இதுல நீங்க எப்பூடீஈஈ?


இன்றைய ட்விட்டரில் வந்த இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு டே டிரேடர் மற்றும் ட்ரெண்ட் டிரேடரின் ஒரு நாள் வாழ்க்கையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

அது சரி! இதிலே நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கிறீர்கள்? இந்தப் படத்திலே சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்களா? இல்லையா? எது சரி? எது தவறு?

உங்கள் அனுபவத்திலிருந்து பதில் எழுதுங்களேன்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

A day in the life of a Day trader vs Trend trader

 

நீங்க இந்த புல்லிஷ் மார்க்கெட் ரேலியை நம்பறீங்களா?


அப்புறமென்ன?

கீழேயிருக்கும் நிஃப்டி ஃப்யூச்சர் ஹவர்லி சார்ட்டைப் பாருங்கள்! தற்போது 34EMA-விற்குக் கீழே முடிந்துள்ளது. அதற்கு மேலே செல்லும்போது தற்போதைய லோயஸ்ட் லோ-வினை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு லாங் போகலாம்.

இது 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி! நான் வேண்டுமென்றே விலை லெவல்களைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்களே சார்ட் பார்த்து, 34EMA லெவல் என்ன, அதற்குமேல் போனால் எந்த லெவலில் வாங்கவேண்டும், ஸ்டாப்லாஸ் வைக்க லோயஸ்ட் லோ என்ன லெவல் என்றெல்லாம் நீங்களே பார்க்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்!

நான் மீன் கொடுக்கமாட்டேன்; ஆனால், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கின்றேன்! 🙂

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

அன்புடன்

பாபு கோதண்டராமன்

காக்கா உட்காரப் பன(ண)ம்பழம் விழுந்த கதையாக……


ஹலோ!

கடந்த 16-ஆந்தேதி வெள்ளிக்கிழமையன்று நிஃப்டியில் முக்கோணம் தெரிகிறதென்று எழுதியிருந்தேனே!  டார்கெட் 1 = 5180 மற்றும் டார்கெட் 2 = 4950 என்றும் கிறுக்கியிருந்தேனே! பொறுத்திருந்து பார்க்கலாமென்றேனே!

“என்னங்க? தேனே… தேனே… ன்னு சொல்றீங்களே”ன்னு  கேக்குறீங்களா? வேறொன்னுமில்லீங்க! இன்னைக்கு நிஃப்டி 5118.85 என்ற அளவு வரை கீழே சென்று வந்துள்ளது. ஆக, டார்கெட் 1 எட்டியாகிவிட்டது. அதுவும் எட்டு நாட்களிகளிலேயே.

இங்கே ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். ஏதோ நான் பார்த்துப் போட்டதாலேயே அந்த டார்கெட் வந்து விட்டதென்று நினைத்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்குப் பிறகுதான் இந்தியா ரூபாயின் மதிப்பு இந்த அளவிற்கு சரியுமென்று எதிர்பார்த்தோமா என்ன?

என்ன ஒன்று, “டெக்னிக்கல் அனாலிசிஸ்-நா ரியர் வியூ மிர்ரர் மாதிரிதான். முன்னமே நடந்ததை வைத்து தியரியாக என்ன வேண்டுமானாலும் அலசலாம்” என்று சொல்பவர்களும் இந்த மாதிரி பேட்டர்ன் பார்த்து டார்கெட் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கலாமே!

16 ஆகஸ்ட் அன்று பார்த்த ட்ரையாங்கில் உடைபட்டு, இன்று டார்கெட் 1 கிடைத்து விட்டது

16 ஆகஸ்ட் அன்று பார்த்த ட்ரையாங்கில் உடைபட்டு, இன்று டார்கெட் 1 கிடைத்து விட்டது

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

டே டிரேடிங் ஸ்ட்ராடஜி: SPECULATOR-இன் 34 EMA ரிஜக்ஷன் (34EMA Rejection method)


ஹலோ!

icharts.in என்ற கம்பெனி சார்ட்டுக்களை இலவசமாகவும் (கொஞ்சம் கம்மியான வசதிகளுடன்) மற்றும் paid service-ஆகவும் வழங்கிக்கொண்டு வருகிறது. அவர்கள் ஒரு forum-உம் நடத்தி வருகிறார்கள்.

அதிலேயிருந்து Speculator என்ற பெயரில் எழுதும் திரு. நவீன் ஸ்வாமி என்றொரு உறுப்பினர் எழுதியுள்ள இந்த டிரேடிங் ஸ்ட்ராடஜியின்  லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

Thanks to Mr.Naveen Swamy aka SPECULATOR of icharts forum

அது http://www.icharts.in/forum/ssps-speculators-swing-pivot-system-t3444.html.

இதிலே அவர் ஐந்து வெவ்வேறு தலைப்புகளில், இந்த ஸ்ட்ராடஜியின் 5 முக்கிய அம்சங்களை விளக்கி எழுதியிருக்கிறார்.

இது டேடிரேடிங்-குக்கு அவர் 15min டைம்ஃபிரேமில் உபயோகப்படுத்துவதெப்படியென்று விரிவாக எழுதியுள்ளார். மேலும் இந்த ஸ்ட்ராடஜியை அவர் சென்ற வருடம் பெங்களூருவில் நடைபெற்ற Traders Carnival 2012 (டிரேடர்ஸ் கார்னிவல் – #TC2012 – இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கிடுக)-இல் பங்கேற்றவர்களுக்குச் சொல்லியும் கொடுத்துள்ளார்.

என்ன? இது ஃபுல் அண்ட் ஃபுல் இங்கிலீஷில்தானிருக்கிறது. தமிழில் இன்னும் கொஞ்சம் நாட்களில் எழுதுகிறேன். அதுவரையிலும், அவருடைய கொள்கை விளக்கங்களை (:)) ஒரு லுக் விட்டுப்பாருங்கள்!

என்ஜாய்!
பாபு கோதண்டராமன்