20130816 நிஃப்டியில் ஒரு முக்கோணம்….


ஹலோ!

நிஃப்டியில் ஒரு ட்ரையாங்கில் (triangle – முக்கோணம்) அமைப்பு தெரிகிறது. அது உடைபட்டு, ஒரு ரீ-டெஸ்ட் நடந்து மறுபடியும் உடைபட்டுள்ளது.

உடைபட்ட இடம்: 5650 லெவல்.

அதிலிருந்து இன்னமும் 450 புள்ளிகள் மற்றும் 700 புள்ளிகள் கீழே செல்ல வாய்ப்புள்ள அமைப்பிது.

டார்கெட் 1: 5650-470 = 5180

டார்கெட் 2: 5650-700 = 4950

பொறுத்திருந்து பார்க்கலாம்!

படம்: நிஃப்டியில் தெரியும் முக்கோணம்!

படம்: நிஃப்டியில் தெரியும் முக்கோணம்!

 

 

 

 

தமிழில் எழுதுவதெப்படி (கம்ப்யூட்டர் கீ-போர்ட் வைத்து) [2]


ஆஹா! இதைப் பற்றித் தொடர்கதை மாதிரி எழுதுவேனென்று நினைத்துப் பார்க்கவேயில்லை. இதன் முதல் பதிவில் எழுதியிருப்பதைப் போல மைக்ரோசாஃப்ட்டின் http://specials.msn.co.in/ilit/Tamil.aspx என்கின்ற லிங்க்கில் கிடைக்கும் மென்பொருளையும், அதிலிருக்கும் “எப்படிஉபயோகிக்க வேண்டும்” என்ற முறைகளையும் பார்த்துத் தமிழில் டைப் அடிக்க முயற்சி செய்தீர்களா?

டைப் அடிப்பது கடினமாக இருப்பவர்களுக்கு, இந்த மென்பொருளிலேயே ஒரு “விர்ச்சுவல் கீ-போர்டு” இருக்கிறது. அதிலே, என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொத்தான் உள்ளது. சிறுவர்களுக்கான வாய்ப்பாட்டில் இருப்பது போல, “அ” முதல் “ஃ” வரை உயிரெழுத்துக்களும், அப்புறம் “க” முதல் “ன” வரை உயிர்மெய்யெழுத்துக்களும் மற்றும் வடமொழி எழுத்துக்களுக்கான பொத்தான்கள் இருக்கின்றன. இப்போது, “க” மேல் மௌசை வைத்தால் கூடுதலாக

  • க்,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ முதலான மற்ற குறில், நெடில்களும் திரையில் தோன்றும்.

தேவையானதை அழுத்தி வார்த்தைகளை எழுதிக் கொள்ளலாம். இதேபோல மற்ற உயிர்மெய் எழுத்துக்களின் மேலே மௌஸை செலுத்தி அதன் வரிசையில் உள்ள மற்ற உயிர்மெய்யெழுத்துக்களின் குறில், நெடில்களைப் பெறலாம்.

படத்தைப் பாருங்களேன்! அம்புக்குறியிட்டுள்ளது போல, டாஸ்க் பாரில் (டாஸ்மாக் பார் இல்லை :-)_) தெரியும் EN, TA போன்ற விருப்பங்களைத் தேர்வு செய்து நமக்கு வேண்டிய மொழியினைத் தேர்ந்தெடுத்க் கொள்ளலாம்! பக்கத்திலேயே “விர்ச்சுவல் கீ-போர்டு”க்கான ஐக்கானும் உள்ளது. அதைக் “கிளிக்” செய்தால்தான் படத்திலிருக்கும் கீ-போர்டு சிறிய சைஸில் திரையில் வரும். இது பெரிதாக்கப்பட்ட படம்.

படம்: தமிழ் விர்ச்சுவ்ல் கீ போர்டு

என்னங்க! தமிழில் ஒரு கலக்கு கலக்கலாமா?

-பாபு கோதண்டராமன்

தமிழில் எழுதுவதெப்படி (கம்ப்யூட்டர் கீ-போர்ட் வைத்து; பென்சில், பலப்பம் வைத்தல்ல :-))? [1]


ஆஹா! இந்த வலைப்பூவானது அரும்புகள் விட்டு மலர்ந்து மணம் (நான் சொல்லக்கூடாது; நீங்கதான் சொல்லணும்) வீச ஆரம்பித்துள்ள நிலையில், இந்த வலைப்பூவின் மூலமாக அறிமுகமாகியுள்ள புதிய நண்பர்களில் சிலர், “சார்! தமிழில் எப்படி டைப் அடித்து எழுதுவது” என்று வினவியுள்ளனர்.

அதெல்லாம் ரொம்ப சுலபம்தாங்க. மைக்ரோசாஃப்ட்டின் http://specials.msn.co.in/ilit/Tamil.aspx என்கின்ற லிங்க்-கிற்குச் சென்று டௌன்லோட் செய்து, எந்த அப்ளிகேஷன்-லேயும் தமிழிலேயே டைப் அடிக்கலாம்.

இதுதான் எனக்கு சுலபமாக இருக்கிறது!

மேலும் azhagi, e-kalappai போன்ற மென்பொருட்களும் உள்ளன.

-பாபு கோதண்டராமன்