டெக்னிக்கல் அனாலிசிஸ் – கற்கக் கசடற


ஹலோ!

சமீப நாட்களாக (நான் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி) இந்த blog-இல் எழுத ஆரம்பித்ததிலிருந்து, இதற்கு மிகவும் ஒரு நல்ல ஆதரவிருப்பதாக உணரமுடிகிறது. இருந்தாலும் இதற்கு முந்தைய பதிவான, “டைவர்ஜென்ஸ் இருக்குதா? இல்லையா?” என்ற பதிவிற்கு நான் எதிர்பார்த்த அளவிற்கு பதில்கள் இதுவரையிலும் வரவில்லை. பரவாயில்லை! ஏனெனில், எழுதுவென்பது கொஞ்சம் (நிறையவே) கஷ்டமான வேலைதான். J

நிற்க! எனினும் எனக்கு நிறைய பேர் தனிப்பட்ட முறையில் கடிதம் (லெட்டர் எல்லாம் ஒண்ணும் இல்லீங்க….. ஈமெயில்தாங்க!) எழுதித் தொடர்பு கொண்டு “டெக்னிக்கல் அனாலிசிஸ் class ஏதேனும் நடத்துகிறீர்களா?” என்று கேட்டுள்ளீர்கள். இதுவரையிலும் அப்படியேதும் எண்ணம் இல்லாமலிருந்தது. ஒரு சிலர் கேட்டிருக்கவே, இன்னும் யாருக்காவது டெக்னிக்கல் அனாலிசிஸ் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால், எனக்கு ஒரு வரி ஈமெயில் அனுப்பி வையுங்கள். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று வைத்துக்கொள்ளலாம்.

ஒரு basic-ஆனா கோர்ஸ் சிலபஸ் பற்றி யோசனை செய்து கீழே எழுதியிருக்கின்றேன். உங்களின் கருத்துக்களையும் கூறவும்.

 டெக்னிக்கல் அனாலிசிஸ் – Basics

  • ஒரு நாள் கோர்ஸ் (9am to 5pm?) 8am என்றால் கூட எனக்கு ஓகே-தான் J
  • கட்டணம்: ரூ. 1200-லிருந்து 2500-க்குள் (உங்களுக்கு எங்கு வேண்டுமென்பதைப் பொறுத்தது. 3/5 ஸ்டார் ஹோட்டலிலா அல்லது ஏதேனும் ஒரு கான்பரன்ஸ் ஹாலிலா, சென்னையின் மத்தியப் பகுதியிலா அல்லது அம்பத்தூரிலா [ஆஹா…. இது எங்க ஊராச்சே!] என்றெல்லாம் கலந்தாலோசிக்க வேண்டும். எனக்கு ரூ.1000/-த்திற்கும் அதிகமாகாமலிருக்க வேண்டுமென்பதுதான் ஆசை!)
  • குறைந்தது, ஒரு 8 பக்க கோர்ஸ் மெடீரியல் (தமிழில் மட்டுமே!). 8 பக்கமென்பது அதிகமானாலும் அதிகமாகலாம். மாடல் சார்ட்டுகளை நான் இணைத்தால், அது ஒரு 15-16 பக்கங்கள் கூட வரலாம். இதுவும் எனக்கு ஓகே-தான்.
  • டீ, காஃபி இரு வேளை, மதிய உணவு (வெஜ் ஒன்லி) J
  • எப்போது? அதுதான் தெரியவில்லை. மே மாதத்தில்? இல்லை ஜூனிலா?

கோர்ஸ் சிலபஸ்:

1. மார்க்கெட் டைப்:

a) ட்ரெண்டிங் மார்க்கெட் b) sideways மார்க்கெட்

a.1) அப்ட்ரெண்ட் மார்க்கெட்

a.2) டௌன்ட்ரெண்ட் மார்க்கெட்

a.3) ட்ரெண்ட்லைன்கள்: வரைவதெப்படி?

a.4) சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ் கண்டுபிடிப்பதெப்படி?

b.1) பக்கவாட்டு மார்க்கெட் கண்டுபிடிப்பதெப்படி?

இத்தகைய மார்க்கெட்டுகளில் டிரேட்/இன்வெஸ்ட் செய்யும் ஸ்ட்ராடஜி.

2. சார்ட் பேட்டர்ன்கள்:

a) Continuation (ட்ரெண்ட் தொடரும்) பேட்டர்ன்: Bullish Flag, Bearish Flag

b) ரிவர்ஸல் (ட்ரெண்ட் திரும்பும்) பேட்டர்ன்: ஹெட் & ஷோல்டர், தலைகீழ் ஹெட் & ஷோல்டர், டபுள் டாப் (double top), டபுள் பாட்டம் (double bottom)

c) நியூட்ரல் பேட்டர்ன்: ட்ரையாங்கில் (முக்கோணம்)

 3. Money management: ரிஸ்க்:ரிவார்ட் ரேஷியோ எவ்வாறு அமைத்துக் கொள்வது?

4. மேலே கற்றுக்கொண்டதிலிருந்து ஒரு சில(4 அல்லது 5) பேட்டர்ன்களின் மாதிரி டிரேட் எடுத்து, அந்த டிரேட்களை நிர்வகிக்கும் டிரேடிங் சைக்காலஜி பற்றியும் ஒரு ஒரு மணி நேரம் மாடல் டிரேட் பயிற்சி எடுக்கலாம்.

—– xxxxx —–

மிகப்பெரிய எச்சரிக்கை

இந்தக் கோர்சில் கலந்து கொண்டு, அடுத்த நாளே ஒரு பத்தாயிரம், இருபதாயிரம் சம்பாதிக்கலாமென்று நினைக்காதீர்கள். என்னால் அப்படியொரு காரன்டி கொடுக்கவே முடியாது. அப்படியெல்லாமிருந்தால், நான் ஏன் இந்த மாதிரி blog எழுதிக்கொண்டு, இந்த மாதிரி ஒரு training கோர்ஸ் நடத்துகிறேன் என்றெல்லாம் இருக்கப்போகிறேன்? நானே இந்த மாதிரி டிரேட் செய்து, அந்தப் பணத்தை சம்பாதித்து இந்நேரம் ஹவாய் தீவுகளிலோ, லண்டனிலோ இந்தக் கோடை விடுமுறையை என்ஜாய் செய்து கொண்டிருப்பேனே? எனவே டெக்னிக்கல் அனாலிசிஸ் கற்றுக்கொள்ள ஆர்வமிருந்து, இந்தக் கோர்ஸ் அட்டென்ட் செய்து, அதற்குப் பிறகும் ஒரு ஆறேழு மாதங்கள் தொடர்ந்து சார்ட்டுகள் பார்த்து வந்தால் மட்டுமே இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளமுடியும்.

அதேபோல, வீட்டில் கம்ப்யூட்டரில் டெய்லி ஒரு 40-50 சார்ட்டுகளாவது பார்த்தால்தான் நன்கு தேர்ச்சி பெற முடியும்.

இந்தக் கோர்ஸைப் பற்றிச் சொல்வதானால், இது ஒரு அடிப்படையான ஆனால் மிக, மிக முக்கியமான சிலபஸ். இது தெரிந்தால்தான் மேலும், மேலும் டெக்னிக்கல் அனாலிசிஸின் மேலும் பல அட்வான்ஸ்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஈசியாக இருக்கும்.

மேலும் எனது எண்ணங்கள்!

எனக்கு இந்தக் கோர்ஸிலேயே மூவிங் ஆவரேஜ், கேண்டில்ஸ்டிக் சார்ட்ஸ், Fibonacci series, டிரேடிங் ஸ்ட்ராடஜிகள் முதலானவைகளை சேர்த்துக்கொள்ள ஆசைதான். ஆனால், இருக்கும் நேரம் போதாதென்று நினைக்கின்றேன்.

உங்களின் கருத்துக்கள்!

மேலும் எதைச் சேர்க்கலாம், எதைச் சேர்த்தால் பயனுள்ளதாக இருக்குமென்று தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்! [என்னங்க?…. ஓ! sunday பிரியாணி சேர்த்தால் நல்லா இருக்கும்னு சொல்றீங்களா! :)].

உங்கள் பதில் கடிதம் எதிர்பார்த்து,

பாபு கோதண்டராமன்