20110715: 3 இன் 1 பேட்டர்னில் உள்ள பங்குகளின் அட்டவணை


சென்ற பதிவில் கொடுத்துள்ள 3 இன் 1 வரைபட அமைப்பு புரிந்ததா? அதைப்பற்றி நீங்கள் எதுவும் கேள்வியே கேட்கவில்லையே. ஏதேனும் சந்தேகமிருந்தால் தயங்காமல் கேளுங்கள். கமெண்ட் பகுதியில் ஒரு வரி எழுதுங்கள்.

இந்த அட்டவணையைப் பாருங்கள். ஜூலை 15 அன்றைய நாள் முடிவில், NSE Cash மார்க்கெட்டில் 3-இன்-1 அமைப்பில், ஒரு மில்லியன்-ஐ விட அதிக வால்யூமில் வர்த்தகம் நடந்த பங்குகள் இவை. இதில் “Buy Above” என்று “லாங்” டிரேடுக்கும், “Sell Below” என்று “ஷார்ட்” டிரேடுக்கும் விலை விபரம் கொடுத்துள்ளேன்.

Ticker 3-in-1 Close  Buy Above Sell Below Volume
HDIL 161.45 168.8 158.5 4284340
GTL 89.05 91.75 88.05 2311802
SATYAMCOMP 86.2 88.25 85.25 1915016
CROMPGREAV 242.9 249.05 239.15 1741053
HCC 33.45 34.6 32.5 1644129
TITAN 226.8 230.2 220.15 1319742
KRBL 30.6 33.85 30 1061016
M&M 721.15 724.8 700.1 1048866

இது WRB-யின் 3-இன்-1 ஹை (Buy above) மற்றும் 3-இன்-1 லோ (Sell below) விபரங்கள். இவை எந்தத் திசையில் உடை(உதை)படுகின்றனவோ, அந்தத் திசையில் டிரேட் அமைய வேண்டும். ஸ்டாப் லாஸ் அதற்கு எதிர்த் திசையில் உள்ள விலையாக இருக்க வேண்டும்.

அதாவது, “Buy above” விலை மேலே உடைபட்டு, 3 இன் 1 ஹை-யை விட மேலே முடிவடையும் நேரத்தில் “லாங்” போகவேண்டும். இந்த “லாங்” டிரேடிற்கு ஸ்டாப்லாஸ்-ஆக 3 இன் 1 லோ விலை (Sell below) இருக்கும்.

“Sell below” (3-இன்-1 லோ) விலை உடைபட்டு, விலை அதற்குக் கீழே முடிவடைந்தால், “ஷார்ட்” டிரேட் எடுக்க வேண்டும். இந்த “ஷார்ட்” டிரேடிற்கு ஸ்டாப்லாஸ்-ஆக 3 இன் 1 ஹை விலை (Buy above) இருக்கும்.

ஒரு சில வரைபடங்கள்:

படம்1: 20110715 3இன்1 CROMPGREAV

படம் 2: 20110715 3-இன்-1 HDIL

இந்த அமைப்பு புரியும் வரை டிரேட் எதுவும் எடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக பேப்பர் டிரேட் செய்து நன்கு பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். விலையின் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, இந்த அமைப்பினைப் பற்றி  நன்கு புரிந்து கொண்ட பின்னரே, டிரேட் செய்யவும். உங்களுக்கு வசதியாக ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்துக்கும்) அதிகமாக வர்த்தகம் (வால்யூம்) நடந்த பங்குகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.

படம் 3: 20110715 KRBL

எச்சரிக்கை: முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். வெற்றியில் முடியும் பேட்டர்ன்களும் உண்டு. முந்தைய எடுத்துக்காட்டில் உள்ளது போல “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!” என்று தோல்வியிலும் முடிவடையலாம். கவனம் அவசியம்! ஏதேனும் புரியவில்லை என்றால், தயங்காமல் கேட்கவும்!

20110715 3-இன்-1 M&M

– பாபு கோதண்டராமன்

20110715 3-இன்-1 SATAYAMCOMP


வரைபடங்கள்- அறிமுகம் 1- குச்சி வரைபடங்கள் (Bar Charts)


வணக்கம்!

வரைபடங்கள் பல வகைப்படும்.  1. கோடு (Line charts), 2. ஓப்பன், ஹை, லோ, க்ளோஸ் குச்சி (OHLC Bar Charts), 3. மெழுகுவர்த்தி (Candlestick charts), 4.பாயிண்ட் & ஃபிகர் சார்ட்(point and figure chart), 5. காகி (Kagi charts) மற்றும் இன்னமும் சில வகைகள் உள்ளன.

இங்கே, இரண்டாம் வகையான ஓப்பன், ஹை, லோ, க்ளோஸ் குச்சி வரைபடத்தின் படம் வரைந்து பாகங்களைக் குறித்துள்ளேன். ஃபுல் மார்க் கிடைக்குங்களா? 🙂

பெயருக்கேற்றவாறு, இந்த மாதிரி வரைபடங்கள், ஆரம்ப விலை, ஹை, லோ மற்றும் முடிவு விலையைக் கொண்டு வரையப் படுகின்றன. விபரங்களைப் படத்திலேயே எழுதியுள்ளேன். மறக்காமல் எவ்வளவு மதிப்பெண்கள் கொடுததுள்ளீர்கள் என்று எழுதுங்கள்!

படம் 1: படம் வரைந்து பாகங்களைக் குறி - OHLC பார் சார்ட்டுகள் - குச்சி வரைபடங்கள்


இதிலே, என்ன பார்க்க வேண்டுமென்றால்,

1. ஹை-யுக்கும் லோ-வுக்குமுள்ள இடைவெளி; இதுதான் ரேஞ்ச் (Range) என்பார்கள். இது (WRB – Wide Range Bar) ரேஞ்ச் அதிகமுள்ள விலைக்குச்சியா, அல்லது (NRB-Narrow Range Bar) ரேஞ்ச் குறைவாக உள்ள விலைக்குச்சியா என ஆராய உதவும். ஒவ்வொரு பங்கிற்கும், இண்டெக்ஸுக்கும் ரேஞ்ச் மாறுபடும் என்பதை கனத்தில் கொள்ளவும்.

2. Inside Bar: (இன்சைட் பார்)

தற்போதைய ஹை < முந்தைய பாரின் ஹை &

தற்போதைய லோ >முந்தைய பாரின் லோ

என்னங்க புரியுதா? ஒரு கணித முறையிலேயே இந்த விதிமுறையை எழுதியுள்ளேன். இன்சைட் பார் என்றால், உள்ளடங்கிய குச்சி என்று சொல்லலாம். ஹை, முந்தைய ஹையை விடக் குறைவாகவும், லோ-வானது முந்தைய லோ-வை விட அதிகமாகவும் இருக்குமாறு அமைவது. அதாவது, தற்போதைய பாரின் ரேஞ்சானது, முந்தைய பாரின் ரேஞ்சுக்குள்ளேயே அடங்கியுள்ளது என்று பொருள்.

படம் 2: இன்சைட் & அவுட்சைட் பார்களின் அமைப்பு

3. Outside Bar: (அவுட்சைட் பார்) அது சரி! இன்சைட் பார் பற்றிப் பார்த்தோமே! அதன் நேர் எதிர் விதிமுறைகள்தான் இந்த அவுட்சைட் பாருக்குப் பொருந்தும். மேலே உள்ள படத்திலேயே அதைப் பற்றிக் காட்டியுள்ளேன்.

தற்போதைய ஹை > முந்தைய பாரின் ஹை &

தற்போதைய லோ <முந்தைய பாரின் லோ

என்று கணித முறையிலேயே இந்த விதிமுறையை எழுதலாம். அவுட்சைட் பார் என்றால்,ஹை-யும் லோ-வும் முந்தைய பாரை விட வெளியில் நீடடிய குச்சி என்று சொல்லலாம். ஹை, முந்தைய ஹையை விடஅதிகமாகவும், லோ-வானது முந்தைய லோ-வை விடக் குறைவாகவும்  இருக்குமாறு அமைவது. அதாவது, தற்போதைய பாரின் ரேஞ்சானது, முந்தைய பாரின் ரேஞ்சுக்குள்ளேயே அடங்காமல், வெளியே நீட்டிக் கொண்டிருப்பது என்று பொருள்.

படத்தைப் பாருங்கள்! மார்க் போடுங்கள்! 🙂

– பாபு கோதண்டராமன்

ChartNexus – வரைபட இலவச சாஃப்ட்வேர்


டெக்னிக்கல் அனலிஸஸ் கற்றுக்கொள்ள ஒரு வரைபட சாஃப்ட்வேர் வேண்டும். சார்ட் நெக்ஸஸ் என்ற நிறுவனம் NSE குறியீடுகளுக்கான 3 வருட விலைவிபரங்களுடன் (3 years data), EOD  எனப்படும் “நாள் முடிவடைந்தது” என்ற  நிலையில், இலவசமாக ஒரு வரைபட சாஃப்ட்வேர் http://www.chartnexus.com/software/index.php என்ற தளத்தில் கொடுக்கிறது. உபயோகமாக இருக்கிறதாவென்று சொல்லுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20110615 Hindalco ஹிண்டால்கோ


அலசலுக்கு முன் இந்த வரைபடம் எப்படியிருக்கிறதென்று பாருங்கள்! அதற்குக் கீழே அலசித் துவைத்துப் பிழிந்து காய வைத்தது.

அலசாமலிருப்பது

அலசிய பிறகு

அலசிக் காய வைத்தது