 3 of 3

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு:

1. இவையனைத்தும் NSE பங்குகள் மட்டுமே! BSE-யில் டிரேட் ஆகும் பங்குகளின் விபரம் என்னிடம் கிடையாது.

2. போனஸ் & ஸ்ப்லிட் முதலான தகவல்களும் இதிலடக்கம்.

3. அப்படியும் ஏதேனும் தவறுகளும், விடுபடுதல்களும் இதிலிருக்கலாம். இது ஒரு விபரம்தான்!

வாரன் பஃபே(ட்) (Warren Buffett) என்ன சொல்றார்?


நன்றி: முகநூல் பதிவுகள்!

Waren Buffet says வாரன் பஃபே(ட்) சொல்வதென்ன

 

என்னோட தமிழாக்கம் சரியான்னு கீழேயிருக்கிற ஒரிஜினலைப் பாத்துச் சொல்லுங்க!

 

WarrenBuffetFinancialTips