நாணயம் விகடன் டாட் காமில் EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன்


ஹலோ!
நாணயம் விகடன் டாட் காமில் எனது EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் அண்ட் ஷோல்டர் கட்டுரை.

புதியவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள், கட்டுரையின் இறுதிப்பகுதியிலே கேட்கப்பட்டிருக்கும் ரிஸ்க் எவ்வளவு? ரிவார்ட் எவ்வளவு? ரிஸ்க்:ரிவார்ட் ரேஷியோ எவ்வளவு? என்றெல்லாம் அங்கேயே (கீழ்ப்பகுதியிலிருக்கும் “உங்கள் கருத்து” என்ற இடத்திலே) எழுதவும்.

மேலும் அனுபவசாலிகள் இந்தக் கட்டுரையின் நிறை, குறைகளையும் அங்கேயே எழுதவும். அப்போதுதான் என்னால் இனி வரும் கட்டுரைகளிலே மேலும் பல பயனுள்ள தகவல்களை எழுத உதவிகரமாக இருக்கும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

ரீல் 2: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள……


ஹலோ!

ரீல் – 1 படிக்கணுங்களா? இங்கே கிளிக்கிக்கோங்க!

ஒரு சார்ட்டைப் பார்த்தால், என்னென்ன வகையில் யோசிக்கலாமென்று எனக்குத் தெரிந்த வரையிலும், கீழே படங்களுடன் (படங்களிலேயே) குறிப்புகளை எழுதியுள்ளேன்.

எடுத்துக்கொண்டுள்ள பங்கு ORIENTBANK டெய்லி டைம்ஃபிரேம். மொத்தம் ஆறு படங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அமைப்புகளைப் பற்றி எழுதியுள்ளேன். எப்படி இருக்குன்னு ஒரு பதில் போடுங்க! எதுனா புரியலைன்னாலும் கேளுங்க!

 

படம் 1: ORIENTBANK

படம் 1: ORIENTBANK

 

படம் 2

படம் 2

 

படம் 3

படம் 3

 

படம் 4

படம் 4

 

படம் 5

படம் 5

படம் 6

படம் 6

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130905 Asian Paint நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்


ஹலோ!

படத்திலே நான் சொல்லியிருக்கும் டிரேட் செய்யும் உத்திகளை உங்களின் ரிஸ்க் லெவல் மற்றும் பாங்க் பேலன்சுக்குத் தக்கவாறு உபயோகிக்க வேண்டும். “பாபு கோதண்டராமன் சொல்லிட்டாரு; அவுரு சொன்னாக்கா, அப்படியேதாங்க நடக்கும்; நானும் அதே மாதிரித்தான் டிரேட் செய்யப்போறேன்”னு முடிவெடுத்துடாதீங்க.

இதை பிசினஸ்-ஆப் பாருங்க! சூதாட்டம் இல்லீங்க!

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்BK20130905 ASIANPAINT dbl top plus neg div

20130326 RANBAXY Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 2


ஹலோ!

நேத்து போட்டு வச்சிருந்த RANBAXY சார்ட்டப் பாத்துட்டீங்களா?

மிகப் பெரிய எச்சரிக்கை:

டே டிரேடிங்கே (Day trading) ரொம்ப ரொம்பக் கஷ்டமானது. அதுல பணம் சம்பாதிக்கறத விட, இழப்பதற்கான சான்ஸ்தான் ரொம்ப அதிகம். அதுல போயிட்டு இந்த டைவர்ஜென்ஸ் ரொம்பவே நஷ்டத்தை ஏற்படுத்தறதுக்கான சான்ஸ்கள் இன்னமும் ஏராளம். “டைவர்ஜென்ஸ் பாக்கறதுன்னா மினிமம் ஒரு மணி நேர (Hourly) சார்ட்டுல பாக்கறதுதான் பெட்டர். 5, 15, 30 நிமிஷ சார்ட்டுல பாக்கறது ரொம்பவே ரிஸ்க்”குன்னு சந்தையில இருக்கிற மத்த டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் எல்லாம் எச்சரிக்கை செய்யறாங்க.

அதனால இந்த டைவர்ஜென்ஸ் கட்டுரைய ஒரு எக்ஸாம்பிள்-ஆ மட்டும் எடுத்துக்கிட்டு, இத Hourly, Daily, Weekly சார்ட்டுல யூஸ் பணக் கத்துக்கோங்க!

 இப்ப நம்ப சார்ட்டுக்குள்ளாற போகலாம்.

இங்க 1#, 2#, 3A# மற்றும் 4A# அப்படின்னு நாலு செங்குத்துக் கோடுகள் போட்டுட்டேன். ஏன்னா, இங்கெல்லாம்தான் ப்ரைஸ் “லோயர் லோ”-வா ஆகியிருக்கு. அதாவது 1-ஐ விட 2 கம்மி; 2-ஐ விட 3A கம்மி; 3A-ஐ விட 4A கம்மி.

படம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1

படம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1

இத ரண்டு குரூப்-ஆ பிரிச்சிக்கலாம். குரூப் 1-ல 1, 2 & 3A-வை எடுத்துக்கலாம். குரூப் 2-ல 3A & 4A-வை தனியா (dhaniya=மல்லி இல்லைங்க; separate-ஆ) எடுத்துக்கலாங்கறேன்!

குரூப் 1-ல ப்ரைஸ் புதிய புதிய கம்மி விலைகளைத் தொடும்போது, MACD histogram bars மற்றும் RSI-யில் மேல் நோக்கிச் செல்லும் வாய்ப்பு தெரியுது.

அதுக்கப்புறம் விலையும் ஏறுது.

குரூப் 2-ல பாத்தோம்னா,

படம் 2: RANBAXY குரூப் 2

படம் 2: RANBAXY குரூப் 2

3A-ஐ விட 4A புதிய “லோ”. ஆனாக்கா, MACD-யின் மூவிங் ஆவரேஜ் லைன்களும், RSI மற்றும் STOC-களும் நல்லா பாசிட்டிவ்வா தெரியுது. அதுக்கப்புறமும் விலை மறுபடியும் நல்லா மேலே ஏறுது. 4A-வுல 425 லெவல்ல இருந்த ஸ்டாக், 435க்கு மேல போய், அதுக்கப்புறம் அதுக்குக் கீழ கொஞ்சம் கரெக்ஷன் ஆகி வந்து, மறுபடியும் மேலே ஏறி, 445, 446-ன்னு வந்திருக்குது.

அதெல்லாம் சரிங்க! இதெல்லாம் பாக்குறதுக்குத்தான் நல்லாருக்கு. ஆனா டிரேட் எடுக்கறதுக்கு முன்னாடியே எவ்வளவு ரிஸ்க், எவ்வளவு ரிவார்ட்-ன்னு கணக்குப் போட முடியுமான்னு, “முடியாது”ன்னுதான் சொல்லணும்.

மேலும், 2# என்ற இடத்திலும் டைவர்ஜென்ஸ் இருந்தாலும், அதுக்கப்புறமும் ப்ரைஸ் குறைஞ்சிட்டுத்தான் வந்தது. 3A-க்கப்புறம்தான் மேலே ஏறியது. ஆனா, 3A# மற்றும் 4A#-க்களை கம்பேர் செய்யும்போது, ரண்டாவது டைவ்ர்ஜென்ஸ் இடத்திலேயே (அதாவது 4A# குரூப் 2-ல) மேலே ஏறிடிச்சி. ஆனா, குரூப் 1-ல இத மாதிரி 2#-லேயே மேலே ஏறவில்லையே!

எனவே, இந்தக் கட்டுரையானது ஒரு இன்ஃபர்மேஷன்தானுங்க!

Don’t worry! இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டு பயிற்சி கொடுக்காம இருப்பேனுங்களா? ஹ..ஹ..ஹா…! 🙂 எல்லா Bank ஸ்டாக்குகளையும் டெய்லி, வீக்லியில ஒரு லுக் விட்டுப் பாருங்க! ஏதாச்சும் டைவர்ஜென்ஸ் எங்கேயாச்சும் சப்போர்ட் இல்லை ரெஸிஸ்டன்ஸ் கிட்டேயிருக்குதான்னும் பாருங்க!

பாருங்க! பாருங்க! பாத்துக்கிட்டேயிருங்க! 🙂

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130322 NIFTY Negative Divergence நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்


ஹலோ

நேற்றைய பதிவிலே, நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் பற்றி சொல்கிறேன் என்றேனே, அதுதான் இப்போதைய பதிவு.

டைவர்ஜென்ஸ் (Divergence) என்றால் என்ன?

அதாவது, நமது சார்ட்டில் பங்குகளின் விலையானது OHLC மற்றும் வால்யூம் வைத்துக் குறிக்கப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையிலேயே மேலும் (CCI, MACD, OBV, RSI, STOC, etc, போன்ற) பற்பல இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் (இ & ஆ என்று சுருக்குகிறேனுங்க!) (Indicators & Oscillators) கணக்கிடப்படுகின்றன.

டெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த விலை மற்றும் இ & ஆ ஆகியவற்றின் போக்கை ஒப்பிடுவதே டைவர்ஜென்ஸ் எனப்படும் தியரி.

சப்போஸ் விலையானது மேல் நோக்கி ஏறுகிறதென்றால், அதிலிருந்து கணக்கிடப்படும் இ & ஆ-வும் மேல் நோக்கித்தான் செல்ல வேண்டுமென்பது நியதி. அதேபோல, விலையானது இறங்குமுகத்திலிருந்தால், இ & ஆ-வும் அதனைப் பின்பற்ற வேண்டும்.

1. பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் (Positive divergence)

சப்போஸ் ஒரு பங்கின் விலையானது, கீழ்நோக்கி டௌன்டிரெண்டில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு கால கட்டத்திலே அது வலிமை பெற்று மேலே செல்ல யத்தனிக்கும் போதோ (அல்லது) அந்த டௌன்ட்ரெண்ட் முடிவுக்கு வரும் காலங்களிலோ இ&ஆ-க்களில் வலிமை கூடி, மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலையின் போக்கு டௌன்டிரெண்டாக இருந்தாலும், இது வலிமையைக் காட்டுவதால் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.

2. நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (Negative divergence)

பாசிட்டிவ்வுக்கு நேரெதிர் நெகட்டிவ் (ஆ! என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா?) J.

ஒரு பங்கின் விலை அப்ட்ரெண்டில் இருக்கும்போது, இ&ஆ-க்களில் டௌன்ட்ரெண்ட் தெரிந்தால் அது அந்த அப்டிரெண்டின் வலிமை குறைந்து வருவதைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. என்னதான் விலை மேலே சென்றுகொண்டிருந்தாலும், இது நெகட்டிவ் நியூஸ் ஆதலால், நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.

நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

இப்போது இந்த நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள். டிச’12-ஜன’13 என்ற இந்த இரண்டு மாத காலகட்டத்திலே, இன்டெக்ஸ் அப்ட்ரெண்டில் பயணிக்கிறது.

அதற்கு நேர்கீழே, MACD, RSI மற்றும் STOC போன்ற இ&ஆ-க்கள் டௌன்டிரெண்டில் (சிகப்பு நிறப் புள்ளிக் கோடுகள்) செல்வதைப் பாருங்கள்.

படம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

இந்நிலை காளைகளின் குன்றி வரும் வலிமையைக் காட்டும் அளவுகோலாக கணக்கிடப்படுகிறது.

“சரிங்க! நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லி, காளைகளின் வலிமை குறைந்து கொண்டே வருதுன்னு சொல்றீங்க! நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம்?” அப்படீன்னு கேக்குறீங்களா? அடுத்த படத்தைப் பாருங்கள்!

படம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)

படம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)

1. மேலே விலையானது டிச’12-ஜன’13 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கொண்டு கீழே செல்கிறது.

2. அதேபோல MACD, RSI மற்றும் STOC-க்கள் தங்களின் சப்போர்ட் லைன்களை உடைத்துக்கொண்டு கீழே செல்வதையும் பாருங்கள்.

இதிலே, மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளான 1 மற்றும் 2 உடைபடுதல்கள், இரண்டு மாத கால நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கப்புறம்தான் நடக்கிறது.

இந்த நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் என்பது சிக்னல். பிப்’13-இல் உடைபடுதல்தான் கன்ஃபர்மேஷன் (confirmation). இந்தக் கன்ஃபர்மேஷன் கிடைத்த பிறகுதான் நீங்கள் பிராஃபிட் எடுப்பதோ அல்லது/மற்றும் மேலும் ஷார்ட் போவதோ செய்ய வேண்டும்.

என்னங்க! ஏதாவது புரியுதுங்களா? ரொம்பக் குழப்பிட்டேனா? என்னங்க செய்யறது? அதே டயலாக்தானுங்க! “குழம்பின குட்டையிலதாங்க மீன் பிடிக்க முடியுமுங்க”

சரி! ஒரு ஹோம்வொர்க்!

ஹ.ஹ..ஹா… பயந்துட்டீங்களா? சும்மா….! J

1. நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கு உதாரணமா ஒரு சார்ட் போட்டுட்டேன். பாசிட்டிவ் டைவர்ஜென்சுக்கு LICHousingFinance டெய்லி சார்ட் பாருங்க! ஏதாவது தெரியுதான்னு சொல்லுங்க.

2. இப்ப சொல்றதுதான் ரொம்ப முக்கியமானது. இவ்ளோ நாளா பயங்கர அப்டிரெண்டில இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுங்களா? அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க! எதுலேயாவது வலிமை குறையுதான்னு சொல்லுங்க!

 

பாருங்க! பாருங்க! நல்லாப் பாருங்க! பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்!

சரிதானுங்களே? J

அன்புடன்,

பாபு கோதண்டராமன்