2013 – ஒரு டஜன் வழுக்கல்கள்!


ஹலோ!

முந்தைய பதிவுகளிலே (2013 – ……) எக்ஸெல் ரிபோர்ட்டில் பார்த்த பங்குகளில் (2013 – இல்) மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த 12 பங்குகளின் வரைபடங்கள்!

இந்தப் படங்களைப் பார்த்தால், ஆவரேஜிங் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

2013 1a PRAKASHCON 2013 1b NET4 2013 1c CHROMATIC 2013 1d COREEDUTEC2013 1e OMNITECH 2013 1f DHANUS 2013 1g MMTC 2013 1h DRDATSONS 2013 1i AQUA 2013 1j MICROTECH 2013 1k VISESHINFO 2013 1l VKSPL

பாகம் 2 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு


ஹலோ!

ஓ! வாட் எ மெடிக்கல் மிராக்கிள்!

நேற்று பாகம் 1-இல் (இதனைப் படிக்க இங்கே கிளிக்கிடவும்) WIPRO மற்றும் IDFC ஆப்ஷன்களில் வெவ்வேறு விதமான ஸ்ட்ராடஜிக்களில் கால் & புட் வாங்கி, எக்ஸ்பைரி வரை வைத்திருந்தால், எந்த அளவிற்கு இலாபம் (பேப்பரில்தானுங்க! இதெல்லாம் இன்னும் டிரேட் பண்ண ஆரம்பிக்கலை) வருகிறதென்றும் எழுதியிருந்தேன்.

இந்த IDFC-யில் நியர் OTM (Near OTM)தான் வாங்குவது போல பேக் டெஸ்ட் செய்திருந்தேன். அதிலே 609% – அதாவது போட்ட முதலுக்கு, 6 மடங்கு வரை இலாபம் வருவதாகக் குறித்திருந்தேன்.

(நியர் OTM: 14/8 அன்று ஃப்யூச்சர் 112.30 லெவலில் இருந்தபோது Aug120CE & Aug100PE – இவற்றில் லாங் பொசிஷன் எடுத்தது. இதுதான் 28/8 அன்று ஸ்குயர் ஆஃப் செய்யும்போது, 15 நாட்களில் 6 மடங்கு இலாபத்தைத் தருவதாக இருக்கின்றது)

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
IDFC 14-Aug 112.3   14-Aug   28-Aug 15 days
        112.30   at 79.50 P & L  
      AUG120CE 1.50   0.05 32,300.00  
      AUG100PE 1.15   18.75    
QTY 2000   TOTAL 2.65 0.00 18.80 P & L %  
      Amount 5300 0 37600 609%  

இதற்கே நான் மலைத்துப் போய், “ஆப்ஷனில் இந்த அளவிற்கு சாத்தியமா?” என்றும் கேட்டிருந்தேன். “அட! இதெல்லா ஜூஜுபி-ங்க!” என்பது போல அடுத்து வரும் ஒரு கணக்கு காட்டுகிறது.

இந்த நியர் OTM (near OTM) – ஐக் கொஞ்சம் ஃபார் OTM (Far OTM)-ஆக மாற்றினால் என்ன இலாபம் கிடைக்கிறதென்பதுதான் இந்த “மெடிக்கல் மிராக்கிள்” கட்டுரையின் சாராம்சம்!

இதுல, ஒண்ணு (ஆக்சுவலா, இரண்டு) நீங்க நல்லா புரிஞ்சிக்கணுமுங்க!

நியர் OTM: விலை 110-இல் இருக்கும்போது அதற்குப் பக்கத்திலேயே இருக்கும் 120CE & 100PE எல்லாம் நியர் OTM வகைப்படும் ஆப்ஷன்கள்.

ஃபார் OTM (Far OTM): தற்போதைய மார்க்கெட் விலைக்கு ரொம்ப தூரத்தில் இருக்கும் ஸ்டிரைக் ப்ரைஸ்களான 130CE & 90PE போன்றவை இந்த வகையிலே சேர்க்கலாம்.

(என்னங்க! இந்த நியர் மற்றும் ஃபார் OTM-கள் பற்றிய விளக்கங்கள் ஈஸியாகப் புரியுதுங்களா?)

அடுத்ததாக, இந்த ஃபார் (Far) OTM-களான 130CE மற்றும் 90PE-க்களை வாங்கினால், இதே 15 நாட்களில் அது சுமார் 15-1/2 மடங்கு (1545%) இலாபம் தருவதாகக் கூறுகிறது.

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
IDFC 14-Aug 112.3   14-Aug   28-Aug 15 days
        112.3   at 79.50 P & L  
      AUG130CE 0.20   0.05 17,000.00  
      AUG90PE 0.35   9.00    
QTY 2000   TOTAL 0.55 0.00 9.05 P & L %  
      Amount 1100 0 18100 1545%  

இது உண்மையிலே சாத்தியமா? கணக்குகளின் படி இது சாத்தியமாகத்தான் தெரிகிறது. ஆனால், நடைமுறைப் படுத்துவதெப்படி?

இதுதான் ஒரு சில விதிமுறைகளுக்குட்பட்டு, டிரேடிங் ஸ்ட்ராடஜிக்களை கடைபிடித்து வணிகம் (பிசினஸ்) செய்வதற்கான வழிமுறையாக இருக்கும்.

இதையே சூதாட்டமாக (gambling) மாற்றுவதெப்படி? ரொம்ப சிம்பிள்! இதிலே இலாபம் தருவது PE-தான். எனவே 130CE வாங்குவதை நமது கணக்கிலிருந்து நீக்கி விடலாம். எனவே, 14/8 அன்று 90PE மட்டும் வாங்குவதாக (குருட்டாம்போக்கில், எந்தவொரு ஸ்ட்ராடஜியும் இல்லாமல்) வைத்தால் அது சுமார் 25 மடங்கு (2471%) இலாபம் தருவதாகக் காட்டுகிறது.

ஆனால், இதை மட்டும் வாங்க வேண்டுமென்று நமக்கெப்படித் தெரியும்? அதனால்தான் இந்தவொரு டிரேடை மட்டும் – சூதாட்டம் – என்று சொல்கிறேன்

Name Date Fut Price Option details Entry When ITM Till Expiry Exit # of days in trade
IDFC 14-Aug 112.3   14-Aug   28-Aug 15 days
        112.3   at 79.50 P & L  
              17,300.00  
      AUG90CE 0.35   9.00    
QTY 2000   TOTAL 0.35 0.00 9.00 P & L %  
      Amount 700 0 18000 2471%  

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு:

1. இவையெல்லாம் இதுவரையிலும் பேப்பர் டிரேட்கள் தான். ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்.

2. இவை போன்ற 6 மடங்கு, 15 மடங்கு, 25 மடங்கு இலாபம் என்றெல்லாம் படிக்கும்போது, உங்கள் மனத்திலேற்படும் (பேர்)ஆசைகளை அடக்கி, மூளை போடும் கணக்குகளுக்குட்பட்டு, “இது சாத்தியமா? நடைமுறைக்கு ஏற்றதா?” என்ற கேள்விகளை நீங்க கேட்க ஆரம்பிச்சிங்கன்னா, மிகவும் சீக்கிரமாகவே நீங்க ஒரு கட்டுப்பாடான  டிரேடரா வந்துடுவீங்க!

நீங்க…………. நல்லா வருவீங்க!

20130905 Asian Paint நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்


ஹலோ!

படத்திலே நான் சொல்லியிருக்கும் டிரேட் செய்யும் உத்திகளை உங்களின் ரிஸ்க் லெவல் மற்றும் பாங்க் பேலன்சுக்குத் தக்கவாறு உபயோகிக்க வேண்டும். “பாபு கோதண்டராமன் சொல்லிட்டாரு; அவுரு சொன்னாக்கா, அப்படியேதாங்க நடக்கும்; நானும் அதே மாதிரித்தான் டிரேட் செய்யப்போறேன்”னு முடிவெடுத்துடாதீங்க.

இதை பிசினஸ்-ஆப் பாருங்க! சூதாட்டம் இல்லீங்க!

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்BK20130905 ASIANPAINT dbl top plus neg div

வாரன் பஃபே(ட்) (Warren Buffett) என்ன சொல்றார்?


நன்றி: முகநூல் பதிவுகள்!

Waren Buffet says வாரன் பஃபே(ட்) சொல்வதென்ன

 

என்னோட தமிழாக்கம் சரியான்னு கீழேயிருக்கிற ஒரிஜினலைப் பாத்துச் சொல்லுங்க!

 

WarrenBuffetFinancialTips

ரிஸ்க்கா? அது எனக்கு ரஸ்க் சாப்டற மாதிரி..!


நாம் அனைவரும் ஏதேனும் ஒரு மோட்டார் வாகனம் வைத்துள்ளோம். அவற்றின் கெபாஸிட்டிக்கேற்ப அதிக பட்ச வேகம் 100km, 140km, 200 km என்று ஸ்பீடோமீட்டரில் குறிக்கப்பட்டிருக்கும். நாம் தினசரி வேலைக்குச் செல்லும்போதோ, மார்க்கெட் அல்லது கிரவுண்டிற்குச் செல்லும்போதோ நம்மால் அந்த அளவு வேகத்திற்கு சென்று வருகிறோமா? அவ்வளவு ஏன், எப்போதாவது வெளியூர் போகும்போது ஹை-வேஸில்தான் அந்த அளவு வேகம் சென்றிருக்கிறோமா? சரி! நாம்தான் செல்லவில்லை. ஆனாலும் மற்ற வாகனங்கள் மிக,மிக அதிக பட்ச வேகத்தில் பறக்கின்றனவா? இல்லையே!

ஆனால், டிரேடர்கள் மட்டும் ஏன் உயர்ந்த பட்ச வேகத்திலேயே பறக்க ஆசைப்பட்டு ஆக்சிலரேட்டரில் வைத்த காலை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? (இல்லை முறுக்கிய throttle-ஐ முறுக்கியபடியே வைத்துக்கொண்டு பயணம் செய்ய எத்தனிக்கிறார்கள்?)

வெறும் 30-40 ஆயிரம் வைத்துக்கொண்டு, ஸ்டாக் புரோக்கர் கொடுக்கிறார் என்பதற்காக 7-8 மடங்கு leverage எடுத்து, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலே வர்த்தகம் செய்வது எதற்காக? நாம் டே-டிரேடிங் செய்கிறோம் என்பதற்காக நமக்கு என்ன கொம்பு முளைத்து விட்டதா? நாம் மட்டும்தான் வணிகர்களா என்ன?

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே, நாமும் பல வணிகர்களைச் சந்திக்கின்றோம். மளிகைக்கடை, அரிசிக்கடை வியாபாரிகள், பூ, பழம் விற்பவர்கள், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்பவர்கள் எல்லாம் நம்முடைய ஏரியாவில் நம் கண் முன்னாலேயே வளர்ந்திருப்பார்கள்; வளர்ந்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இவர்களுக்கெல்லாம் என்னதான் வாடிக்கையாளர்கள் ஆதரவு, லொகேஷன் அட்வாண்டேஜ், தரமான சேவை முதலியன நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், நாம் பார்க்க மறப்பது (மறுப்பதும் கூட) அவர்களின் money management எனப்படும் பண மேலாண்மைத் திறன்தான்.

நாம் ஈசியாகச் சொல்லிவிடலாம், “என்ன சார்! அவங்க கையிலே எப்பவுமே பணம் புழங்கிக் கிட்டேயிருக்கு. என்ன பிரச்னை வந்தாலும் சமாளிச்சுடலாமே”ன்னு. அது கரெக்ட்தான்; ஆனாலும் அது மட்டுமே அவர்களின் வெற்றிக்குச் சரியான காரணமில்லை. கையில் பணம் புழங்குவதென்பது வேறு: பிசினசுக்குத் தக்கவாறு, இருக்கும் பணத்தை வைத்துத் தகுந்த அளவு ரிஸ்க் எடுப்பதென்பது வேறு. அவர்களுக்கும் பிஸினஸில் சில, பல சமயங்களில் கஷ்ட, நஷ்டங்கள் வந்திருக்கும். அப்போதெல்லாம் அவர்களின் ரிஸ்க் மானேஜ்மென்ட் எவ்வாறாக இருந்திருக்குமென்று நாம் யோசிக்க வேண்டும்.

மளிகைக்கடைக்காரருக்கு ஒரு சில பிராண்ட் (brand) சரக்குகள் தேங்கிப் போகலாம். பூக்கடைக்காரருக்கும், பழக்கடைக்கடைக்காரருக்கும் சரக்குகள் விற்காமல் அழுகிப் போகலாம்.  இதைத் தவிர்க்கவே அவர்களின் பொசிஷன் சைஸிங் (position sizing- நம்முடைய பாஷையில்) கிருத்திகை, அமாவாசை போன்ற விசேச நாட்களுக்கும், ஏனைய சாதாரண நாட்களுக்கும் வேறுபடும்.

அவர்களுக்குத் தெரியும் எப்போது அதிக ரிஸ்க் எடுக்கலாம்; எப்போது ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்ளவேண்டுமென்று!

இந்தத் தத்துவத்தை டிரேடர்கள் புரிந்து கொண்டார்களேயானால் பங்குச்சந்தையில் நிலைத்திருக்கலாம்; இலாபம் ஈட்டலாம்.

புரிந்து கொள்வோமே!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

ஹலோ! இந்த சார்ட்டக் கொஞ்சம் டெக்னிக்கலாப் பாருங்க!


ஹலோ!

இங்கே கீழேயிருக்கிற சார்ட்டின் பெயரை மறைத்துள்ளேன். விலை மற்றும் இதர அடையாளங்களையும் மறைத்துள்ளேன். ஏனெனில், பெயரோ அல்லது விலையோ தெரிந்தால், நமது மனம் அதற்குத் தகுந்தவாறு ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிடும். அதாவது, “biased analysis” என்றாகி விடும்.

எனவே, இது என்ன கவுண்ட்டராக இருக்கும், விலை என்னவாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து, நேரத்தை வீணாக்காமல், கண் முன்னால் இருக்கும் லைன்களை மட்டும் மனதில் கொண்டு, டெக்னிக்கலாக யோசியுங்கள்.

கொஞ்சம் யோசித்து வையுங்கள்! நான் நாளை சாயங்காலம் எனது அனாலிசிஸ்-ஐ போஸ்ட் செய்கிறேன். அப்போது நீங்கள் யோசித்து வைத்ததில், எதையேனும் நான் தவற விட்டிருந்தால், எனக்கு எடுத்துச் சொல்லவும்.

என்ன? சரிதானுங்களே?

இப்ப ஆட்டத்துக்குள்ளாற போலாமா?

கொஞ்சம் கூட கூச்சப்படாம, டெக்னிக்கலா மட்டும் யோசிங்க!

கொஞ்சம் கூட கூச்சப்படாம, டெக்னிக்கலா மட்டும் யோசிங்க!

 

1020-லிருந்து 17.70 வரை – விஷால் ரீடெயில்


ஹலோ ஃபிரண்ட்ஸ்!

கொஞ்சம் V வரிசை ஸ்டாக்குகளையெல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்தேன். அதிலே எனது கவனத்தை ஈர்த்தது இவ்விரண்டு ஸ்டாக்குகளும்தான். ஏனெனில், முன்னொரு காலத்திலே, அதாவது சந்தை zooooooom என்று மேல் நோக்கிச் சென்று கொண்டிருத்த காலத்தில் (2007/2008-களில்) வந்த செய்திகளின் தாக்கத்தை வைத்து இவ்விரண்டினை வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் பல லட்சக் கணக்கிலிருப்பார்கள். இன்று வரை விற்காமல், மேலும் மேலும் விலை குறைந்து வந்து போதெல்லாம் ஆவரேஜ் செய்து வந்தவர்களும் ஏராளம். அதன் நிலைமை என்னவாயிற்று? பார்க்கலாம்.

VISHALRET

ராம் சந்திரா அகர்வால் அவர்களின் VISHAL RETAIL-இன் IPO ரூ. 240-க்கு 81 மடங்கு subscribe செய்யப்பட்டது.  எத்தனை ஆயிரம் பேர் முண்டியடித்துக்கொண்டு முதலீடு செய்தோம்? 2007 ஜூலை 4-ஆந்தேதி (அமெரிக்க independance day) IPO-வில் ரூ.472.50/-இல் ஆரம்பித்த இன்னிங்ஸ் அன்று மாலை மிகவும் வெற்றிகரமாக ரூ.784.40-இல் முடிந்தது. (85 ball century on debut மாதிரி ஒரே கலக்கல்தான் போங்க! – அந்த ஷிகார் தவான் தம்பிய இங்க ஒப்பிடறதுக்கு மனசு வரலதான். இருந்தாலும், opening சூப்பர்-ஆ இருக்குதே! அந்தத் தம்பி நல்லா வளர, வாழ வாழ்த்துக்கள்!)

ஆறே மாதங்களில், அதாவது 2008 ஜனவரி 7-ஆந்தேதி உச்ச விலையாக ரூ.1,020/-ஐத் தொட்டது. அதன் பிறகு ஆசை யாரை விட்டது? நம்மில் யாரேனும், அதன் பிறகு, ஒரு trailing stoploss வைத்து பிராஃபிட் பார்த்தோமா? இல்லையே!

20120315 VISHALRETlinefrom970 to 17n70படம்: விஷால் ரீடெயில் – ஃப்ரம் IPO to குப்பைத்தொட்டி

அதெல்லாம் போகட்டும் 2008 ஜூன் மற்றும் ஜூலையில் ஒரு ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன் வடிவெடுத்து, 740-760 லெவல்கள் உடைபட்ட போதாவது (படத்திலிருக்கும் சிகப்புக் கலர் நெக்லைன்) இந்த ஸ்டாக்கை விற்றிருக்க வேண்டும். விற்கவில்லையே!

ஜூனில் உடைபட்ட பிறகு, நாம் வெளியே வர, மார்க்கெட் நமக்கு  மறுபடியும் ஒரு சான்ஸ் ஜூலையில் கொடுத்தது. அதாவது ஜூனில் உடைபட்ட நெக்லைன் சப்போர்ட், ஜூலையில் “ரீடெஸ்ட்” செய்யப்பட்டு அது ரெஸிஸ்டன்ஸ்-ஆக மாறியது. அப்போதாவது வெளியில் வந்தோமா?

இல்லையே! மேலும் மேலும் கீழேயிறங்க, நாம் மேலும் மேலும் நம்பிக்கையுடன்தானே ஆவரேஜ் செய்தோம்? நமது நம்பிக்கையெல்லாம் தூள் தூளானது; எது நடந்துவிடக்கூடாதென்று பயந்தோமோ, அந்த பயமே கடைசியில் நிஜமானது.

ஆயிரம் ரூபாய் ஹை எங்கே? ரூ.17.70 பைசா எங்கே? (தற்போது இது V2RETAIL என்ற பெயரில் மறு நாமகரணம் சூட்டப்பட்டு ரூ.10/- என்ற அளவிலே இன்றைய தேதியில் வர்த்தகமாகிறது.

ஆண்டவா!

எங்கே ட்ரெண்ட்லைன் சப்போர்ட் உடைபட்டு, ட்ரெண்ட் மாறுகிறதோ, அங்கேயே பொசிஷனை கட் செய்யும் மன வலிமையைக் கொடு.

எங்கே பேட்டர்னின் சப்போர்ட் உடைபடுகிறதோ, அங்கேயாவது வெளியில் வர துணிவைக் கொடு.

“சார்ட்-ஐ மட்டும் பாருடா பாபு; நியூஸ்-ஐப் பார்க்காதே!” அப்படீன்னு நல்ல புத்தியக் கொடு.

“தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை – ஆவரேஜ்-தான்” அப்படிங்கற பன்ச் டயலாக்-ஐ என் புத்தியில எப்படியாவது ஏத்திடு சாமி!

பக்தன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: ஹையா! இன்னொரு ஸ்டாக் என்னன்னு இப்பவே சொல்ல மாட்டேனே! நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! 🙂

என்னங்க? ஓ.. க்ளூ வேணுமா? அதான் V வரிசைன்னு சொல்லிட்டேனே!

இவங்கெல்லாம் ஸ்டாப்லாஸ் வைக்கல. நீங்க?


கோட்டு, சூட்டு போட்ட புரஃபஷனல்களே இப்படின்னா…….

பக்கம் 1

பக்கம் 2

பக்கம் 3

பக்கம் 4

பக்கம் 5

பக்கம் 6

பக்கம் 7

வணிகத்தின் விதிமுறைகள் (Trading Rules) – அத்தியாயம் 1


ஆங்கிலத்தில்: JK
தமிழாக்கம்: அடியேன்தான்

ஒரு டிரேட் செய்கிறோமென்றால், அதிலே மூன்று விதமான செயல்பாடுகள் உள்ளடங்கியுள்ளன எனலாம். அவையாவன,

1.       டிரேட் பற்றி முடிவெடுப்பது (Decision Making)

2.       அதனைச் செயல்படுத்துதல் (Execution)

3.       பிறகு அதனைச் செம்மையாக வழி நடத்தி மேலாண்மை செய்தல் (Trade Management)

இவ்வாறு ஒவ்வொரு டிரேடும் இம்மூவகையானச் செயல்பாடுகளின் வரிசைக்கிரமப்படியே நடந்தாலும், பணம் சம்பாதித்துக் கொடுப்பதென்னவோ மூன்றாவதான “வழி நடத்தி மேலாண்மை செய்வது (Trade Management)” மட்டுமே.

1. முடிவெடுத்தல்

அனேக முதலீட்டாளர்கள் ஒரு டிரேட் (வாங்கவோ அல்லது விற்கவோ) எவ்வாறு முடிவெடுக்கிறார்கள்? ஃபன்டமண்ட்டல் அனாலிசஸோ  அல்லது டெக்னிக்கல் அனாலிசஸோ கற்றுக்கொண்டு, அந்த ஆராய்ச்சிகளின் மூலம் ஒரு டிரேடில், “லாங்கோ” அல்லது “ஷார்ட்டோ” போகலாம் என்று முடிவெடுப்பார்கள்.

சற்று யோசித்துப் பாருங்கள்! இந்த ஆராய்ச்சிகளைக் கற்றுக் கொள்ளும் காலமும் அதிகமாகும்; கற்றுக் கொள்ளும் முறைபாடுகளும் (வரைபட மென்பொருள், எக்ஸ்சேஞ்ச் விலை விபரம் பெறுவது (data), பேலன்ஸ் ஷீட், பிராஃபிட்&லாஸ் அக்கௌண்ட் போன்ற விபரங்கள்) கொஞ்சம் சிரமமாகத்தானிருக்கும். அதனால்தான், இந்த ஆராய்ச்சி வகைகளில் நிபுணத்துவம் பெற பல்லாண்டு காலமாகலாம். ஒரு டிரேடில் உள்ளடங்கியுள்ள இந்த முதல் வகைச் செயல்பாடு, பணம் ஈட்டித் தருவதற்கில்லை.

2. செயல்படுத்துதல் (Execution)

ஒரு டிரேடின் இரண்டாவதாக அமையும் இப்பகுதி, ஒரு மாதத்திற்குள்ளேயே கற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது. இந்தப் பகுதியும் பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்கில்லை. அதி முக்கியமாக டிரேடில் ஏற்படும் இழப்புகளைக் குறைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில், லாங்-கோ அல்லது ஷார்ட்-டோ நாம் நினைத்த விலையில் (ஸிலிப்பேஜ் -slippage எதுவுமில்லாமல்) அந்த டிரேடினை முடித்து விட வேண்டும். (லாங் அல்லது ஷார்ட் என்று) ஒரு டிரேட் எடுக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால், அதனைச் செயல்படுத்த எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

3. கையிலிருக்கும் டிரேடை வழி நடத்தி மேம்படுத்துதல் (மானேஜ்மெண்ட் ஆஃப் பொசிஷன் – Management of Position)

டிரேடின் மூன்றாவதான இந்தப் பகுதி மட்டுமே, பணம் சம்பாதித்துக் கொடுப்பது,. இதில் விசேஷம் என்னவென்றால், இதைத்தான் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும். ஒரு டிரேடின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இந்த அதி முக்கியமான பகுதியில்தான், வெற்றியாளர்கள் நன்கு செயல்பட்டு ஜாம்பவான்களாகத் திகழ்கிறார்கள்.

அடுத்த முறை நீங்கள் ஒரு டிரேட் எடுக்க முற்பட்டால், ஃபன்டமண்ட்டல் அனாலிசஸ் அல்லது டெக்னிக்கல் அனாலிசஸ் அல்லது இரண்டும் கலந்த கலவை டெக்னோ-ஃபண்டா மூலமாகவோ என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுங்கள்; அந்த டிரேடை செயல்படுத்துங்கள்; கடைசியாக, “பணம் பண்ண வேண்டும்” என்ற ஒரு உத்வேகத்துடன் களமிறங்கி, உங்களது டிரேடை கவனமாக வழி நடத்துங்கள்.

பி.கு: நீங்கள் ஒரு டிரேட் எடுக்க வேண்டுமென்று ஆரம்பிப்பது, செல்வத்தின் வாயிலில் இருப்பதல்ல; அந்த வாயிலைச் சென்றடைவதற்கான வழியின் ஆரம்பத்தில்தான் அடியெடுத்து வைக்கிறீர்களென்று கவனத்தில் வைக்கவும். (வாசல் வேறு: வாசலுக்குச் சென்றடையும் வழியின் ஆரம்பம் வேறு)

பாபு  கோதண்டராமனின் ஒரு இடைச் செருகல்:

வழி மேல் விழி வைத்து

அடி மேல் அடி வைத்து,

இனி JK கூறப்போகும்

விதிகளைப் பின்பற்றி

நம் மேல் நம்பிக்கை வைத்து

வெற்றியாளராக மாறுவோம்!

வெற்றி நம் கையில்!

-தொடரும்

அடுத்த இதழில்: 

மேலே சொன்ன ஒவ்வொரு வகைக்கும் எந்தெந்த மாதிரியான வழி(விதி)முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று பார்ப்போம்.