பனி விழும் மலர்வனம்


அருமையான படம். விளக்கமே தேவையில்லை; அப்படியே பார்க்கலாம்!

Snow is falling

இதுல நீங்க எப்பூடீஈஈ?


இன்றைய ட்விட்டரில் வந்த இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு டே டிரேடர் மற்றும் ட்ரெண்ட் டிரேடரின் ஒரு நாள் வாழ்க்கையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

அது சரி! இதிலே நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கிறீர்கள்? இந்தப் படத்திலே சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்களா? இல்லையா? எது சரி? எது தவறு?

உங்கள் அனுபவத்திலிருந்து பதில் எழுதுங்களேன்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

A day in the life of a Day trader vs Trend trader

 

2013-இன் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் எப்படி?


இந்தப் பதிவிற்கு நண்பர் திரு பிரசாந்த் கிருஷ்ணா அவர்களின் ஆராய்ச்சிதான் காரணம். Thanks to Prashanth Krishna, Founder – Yahoo Technical inverstor Group

2012 டூ 2013-இன் டாப் பத்து மற்றும் பாட்டம் பத்து ஸ்டாக்குகளிலே, ஒவ்வொன்றிலும் ரூ.10,000/- என்று (2014 ஆரம்பத்தில்) முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டு, மொத்தம் ரூ. 2,00,000/- போர்ட்ஃபோலியோ உருவாக்கியிருந்தால், அதனுடைய இலாப, நஷ்டக் கணக்கு எப்படியிருக்கும்?

டாப் பத்து பங்குகளில் ஒரு லட்சம் முதலீடு, 50% இலாபமீட்டியுள்ளது.

Prashanth 1A 2013 best n worst 10 stocks growth in 2014 end

 

 

 

 

 

 

 

 

 

பாட்டம் பத்து பங்குகளின் முதலீடு 20% இலாபமீட்டியுள்ளது.

Prashanth 1B 2013 best n worst 10 stocks growth in 2014 end

திருத்தங்களுடன் – தீபாவளி டூ தீபாவளி (2013 டூ 2014)


ஹலோ வாசகர்களே!

சென்ற பதிவினைப் பார்த்து விட்டு நாமக்கல்லிலிருந்து நண்பர் திரு. பாண்டியன் அவர்கள்  “எங்கள் ஊரிலிருக்கும் SKM EGG Products என்ற கம்பெனியை விட்டு விட்டீர்களே”யென்று கேட்டிருந்தார். அதெப்படியென்று மறுபடியும் செக் செய்து பார்க்கும்போது, அந்த ஸ்டாக் 2013 தீபாவளியன்று வர்த்தகமாகவில்லை. அதனாலேயே அந்த ஸ்டாக் விடுபட்டு விட்டது. அதனால், தீபாவளிக்கு முந்தைய வாரத்திலிருந்து மறுபடியும் கணக்கெடுத்து இப்போது புதிய லிஸ்ட் தயாரித்துள்ளேன். இந்த லிஸ்ட்டிலும் மேலும் ஒரு சில ஸ்டாக்க்குகள் விடுபட்டிருக்கலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

Deepavali 2014 stocks 01 Deepavali 2014 stocks 02 Deepavali 2014 stocks 03 Deepavali 2014 stocks 04 Deepavali 2014 stocks 05 Deepavali 2014 stocks 06

தீபாவளி டூ தீபாவளி (2013 டூ 2014)


ஹலோ!

கீழேயிருக்கும் பட்டியல்களில் 2013 தீபாவளியிலிருந்து 2014 தீபாவளி வரை உயர்ந்திருக்கும் பங்குகளில் டாப்-150 லிஸ்ட்.

“என்னங்க சார்? தீபாவளி போய் கிறிஸ்துமஸே வந்து விட்டது. இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீர்களே!”ன்னு சொல்றீங்களா? புரியுது, புரியுது! அட்லீஸ்ட் பொங்கல் வரைக்கும் வெயிட் பண்ணலையே நான்! இப்போதாவது எழுத உட்கார்ந்திருக்கின்றேனே!

என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

படம் 1: 401 சதவீத உயர்வு மற்றும் அதற்கு மேலே!

படம் 1: 401 சதவீத உயர்வு மற்றும் அதற்கு மேலே!

 

Deepavali fr 2013 to 2014 02 20 to 38 rankings Deepavali fr 2013 to 2014 02 39 to 57 rankings Deepavali fr 2013 to 2014 04 58 to 76 rankings Deepavali fr 2013 to 2014 05 77 to 100 rankings Deepavali fr 2013 to 2014 05 100 to 125 rankings Deepavali fr 2013 to 2014 07 126 to 150 rankings

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்


TMB

  • 1921-இல் ₹ 28 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி, இப்போது சுமார் ₹ 2400 கோடி பணக் கையிருப்பை (கேஷ் பேலன்ஸ்) வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
  • இதன் புத்தக மதிப்பை வைத்து இந்தப் பங்கின் விலை சுமார் ₹6,000-6,500 என்று மதிப்பிடப்பட்டுள்ளது
  • நிற்க! பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாததால் இந்தப் பங்கை வெளிச்சந்தையில்தான் வாங்கவேண்டும். அதாவது வேறு யார் பெயரிலாவது ஷேர் சர்டிஃபிகேட் இருந்தால், அவரிடமிருந்துதான் வாங்க முடியும்.
  • மறுபடியும் நிற்க! அப்படியே வாங்க முற்பட்டாலும், விற்பவர் இதற்கு ₹1.50 முதல் ₹1.70 வரையும் விலை கேட்க வாய்ப்பிருக்கிறது.
  • ஏன்?
  • Because, டிமாண்ட்தான் பாஸ்!
  • இவையெல்லாவற்றை விடவும் இன்னொரு மிக சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், சுமார் 8 சதவீதப் பங்குகளை யார் வைத்திருக்கிறார்களென்றே தெரியவில்லையாம்.
  • வங்கி ஆரம்பித்து 90 வருஷங்களுக்கு மேலாகி விட்டதல்லவா? அந்தக் கால கட்டத்திலே வாங்கியவர்களில் சிலர் தங்களின் வாரிசுகளுக்குச் இந்த முதலீட்டைப் பற்றிச் சொல்லவில்லையோ என்னவோ, அதனாலேயே மேலும் டிமாண்ட் கூடுகிறது.
  • So, உங்க தாத்தா, பாட்டி கிட்டயிருந்து உங்களுக்கு ஏதாவது பெட்டி, அலமாரி கிடைத்திருந்தால், அதனை நல்லா ஒரு லுக் விடுங்க!

செய்தி உபயம்: நண்பர் திரு. செந்தில் சின்னதுரை

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: இந்தப் பதிவினை நான் ஏற்கனவே எழுதிதாக ஞாபகம். ஆனால் இந்த வலைப்பூவில் அதைக் காணக் கிடைக்கவில்லை. அதனால்தான் மறு பதிவு.

20140901 நிறைய சார்ட்டுக்கள்!


ஹலோ!

இங்கே நிறைய சார்ட்டுக்களைப் போடுகின்றேன். ஒரு சில ஸ்டாக்குகள் சுமார் 100% வரை ஏற்றம் கண்ட பிறகு, தற்போது கரக்ஷனில் இருக்கின்றன. அவற்றில் ஃபிபோநாச்சி ரீட்ரேஸ்மெண்ட் (32%, 50% மற்றும் 68%) கோடுகளும் வரைந்துள்ளேன்.

அதிலேயும் ஒரு சில பங்குகள் டபுள் டாப், ஹெட் & ஷோல்டர் போன்ற அமைப்பில் கரெக்ஷன் ஆகி, தற்போது லோயர் ஹை, லோயர் லோ உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில ஸ்டாக்குகள் மேலே ஏறி, கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபாலிங்க் வெட்ஜ் (Falling wedge) அமைப்பில் உள்ளன. மேலேயிருக்கும் ரெஸிஸ்டென்ஸ் உடைத்து, விலை மேலே சென்றால் வாங்கலாம்.

இன்னும் சில, சேனல் அமைப்பினுள்ளே மேலும், கீழுமாக உலாவிக் கொண்டிருக்கின்றன.

என்ஜாய்!

பாபு கோதண்டராமன்

படம் 1: ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகி, நெக்லைன் உடைபட்டு தற்போது நெக்லைன் ரீடெஸ்ட் நடைபெறுகிறது.

படம் 1: ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகி, நெக்லைன் உடைபட்டு தற்போது நெக்லைன் ரீடெஸ்ட் நடைபெறுகிறது.

 

 

படம் 2: கீழ்நோக்கிச் செல்லுமொரு சேனலில் மேலும், கீழுமாக KTKBANK

படம் 2: கீழ்நோக்கிச் செல்லுமொரு சேனலில் மேலும், கீழுமாக KTKBANK

படம் 3: KOTAKBANK-இன் சமீபத்திய (கடந்த ஒரு வாரத்திய) கேண்டில் அமைப்புக்களைப் பார்த்தால், அடுத்து என்ன செய்யலாம் என்று காளைகளும், கரடிகளும் யோசிக்கிறார்கள் போல

படம் 3: KOTAKBANK-இன் சமீபத்திய (கடந்த ஒரு வாரத்திய) கேண்டில் அமைப்புக்களைப் பார்த்தால், அடுத்து என்ன செய்யலாம் என்று காளைகளும், கரடிகளும் யோசிக்கிறார்கள் போல

படம் 4: JPASSOCIAT-இல் உருவான ஹெட் & ஷோல்டர் ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸலை உருவாக்கியுள்ளது. 62 சதவீத பிபோ ரீட்ரேஸ்மெண்ட் லெவலில் சப்போர்ட் கிடைக்குமா?

படம் 4: JPASSOCIAT-இல் உருவான ஹெட் & ஷோல்டர் ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸலை உருவாக்கியுள்ளது

படம் 5: IOB-யும் 62% ரீட்ரேஸ்மெண்ட் லெவலில் சப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறது.

படம் 5: IOB-யும் 62% ரீட்ரேஸ்மெண்ட் லெவலில் சப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறது.

படம் 6: IDFC அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்டில் மேலே செல்வதைப் பாருங்கள்

படம் 6: IDFC அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்டில் மேலே செல்வதைப் பாருங்கள்

படம் 7: ஃபாலிங்க் வெட்ஜ் இன் IDBI

படம் 7: ஃபாலிங்க் வெட்ஜ் இன் IDBI

படம் 8: 68% லைனில் சப்போர்ட் கிடைக்குமா?

படம் 8: 68% லைனில் சப்போர்ட் கிடைக்குமா?

படம் 9: அப்ட்ரெண்ட்லைன் சப்போர்ட்டில் சமீபத்திய டௌன்ட்ரெண்ட்லைன் ரெஸிஸ்டென்ஸை உடைத்து மேலே செல்கிறது

படம் 9: அப்ட்ரெண்ட்லைன் சப்போர்ட்டில் சமீபத்திய டௌன்ட்ரெண்ட்லைன் ரெஸிஸ்டென்ஸை உடைத்து மேலே செல்கிறது

படம் 10: ஒரு டபுள் டாப் உருவாகிறது. கீழே விழுமா?

படம் 10: ஒரு டபுள் டாப் உருவாகிறது. கீழே விழுமா?

படம் 11: ஒரு டபுள் டாப்; பிறகு ஒரு கரெக்ஷன். தற்போது பிபோ 50% லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 11: ஒரு டபுள் டாப்; பிறகு ஒரு கரெக்ஷன். தற்போது பிபோ 50% லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 12:

படம் 12:

படம் 13: ஆண்ட்ரூஸ் பிட்ச் ஃபோர்க் ரெஸிஸ்டென்ஸ்

படம் 13: ஆண்ட்ரூஸ் பிட்ச் ஃபோர்க் ரெஸிஸ்டென்ஸ்

படம் 14: SBIN முந்தைய டிரிப்ள் டாப் சப்போர்ட் இப்போதைய ரெஸிஸ்டென்ஸ்

படம் 14: SBIN முந்தைய டிரிப்ள் டாப் சப்போர்ட் இப்போதைய ரெஸிஸ்டென்ஸ்

படம் 15: ஹெட் & ஷோல்டரின் கரெக்ஷன், தற்போது அப்ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 15: ஹெட் & ஷோல்டரின் கரெக்ஷன், தற்போது அப்ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 16: டபுள் டாப் & கரெக்ஷன்

படம் 16: டபுள் டாப் & கரெக்ஷன்

படம் 17: டபுள் டாப் கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபிபோ லைன் சப்போர்ட்

படம் 17: டபுள் டாப் கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபிபோ லைன் சப்போர்ட்

படம் 18: RELIANCE அப்டீன்னா, RELCAPITAL எப்டீ?

படம் 18: RELIANCE அப்டீன்னா, RELCAPITAL எப்டீ?

படம் 19:

படம் 19:

படம் 20:

படம் 20:

படம் 21: சேனல் பிரேக்அவுட்

படம் 21: சேனல் பிரேக்அவுட்

படம் 22: மறுபடியும் ஒரு ஃபாலிங்க் வெட்ஜ்

படம் 22: மறுபடியும் ஒரு ஃபாலிங்க் வெட்ஜ்

படம் 23: ட்ரெண்ட் ரெஸ்ட் எடுக்கிறதா?

படம் 23: ட்ரெண்ட் ரெஸ்ட் எடுக்கிறதா?

படம் 24: ஃபாலிங்க் வெட்ஜ் பிரேக்அவுட் ஆகியுள்ளது

படம் 24: ஃபாலிங்க் வெட்ஜ் பிரேக்அவுட் ஆகியுள்ளது

படம் 25: AB=CD என்ற பேட்டர்னுக்கு அருமையான எடுத்துக்காட்டு. என்னன்னு தெரியலைன்னா, கூகிள் பாபாகிட்ட கேட்டுப் பாருங்களேன்! :)

படம் 25: AB=CD என்ற பேட்டர்னுக்கு அருமையான எடுத்துக்காட்டு. என்னன்னு தெரியலைன்னா, கூகிள் பாபாகிட்ட கேட்டுப் பாருங்களேன்! 🙂

படம் 26

படம் 26

படம் 27: ஹெட் & ஷோல்டர் கரெக்ஷனுக்கப்புறம் தற்போது ஒரு ரெக்டாங்கிள் பேட்டர்ன்

படம் 27: ஹெட் & ஷோல்டர் கரெக்ஷனுக்கப்புறம் தற்போது ஒரு ரெக்டாங்கிள் பேட்டர்ன்

நீங்க இந்த புல்லிஷ் மார்க்கெட் ரேலியை நம்பறீங்களா?


அப்புறமென்ன?

கீழேயிருக்கும் நிஃப்டி ஃப்யூச்சர் ஹவர்லி சார்ட்டைப் பாருங்கள்! தற்போது 34EMA-விற்குக் கீழே முடிந்துள்ளது. அதற்கு மேலே செல்லும்போது தற்போதைய லோயஸ்ட் லோ-வினை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு லாங் போகலாம்.

இது 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி! நான் வேண்டுமென்றே விலை லெவல்களைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்களே சார்ட் பார்த்து, 34EMA லெவல் என்ன, அதற்குமேல் போனால் எந்த லெவலில் வாங்கவேண்டும், ஸ்டாப்லாஸ் வைக்க லோயஸ்ட் லோ என்ன லெவல் என்றெல்லாம் நீங்களே பார்க்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்!

நான் மீன் கொடுக்கமாட்டேன்; ஆனால், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கின்றேன்! 🙂

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

நிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா?

அன்புடன்

பாபு கோதண்டராமன்

20140725 ஒரு சில ஸ்டாக்குகளின் சார்ட்டுகள்


MCDOWELL மேலே டபுள் டாப் ரெஸிஸ்டன்ஸ் (தற்போது இது முக்கியமல்ல); கீழேயிருக்கும் தற்போதைய விலை, முந்தைய சப்போர்ட்டில் உள்ளது. மேலே செல்ல வாய்ப்புள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

 

APOLLOTYRE டபுள் டாப்பின் சப்போர்ட் அதற்கு முன்னும், பின்னும் எவ்வாறு ரெஸிஸ்டன்ஸாக இருக்கிறதென்று பாருங்கள்!

APOLLOTYRE ஃப்யூச்சர்

APOLLOTYRE ஃப்யூச்சர்

AXISBANK முந்தைய ரெஸிஸ்டன்ஸ் தற்போது சப்போர்ட்டாக மாறியுள்ளதா? பார்க்கலாம்.

AXISBANK ஃப்யூச்சர்

AXISBANK ஃப்யூச்சர்

BANKNIFTY நீங்களே யோசியுங்கள்! புரிய வில்லையென்றால், இந்தக் கட்டுரையினை ஓரிரு முறை படித்து விட்டு, மறுபடியும் பாருங்கள். ஈசியாகப் புரியுமென்று நினைக்கின்றேன். குட் லக்!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

HINDALCO

ஜாக்கிரதை! ஒரு பெயரிஷ் என்கல்ஃபிங்க் கேண்டில், அதுவும் இந்த அப்டிரெண்டில். (மேலும் விபரங்களுக்கு, 2010 நவம்பர் தீபாவளியன்று SBIN கேண்டில் என்னவென்று ஒரு தடவை செக் செய்து கொள்ளுங்கள்)

HINDALCO ஃப்யூச்சர்

HINDALCO ஃப்யூச்சர்

HINDPETRO (HPCL)

அப்ட்ரெண்டில் காணப்படும் இந்த fallling wedge அமைப்பின் ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு மேலே சென்றால், BUY

HPCL Falling Wedge

HPCL Falling Wedge

ICICIBANK

முந்தைய ரெஸிஸ்டன்ஸ் லெவல் தற்போது ஸ்ட்ராங்க் சப்போர்ட்டாக இருக்கின்றது. (வட்டமிடப்பட்டுள்ள பகுதிகள்)

ICICIBANK

ICICIBANK

LT டபுள் டாப் சப்போர்ட்டை உடைத்து மீண்டும் அதன் மேலேயே இருக்கின்றது. (மதில் மேல் பூனை)

LT டபுள் டாப்

LT டபுள் டாப்

NMDC ஃப்யூச்சர் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் அமைந்து, நெக்லைன் உடைபட்டு முந்தைய சப்போர்ட் (நெக்லைன்) இப்போது ரெஸிஸ்டன்சாக மாறி ஒரு ரீடெஸ்ட் நடக்கிறது. அதுவும் இன்றைய கேண்டில் அந்த ரெஸிஸ்டன்ஸ் லெவலில் பெயரிஷ் என்கல்ஃபிங்க்காக இருப்பதால், நல்லதொரு ஷார்ட் டிரேட் போக வாய்ப்புள்ள அமைப்பிது

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

JPASSOCIAT ஃப்யூச்சர் லோயர் ஹை, லோயர் லோ அமைந்து ஒரு தெளிவான டவுன்டிரெண்டைக் காட்டுகிறது.

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

SAIL ஃப்யூச்சர் சார்ட்டில் தெரியும் டவுன்ட்ரெண்ட் லைனில் பெயரிஷ் என்கல்ஃபிங்க் பேட்டர்ன் தெரிவதால், குறைந்த ரிஸ்க் ஷார்ட் டிரேட் எடுக்கலாம்.

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

TATASTEEL தலைக்கு மேலே இருக்கும் ரெஸிஸ்டன்ஸ், RSI-யின் நெகட்டிவ் டைவர்ஜென்சால் வலிமையாகக் காணப்படுகிறது

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

க்வீன் SBIN ஃப்யூச்சர் 3 தடவை சப்போர்ட்டாக இருந்த லைன் நான்காவது முறை உடைபட்டுள்ளது. இப்போது அது ரெஸிஸ்டன்சாக இருக்கிறது. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்

20140725 SBIN S n2 R

கிங் ரிலையன்ஸ்

ஒரு டபுள் டாப் பேட்டர்ன் அமைந்து, சப்போர்ட் உடைபட்டு, தற்போது அந்த லெவல் ரெஸிஸ்டன்சாகத் தெரிகிறது

20140725 RELIANCE dbl top S n2 R

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

 

 

 

2013 – ஒரு டஜன் வழுக்கல்கள்!


ஹலோ!

முந்தைய பதிவுகளிலே (2013 – ……) எக்ஸெல் ரிபோர்ட்டில் பார்த்த பங்குகளில் (2013 – இல்) மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த 12 பங்குகளின் வரைபடங்கள்!

இந்தப் படங்களைப் பார்த்தால், ஆவரேஜிங் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

2013 1a PRAKASHCON 2013 1b NET4 2013 1c CHROMATIC 2013 1d COREEDUTEC2013 1e OMNITECH 2013 1f DHANUS 2013 1g MMTC 2013 1h DRDATSONS 2013 1i AQUA 2013 1j MICROTECH 2013 1k VISESHINFO 2013 1l VKSPL