பங்கு: TITAN 20110826 மறுபார்வை (2)


TITAN பற்றிய ஜூலை 22-ஆம் தேதியிட்ட பார்வையை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

கவனத்தில் கொள்க: “டெக்னிக்கல் அனாலிசஸ் என்பது ஒரு கலை; கணிதமல்ல”

அதிலே, டைட்டன் ஒரு டபுள் டாப் அமைப்பில் இருந்து, (இ&ஆ-க்களில்) நெகட்டிவ் டைவர்ஜன்ஸ்களையும் பெற்று, 210 என்ற சப்போர்ட் லெவலை சார்ந்திருக்கிறது என எழுதியிருந்தேன்.

படம்: 20110826 TITAN - 210-ஐ உடைச்சிடிச்சி; அடுத்தது 183-தானா?

 

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், அந்த 210 சப்போர்ட் லெவல் உடைபட்டு, விலை கீழே சென்று, பிறகு மேலே வந்து மறுபடியும் அந்த (சப்போர்ட்டாக இருந்து இப்போது ரெஸிஸ்டன்சாக மாறியுள்ள) 210 லெவலை ரீடெஸ்ட் செய்தது. அந்த ரீடெஸ்டுக்குப் பிறகு, தற்போது மறுபடியும் கீழே செல்லத் துவங்கியுள்ளது.

நான் முந்தைய பதிவில் எழுதியுள்ள டார்கெட்டான 183 வரை கீழிறங்குகிறதா என்று இனிவரும் நாட்களில் கவனிக்கலாம்.

-பாபு கோதண்டராமன்

டைவர்ஜன்ஸஸ் (Divergences) 20110819


டைவர்ஜன்ஸஸ் என்றால் என்ன?

முன்னரேயே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். “கிளிக்” செய்து படித்துப் பார்க்கவும்!

இந்த வார முடிவில் (19-08-2011) கிடைத்துள்ள சில சார்ட்டுக்களை இங்கே விளக்குகிறேன்.

எச்சரிக்கை: இங்கே நான் குறிப்பிட்டுள்ள ஸ்டாக்குகளில் டிரேட் செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தலாம்! இதை ஒரு படிப்பினையாக மட்டும் எடுத்துக் கொண்டால் உத்தமம்! முதலில், இந்த டைவர்ஜன்ஸை வைத்து பேப்பர் டிரேட் மட்டும் செய்து பார்க்கவும்.

இங்கே நான் எதுவும் டிரேட் என்ட்ரி, டார்கெட் & ஸ்டாப் லாஸ் எதுவும் கொடுக்கவில்லை. இந்த டைவர்ஜன்ஸ் என்பது  ஒரு பொதுவான கருத்து. இது இரண்டு வகைப்படும்.

1. பாசிடிவ் டைவர்ஜன்ஸ்: விலை கீழே, கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலோ (அ) சம நிலை “லோ”க்களில் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இ&ஆ (இண்டிகேட்டர்களும், ஆஸிலேட்டர்களும்) மேலே செல்வது.

2. நெகட்டிவ் டைவர்ஜன்ஸ்: விலை மேலே, மேலே ஏறிக் கொண்டிருக்கும் நிலையிலோ (அ) சம நிலை “ஹை”க்களில் உலாவிக் கொண்டிருக்கும் போதோ, இ&ஆ (இண்டிகேட்டர்களும், ஆஸிலேட்டர்களும்) கீழே செல்வது.

முதல் உதாரணமாக, எது டைவர்ஜன்ஸ் கிடையாதென்று ஒரு வரைபடம் பார்ப்போம். பிறகு, மற்றவையெல்லாம் எளிதாக விளங்குமென்று நினைக்கிறேன் (நான் நனைக்கிறேன், நீங்க காய வைச்சுடுங்க! :-))

படம் 1: டைவர்ஜன்ஸ் கிடையாது என்பற்கான விளக்கப் படம்

மற்ற படங்களை இப்போது பார்க்கலாம்.

படம் 2: 20110819 DEEP INDUSTRIES

இரண்டு சமநிலை “லோ”க்களில் (இரண்டு சிறிய அடிக்கோடுகள் போட்டுள்ளேன்) விலை அமைந்து, ஒரு டபுள் பாட்டம் போன்ற அமைப்பு உருவாகியுள்ள நிலையில், இ&ஆ – க்கள் எல்லாம் மேல் நோக்கிச் செல்கின்றன. (நீல நிறத்தில் மேல் நோக்கிய அம்புக்குறியிட்டுள்ள இடங்கள்). ஆகவே, இது ஒரு பாசிடிவ் டைவர்ஜன்ஸாகக் கருதப்படுகிறது. விலை மேலே செல்கிறதா என்று பார்க்கலாம். 

அடுத்தது

படம் 3: 20110819 ECE INDUSTRIES

இதுவும் முன்னர் சொல்லப்பட்ட DEEP INDUSTRIES போன்ற (சம நிலை “லோ”க்களில் விலை; இ&ஆ-க்கள் மேலே செல்வது) நிலையில் இருப்பதால், இதுவும் நமது பைனாகுலர் பார்வைக்குள் வருகிறது.

அடுத்தது:

படம் 4: 20110819 JAIPRAKASH ASSOCIATES

இந்தப் படத்துக்கும், நாட்டாமை அதே தீர்ப்புத்தான் சொல்றாரு!

படம் 5: 20110819 MALWA COTTON SPG MILLS

படம் 6: 20110819 PUNJAB CHEM

இந்த PUNJABCHEM-இல் விலையானது, சம நிலை “லோ”க்களில் இல்லாமல், “லோ”,”லோயர் லோ” என்று இன்னமும் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் போதே, இ&ஆ-க்கள் மேலே செல்கின்றன.

அடுத்தது:

படம் 7: 20110819 RUCHIRA PAPERS

விலை கீழே இறங்குகிறது. மூன்று இ&ஆ-க்களில் இரண்டு மேலே செல்கின்றன. RSI என்பது மேலே செல்ல வில்லையென்றாலும், விலையைப் போல கீழே செல்லாமல் சம நிலையில் “ஹோல்ட்” செய்கிறது. எனவே, இதுவும் ஒருவகையில் பாசிடிவ் டைவர்ஜன்ஸ்தான்.

ஆகவே, இந்த 7 (1+6) படங்களில் உள்ள ஸ்டாக்குகளையும் நீங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நன்றாகக் கவனித்து வாருங்கள். இந்த பேரிஷ் மார்க்கெட்டில் இந்த டைவர்ஜன்ஸ் எப்படி வேலை செய்கிறதென்று பார்க்கலாம்.

(ஓகே! ஓகே! “முன்னமேயே JAGRAN டைவர்ஜன்ஸ் நம்மைக் கவிழ்த்துவிட்டதே” அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறதுதான். ஆனாலும் என்ன செய்வது? டெக்னிக்கல் அனாலிஸாஸோட அழகே இப்படி தப்பைச் சரியாகச் செய்து, பிறகு அதைச் சரி செய்வதுதானே!) எனக்கே ஒண்ணும் புரியல! உங்களுக்குப் புரியுதா? 😉

-பாபு கோதண்டராமன்

 

 

 

 

20110804 JAGRAN – ஒரு டபுள் பாட்டம் + டைவர்ஜன்ஸ்


டைவர்ஜன்ஸ் (Divergence) என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். NSE-யிலிருந்து நமக்கு ஓபன், ஹை, லோ, க்ளோஸ், வால்யூம் என ஒவ்வொரு நாளும் (அவ்வளவு ஏன்? இண்ட்ரா டே என்றால், ஒவ்வொரு வினாடியும்) நமக்கு டேட்டா எனப்படும் விலை விபரங்கள் கிடைக்கின்றன. இந்த விலை விபரங்களில் இருந்து பல்வேறு வகையான புள்ளியியல் கணக்கீடுகள் (statistical calculations) மூலம் வெவ்வேறு வகையான இண்டிகேட்டர்களும் (Indicators), ஆசிலேட்டர்களும் (Oscillators) (இ & ஆ என்று செல்லப் பெயரிட்டு அழைப்போம்) கணக்கிடப்படுகின்றன.

இன்று நான் விலை வரைபடத்துடன், RSI (Relative Strength Index), Stochastic Oscillators (STOC) & MACD (Moving Average Convergence Divergence) போன்ற இ&ஆ-க்களையும் சேர்த்துள்ளேன். இவை எப்படி, எந்த ஃபார்முலா வைத்து கணக்கிடப்படுகின்றன என்பதெல்லாம் பிறகு சொல்கிறேன்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விலை எப்படிச் செல்கிறதோ, அதே போக்கில்தான் இந்த இ&ஆ செல்லவேண்டும். அதை விட்டு இ&ஆ வேறு திசையில் சென்றால், விலையும் கூடிய சீக்கிரத்தில் இந்த இ&ஆ-க்கள் செல்லும் திசையில் பயணிக்கத் தொடங்குமென்பது நிபுணர்களின் கருத்து.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JAGRAN வரைபடத்தைப் பார்க்கவும். சமீபத்திய விலை விபரங்களை “லோ 1” & “லோ 2” என்று குறியிட்டுள்ளேன். இவ்விரண்டு இடங்களிலும் 109,110 லெவலில் ஒரு டபுள் பாட்டம் அமைப்புடன் இருக்கிறது. மேலும், இன்றைய விலைக்குச்சி (Bar), நேற்றைய விலைக்குச்சியை முழுவதுமாக விழுங்கி, ஒரு காளையின் குச்சியாக(அதாவது, முடிவு விலையானது ஆரம்ப விலையை விட அதிகமாக) இருக்கிறது.

20110804 JAGRAN டபுள் பாட்டம் + டைவர்ஜன்ஸ்

அடுத்துச் சொல்லப் போவதுதான் டைவர்ஜன்ஸ் சங்கதி! விலையோ சமநிலை லோ-வில் இருக்கிறது. ஆனால், “லோ 1”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் ரொம்ப கீழாகவும், (“லோ 1”-இற்கு சமநிலையில் உள்ள) “லோ 2”-இற்கு மேலே அம்புக்குறியிட்ட இடத்திலிருக்கும் இ&ஆ-க்கள் எல்லாம் முந்தையதற்கும் அதிகமான உயரத்தில் இருப்பதைக் காணலாம். அவற்றின் இரண்டு “லோ”க்களையும் இணைக்கும் ட்ரெண்ட்லைன்கள் எப்படி மேல்நோக்கிய ஏறுமுகத்தில் உள்ளன என்று பாருங்கள்! (விலை சமநிலை லோ-வில் உள்ளபோது, இ&ஆ-க்களின் லோ-க்கள் ஏறுமுகத்தில் உள்ளன)

எனவே, JAGRAN-இன் விலை உயரும் என்று எதிர்பார்க்கலாம். நான் டார்கெட், ஸ்டாப்லாஸ் முதலானவை ஏதும் இப்போது சொல்லவில்லை. இந்த வகை டைவர்ஜன்ஸ் பற்றி ஓர் அறிமுகம் செய்வதற்குத்தான் இந்தப் பதிவு.

இந்த ஸ்டாக்கை கவனத்தில் வைத்து, இனிவரும் நாட்களில் எவ்வாறு நகர்கிறதென்று பாருங்களேன்!

-பாபு கோதண்டராமன்